Thursday, 2 May 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

மூன்று கேள்விகள்


குறைஷியர் தங்களது ஒவ்வொரு கூட்டத்தின்போதும், தம்மைச் சூழ்ந்து கொண்டுள்ள பெரும் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தத் தவறவில்லை. யூத ரப்பிகளைக் கலந்தாலோசிக்கவென யத்ரிபுக்கு ஒரு தூதுக் குழுவினை அனுப்பி வைப்பதென முடிவாயிற்று. தூதுவர் இருவரிடமும் குறைஷித் தலைவர்கள் கூறினார்கள் :

“ முஹம்மத் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறுங்கள். அவர் கூறுவனவற்றையும் கூறுங்கள். அவர்கள் முன்னைய வேத நூல்களையும் இறைதூதர்கள் பற்றிய ஞானத்தையும் கொண்டவர்கள் : அந்த அறிவு நம்மிடம் இல்லை ”. 

ரப்பிகள் தமது ஆலோசனைகளை அனுப்பி வைத்தனர் :

“ நாம் கூறும் மூன்று விடயங்கள் குறித்து அவரை வினவுங்கள். அவர் பதிலளிப்பாராயின் அவர் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதராவார். பதிலளிக்காதுவிடின் பொய்களை சிருஷ்டித்து கூறுபவராயிருப்பார். பழங்காலத்தில் தமது மக்களை விட்டும் பிரிந்து சென்ற இளைஞர்கள் பற்றியும், அவர்களது அப்போதைய நிலைமை பற்றியும் வினவுங்கள் ; அவர்களது சரிதை அற்புதமானதொன்றாகும். உலகின் கிழக்கு மேற்கு திசைகளை எட்டிய தூரதேச பிரயாணியின் நன்மாராயங்கள் பற்றிக் கேளுங்கள். அத்தோடு அவரிடம் ஆன்மா பற்றிக் கேளுங்கள். இவற்றுக்கு அவர் பதிலளிப்பாராயின் அவரைப் பின்பற்றுங்கள் ; அவர் ஓர் இறைதூதராவார். ”
தூதர்கள், யத்ரிப் ரப்பிகளது ஆலோசனைகளுடன் மக்காவுக்கு திரும்பி வந்ததும், குறைஷிகள் நபிகளாரை அழைத்து மூன்று கேள்விகளையும் கேட்டனர்.

“ நாளை நான் பதில் கூறுவேன் ” என்றனர் நபிகளார்.



அடுத்த நாள் அவர்கள் பதிலுக்காக வந்தபோது நபிகளார் மீண்டும் கால தாமதம் செய்யவேண்டியதாயிற்று. இவ்வாறே நாட்கள் நகர்ந்து பதினைந்து இரவுகள் கழிந்து விட்டன. நபிகளாருக்குதவியாக இறைவசனங்கள் ஏதும் அருளப்படவில்லை. குறைஷியர் கேள்விகளை தொடுத்தது முதல் ஜிப்ரீலும் வரவில்லை. மக்காவின் மக்கள் நபிகளாரை வதைக்கலானார்கள். அவர்கள் கூறியவற்றால் அன்னார் மனம் வருந்தினார்கள். தான் எதிர்பார்த்திருந்த உதவி இன்னும் வராமை, நபிகளாரை மிகுந்த கவலைக்குறியதாக்கியது, பின்னர், தமது மக்கள் கூறியவற்றால் துயருற்ற அன்னாரைக் கடிந்து கொள்ளும் வகையிலான இறைவசனங்களுடன் ஜிப்ரீல் தோற்றினார். அத்தோடு மூன்று கேள்விகளுக்குமான பதில்களும் வந்தன. இவ்வளவு காலமும் நபிகளார் காத்திருக்கவேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டதன் காரணமும் கூறப்பட்டது :


“ ( நபியே! ) எந்த விஷயத்தைப் பற்றியும் ‘நிச்சயமாக நான் அதனை நாளைக்குச் செய்து விடுவேன்’ என்று கூறாதீர் ; ஆயினும் இன்ஷா அல்லாஹ் ( - அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன் என்று கூறுவீராக! )

குர்ஆன் : 18 : 23-24


இறைவசனங்கள் அருளப்படுவதில் ஏற்பட்ட காலதாமதம், நபிகளாருக்கும் அன்னாரைச் சார்ந்தோருக்கும் வருத்தம் விளைவிப்பதாக இருந்திருப்பினும், உண்மையில் அது மேலதிகமான பலத்தை அளிப்பதாகவே அமைந்தது.

அன்னாரது பரமவைரிகளாயிருந்தோர் இதிலிருந்து எந்த முடிவுக்கும் வர மறுத்தனர். நபிகளார் கூறியபடி அன்னாருக்கு இறைவசனங்கள் வானலோகத்திலிருந்தே வருகின்றனவென்பதையும், அதன் மீது அன்னாருக்கு எவ்வித பங்கோ கட்டுப்பாடோ இல்லை என்பதனையும், இரு மனத்தவராயிருந்த குறைஷியருக்கு உணர்த்துவதாகவும் இக்கால தாமதம் அமைந்தது. முன்னைய இறைவசனங்களை முஹம்மத் தானே உருவாக்கியிருந்தால் இப்போதைய புதிய வசனங்களை உருவாக்குவதில் இத்தனை தாமதம் செய்திருக்க வேண்டுமா? அதுவும் மிகவும் சங்கடமான இச்சூழ்நிலையில் அவர் வேண்டுமென்றே காலதாமதம் செய்திருப்பார் என எதிர் பார்க்கலாமா?


விசுவாசிகள் எப்போதும் போல இறைவசனங்கள் மூலமாகவே கூடிய பலம் பெற்று வந்தனர். பண்டை நாளில் தமது மக்களை விட்டுச் சென்ற இளைஞர்கள் குறித்து - மக்காவில் இதுவரை எவருமே அறிந்திராத அச்சம்பவம் குறித்து - குறைஷியர் நபிகளாரிடம் கேள்விக்கணை தொடுத்த போது தமது காலச் சூழல் மீது அது நேரடியான தொடர்பு கொண்டிருக்கும் என்பதனை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. அதுவும் தமக்குப் பாதகமாகவும் விசுவாசிகளுக்குச் சாதகமாகவுமே அது அமையும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இது பெரிதும் இபேஸஸ் நித்திரையாளர்களது கதையென்றே வழங்கி வந்துள்ளது. இங்கு கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் சில இளைஞர்கள் ஏக தெய்வ வணக்கஸ்தர்களாக விளங்கி வந்தார்கள். அவர்களது மக்களோ, சிலைகளை வணங்கி வந்ததோடு, தம்மை பின்பற்ற மறுத்த இந்த இளைஞர்களைத் துன்புறுத்தவும் தொடங்கினர். தமக்கிழைக்கப்பட்ட துயரங்களிலிருந்தும் தப்பியிருக்கவென இவ்விளைஞர்கள் ஒரு குகையில் அடைக்கலம் தேடினர். அங்கு ஆச்சரியமான முறையில் அவர்கள் முன்னூறு வருடங்களுக்கும் மேலாக நித்திரையில் ஆழ்த்தப்பட்டனர். 


ஏற்கெனவே யூதர்கள் அறிந்திருந்தனவற்றை விட, குர்ஆனின் விவரணங்கள்,


18:9. (அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?


18:10. அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.


18:11. ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.


18:12. பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.


18:13. (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.


18:14. அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.


18:15. எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).


18:16. அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).


18:17. சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர். 


18:18. மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,


18:19. இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).



18:20. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்)


18:21. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.


18:22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) “ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்” என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.


18:23. (நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் “நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று நிச்சயமாக கூறாதீர்கள்.


18:24. “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; இன்னும், “என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்” என்றும் கூறுவீராக!


18:25. அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.

குர்ஆன் : 18 அஸ்ஹாபுல் கஹ்ஃபு - குகை வாசிகள் : 9-25


இதுவரை யாருமே கேட்டிராத அளவு விவரங்களைத் தந்தன. பல நூற்றாண்டுகளாக இளைஞர்கள் நித்திரையிலிருந்து வந்த தோற்றம், அவர்களது நன்றியுள்ள நாய் முன்னங்கால்களை நீட்டியவாறு படிக்கட்டில் படுத்திருந்த விதம் என்பன கூட விவரிக்கப்பட்டன.



இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment