Friday, 7 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குடும்பப் பிரிவினைகள் ( தொடர்… )



சிற்சிறு லெளகிக உறவுகட்கும் மேலாகச் சத்தியத்துடனான தொடர்புகளை உன்னதமாகக் கொண்டு செயல்பட முனையும் தன்மையை அதீ கோத்திரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த குடும்பங்களுள் ஒன்றன் முன்னைய தலைமுறையிலேயே கண்டு கொள்ள முடிந்தது. 

நுபைலுக்கு இரு வேறு மனைவியர் மூலம் இரு புதல்வர்கள் இருந்தனர். கத்தாப், அம்ர் என்போர். நுபைல் இறந்ததன் பின்னர் கத்தாபின் தாயார், கணவரின் மறுதாரத்து மகனான அம்ரை மணஞ் செய்து கொண்டார். அவர்களது மகன் ஸைத் எனப் பெயரிடப்பட்டார். ஆக, கத்தாபும் ஸைதும் தாய் வழியில் அரைச் சோதரராயிருந்தனர். வரகாஹ்வைப் போல், ஸைதும் குறைஷியரினின்றும் வேறுபட்ட சிந்தை கொண்டவராக விளங்கினார். சிலை வணக்கத்தையும் பல்தெய்வ வழிபாடுகளையும் விருப்பாதிருந்த அவர், சிலைகளுக்கெனப் பலியீடு செய்யப்பட்ட எதனையும் உட்கொள்வதைக் கூட மறுத்துரைத்தார். தான் இப்றாஹீமின் இறைவனையே வழிப்படுவதாகப் பிரகடனம் செய்ததோடு தனது சொந்த கோத்திரத்தவர்களையே பகிரங்கமாகக் கண்டனம் செய்யவும் அவர் தயங்கவில்லை. மறுபுறம் கத்தாப், குறைஷியரின் பண்டை வழக்கங்களை அப்படியப்படியே பின் பற்றுபவராயிருந்தார். தாம் வழிபட்டு வந்த கடவுளரைக் கண்டனம் செய்து வந்த ஸைத்தின் நடவடிக்கைகள் கத்தாபுக்கு அவதூறு ஏற்படுத்துவனவாய் அமைந்தன. எனவே கத்தாப், ஸைதைத் துயருறுத்தத் தொடங்கி, அவரை மக்காவின் குழிவுப் பிரதேசத்தினின்றும் வெளியேற்றி அயலிலுள்ள மலைப்பிரதேசத்தில் சென்று வசிக்கச் செய்தார். இளைஞர்களைக் கொண்டதொரு குழுவினர், ஸைத் புனிதத்தலத்துள் நுழையாதவாறு காக்கும்படி பணிக்கப்பட்டனர். வெளியேற்றப்பட்ட ஸைத், ஹிஜாஸை விட்டும் தானே நீங்கி ஈராக்கின் வட பகுதியில் உள்ள மோசூல் வரை சென்றார். பின்னர் தென் மேற்காகச் சென்று ஸிரியாவை அடைந்தார். சென்றவிடமெல்லாம் தான் சந்தித்த மதகுருமாரிடமும் ரப்பிகளிடமும் இப்றாஹீமின் மதம் குறித்து விசாரணைகள் மேற்கொண்டு வந்தார் அவர். இறுதியில் ஒரு மதகுருவானவர், ஓர் இறைதூதர் தோற்றமுறும் காலம் நெருங்கி விட்டதெனவும், ஸைத் எந்த நாட்டை விட்டு வந்தாரோ, அந்த நாட்டிலேயே அவர் தோற்றம் பெறுவாரெனவும், அவர் தேடிக்கொண்டிருக்கும் மதத்தையே அவ்விறைத்தூதர் போதிப்பார் எனவும் கூறிவைத்தார். மீண்டும் வந்து கொண்டிருந்த ஸைத், ஸிரியாவின் தென்னெல்லையில் லக்ம் எனும் பிரதேசத்தில் வைத்துத் தாக்கிக் கொள்ளப்பட்டார். வரகாஹ் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டபோது, அவரை போற்றித் துக்ககரமானதொரு பாடலை யாத்தார். நபிகளாரும் ஸைதைப் பற்றிக் கூறினார்கள்:
“மீளவுயிர்பிக்கும் நாளின் போது, தனியான அவருள், ஒரு முழு சமூகத்தினது பெறுமதியை உடையவராக அவர் எழுப்பப்படுவார்”.- இ.இ. 145
ஸைத் மரணித்துப் பல வருடங்களாகிவிட்டன. கத்தாபும் இறந்து போனார். இது முன்னைய தலைமுறையின் முடிவு. கத்தாபின் மகன் உமர், ஸைதின் மகன் ஸஈதோடு நல்லுறவு பாராட்டி வந்தார். உமரின் சகோதரி பாத்திமாவை மணஞ் செய்திருந்தார் ஸஈத். ஒரு குடும்பத்தின் இரு பிரிவினர்க்கிடையிலான பிளவுகள் முற்றுப் பெற்றிருந்தன. எனினும் இஸ்லாத்தின் வருகையுடன், அதனை முதன் முதல் பின்பற்றியோருள் ஸஈதும் ஒருவரானார். ஆனால் உமரோ இஸ்லாத்தின் கொடூரமானதோர் எதிரியாக விளங்கினார். உமரின் தாயார் அபூஜஹ்லின் சகோதரியாவார். பாத்திமாவும் தனது கணவரைப் பின்பற்றியொழுகினாலும், உமரின் கடுமையான போக்கின் காரணமாக இருவரும் தமது மதமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்தனர். மற்றொரு புறத்தாலும் உமரை இஸ்லாம் சூழ்ந்து கொண்டிருந்தது. ஜுமாஹ் கோத்திரத்தின் மஸ்ஊன் என்பாரின் மகன் உத்மானின் சகோதரியே உமரின் மனைவி ஸைனப். இந்த உத்மான், இறைவசனங்கள் அருளப்படுவதற்கும் முன்பிருந்தே இயல்பில் துறவு மனப்பான்மை கொண்டவராகவும், ஏக இறை நம்பிக்கையாளராகவும் இருந்து வந்தார். இஸ்லாத்தின் அறிமுகத்துடன், அவரும், அவரது இரண்டு சகோதரர்களும் அதில் இணைந்து கொண்டனர். கூடவே சகோதரி ஸைனபும், மருகர் மூவரும் இஸ்லாத்தின் பாலாயினர். உமரின் மனைவியான ஸைனப் குறித்து இந்நிலையில் வேறு விவரங்கள் இல்லை. அவரது அனுதாபங்கள் எவர் மீதிருந்தாலும் அவற்றை இரகசியமாக வைத்துக் கொள்ள தக்க காரணங்கள் அவருக்கிருந்தன. அவரது சகோதரர் உத்மான் வன்மை குன்றியவர் மட்டுமன்று; விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் உமரிலும் குன்றியவராகவுமிருந்தார். ஸைனபும் சகோதரர்களும் தமது கோத்திரத் தலைவரான உமையா-இப்ன்-கலாப் உடன் ஒன்றுவிட்ட சகோதர பந்தம் கொண்டவர்கள். உமையா-இப்ன்-கலாபும் அவரது சொந்தக் குடும்பத்தவரும் நபிகளாரை மிகவும் வன்மையாக எதிர்த்து வந்தனர். அவரது சகோதரர் உபை என்பார் ஒரு சந்தர்ப்பத்தில் நபிகளாரிடம் காய்ந்து சிதைந்ததோர் எலும்பைக் கொண்டு வந்து, “ இறைவன் இதற்கு உயிர் கொடுப்பான் என்று கூறுகிறீரா முஹம்மதே!” எனக் கூறி அவ்வெலும்பைக் கைகளினால் நொறுக்கித் துகள்களை நபிகளாரின் முகத்துக்கு நேராக ஊதினார். நபிகளார் கூறினார்கள்: “அவ்வாறாயினும் கூட நான் கூறுகின்றேன் நிச்சயமாக அவன் அதனை உயிர்ப்பிப்பான். உம்மைக் கூட நீர் இப்போது இருப்பதைப் போலவே உயிர்ப்பிப்பான். பின்னர் உம்மை நெருப்பினுள் ஆழ்த்துவான்”. - இ.இ. 239

உபையைக் குறித்து இறைவசனங்களும் அருளப்பட்டன: 

“அவன் தன்னுடைய சிருஷ்டியை மறந்து விட்டு ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகின்றான். ‘உக்கி மண்ணாய்ப் போன (இந்த) எலும்புக்கு உயிரூட்டுபவன் யார்?’ என்று அவன் கேற்கின்றான். நீர் கூறும். முதல் முறையில் அதனைச் சிருஷ்டித்தவன் எவனோ, அவனே அதனை உயிர்ப்பிப்பான்.”

அல்குர்ஆன் : 36:78


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment