Wednesday, 5 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

வியப்பும்
நம்பிக்கையும்


குறைஷியருள், தம் தலைவர்களளவு வாழ்க்கையில் செல்வமும் செல்வாக்கும் பெற்றுக் கொள்ள இயலாது போனோரும், இளைஞர்களாயிருந்தோரும் இறைவசனங்களின் மூலமான போதனைகளை ஒரேயடியாக ஏற்றுக் கொண்டனர் எனக் கூறுவதற்கில்லை. 

ஒரு வகை சுயதிருப்தி கண்டவர்களாகவே அவர்கள் வாழ்ந்து வந்தனர். என்றாலும் ஒரு ஊதுகுழலின் ஓசை போல தமது சின்னஞ்சிறு உலகில் வந்திறங்கிய இந்த அழைப்பின் கூர்மையும் அழுத்தமும் கேளாத அளவுக்கு அவர்களது செவிகள் அடைபட்டிருக்கவில்லை.

உத்மான் பாலை நிலத்தில் கேட்ட ‘ உறங்குபவர்களே விழித்தெழுங்கள் ’ என்ற அசரீரி, முழுப் போதனைக்குமே இயைந்ததாக இருந்தது. போதனையை ஏற்றவர்களோ, உண்மையிலேயே தாம் உறக்கத்திலிருந்து விழித்துப் புதியதொரு வாழ்க்கையினுள் புகுந்தது போன்ற உணர்வைப் பெற்றிருந்தனர்.

அவிசுவாசிகளின் முன்னைய பின்னைய நிலைமைகளை இறைவசனங்கள் நன்கு தெளிவாக்கி வைத்தன. இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர ( இறந்த பின் வேறு வாழ்க்கை ) இல்லை; ஆகவே ( இறந்த பின் ) நாம் உயிர்ப்பிக்கப்பட மாட்டோம் ( குர்ஆன்: 6:29 ) அவிசுவாசிகளின் இத்தகு கூற்றுக்குப் பதிலாக அமைந்தன, வானங்களையும் பூமியையும் அவைகளுக்கு மத்தியிலுள்ளவைகளையும் (வீண்) விளையாட்டுக்காக நாம் சிருஷ்டிக்கவில்லை ( குர்ஆன்: 21:16 ) நாம் உங்களைப் படைத்ததெல்லாம் நிச்சயமாக வீணுக்காக என்றும் நீங்கள் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் உறுதியாக எண்ணிக் கொண்டிருந்தீர்களா? ( குர்ஆன் : 23:115 ) முதலிய வாசகங்கள், அவிசுவாச எண்ணங்கள் மனதில் ஆழப்பதியாதோராய் இருந்தோர்க்கு இவ்வாசகங்கள் உண்மையே கூறுவனவாகத் தெரிந்தன. குறிப்பிட்ட இவ்வாசகங்கள் மட்டுமன்றிக் குர்ஆனின் போதனைகள் அனைத்துமே இவ்வாறானதோர் உணர்வையே தூண்டி நின்றன. ஓர் ஒளியாகவும் வழிகாட்டியாகவும் தம்மைத் தாம் சுட்டி நின்றன இறை வசனங்கள். போதனைகளை ஏற்று நடக்க வேண்டுமென்பதற்குப் போதகரின் தன்மைகளும் தூண்டுதலாயிருந்தன. பிறரை ஏமாற்ற முனையாத அளவு உண்மை நிரம்பியவராயிருந்தார் அவர். தன்னைத் தான் ஏமாற்றிக் கொள்ளாத அளவு ஞானம் மிகுந்தவராகவுமிருந்தார். எனவே நபிகளாரை இவர்கள் உறுதியாக நம்பினர். போதனைகள் எச்சரிக்கைகளையும் வாக்குறுதிகளையும் வழங்கின. எச்சரிக்கைகள் ஆவன செய்ய அவர்களைத் தூண்டின; வாக்குறுதிகள் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
“ நிச்சயமாக எவர்கள் ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி ( அதன் மீது ) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ, அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து ( அவர்களை நோக்கி ) ‘நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீர்கள்; கவலைப் படாதீர்கள், உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியைக் கொண்டு சந்தோஷமடையுங்கள். நாங்கள் உலக வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாளர்களாக இருந்தோம். மறுமையிலும் (உங்களுக்கு உதவியாளர்களே) சுவனபதியில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். ( பாபங்களை ) மன்னித்து கிருபை செய்வோனிடமிருந்து விருந்தாகக் கிடைக்கும்' என்று கூறுவார்கள் ”

அல்குர்ஆன் : 41 : 30-32


சுவனம் பற்றிய வாசகங்களில் அப்போது அருளப்பட்ட ஒன்று, பரிசுத்தவான்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலையான சுவனபதி குறித்துப் பேசியது. 

“ அது அவர்களுக்கு நற்கூலியாகவும். அவர்கள் சேருமிடமாகவும் இருக்கின்றது. அதில் அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும். (அதில்) அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். ”

அல் குர்ஆன் 25: 15-16

நம்மை சந்திப்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் என விசுவாசிகள் குறிக்கப்படுகின்றனர். அவிசுவாசிகளோ, நம்முடைய சந்திப்பை ஒரு சிறிதும் நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை விரும்பி, அதனைக்கொண்டு திருப்தியடைந்து, (அதிலேயே மூழ்கி) விட்டார்களோ அவர்களும் இன்னும் எவர்கள் நம் வசனங்களை ( ப் புறக்கணித்து) விட்டுப் பாராமுகமாயிருக்கின்றார்களோஅவர்களும் ( அல் குர்ஆன் 10:7 ) ஆவர். விசுவாசிகளின் நடவடிக்கைகள் இதற்கு எல்லா வகையிலும் முரண்பட்டனவாக அமைய வேண்டும். அவிசுவாசிகள் வாழ்ந்து வரும் கனவே போன்ற இவ்விகலோக வாழ்வில், இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் வெறுமனே கிடைத்தன போன்றுள. யதார்த்தம் பற்றிய உணர்வானது இகலோக வாழ்வினுக்கும் மேலாக மறுமையிலும் நலமான வாழ்க்கை வாழ்ந்து கொள்ள அவாவிச் செயல்படுவது மட்டுமல்ல, இறைவன் அருளியுள்ள இவ்வுலகியல் அம்சங்கள் அனைத்தையும் வியந்து காண்பதுமாகும். 

வானத்தில் கிரக நிலைகளை அமைத்து அதில் ( சூரியனை ) ஒளியாகவும் சந்திரனைப் பிரகாசம் தரக் கூடியதாகவும் அமைத்த அவன் பாக்கியமுடையவன். அவந்தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு செய்திருக்கின்றான்.
( இதனைக் கொண்டு ) நல்லுணர்ச்சி பெற்று, அவனுக்கு நன்றி செலுத்த விரும்புவோர், நன்றி செலுத்துவதற்காகவே ( இவ்வாறு செய்திருக்கின்றான் )

அல்குர்ஆன்: 25:61-62


குறைஷிகளின் தலைவர்கள் நபிகளாரின் இறை தூதுவ நிலைக்கு ஆதாரமாக வானவர்கள் வருகை தரவேண்டுமென்றார்கள்; முஹம்மத் வானலோகத்துக்குச் செல்ல வேண்டுமென்றார்கள்.

ஒரு மாலை நேரம் பூரண நிலவு நாள். நிலவு தோற்றம் பெற்று அதிக நேரம் கழியவில்லை. ஹிறா மலையின் மேல் அது தொங்கிக் கொண்டிருப்பது போலத் தோற்றியது. அவிசுவாசிகளில் சிலர் நபிகளாரிடம் சென்று, அன்னாரது இறை தூதுவ நிலைக்கு ஆதாரமாக அந்த நிலவை இரண்டாகப் பிளந்து காட்டும்படி வேண்டினர். பிரசன்னமாயிருந்தோருள் விசுவாசிகளும் இருந்தனர். அவிசுவாசிகளும் இருந்தனர். இன்னும் தீர்மானமேதும் எடுக்காதோரும் இருந்தனர். இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதும் அனைவரது கண்களும் சந்திரனை நோக்கித் திரும்பின.

சந்திரன் இரண்டாகப் பிளந்து, பிரிந்து, ஹிறா மலையின் இரு புறத்தும் அரை வட்ட வடிவில் விளங்கியமையைக் கண்டு அனைவரும் வியப்பினால் மலைத்து நின்றனர். “ நீங்கள் சாட்சிகளாக இருப்பீர்களாக! ” என்றனர் நபிகளார்
ஸஹீஹ் புகாரி : 61:24

எனினும் வேண்டுகோள் விடுத்தவர்கள், இக்கட்புல அற்புதத்தைத் தொடர்ந்த சூனியமென்றும், ( அல் குர்ஆன் 54:1-2 ) தனது மந்திர சக்தியினால் முஹம்மத் தம்மை மயக்கி விட்டார் என்றும் கூறலாயினர். விசுவாசிகள் மகிழ்ந்தார்கள். இதுவரை நிலையான தீர்மானம் ஏதும் எடுக்காதிருந்தோரில் பலர் இஸ்லாத்தில் இணைந்தார்கள். சிலர் அந்நிலையை அண்மினார்கள்


பரிகாசமானதொரு முறையில் விடுக்கப்பட்ட இவ்வேண்டுகோளுக்கு வானலோகத்திலிருந்து கிட்டிய இப்பதில் மூலமான அத்தாட்சி தனியானதொரு சம்பவம். 

குறைஷியரால் விடுக்கப்பட்ட வேறு பல வேண்டுகோள்களுக்கும் பதில்கள் கிட்டின. அவர்கள் கேட்ட மாதிரியிலல்ல ; அவர்களது காலத்திலுமல்ல; இறைவன் நாடியபோதே அவை கொடுக்கப்பட்டன. விசுவாசிகள் மட்டுமே அவதானித்த மேலும் பற்பல சிற்சிறு அற்புத சம்பவங்கள் நிகழ்ந்தன. எவ்வாறாயினும் இவ்வாறான அற்புதங்கள் எவையும் புதிய மதத்தின் மத்தியாம்சமாகக் கொள்ளப்படவில்லை. இறை வாசகங்களாயமைந்த குர்ஆனே மாபெரும் அற்புதமாக, மதத்தின் மத்தியாம்சமாக அமைந்தது. இறை பிரசன்னத்தின் முன்னைய இடையீட்டின் போது, ஈஸா நபியவர்கள் மத்தியாம்சமாக விளங்கியது போல, இப்போதைய இடையீட்டில் இறைவாசகங்களே மத்தியாம்சமாக விளங்கின. 

குர்ஆனின் அடிப்படையில் , ஈஸா நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர். அத்தோடு அவனுடைய ‘குன்’ ( ஆகுக ) என்ற வாக்கால் பிறந்தவர்; அல்லாஹ் தன்னுடைய அந்த வாக்கை மர்யமுக்கு அளித்தான். அவரும் அவனிடமிருந்து வந்த ஓர் ஆத்மாவே.- ( குர்ஆன்: 4:171 ) சொல்லால் அமைந்த உருவாக அமைந்தது ஈஸா நபியவர்களின் அவதாரம்.

அது போலவே சொல்லால் அமந்த நூலின் மூலமான இறை பிரசன்னம் மறுமையுடனான உண்மைத் தொடர்பையும், உறவினையும் அமைத்துக் கொடுப்பதாயது. இயற்கை மதம் எனத் தன்னைக் குறித்து நின்ற இஸ்லாத்தின் நிலை(குர்ஆன்: 30:30 )யைத் தாபிக்கச் சொல்லால் அமைந்த நூலான குர்ஆன் செய்யவேண்டியிருந்த கருமங்கள் பல. அவற்றுள் ஒன்று, காலப்போக்கில் அருகிச் சென்று விட்டதும், பெரும்பாலும் தவறாகக் கொள்ளப்பட்டு விட்டதுமான வியப்புணர்வை மீட்டு நிலை நிறுத்துவதாகும். எனவே குறைஷிகள் அற்புத கருமங்களை வேண்டி நின்ற போதெல்லாம் குர்ஆன், அவர்களது கண்களின் முன்னால் இருந்தவற்றையே காட்டி நின்றது. அவற்றில் அவர்கள் காணாதிருந்த அற்புதங்களையெல்லாம் குர்ஆன் சுட்டிக் காட்டுவதாயது: 


“ ( இந்நிராகரிப்போர் - தங்களிடமுள்ள ) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்டுள்ளது? ( அவர்களுக்கு மேல் உள்ள ) வானத்தையும் ( அவர்கள் கவனிக்க வேண்டாமா? ) அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? ( அவர்கள் கண்முன் தோன்றும் ) மலைகளையும் ( அவர்கள் கவனிக்க வேண்டாமா? ) அவை எவ்வாறு நாட்டப்பட்டுள்ளன? ( அவர்கள் வசிக்கும் ) பூமியையும் ( அவர்கள் கவனிக்க வேண்டாமா? ) அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? ”

அல்குர்ஆன் : 88:17-20


விசுவாசிகளிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட வியப்புணர்வும் நம்பிக்கையும் இறைவன்பால் வழிகாட்டும் சாதனங்களாகவே அமைந்தன. நன்றி பாராட்டும் வகையிலான…

‘ சர்வலோகங்களுக்கும் நாயனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் ’

- என்ற வாசகம், வியப்பை உணர்த்துவதோடு போற்றப்பட்டதையும், அத்துடன் போற்றுபவரையும் நண்மைகள் அனைத்தினதும் மேன்மையான மூலத்துக்கே இட்டுச் செல்கின்றது. அர்ப்பண வாசகமாயமைந்த…

‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகின்றேன்’ 
- என்பது ஆன்மாவை அதே வழியில் நம்பிக்கை நதியின் பால் கொண்டு செல்கின்றது. இவ்வழியில் இஸ்லாத்தின் அடிப்படைப் பிரார்த்தனையாக மத்தியத்துவப் படுத்தப்பட்டு அமைந்துள்ளது அல்-பாத்திஹா - தோற்றுவாய். குர்ஆனின் முதல் அத்தியாயம். ( தொகுப்பின் ஒழுங்கில் முதலாவது ; அருளப்பட்ட ஒழுங்கில் அல்ல. இஸ்லாமிய விதிமுறைகளின்படி தினமும் குறைந்தது பதினேழு முறைகள் இது ஓதப்படுவதாயுளது. ) என்பதனால் அது அவ்வாறு அழைக்கப்படுகின்றது :


- “ எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! ( அவன் ) அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்துவோன். அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி( யும் ஆவான் ). ( அருளும் அன்பும் உடைய எங்கள் இறைவனே! ) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களுடைய வழியில் ( நடத்துவாயாக! ) ( அவ்வழி உன் ) கோபத்துக்குள்ளானவர்களுடையதும் அல்ல : வழி தவறியவர்களுடையதும் அல்ல. ”

அல் குர்ஆன்: 1 : 2-7

அத்தோடு இஸ்லாத்தின் முழுமையான, தீர்க்கமான வெளிப்பாடாயமைந்துள்ளது குர்ஆனின் ஸுறா-அல்-இக்ஹ்லாஸ். குர்ஆனின் இறுதிப் பகுதியிலிருந்து மூன்றாவதாக அமைந்த ஸுறா இது.

ஒரு சிலை வணக்கஸ்த்தர், நபிகளாரிடம், அன்னாரின் இறைவனை விவரிக்கும்படி வேண்டியபோது அருளப்பட்டது இது : 

“ நீர் கூறும் : அல்லாஹ் ஒருவன் தான். ( அந்த ) அல்லாஹ் ( எவருடைய ) தேவையுமற்றவன். அவன் பெறவுமில்லை ; பெறப்படவுமில்லை. தவிர அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை. ”

அல் குர்ஆன் : 112


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment