வேளை
அவிசுவாசிகள் அடிக்கடி கூறிவந்த ஒரு விஷயம், உண்மையாகவே இறைவன் தமக்கேதும் செய்திகள் அனுப்ப வேண்டியிருப்பின் நிச்சயமாக ஒரு வானவரை அனுப்பியிருப்பான் என்பதாகும். குர்ஆன் இதற்குப் பதிலளித்தது:
பூமியில் மலக்குகளே வசித்திருந்து (அதில்) அவர்கள் சாவதானமாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து ஒரு மலக்கையே ( நம்முடைய) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம்!.
குர்ஆன் : 17:95

காலத்துக்குக் காலம் ஜிப்ரீல் இறைவசனங்களுடன் வருகை தந்து கொண்டிருந்தாலும், குர்ஆனின் அடிப்படையில் அவர் ஒரு தூதராக அமைந்துவிடவில்லை. ஏனெனில் தூது யாருக்காக வந்துள்ளதோ அவர்கள் மத்தியிலிருந்து ஒருவரையே அதற்கென நிலை நிறுத்த வேண்டியிருந்தது. இறை வசனங்கள் மேலும் கூறின :
(மறுமையில்) நம்மைச் சந்திப்பதை எவர்ககள் நம்பவில்லையோ அவர்கள் ‘எங்கள் மீது ( நேரடியாகவே ) மலக்குகள் இறக்கப்பட வேண்டாமா? ( அல்லது எங்களது கண்களால் ) நாங்கள் எங்கள் இறைவனைப் பார்க்க வேண்டாமா?’ என்று கூறுகின்றனர். இவர்கள் தங்களை மிகமிகப் பெரிதாக எண்ணிக் கொண்டு அளவு கடந்து ( சென்று ) விட்டனர். ( அவர்களை அழித்து விட வரும் ) மலக்குகளை அவர்கள் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு அன்றைய தினம் யாதொரு நல்ல செய்தியும் இல்லை. ‘( உங்களுக்கு ) மாற்ற முடியாத தடை ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது' என்று அவர்கள் கூறுவார்கள்.
குர்ஆன்: 25:21-22
அதாவது, அவர்கள், வானலோகத்துக்கும் இவ்வுலகுக்குமிடையிலான தடையை இடும்படி தீனக்குரல் எழுப்புவார்கள். ஆனால் அதில் எவ்வித பயனும் கிட்டாது. அதுவே முடிவாகவும் இருக்கும். வான லோகத்துடனான நேர் தொடர்பின் காரணமாக உலகியல் காணும் கால, தேச நியமங்களனைத்தும் அழிவுற்று, உலகமே சிதைவுற்று விடும். அந்நாளில் மனிதர்கள் சிதறிக் கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள் : மலைகள் கொட்டிய பஞ்சுசுகளைப் போல் பறக்கும்.
குர்ஆன் : 101 : 4-5
அந்நாளில் ( திடுக்கம் ) சிறு குழந்தைகளையும் நரைத்தவர்களாக ஆக்கிவிடும்
குர்ஆன் : 73 : 17
இம்முடிவு குர்ஆனில் முழுவதும் விவரிக்கப்பட்டுள்ளது. அந்த ‘வேளை’ அண்மையிலேயே இருக்கின்றது. அப்போது, வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும் ; திடுகூறாகவன்றி அது ( உங்களிடம் ) வராது.
குர்ஆன் : 7 : 187
அந்த வேளை இன்னும் வரவில்லை. அது அண்மையில் இருக்கின்றது எனக் கூறும்போது நினைவிலிறுத்திக் கொள்ளவேண்டிய இறை வசனங்களுமுள :
நிச்சயமாக நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள், உமதிறைவனிடத்தில் ஒரு நாளுக்குச் சமமாகும்
குர்ஆன் : 22 : 47
- அந்த வேளையை எப்போதும் எதிர்ப்பார்த்ததாகவே நபிகளாரின் தூதினைக் கொண்ட காலம் விளங்குகிறது.
இயற்கையின் சாதாரண இயல்புகளை அடிப்படையாகக் கொண்டது இது. வெறுமனே இவ்வுலகியல் அம்சங்களின் இயல்பாகவன்றி பரந்ததொரு நோக்கில் இதனைக் காண வேண்டும். புதியதோர் மதத்தை நிறுவ தெய்வீக இடையூறு இருக்குமாயின், நிச்சயமாக சுவனத்துக்கும் இவ்வுலகுக்கும் இடையிலான தடுப்பில் ஒரு வாயில் இருக்க வெண்டும். உலகியல் நிலைமைகளை ஒரேயடியாக மாற்றியமைத்துவிடக்கூடிய அளவு பாரியதொரு வாயிலாக இல்லாவிடினும், முன்னர் ஈஸா, மூஸா, இப்றாஹீம், நூஹு ஆகிய நபிமார்களின் காலங்களைப் போல முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுத்துவக் காலத்தையும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமைக்கக் கூடியதாக அது இருத்தல் அவசியம்.
ஹிறா மலைக் குகையில் நபிகளாரிடம் ஜிப்ரீல் வந்த கண்ணியமிக்க இரவு லைலதுல் கத்ர் குறித்து குர்ஆன் கூறுகின்றது :
கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும் ( ஜிப்ரீலாகிய பரிசுத்த ) ஆவியும், தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் ( நடைபெற வேண்டிய ) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்
குர்ஆன் : 97 : 3-4
நபிகளாருக்கும் ஜிப்ரீலுக்கும் இடையிலான தொடர்புகள் நிலவிய கால முழுவதும் அவ்விரவின் மேன்மையான அம்சங்கள் பல பிரவகித்துப் பொங்கி வழியலாயின.
அந்த வேளையை எதிர்பார்த்திருத்தல், இறுதித் தீர்ப்பு நாளினை எதிர்ப்பார்த்திருத்தலாகும் . குர்ஆனும் தன்னை ‘அல்-புர்கான்’ ( இது ஸுறா 25-இன் தலைப்பாகும் ) - நன்மை தீமையைப் பிரித்தறிவிக்கும் ஒன்றாகச் சுட்டிக் கொள்கின்றது. இறைவசனங்கள் அனைத்துக்குமே பொதுவான ஒரு தன்மை, நன்மை தீமையைப் பிரித்தறிவித்தலாகும். நிலையற்ற இவ்வாழ்வினிலும் என்றும் நிலையான ஒன்றனை அறிமுகம் செய்வதாக இது அமைந்தது. மறுமையின் பிரசன்னம் பற்றிய பிரகடனங்கள், இறுதித் தீர்ப்பு நாளை முன்னிருத்தியே மேற்கொள்ளப்பட்டன. இது நபிகளாரின் தீர்க்க தரிசனங்களுக்கும் மேலாகப் பல்வேறு விஷயங்களில் சுவர்க்கம், நரகம் பற்றிய இறுதித் தீர்ப்புகள் வெளிப்படையாகவே அமைந்துள்ளமையை குறித்து நின்றது.
நன்மை தீமை என்பன குறித்து ஆழத்தில் அமிழ்ந்து கிடந்த சிந்தனைகளனைத்தும் மேலெழச் செய்யப்பட்டன. நன்மை தீமைகளைப் பிரித்தறிவித்து, இறுதித் தீர்ப்பு நாள் நோக்கி வழிகாட்டி வைப்பதில், நபிகளாரின் பிரசன்னம் உற்ற துணையாயமைந்தது. அன்னாரது வழிகாட்டலின் தகைமை, தம்மை ஏற்க மறுத்தோரின் நெறி பிறழ்ந்த தன்மையை நன்கு மதிப்பீடு செய்து காட்டியது. நபிகளாரை ஏற்றுக் கொண்டவர்களோ, அன்னாரின் பூரணத்துவத் தன்மையின் வட்டத்துக்குள் கவர்ந்திழுக்கப்படலாயினர்.
நல்லவர்கள் மேன்மையுறுவார்கள் என்பதனை இறைவசனங்கள் உறுதிப்படுத்துகின்றன என்பதை இலகுவாக விளங்கிக் கொள்ள முடிந்தது. ஆனாலும், தீயவர்கள் அல்ல எனத் தாம் கருதியிருந்த சிலர் கொடியவர்களாக மாறி வருகின்றமையைக் காண வேண்டியிருந்தமை விசுவாசிகளிடையே துயரத்தையும் மனக் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாயது. இவ்வாறான நிலைமைகளையெல்லாம் விசுவாசிகள் எதிர் நோக்கவே வேண்டுமெனக் குர்ஆன் கூறியது. அதன் வாசகங்கள் அவிசுவாசிகளுக்கெதிராகக் கடுமையான செய்திகளை வெளியிட்டன.
இவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகையில் ( நல்லுபதேசங்களைக் ) கூறியிருக்கின்றோம். எனினும் ( இவை யாவும் ) அவர்களுக்கு வெறுப்பயேயன்றி அதிகரிக்கவில்லை.
குர்ஆன் : 17 : 41
( நம் வேதனையைப் பற்றி அடிக்கடி ) அவர்களுக்குப் பயமுறுத்துவது பின்னும் ( பின்னும் ) அவர்களுடைய பெரும் அட்டூழியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது
குர்ஆன் : 17 : 60
அபூலஹப்பின் இயல்பான குணாதிசயங்கள் குறித்து எவருமே அறிந்திருக்கவில்லை. மற்றுமோர் உதாரணத்தை எடுத்துக் கொண்டால் அப்த்-அர்-ரஹ்மான்-இப்ன்-அவ ்ப், ஜுமாஹ்களின் தலைவரான உமையா-இப்ன்-கலாபுடன் நட்புறவு பாராட்டியவராகவும் இருந்துள்ளார்.
உன்னதமான ஒப்பீடொன்றனைக் குர்ஆன் அளிக்கின்றது - நூஹு நபியவர்கள், இறைவனது போதனைகள் அனைத்தும் தமக்கும் தம் மக்களின் பெரும்பாலோர்க்குமிடையே பிரிவினையையே வளர்த்துச் செல்கின்றன எனவும் மேலும் மேலும் அவை, அம்மக்களைத் தீநெறிகளிலேயே இட்டுச் செல்கின்றனவெனவும் இறைவனிடமேயே முறையிட்டு நின்றமையை அது சித்தரிக்கின்றது.
குர்ஆன் : 71 : 6
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
அவிசுவாசிகள் அடிக்கடி கூறிவந்த ஒரு விஷயம், உண்மையாகவே இறைவன் தமக்கேதும் செய்திகள் அனுப்ப வேண்டியிருப்பின் நிச்சயமாக ஒரு வானவரை அனுப்பியிருப்பான் என்பதாகும். குர்ஆன் இதற்குப் பதிலளித்தது:
பூமியில் மலக்குகளே வசித்திருந்து (அதில்) அவர்கள் சாவதானமாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து ஒரு மலக்கையே ( நம்முடைய) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம்!.
குர்ஆன் : 17:95

காலத்துக்குக் காலம் ஜிப்ரீல் இறைவசனங்களுடன் வருகை தந்து கொண்டிருந்தாலும், குர்ஆனின் அடிப்படையில் அவர் ஒரு தூதராக அமைந்துவிடவில்லை. ஏனெனில் தூது யாருக்காக வந்துள்ளதோ அவர்கள் மத்தியிலிருந்து ஒருவரையே அதற்கென நிலை நிறுத்த வேண்டியிருந்தது. இறை வசனங்கள் மேலும் கூறின :
(மறுமையில்) நம்மைச் சந்திப்பதை எவர்ககள் நம்பவில்லையோ அவர்கள் ‘எங்கள் மீது ( நேரடியாகவே ) மலக்குகள் இறக்கப்பட வேண்டாமா? ( அல்லது எங்களது கண்களால் ) நாங்கள் எங்கள் இறைவனைப் பார்க்க வேண்டாமா?’ என்று கூறுகின்றனர். இவர்கள் தங்களை மிகமிகப் பெரிதாக எண்ணிக் கொண்டு அளவு கடந்து ( சென்று ) விட்டனர். ( அவர்களை அழித்து விட வரும் ) மலக்குகளை அவர்கள் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு அன்றைய தினம் யாதொரு நல்ல செய்தியும் இல்லை. ‘( உங்களுக்கு ) மாற்ற முடியாத தடை ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது' என்று அவர்கள் கூறுவார்கள்.
குர்ஆன்: 25:21-22
அதாவது, அவர்கள், வானலோகத்துக்கும் இவ்வுலகுக்குமிடையிலான தடையை இடும்படி தீனக்குரல் எழுப்புவார்கள். ஆனால் அதில் எவ்வித பயனும் கிட்டாது. அதுவே முடிவாகவும் இருக்கும். வான லோகத்துடனான நேர் தொடர்பின் காரணமாக உலகியல் காணும் கால, தேச நியமங்களனைத்தும் அழிவுற்று, உலகமே சிதைவுற்று விடும். அந்நாளில் மனிதர்கள் சிதறிக் கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள் : மலைகள் கொட்டிய பஞ்சுசுகளைப் போல் பறக்கும்.
குர்ஆன் : 101 : 4-5
அந்நாளில் ( திடுக்கம் ) சிறு குழந்தைகளையும் நரைத்தவர்களாக ஆக்கிவிடும்
குர்ஆன் : 73 : 17
இம்முடிவு குர்ஆனில் முழுவதும் விவரிக்கப்பட்டுள்ளது. அந்த ‘வேளை’ அண்மையிலேயே இருக்கின்றது. அப்போது, வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும் ; திடுகூறாகவன்றி அது ( உங்களிடம் ) வராது.
குர்ஆன் : 7 : 187
அந்த வேளை இன்னும் வரவில்லை. அது அண்மையில் இருக்கின்றது எனக் கூறும்போது நினைவிலிறுத்திக் கொள்ளவேண்டிய இறை வசனங்களுமுள :
நிச்சயமாக நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள், உமதிறைவனிடத்தில் ஒரு நாளுக்குச் சமமாகும்
குர்ஆன் : 22 : 47
- அந்த வேளையை எப்போதும் எதிர்ப்பார்த்ததாகவே நபிகளாரின் தூதினைக் கொண்ட காலம் விளங்குகிறது.
இயற்கையின் சாதாரண இயல்புகளை அடிப்படையாகக் கொண்டது இது. வெறுமனே இவ்வுலகியல் அம்சங்களின் இயல்பாகவன்றி பரந்ததொரு நோக்கில் இதனைக் காண வேண்டும். புதியதோர் மதத்தை நிறுவ தெய்வீக இடையூறு இருக்குமாயின், நிச்சயமாக சுவனத்துக்கும் இவ்வுலகுக்கும் இடையிலான தடுப்பில் ஒரு வாயில் இருக்க வெண்டும். உலகியல் நிலைமைகளை ஒரேயடியாக மாற்றியமைத்துவிடக்கூடிய அளவு பாரியதொரு வாயிலாக இல்லாவிடினும், முன்னர் ஈஸா, மூஸா, இப்றாஹீம், நூஹு ஆகிய நபிமார்களின் காலங்களைப் போல முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுத்துவக் காலத்தையும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமைக்கக் கூடியதாக அது இருத்தல் அவசியம்.
ஹிறா மலைக் குகையில் நபிகளாரிடம் ஜிப்ரீல் வந்த கண்ணியமிக்க இரவு லைலதுல் கத்ர் குறித்து குர்ஆன் கூறுகின்றது :
கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும் ( ஜிப்ரீலாகிய பரிசுத்த ) ஆவியும், தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் ( நடைபெற வேண்டிய ) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்
குர்ஆன் : 97 : 3-4
நபிகளாருக்கும் ஜிப்ரீலுக்கும் இடையிலான தொடர்புகள் நிலவிய கால முழுவதும் அவ்விரவின் மேன்மையான அம்சங்கள் பல பிரவகித்துப் பொங்கி வழியலாயின.
அந்த வேளையை எதிர்பார்த்திருத்தல், இறுதித் தீர்ப்பு நாளினை எதிர்ப்பார்த்திருத்தலாகும்
நன்மை தீமை என்பன குறித்து ஆழத்தில் அமிழ்ந்து கிடந்த சிந்தனைகளனைத்தும் மேலெழச் செய்யப்பட்டன. நன்மை தீமைகளைப் பிரித்தறிவித்து, இறுதித் தீர்ப்பு நாள் நோக்கி வழிகாட்டி வைப்பதில், நபிகளாரின் பிரசன்னம் உற்ற துணையாயமைந்தது. அன்னாரது வழிகாட்டலின் தகைமை, தம்மை ஏற்க மறுத்தோரின் நெறி பிறழ்ந்த தன்மையை நன்கு மதிப்பீடு செய்து காட்டியது. நபிகளாரை ஏற்றுக் கொண்டவர்களோ, அன்னாரின் பூரணத்துவத் தன்மையின் வட்டத்துக்குள் கவர்ந்திழுக்கப்படலாயினர்.
நல்லவர்கள் மேன்மையுறுவார்கள் என்பதனை இறைவசனங்கள் உறுதிப்படுத்துகின்றன என்பதை இலகுவாக விளங்கிக் கொள்ள முடிந்தது. ஆனாலும், தீயவர்கள் அல்ல எனத் தாம் கருதியிருந்த சிலர் கொடியவர்களாக மாறி வருகின்றமையைக் காண வேண்டியிருந்தமை விசுவாசிகளிடையே துயரத்தையும் மனக் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாயது. இவ்வாறான நிலைமைகளையெல்லாம் விசுவாசிகள் எதிர் நோக்கவே வேண்டுமெனக் குர்ஆன் கூறியது. அதன் வாசகங்கள் அவிசுவாசிகளுக்கெதிராகக் கடுமையான செய்திகளை வெளியிட்டன.
இவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகையில் ( நல்லுபதேசங்களைக் ) கூறியிருக்கின்றோம். எனினும் ( இவை யாவும் ) அவர்களுக்கு வெறுப்பயேயன்றி அதிகரிக்கவில்லை.
குர்ஆன் : 17 : 41
( நம் வேதனையைப் பற்றி அடிக்கடி ) அவர்களுக்குப் பயமுறுத்துவது பின்னும் ( பின்னும் ) அவர்களுடைய பெரும் அட்டூழியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது
குர்ஆன் : 17 : 60
அபூலஹப்பின் இயல்பான குணாதிசயங்கள் குறித்து எவருமே அறிந்திருக்கவில்லை. மற்றுமோர் உதாரணத்தை எடுத்துக் கொண்டால் அப்த்-அர்-ரஹ்மான்-இப்ன்-அவ
உன்னதமான ஒப்பீடொன்றனைக் குர்ஆன் அளிக்கின்றது - நூஹு நபியவர்கள், இறைவனது போதனைகள் அனைத்தும் தமக்கும் தம் மக்களின் பெரும்பாலோர்க்குமிடையே பிரிவினையையே வளர்த்துச் செல்கின்றன எனவும் மேலும் மேலும் அவை, அம்மக்களைத் தீநெறிகளிலேயே இட்டுச் செல்கின்றனவெனவும் இறைவனிடமேயே முறையிட்டு நின்றமையை அது சித்தரிக்கின்றது.
குர்ஆன் : 71 : 6
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
No comments:
Post a Comment