ய த் ரி ப் ஆ த ர வு
“ பகைமையாலும் தீமைகளாலும் பிரிந்து வாழும் மக்கள் ” எனத் தமது மக்களை விவரித்த யத்ரிபின் மதமாறிய அறுவரும் எதனையும் மிகைப்படுத்திக் கூறிவிடவில்லை. உள்நாட்டு யுத்தத்தில் நான்காவதும் மிகக் கொடூரமானதுமாக இருந்த புஆத் யுத்தம் தீர்க்கமான ஒரு முடிவையும் ஏற்படுத்துவதாக இல்லை. சமாதான உடன்படிக்கைகள் ஏதும் ஏற்படுவதற்குறிய சாத்தியங்களும் காணப்படவில்லை. அப்போதைக்கு யுத்த நிறுத்தம் செய்து கொள்வதென்பதே முடிவாயமைந்தது. பயங்கரமான முறையில் நீடித்த தொடர்பறாத கசப்புணர்வும் வன்செயல்களின் அதிகரிப்பும் இரு சாராலிருமிருந்த மிதவாத நோக்குடையவர்களிடையே சிறந்ததொரு தலைமைத்துவம் இருக்க வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தி வந்தன. குறைஷிகளை ஒன்று படுத்த குஸை வந்ததுபோல, தம்மனைவரையும் ஒன்று படுத்தி வைக்கப் பலம் வாய்ந்ததொரு தலைவன் தேவை என்பதனையும், தமது பிரச்சினைகட்கு அது தவிர வேறு எந்த முடிவும் கிடையாதெனவும் அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

இப்பாலைவனச் சோலையின் தலைவர்களுள் ஒருவராயிருந்த அப்த்-அல்லாஹ்-இப்ன்-உபை என்பார் தம்மனைவர்க்கும் ஓர் அரசனாகத் திகழத் தகுதிகள் கொண்டவர் எனப் பலர் கருதி வந்தனர். யுத்தத்தின் அண்மைய தொடரில் அவர் அவ்ஸ்களுக்கெதிராகக் கலந்து கொள்ளவில்லை. யுத்தம் ஆரம்பமாகும் நிலையில் தனது மக்களை அவர் திருப்பியழைத்துக் கொண்டார். என்றாலும் அவர் கஸ்ரஜ் கோத்திரத்தவர். எனவே தமது கோத்திரத்தவரல்லாத ஒருவரை அவ்ஸ்கள் ஓர் அரசனாக ஏற்றுக் கொள்வரோ என்ற ஐயமும் வளர்ந்து வந்தது.
தமக்குச் செவிசாய்க்கக் கூடியவர்களாயிருந்த பலருக்கும், நபிகளாரை ஏற்றிருந்த அறுவரும் தம்மால் இயன்றளவு இஸ்லாத்தின் போதனைகளைச் சொல்லிக் கொடுத்தனர். அடுத்த கோடையின் போது, அதாவது, கி.பி 621-ல் அந்த ஆறு பேரிலும் ஐவர் மீண்டும் புனித யாத்திரையை மேற்கொண்டனர். அவர்கள் தம்முடன் மேலும் ஏழு பேரைக் கூட்டிச் சென்றனர். அவர்களுள் இருவர் அவ்ஸ் கோத்திரத்தார். அகபாவில் இந்த பன்னிரண்டு பேரும் நபிகளாருடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். இது முதலாவது அகபா எனப் பெயர் பெற்றது. அவர்களில் ஒருவர் கூறினார் :
“ நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் நமது விசுவாசத்தை முதல் அகபாவின் இரவில் உறுதிப்படுத்தினோம். அல்லாஹ்வுக்கு எவ்வித இணையும் வைப்பதில்லை ; களவு செய்வதில்லை ; காம விவகாரங்களில் ஈடுபடுவதில்லை ; சந்ததிகளைக் கொலை செய்வதில்லை* ; அவதூறுகள் கூறுவதில்லை ; அன்னார் சரியெனக் கூறியவற்றைப் பின்பற்றாது விடுவதில்லை என்றெல்லாம் நாம் உறுதி கூறினோம். பின்னர் அவர் கூறினார் :
“நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களாயின் சுவர்க்கம் உங்களுடையதாக இருக்கும். இவற்றில் ஏதேனும் ஒரு குற்றத்தைப் புரிந்து அதற்கு இவ்வுலகிலேயே உங்களுக்குத் தண்டனை கிடைத்து விட்டால் அதுவே உங்களுக்குப் போதுமாகும். ஆனால் மீள உயிர்ப்பிக்கும் நாள் வரையில் நீங்கள் அதனை மறைத்து வைத்துக் கொள்வீர்களாயின் உங்களைத் தண்டிக்கவோ மன்னிக்கவோ அல்லாஹ்வே போதுமானவன். அவனது விருப்பத்தைப் பொறுத்தது அது” - இ.இ. 289
யத்ரிப் வாசிகள் தம் நகருக்குப் புறப்பட்டதும், அவர்களுடன் அத்-தார்களின் முஸ்அப் என்பாரை, நபிகளார் அனுப்பி வைத்தனர். அபிஸீனியாவினின்றும் அப்போதுதான் திரும்பி வந்திருந்த அவர், யத்ரிப் வாசிகளுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டவும் மத அனுஷ்டானங்கள் பற்றி விளக்கவுமென அனுப்பப்பட்டார். யத்ரிபை அடைந்த பின்னர், முன்னைய வருடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அறுவருள் ஒருவரான அஸ்அத்-இப்ன்-ஸுராரா என்பாருடன் இவர் தங்கலானார். தொழுகையையும் முன்னின்று நடாத்தும் பொறுப்பினை அவரே ஏற்க வேண்டியிருந்தது. ஏனெனில் இஸ்லாத்தில் இணைந்தும் கூட, ஒருவருக்கொருவர் இம்முன்னுரிமையை வழங்க ஒருப்படும் நிலையில் அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரத்தார் இருக்கவில்லை.
கைலாவின் இரு புதல்வர்களது வம்சாவளியினரிடையிலான பகைமை நீண்ட காலமாக நிலவி வருவது. எனினும் இரு சாரார்க்குமிடையில் பல திருமண பந்தங்கள் ஏற்பட்டிருந்தன. இவ்வாறான பல திருமண உறவின் மூலம் முஸ்அபைப் பராமரித்து வந்த கஸ்ரஜி ஆன அஸ்அத், அவ்ஸ்களின் ஒரு தலைவராயிருந்த ஸஅத்-இப்ன்-முஆத் என்பாரின் ஒன்றுவிட்ட சகோதரனாக இருந்தார். ஸஅத் புதிய மதத்தை முற்றும் எதிர்த்து நின்றார்.
அவ்ஸ்களின் குடியிருப்புப் பிரதேசத்தின் மத்தியில் அமைந்த தோற்றமொன்றில் ஒரு நாள் முஸ்அப்பும் புதிதாக மதம்மாறிய சில முஸ்லிம்களும் தமது கோத்திரத்து அங்கத்தவர்கள் சிலருடன் அமர்ந்து ஆழ்ந்து உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட ஸஅத் கோபத்துக்கும் இக்கட்டான நிலைக்கும் உள்ளானார். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டுமென முடிவு செய்தார் அவர். என்றாலும் தான் நேரடியாக எவ்வித அசம்பாவிதங்களிலும் தலையிட்டுக் கொள்ள விரும்பாதவராக, அதிகார ரீதியில் தனக்கு அடுத்தவராக இருந்த உஸைதிடம் கூறினார் :
“ எமது சகோதரர்களுள் பலவீனமானவர்களை மடையர்களாக்கவென எமது எல்லைக்குள்ளேயே வந்திருக்கும் அவ்விருவரிடமும் சென்று, அவர்களை வெளியேற்றி. இனிமேல் அவர்கள் இங்கு வரக்கூடாது எனக் கூறிவிடும். அஸ்அத் எனது உறவினராயில்லாது விடின் நான் உமக்கு இச்சிரமத்தை அளித்திருக்க மாட்டேன். அவர் எனது தாயின் சகோதரியின் மகனாக இருக்கின்றார். அவருக்கெதிராக நான் எதையும் செய்ய முடியாது. ”
இதனைக் கூறும் போது, யத்ரிபிலிருந்து முதன் முதல் இஸ்லாத்தினுள் நுழைந்த தனது சகோதரன், காலஞ் சென்றுவிட்ட இயாஸ் குறித்த எண்ணங்கள் அவர் மனத்தில் பதிந்திருந்தமை தெளிவு. உஸைத் தனது ஈட்டியைக் கையிலேந்தியவராக அவர்களிடம் சென்று, கடூரமான தோற்றத்தவராய் நின்று
“ நீங்கள் இருவரும் எம்மிடையே வருவதற்கு காரணம் என்ன? எமது சகோதரருள் பலவீனமானோரை முட்டாளாக்குவதற்கா? உங்கள் உயிர்களின் மீது உங்களுக்கு ஏதேனும் விருப்பமிருந்தால் இப்போதே வெளியேறிவிடுங்கள் ” என்றார். முஸ்அப் அவரை நோக்கி அமைதியாக, “ நீர் ஏன் எம்முடன் அமர்ந்து நான் கூறவிருப்பவற்றைக் கேட்கக் கூடாது? அது உமக்கு திருப்தியளிக்கக் கூடுமாயின் ஏற்றுக் கொள்ளும் ; இல்லையேல் அதிலிருந்து உம்மை விலக்கிக் கொள்ளும் ” எனக் கூறினார். “ இது நேர்மையான உரைதான் ” என்றார்.
நபிகளாரின் தூதுவரது தோற்றத்தாலும், பேச்சின் தொனியினாலும் கவரப்பட்ட உஸைத், ஈட்டியை நிலத்தில் குத்தி நிறுத்திவிட்டு அவர்களுடன் அமர்ந்து கொண்டார் அவர். முஸ்அப் அவருக்கு இஸ்லாம் குறித்துக் கூறி குர்ஆனின் சில பகுதிகளையும் ஓதிக் காட்டினார். உஸைதின் தோற்றம் மாறுதலுற்றது. அவரது முகத்திலேற்பட்ட பிரகாசம் அவருள் இஸ்லாம் நுழைந்துள்ளமையை அங்கிருந்தோர்க்கு உணர்த்தியது. அவர் பேச முன்னமேயே அவருள் ஏற்பட்டிருந்த அமைதி தெளிவாகியது. முஸ்அப் தன் பேச்சை நிறுத்தியதும்,
“ இவ்வசனங்கள் எவ்வளவு அழகும் மேன்மையும் கொண்டனவாயிருக்கின்றன! இம்மதத்தைச் சேர விரும்புபவர் செய்ய வேண்டுவதென்ன? ” என வினவினார் உஸைத்.
முதலில் தன்னைத் தூய்மைப்படுத்த தலை முதல் கால்கள் வரை நன்கு கழுவித்துப்புரவு செய்து கொள்ள வேண்டுமென்றும் பின்னர் தொழுகைக்காகத் தனது ஆடைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறப்பட்டார் அவர். அவர்கள் அமர்ந்திருந்த தோட்டத்திலேயே ஒரு கிணறு இருந்தது. உஸைத் கிணற்றை அடைந்து தன்னையும் தனது ஆடைகளையும் சுத்தி செய்து வந்து ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரிய நாயன் யாருமில்லை ; முஹம்மத் அவனது தூதராயிருப்பார் என உறுதி கூறினார். தொழுவதெப்படி என அவருக்குக் காட்டினார்கள். அவரும் தொழுதார். பின்னர் உஸைத் கூறினார் :
“ என் பின்னால் ஒருவர் இருக்கின்றார். அவர் உங்களைப் பின்பற்றக் கூடுமாயின் அவருடைய மக்கள் அனைவரும் உங்களைத் தவறாது பின்பற்றுவர். நான் இப்போதே அவரை உங்களிடம் அனுப்பி வைப்பேன் ”
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
* இது, சிறப்பாக பஞ்ச காலங்களின் போது வறுமைப்பட்ட அறபி நாடோடிகளிடையே நிலவி வந்த, பிறக்கும் பெண் குழந்தைகளைப் புதைத்து விடும் வழக்கத்தை நினைவுறுத்துவது

No comments:
Post a Comment