Thursday, 6 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குடும்பப் பிரிவினைகள் ( தொடர்… )


அபூ-பக்ர் எத்தனையோ பேரை இஸ்லாத்தின் பாலாக்கியிருந்தும் அவரது மகன் அப்த்-அல்-கஅபாவை மனமாற்ற முடியவில்லை. உம்ம்-ரூமான் மூலம் கிடைத்த அவர், தனது பெற்றோரின் முயற்சிகளையெல்லாம் மறுத்து, இஸ்லாத்தின் வெளியிலேயே நின்றார்.

விசுவாசிகளுக்குப் பல ஏமாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. பரந்து வரும் புதியதொரு சக்தியின் உத்வேகத்தின் காரணமாக அவிசுவாசிகளும் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கலாயினர். தமது அன்றாட வாழ்க்கை முறைகளுக்குத் தடைகளையேற்படுத்தவும், எதிர்காலத் திட்டங்களைத் தகர்க்கவுமே இப்புதிய இயக்கம் கிளம்பியுள்ளதென அவர்கள் கொண்டனர். தீவிரமான உடனடிப் பிரச்சினையாயமைந்தது, தமது மக்களின் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் எதிர்நோக்கிய சங்கடங்களாகும். தமது கோத்திரத்தவரான அப்த்-அல்லாஹ் தனது ஒன்று விட்ட சகோதரரான முஹம்மதைப் பகிரங்கமாக எதிர்த்து நின்றமை பனீ மக்ஸும்களுக்கு ஆறுதல் அளிப்பதாயிருந்தது. அப்த்-அல்லாஹ்வின் சகோதரர் ஸுஹைர் புதிய மதத்துக்கு தீவிர எதிர்ப்புகளேதும் காட்டவுமில்லை; அதில் இணையவுமில்லை. 

அப்த்-அல்லாஹ்வைப் போலவே அவரும் ஆதிகாவின் மற்மகன். அப்த்-அல்-முத்தலிபின் மகளாவார் ஆதிகா. அப்த்-அல்லாஹ், ஸுஹைர் ஆகியோரின் காலமாகிவிட்ட தந்தையார், ஆதிகா என்ற பெயரையே உடைய மற்றுமொரு மனைவியையும் கொண்டிருந்தார். அம்மனைவி மூலம் கிட்டியவர் ஹிந்த் எனப் பெயரிய ஒரு மகள். மிக்க அழகியான ஹிந்த் அப்போது பத்தொன்பது வயதை எட்டியிருந்து, தனது இரு அரைச்சோதரரதும் ஒன்று விட்ட சகோதரரான அபூஸலாமாவை மணஞ் செய்திருந்தார். மக்ஸுமின் அடுத்த கிளையைச் சார்ந்தவர் அபூஸலாமா. இரு கிளையினருக்குமிடையிலான இத்திருமண உறவினால் முழுக்கோத்திரத்தாருமே மகிழ்ந்தனர். எனினும் அபூஸலாமா இஸ்லாத்தில் இணைந்து கொண்ட விவரம் தெரிய வந்தமை அனைவரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்குவதாயது. இவ்வேமாற்றம் இரட்டிப்பாகக் காரணமாயமைந்தது, ஹிந்த்-உம்ம்ஸலாமா என்றே இவர் எப்போதும் அழைக்கப்படுபவரானார் - தனது கணவனை விட்டு வராமல் தானும் அவரைப் போலவே நபிகளாரை மிக விசுவாசமாகப் பின்பற்றுவோரில் ஒருவரானமை.
அபூஸலாமவின் தந்தையார் இறந்த பின்னர், தாயாரான பர்ரா, குறைஷிக் குலத்தின் ஆமிர் கோத்திரத்தவர் ஒருவரை மணஞ்செய்திருந்தார். அவர் மூலம் மற்றொரு மகன் கிட்டினார். பெயர் அபூ-ஸப்ரா. ஆமிர் கோத்திரத்துத் தலைவரான ஸுஹைல், தனது மகள் உம்ம் குல்தூமை அபூ-ஸப்ராவுக்கு மனைவியாக அளித்திருந்தார். தனது சகோதரியான அர்வாவைப் போலன்றி பர்ரா இன்னும் இஸ்லாத்தில் இணைந்து கொள்ளாமலே இருந்தார். ஆனால் அபூ-ஸப்ராவோ தனது அரைச் சோதரர் அபூ ஸலாமா மூலமாக மட்டுமன்றி, தந்தையாரின் இரண்டாம் மனைவியான மைமூனா மூலமாகவும் இஸ்லாத்தின் பால் இழுக்கப்பட்டார்.

மைமூனாவையும் அவரது மூன்று சகோதரியரான, அப்பாஸ், ஹம்ஸா, ஜஅபர் ஆகியோரின் மனைவியரையும் குறித்தே நபிகளார் கூறினார்கள் : 

“ நிச்சயமாக இந்த சகோதரியர் உண்மையான விசுவாசிகள் ”. - இ.ஸா. 8:203

ஆமிர் கோத்திரத்துக்கு மிகப் பலம் வாய்ந்ததொரு வகையில் இஸ்லாமிய நம்பிக்கையைக் கொண்டு வந்திருந்தது மைமூனாவின் பிரசன்னம்.


ஸுஹைலுக்கு மற்றுமொரு மகள் இருந்தார். ஸஹ்லா எனப் பெயரிய அவர், ஷம்ஸிய கோத்திரத்துத் தலைவர் உத்பாவின் மகன் அபூ ஹுதைபாவை மணஞ்செய்திருந்தார். ஆமிர் கோத்திரத்தார் அப்போதைய நிலையில் பலம் வாய்ந்தவர்களாக வளர்ந்து வந்தார்கள். எனவே இத்திருமண ஏற்பாடு இரு கோத்திரத்தார்க்கும் நன்மை பயக்குமென அனைவரும் நம்பியிருந்தனர். நீண்ட காலம் கழியுமுன்னமேயே இப்புதிய தம்பதியினர் இஸ்லாத்தினுள் சேர்ந்து கொண்டனர். இவர்களுக்குச் சிறிது முன்னர் அல்லது பின்னர் அடுத்த தம்பதியரான அபூ-ஸப்ராவும், உம்ம் குல்தூமும் இஸ்லாத்தைச் சார்ந்தனர். 
இவ்வாறாக ஸுஹைல், இரு புதல்வியரையும், மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்த இரு மருமக்களையும் இஸ்லாத்தினுள் இழந்தார். ஸுஹைலின் மூன்று சகோதரர்களான ஹாதிப், ஸாலித், ஸக்ரான் ஆகியோரும் மதம் மாறினர். அவர்களது உடன்பிறவாச் சோதரியும் ஸக்ரானின் மனைவியுமான ஸவ்தாவும் மதமாற்றத்துக்குள்ளானார்.

ஸுஹைலின் நோக்கில் மிகவும் மோசமானதொரு தாக்கமாக அமைந்தது, அவரது மூத்த மகன் அப்த்-அல்லாஹ் கூட நபிகளாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றியதாகும். தனது தந்தையார் எப்படியும் இஸ்லாத்தின் பாலாகிவிடுவார் என்ற நம்பிக்கை அப்த்-அல்லாஹ்வுக்கிருந்தது. இதே நம்பிக்கையை நபிகளாரும் கொண்டிருந்தார்கள். ஏனெனில் ஏனைய தலைவர்களிலும் பார்க்க ஸுஹைல் கூடிய பக்திமானாகவும், புத்திசாதுரியம் மிக்கவராகவும், தனிமையில் தியானங்கள் செய்யச் செல்பவரென அறியப்பட்டவராகவும் இருந்தார். எவ்வாறாயினும் புதிய மதத்தின் மீதான அவரது எதிர்ப்பு தொடரவே செய்தது. அது வன்முறை சார்ந்ததல்லாவிடினும் தீர்க்கமானதொன்றாக விளங்கியது. புதல்வர்களின் கீழ்படிதலில்லாத தன்மை, ஸுஹைலின் உள்ளத்தை மேலும் திடப்படுத்தியிருக்கக்கூடும்.


அப்த்-ஷம்ஸ்களைப் பொறுத்தமட்டில், பெற்றோருக்கு எதிராகச் சென்ற தலைவர்தம் புத்திரர் அபூ ஹுதைபா மட்டுமல்ல. தன்னை நெருப்பிலிருந்தும் நபிகளார் காப்பாற்றுவதாகக் கனவு கண்ட காலித், தனது மதமாற்றத்தை இரகசியமாகவே வைத்திருந்தார். எனினும் தந்தையார் இதனைச் செவியுற்றதும் அதனைக் கைவிட்டுவிடும்படி கேட்டுக் கொண்டார். காலித் கூறினார் : 

“ முஹம்மதின் மதத்தைக் கைவிடுவதிலும் பார்க்க மரணித்து விடுவதையே நான் விரும்புவேன். ” - இ.ஸா. 4:1,68

பின்னர் அவர் எவ்வித அனுதாபமுமற்ற வகையில் கடுமையாகத் தாக்கப்பட்டு உணவும் குடிநீரும் கூட இன்றி ஓர் அறையில் இட்டு மூடப்பட்டார். எனினும் மூன்று தினங்களின் பின்னர் அவர் எவ்வாறோ தப்பியோடிவிட்டார். அவருக்கு எதிராக வேறு நடவடிகைகளேதும் எடுக்காமல், ‘காலித் எனது மகனல்ல’ எனப் பிரகடனம் செய்வதுடன் திருப்தி கண்டார் தந்தையார். உத்பாவோ இயல்பாகவே வன்மை குன்றியவர். தனது மகன் அபூ ஹுதைபா மீது அவர் அத்துணை கடுமையாக நடந்து கொள்ளவில்லை. தந்தையும் மகனும் நெருங்கியோராயிருந்தனர். எப்போதிருந்தும் உத்பா சிலை வணக்கத்தின் தவறுகளை உணர்ந்து கொள்வார் என நம்பினார் அபூ ஹுதைபா..

அப்த்-ஷம்ஸ் கோத்திரத்தாரின் உமையாக் கிளையினரைப் பொறுத்தளவில், உத்மான் இஸ்லாத்தை ஏற்றதும், அவர் ருகையாவை மணந்ததும் போக வேறு பல நட்டங்களும் ஏற்பட்டன. அப்த்-ஷம்ஸிகளுடன் கூட்டு ஒப்பந்தங்கள் செய்திருந்த பனீ அஸத் பின் குஸைமாக்களில் பலர், மொத்தம் பதினான்குபேர், புதிய மதத்தைப் பின்பற்றினர். அவர்களுள் ஜஹ்ஷ் குடும்பத்தாரும் அடங்குவர். நபிகளாரின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்ற வகையில் இவர்கள் தலைவர்களாகவே விளங்கினர். இவ்வாறான கூட்டு ஒப்பந்தக் காரர்களுடன், உமையாக் கிளையின் தலைவர் அபூஸுப்யான், தனது சொந்த மகள் உம்ம் ஹபீபாவையும் இழந்தார். அப்த்-அல்லாஹ்வின் இளைய சகோதரர் உபைத்-அல்லாஹ்-இப்ன்-ஜஹ்ஷ் என்பாரை உம்ம் ஹபீபா மணஞ் செய்திருந்தார்.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment