பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அது ஒரு சிறந்த ஆண்டிபயோடிக்காக செயல்படும் என்கிறது ஒரு ஆராய்ச்சி. ‘பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’என்பார்கள். ஐந்து அல்லது ஆறு பூண்டு பற்களை பாலில் நன்றாக வேகவைத்துப் தினமும்குடித்து வந்தால் உடம்பில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புக்களின் அடைப்பு குறையும். அத்தகைய பூண்டின் சிறப்புக்களை ஆராய்வோம்.
பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. தவிர அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட், வைட்டமின் சி, பி6 போன்றவையும் உள்ளதால் இவையெல்லாம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். எலும்புகளை பலப்படுத்தும்.
உடலின் மெட்டாபாலிசத்தை தூண்டும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
ஜீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, மூலநோய்கள் போன்றவை வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் பூண்டு முக்கிய காரணி.
பூண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் அது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கும்.
ரத்த சுத்தமின்மை, ரத்த அழுத்தம் சம்பந்மான நோய்கள், ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு.
பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
கடுமையான காய்ச்சல் இருந்தால், சிறிது பூண்டுச் சாறை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்கு தேய்த்தால் காய்ச்சல் குறையும்.

No comments:
Post a Comment