புது தில்லி: தாங்கள் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க மனமில்லாத மிகப்பெரிய 'கோடீஸ்வரர்'களின் ரூ.7,016 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல், நாட்டை விட்டு தப்பியோடிய 'தொழிலதிபர்' விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 கோடி கடன் தொகை உட்பட 'வேண்டுமென்றே' கடனை திரும்ப செலுத்தாத 63 கோடீஸ்வர கடன்காரர்களின் கடனை தள்ளுபடி செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது.
இவர்களில் 63 கோடீஸ்வரர்களின் கடன்தொகை முழுமையாகவும், 31 பேரின் கடன் தொகையில் பாதியும் தள்ளுபடி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக கேஎஸ் ஆயில் (வெறும் ரூ.596 கோடி), சூர்யா பார்மாசூடிகல்ஸ் (வெறும் ரூ.526 கோடி மட்டுமே), ஜிஇடி பவர் (வெறும் ரூ.400 கோடிகள்தான்) மற்றும் சாய் இன்போ சிஸ்டம் (சுமாரா ரூ.376 கோடிகளே) அடங்கும்.
இதில், 17 வங்கிகளில் சுமார் 6,963 கோடியை கடனாக வாங்கி, கடனை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்து.
முன்னதாக, கடந்த 2013 முதல் 2015ம் நிதியாண்டில் 29 மாநில வங்கிகள் இதுபோன்று கோடீஸ்வர கடன்காரர்கள் வாங்கிய ரூ.1.14 லட்சம் கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்தது. இதிலும் எஸ்பிஐ வங்கியே ரூ.40,084 கோடி வாராக் கடனை தள்ளுபடி செய்தது. இது குறித்து செய்தித் தாள்களில் வெளியான செய்தியைப் பார்த்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment