குறைஷியர் தூது
அன்று முதல், தான் ஏற்றுக் கொண்ட இஸ்லாத்தை மிகவும் ஒழுங்காகப் பேணி வந்தார் ஹம்ஸா. நபிகளாரின் கட்டளைகளையும் நடைமுறைப்படுத்தி வரலானார். அவரது மதமாற்றம் குறைஷிகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தமை தெளிவாக இருந்தது. ஹம்ஸா பாதுகாப்பளிப்பார் என்ற காரணத்தினால், நபிகளாரை நேரடியாகத் தொல்லைப்படுத்துவதிலும் தயக்கம் காட்டலாயினர் குறைஷியர். மறுபுறம், நிலைமையின் தீவிரத்தன்மையை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் இவ்வெதிர்பாராத மதமாற்றம் உணர்த்தி நின்றது. பயங்கரமான இச்சூழ்நிலை, அறபிகளிடம் தமக்கிருக்கும் உயரிய ஸ்தானத்தைத் தகர்த்து விடலாம் எனக் கருதிய குறைஷியர், இப்புதிய இயக்கத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் எனக் கொண்டனர். அபாயத்தின் தன்மை, உபாயங்களை மாற்றியமைக்க வேண்டியமையை வற்புறுத்தியது. எனவே அப்த்-ஷம்ஸ் கோத்திரத்தாரின் தலைவர்களுள் ஒருவரான உத்பா-இப்ன்-ராபியா சபையில் தெரிவித்ததோர் ஆலோசனையை அவர்கள் உடனடியாகவே அங்கீகரித்தனர்.

“ நான் ஏன் முஹம்மதிடம் செல்லக் கூடாது? ” என வினவிய அவர், “ அவரிடம் சில பிரேரணைகளை சம்ர்ப்பிப்போம். அவற்றில் சிலவற்றை அவர் ஏற்கலாம் அல்லவா? அவர் எங்களை நிம்மதியாக வாழ விடுவார் என்ற நியதியின் பேரில், அவர் ஏற்றுக்கொள்பவற்றை நாம் அவருக்கு அளிப்போம் ” எனக் கருத்துத் தெரிவித்தார்.
அவ்வேளை நபிகளார் கஃபாவின் அருகில் அமர்ந்திருப்பதாக செய்தி வந்தது. உத்பா குறைஷித் தலைவர்களின் சபையை விட்டெழுந்து பள்ளிவாசலுக்குச் சென்றார். இம்முயற்சியில் தான் இறங்குவதற்கு அவர் முடிவு செய்யப் பல காரணங்கள் இருந்தன, ஒன்று, அவர் ஹாஷிமின் சகோதரனான அப்த்-ஷம்ஸின் பேரனாயிருந்தமை. மிகப் பெரும் தலைவனாயிருந்த குஸையின் மகன் அப்த்-மனாபின் இரு புதல்வர்களதும் பெயரால் வழங்கி வந்த இவ்விரு கோத்திரத்தாரும் வெகுவாகப் பிரிந்து சென்றிருந்தாலும் கூட, அவர்களது தோற்றம் ஒரே மூலத்தையே கொண்டிருந்தமையால் அவர்களிடையே இருந்து வந்த வேற்றுமைகளைக் குறைத்துக் கொள்வது இலகுவாயிருந்தது. அத்தோடு உத்பா, குறைஷிகளிலேயே வன்மை குறைந்த ஒருவராக, இதமான சுபாவங் கொண்டவராகவும் புத்தி சாதுரியம் மிக்கவராகவும் விளங்கினார்.
“ எனது சகோதரன் மகனே! ” என ஆரம்பித்தார் உத்பா. “ நீர் அறிந்திருப்பது போல, நீர் உயர்ந்ததொரு கோத்திரத்தில் உதித்தவர். உமது வம்சாவளி கெளரவமானதொரு ஸ்தானத்தை உமக்கு உறுதிப்படுத்தியிருக்கின்றத ு. இவ்வாறிருக்க, மிக்க பாரதூரமானதொரு விஷயத்தை நீர் உமது மக்களிடையே கொண்டு வந்திருக்கின்றீர். அதன் மூலம் அவர்களது சமூகத்தை நீர் துண்டாடி விட்டீர். அவர்களது வாழ்க்கை முறை முட்டாள் தனமானது எனப் பிரகடனப் படுத்தியுள்ளீர். அவர்களது கடவுளரையும் மதத்தையும் இகழ்ச்சியாகப் பேசுகின்றீர். அவர்களது மூதாதையர்களை நம்பிக்கையீனர்கள் என அழைத்துள்ளீர், எனவே எமது பிரேரணைகளுக்குச் செவி சாய்த்து, அவற்றில் ஏதேனும் உமக்கு ஏற்கக் கூடியதாக உளதா எனப் பார்ப்பீராக! நீர் செல்வத்தை நாடுவீராயின் எமது எல்லாச் சொத்துக்களிலிருந்தும் உமக்குப் பெரியதொரு செல்வத்தைச் சேகரித்து, நீரே எம்மவரில் மிகப் பெரிய செல்வந்தராயிருக்கச் செய்வோம். கெளரவத்தை நீர் நாடுவீராயின் உம்மையே எமது அதிபதியாக்கிக் கொள்வோம்; உமது அனுமதியின்றி எவ்வித தீர்மானத்தையும் நாம் எடுக்க மாட்டோம். அல்லது அரசபாரத்தை நீர் நாடுவீராயின் உம்மையே எமது அரசனாக நாம் அமைத்து விடுவோம். அவ்வாறின்றி உமக்குத் தோற்றமளிக்கும் ஆவிகளிலிருந்து நீர் உம்மை விடுவித்துக் கொள்ள இயலாதவராயிருப்பின் நாம் ஒரு சிறந்த வைத்தியனைக் கூட்டி வந்து உமது வியாதி முற்றும் குணமாகும் வரை எமது செல்வங்களைச் செலவழிப்போம் ” . உத்பா பேசி முடித்ததும் நபிகளார்,
“ ஓ வலீதின் தந்தையே! இப்போது எனக்குச் செவிசாய்ப்பீரா? ” என்றார்கள். ஆம் என்றார் உத்பா, தமக்கு அண்மையில் அருள் செய்யப்பட்டிருந்த சில இறைவசனங்களை அவருக்கு ஓதத்தொடங்கினர் நபிகளார்.
நபிகளார் கூறுவதைக் கவனமாகக் கேட்பதுபோல பாவனை செய்யவாவது தயாராக இருந்தார் உத்பா. தான் வெற்றி கொள்ள வேண்டியவர் மீது இவ்வாறானதொரு போக்கைக் கடைப்பிடிப்பது நல்லதாகத் தெரிந்தது. எனினும் சில வசனங்களை கேட்டதும், அவரது எண்ணங்களெல்லாம் மாற்றமுறலாயின. அவ்வாசகங்கள் மீது வியப்புணர்வு மேலிடுவதாயிற்று. முதுகுப்புறம் தனது கைகளை வைத்திருந்த அவர், தான் செவியுறுவனவற்றைக் குனிந்து இருந்து கேட்டவராக, அவ்வாசகங்களின் மொழியழகைக் கண்டு ஆச்சரியப்பட்டவராக இருந்தார். நபிகளார் ஓதியவை, இறைவசனங்கள் பற்றிப் பேசின. உலகினதும் பிரபஞ்சத்தினதும் படைப்புக் குறித்துப் பேசின. இறை தூதர்கள் குறித்தும், அவர்களை மறுத்துரைத்த முன்னோர்கள் அழிவுக்குள்ளாகி நரக வாய்ப்பட்டமை குறித்தும் பேசின. பின்னர் விசுவாசிகள் குறித்த வாசகங்கள் வந்தன. இவ்வுலக வாழ்வில் அவர்களுக்கு வானவர்களின் பாதுகாப்பு கிட்டுவது பற்றியும், மறுமையில் அவர்களது எல்லா வகையான விருப்புகளினதும் நிறைவேற்றம் பற்றியுமான வாக்குறுதிகளை அளித்தன. இறுதியாக, இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாயிருந்தால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவைகளைச் சிருஷ்டித்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள் - அல்குர்ஆன்: 41:37
என்ற வாசகங்களுடன் நபிகளார் தமது நெற்றியை நிலத்தில் பதித்து அல்லாஹ்வை துதி செய்தார்கள். எழுந்ததும் கூறினார்கள் :
“ நீர் இதுவரை கேட்டவற்றை கேட்டுக் கொண்டீர். ஓ வலீதின் தந்தையே! இனி அனைத்தும் உமக்கும் அவற்றுகுமிடையிலேயே உள்ளன”
உத்பா திரும்பி வந்ததும், அவரது தோழர்கள், அவரது முகத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல்களை அவதானித்துத் திகைத்தவர்களாக “ உமக்கென்ன நேர்ந்து விட்டது வலீதின் தந்தையே! ” என்றார்கள். அவர் கூறினார் :
“ இதுவரை கேட்டிராத வகையிலான வாசகங்கள் சிலவற்றை நான் கேட்டேன். இறைவன் பேரால் நிச்சயமாக அது கவிதையல்ல ; மாந்திரீகமுமல்ல; குறி கூறலுமல்ல. குறைஷி மக்களே! எனக்குச் செவி சாயுங்கள், நான் சொல்வதைச் செய்யுங்கள். இந்த மனிதருக்கும் அவரது நடவடிக்கைகளுக்கு மிடையில் நீங்கள் தலையிட வேண்டாம். அவரை விட்டு விடுங்கள். இறைவன் பேரால் நிச்சயமாக நான் அவரிடமிருந்து கேட்ட வாசகங்கள் மிக்க விசேஷமான செய்திகளாகவே கொள்ளப்படும். அறபிகள் அவரை முறியடித்தால் பிறரால் நீங்கள் முறியடிக்கப் படுவீர்கள். அவர் அறபியரை மேற்கொண்டாலோ, அவரது ஆதிக்கம் உங்களது ஆதிக்கமாகும். அவருடைய பராக்கிரமம் உங்களது பராக்கிரமமாகும். நீங்களே மனிதர்களில் மிக்க பாக்கியம் பெற்றவர்களாவீர்கள். ”
எனினும் தோழர்கள் உத்பாவைக் கேலி செய்தவர்களாக “ தனது நாவால் அவர் உம்மை வசப்படுத்திக் கொண்டார் ” என்றனர்.
“ எனது அபிப்பிராயத்தை நான் கூறிவிட்டேன். உங்களுக்கு எது சிறந்ததாகத் தெரிகின்கிறதோ அதனையே செய்வீர்களாக! ” எனக் கூறிய உத்பா, அதற்கு மேல் குறைஷியருக்கு முரணாக எதுவும் பேசவில்லை. அதே வேளை உத்பாவைப் பொறுத்த மட்டில், அவர் கேட்ட குர்ஆன் வாசகங்கள் க்ஷண நேரக் கவர்ச்சியாக மட்டும் இருந்து விடவுமில்லை.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
அன்று முதல், தான் ஏற்றுக் கொண்ட இஸ்லாத்தை மிகவும் ஒழுங்காகப் பேணி வந்தார் ஹம்ஸா. நபிகளாரின் கட்டளைகளையும் நடைமுறைப்படுத்தி வரலானார். அவரது மதமாற்றம் குறைஷிகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தமை தெளிவாக இருந்தது. ஹம்ஸா பாதுகாப்பளிப்பார் என்ற காரணத்தினால், நபிகளாரை நேரடியாகத் தொல்லைப்படுத்துவதிலும் தயக்கம் காட்டலாயினர் குறைஷியர். மறுபுறம், நிலைமையின் தீவிரத்தன்மையை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் இவ்வெதிர்பாராத மதமாற்றம் உணர்த்தி நின்றது. பயங்கரமான இச்சூழ்நிலை, அறபிகளிடம் தமக்கிருக்கும் உயரிய ஸ்தானத்தைத் தகர்த்து விடலாம் எனக் கருதிய குறைஷியர், இப்புதிய இயக்கத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் எனக் கொண்டனர். அபாயத்தின் தன்மை, உபாயங்களை மாற்றியமைக்க வேண்டியமையை வற்புறுத்தியது. எனவே அப்த்-ஷம்ஸ் கோத்திரத்தாரின் தலைவர்களுள் ஒருவரான உத்பா-இப்ன்-ராபியா சபையில் தெரிவித்ததோர் ஆலோசனையை அவர்கள் உடனடியாகவே அங்கீகரித்தனர்.

“ நான் ஏன் முஹம்மதிடம் செல்லக் கூடாது? ” என வினவிய அவர், “ அவரிடம் சில பிரேரணைகளை சம்ர்ப்பிப்போம். அவற்றில் சிலவற்றை அவர் ஏற்கலாம் அல்லவா? அவர் எங்களை நிம்மதியாக வாழ விடுவார் என்ற நியதியின் பேரில், அவர் ஏற்றுக்கொள்பவற்றை நாம் அவருக்கு அளிப்போம் ” எனக் கருத்துத் தெரிவித்தார்.
அவ்வேளை நபிகளார் கஃபாவின் அருகில் அமர்ந்திருப்பதாக செய்தி வந்தது. உத்பா குறைஷித் தலைவர்களின் சபையை விட்டெழுந்து பள்ளிவாசலுக்குச் சென்றார். இம்முயற்சியில் தான் இறங்குவதற்கு அவர் முடிவு செய்யப் பல காரணங்கள் இருந்தன, ஒன்று, அவர் ஹாஷிமின் சகோதரனான அப்த்-ஷம்ஸின் பேரனாயிருந்தமை. மிகப் பெரும் தலைவனாயிருந்த குஸையின் மகன் அப்த்-மனாபின் இரு புதல்வர்களதும் பெயரால் வழங்கி வந்த இவ்விரு கோத்திரத்தாரும் வெகுவாகப் பிரிந்து சென்றிருந்தாலும் கூட, அவர்களது தோற்றம் ஒரே மூலத்தையே கொண்டிருந்தமையால் அவர்களிடையே இருந்து வந்த வேற்றுமைகளைக் குறைத்துக் கொள்வது இலகுவாயிருந்தது. அத்தோடு உத்பா, குறைஷிகளிலேயே வன்மை குறைந்த ஒருவராக, இதமான சுபாவங் கொண்டவராகவும் புத்தி சாதுரியம் மிக்கவராகவும் விளங்கினார்.
“ எனது சகோதரன் மகனே! ” என ஆரம்பித்தார் உத்பா. “ நீர் அறிந்திருப்பது போல, நீர் உயர்ந்ததொரு கோத்திரத்தில் உதித்தவர். உமது வம்சாவளி கெளரவமானதொரு ஸ்தானத்தை உமக்கு உறுதிப்படுத்தியிருக்கின்றத
“ ஓ வலீதின் தந்தையே! இப்போது எனக்குச் செவிசாய்ப்பீரா? ” என்றார்கள். ஆம் என்றார் உத்பா, தமக்கு அண்மையில் அருள் செய்யப்பட்டிருந்த சில இறைவசனங்களை அவருக்கு ஓதத்தொடங்கினர் நபிகளார்.
நபிகளார் கூறுவதைக் கவனமாகக் கேட்பதுபோல பாவனை செய்யவாவது தயாராக இருந்தார் உத்பா. தான் வெற்றி கொள்ள வேண்டியவர் மீது இவ்வாறானதொரு போக்கைக் கடைப்பிடிப்பது நல்லதாகத் தெரிந்தது. எனினும் சில வசனங்களை கேட்டதும், அவரது எண்ணங்களெல்லாம் மாற்றமுறலாயின. அவ்வாசகங்கள் மீது வியப்புணர்வு மேலிடுவதாயிற்று. முதுகுப்புறம் தனது கைகளை வைத்திருந்த அவர், தான் செவியுறுவனவற்றைக் குனிந்து இருந்து கேட்டவராக, அவ்வாசகங்களின் மொழியழகைக் கண்டு ஆச்சரியப்பட்டவராக இருந்தார். நபிகளார் ஓதியவை, இறைவசனங்கள் பற்றிப் பேசின. உலகினதும் பிரபஞ்சத்தினதும் படைப்புக் குறித்துப் பேசின. இறை தூதர்கள் குறித்தும், அவர்களை மறுத்துரைத்த முன்னோர்கள் அழிவுக்குள்ளாகி நரக வாய்ப்பட்டமை குறித்தும் பேசின. பின்னர் விசுவாசிகள் குறித்த வாசகங்கள் வந்தன. இவ்வுலக வாழ்வில் அவர்களுக்கு வானவர்களின் பாதுகாப்பு கிட்டுவது பற்றியும், மறுமையில் அவர்களது எல்லா வகையான விருப்புகளினதும் நிறைவேற்றம் பற்றியுமான வாக்குறுதிகளை அளித்தன. இறுதியாக, இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாயிருந்தால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவைகளைச் சிருஷ்டித்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள் - அல்குர்ஆன்: 41:37
என்ற வாசகங்களுடன் நபிகளார் தமது நெற்றியை நிலத்தில் பதித்து அல்லாஹ்வை துதி செய்தார்கள். எழுந்ததும் கூறினார்கள் :
“ நீர் இதுவரை கேட்டவற்றை கேட்டுக் கொண்டீர். ஓ வலீதின் தந்தையே! இனி அனைத்தும் உமக்கும் அவற்றுகுமிடையிலேயே உள்ளன”
உத்பா திரும்பி வந்ததும், அவரது தோழர்கள், அவரது முகத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல்களை அவதானித்துத் திகைத்தவர்களாக “ உமக்கென்ன நேர்ந்து விட்டது வலீதின் தந்தையே! ” என்றார்கள். அவர் கூறினார் :
“ இதுவரை கேட்டிராத வகையிலான வாசகங்கள் சிலவற்றை நான் கேட்டேன். இறைவன் பேரால் நிச்சயமாக அது கவிதையல்ல ; மாந்திரீகமுமல்ல; குறி கூறலுமல்ல. குறைஷி மக்களே! எனக்குச் செவி சாயுங்கள், நான் சொல்வதைச் செய்யுங்கள். இந்த மனிதருக்கும் அவரது நடவடிக்கைகளுக்கு மிடையில் நீங்கள் தலையிட வேண்டாம். அவரை விட்டு விடுங்கள். இறைவன் பேரால் நிச்சயமாக நான் அவரிடமிருந்து கேட்ட வாசகங்கள் மிக்க விசேஷமான செய்திகளாகவே கொள்ளப்படும். அறபிகள் அவரை முறியடித்தால் பிறரால் நீங்கள் முறியடிக்கப் படுவீர்கள். அவர் அறபியரை மேற்கொண்டாலோ, அவரது ஆதிக்கம் உங்களது ஆதிக்கமாகும். அவருடைய பராக்கிரமம் உங்களது பராக்கிரமமாகும். நீங்களே மனிதர்களில் மிக்க பாக்கியம் பெற்றவர்களாவீர்கள். ”
எனினும் தோழர்கள் உத்பாவைக் கேலி செய்தவர்களாக “ தனது நாவால் அவர் உம்மை வசப்படுத்திக் கொண்டார் ” என்றனர்.
“ எனது அபிப்பிராயத்தை நான் கூறிவிட்டேன். உங்களுக்கு எது சிறந்ததாகத் தெரிகின்கிறதோ அதனையே செய்வீர்களாக! ” எனக் கூறிய உத்பா, அதற்கு மேல் குறைஷியருக்கு முரணாக எதுவும் பேசவில்லை. அதே வேளை உத்பாவைப் பொறுத்த மட்டில், அவர் கேட்ட குர்ஆன் வாசகங்கள் க்ஷண நேரக் கவர்ச்சியாக மட்டும் இருந்து விடவுமில்லை.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
No comments:
Post a Comment