38. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்: எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக்; காதும் கேட்டிராத, எந்த மனித இருதயமும் எண்ணிப் பார்த்திராத (ஒன்றை) எனது நேரிய அடியார்களுக்கு நான் தயார்ப்படுத்தி வைத்துள்ளேன்.
நீங்கள் விரும்பினால் கீழ்கண்ட வசனத்தை ஓதுவீராக: '(சுவனவாசிகளுக்கு) கண்களைக் குளிரச்செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை எந்த ஆத்மாவும் அறியாது. (அல் குர்ஆன்-32:17)
(குறிப்பு-நீற்கள் விரும்பினால் என்ற வார்த்தை அபூஹுரைரா (ரழி) அவர்களுக்கு உரியதாகும்.)
39. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இறுதித் தீர்ப்பு நாளில், இறை நம்பிக்கையாளர்கள் ஒன்று திரண்டு, நமக்காக நமது அதிபதியிடம் பரிந்துரைக்க (யாரிடமாவது) நாம் கேட்க வேண்டாமா? என்று கூறுவார்கள். எனவே ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, நீங்கள் மனித இனத்தின் தந்தையாக உள்ளீர்கள். அல்லாஹ், உங்களை அவனது கரத்தினாலேயே படைத்து, அவனது வானவர்களை உங்களுக்கு தலைசாய்க்க வைத்;து, அனைத்து பொருட்களின் பெயர்களையும் உங்களுக்கு கற்றுக் கொடுத்தான். எனவே, நாங்கள் இருக்கும் இந்த இடத்தில் இருந்து எங்களை விடுவிப்பதற்காக, நீங்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுங்கள் என சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் நான் உங்களுக்காக பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை. என்று சொல்லிவிட்டு, தாம் செய்த தவறுகளைக் கூறி அதற்காக வெட்கப்பட்டு விட்டு நூஹ்விடம் செல்லுங்கள். ஏனெனில் உலக மக்களுக்கு அனுப்பப்பட்ட முதல் இறைத்தூதராக அவர் விளங்குகிறார். என்று அறிவுறுத்துவார்.
எனவே மக்கள் நூஹ்(அலை) அவர்களிடம் வந்து முறையிடுவார்கள். அவர் நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை என்று சொல்லி விட்டு, தாம் தமது அதிபதியிடம் தமக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி வேண்டுகோள் வைத்ததை கூறி அதற்காக வெட்கப்பட்டு, கருணையாளனின் நண்பர் இப்ராஹிம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள். என்று கூறுவார்கள்.
எனவே இப்ராஹிம் (அலை) அவர்களிடம் மக்கள் வருவார்கள். அப்போது இப்ராஹிம் (அலை) அவர்கள் நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலையில் இல்லை. என்று சொல்லிவிட்டு, அல்லாஹ்விடம் உரையாடி,அல்லாஹ்வால் தவ்ராத் வேதம் கொடுக்கப்;பட்ட அடியார் மூஸாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள்.
எனவே மூஸா(அலை) அவர்களிடம் மக்கள் வருவார்கள். அப்போது மூஸா (அலை) அவர்கள் நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை. என்று சொல்லி விட்டு, எந்த உயிரையும் கொலை செய்யாத, ஒரு உயிரை தாம் தவறாகக் கொன்றுவிட்டதை நினைவு கூர்ந்து அதற்காக அதிபதி முன் வெட்கப்படுவதாக சொல்லிவிட்டு,
அல்லாஹ்வின் தூதராகவும், அல்லாஹ்வின் அடியாராகவும், அவனது வார்த்தையாகவும், ரூஹாகவும் விளங்கும் ஈஸாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள். எனவே மக்கள் ஈஸா(அலை) அவர்களிடம்;வருவார்கள்.
நபி ஈஸா (அலை) அவர்கள், நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை. என்று சொல்லி விட்டு, முன்பின் பாவங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் மண்ணிக்கப்பட்ட அடியாரான முஹம்மது(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் எனக் கூறுவார்கள்.
எனவே மக்கள் என்னிடம் வருவார்கள். நான் எனது அதிபதியைச் சந்திக்க அனுமதி கோருவேன். எனக்கு அனுமதியும் வழங்கப்படும். நான் என் அதிபதியைக் காணும்போது, அவன் முன் ஸஜ்தாவில் விழுந்துவிடுவேன். அவன் விரும்பும் நேரம் வரை என்னை அப்படியே விட்டுவிடுவான்.
பிறகு என்னிடம், உங்கள் தலையை உயர்த்துங்கள், உங்கள் வேண்டுகோளை முன் வையுங்கள். அது வழங்கப்படும். சொல்லுங்கள். அந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். என்று சொல்லப்படும். அப்பொழுது நான் தலையை உயர்த்துவேன். அவன் எனக்கு கற்றுக் கொடுத்த புகழும் முறைப்படி அல்லாஹ்வை புகழ்;வேன். பின் நான் மக்களுக்காக பரிந்து பேசுவேன். எத்தனை மக்கள் மன்னிக்கப்படுவார்கள்;என்பதற்கான வரம்பை அல்லாஹ் எனக்கு நிர்னயிப்பான். எனவே அவர்களை நான் சுவனத்தினுல் நுழைவிப்பேன்.
மீண்டும் நான் என் அதிபதியைக் கண்டு, முன்னர் செய்தது போல்; ஸஜ்தா செய்வேன். பின்பு நான் மக்களுக்காக பரிந்து பேசுவேன்.எத்தனை மக்கள் மன்னிக்கப்படுவார்கள்; என்பதற்கான வரம்பை அல்லாஹ் எனக்கு நிர்னயிப்பான். எனவே அவர்களை நான் சுவனத்தினுல் நுழைவிப்பேன்.
பின்பு நான் மூன்றாம் முறையாகவும், நான்காம் முறையாகவும் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்வேன். இப்போது நரக நெருப்பில், குர்ஆன் யாரை சுவர்க்கத்தை விட்டும் தடுத்து விட்டதோ, எவர் மீது நரகத்தில் தங்குவது நிரந்தரமாகி விட்டதோ, அவர்களைத் தவிர வேறு யாரும்; தங்கியிருக்க மாட்டார்கள்.
நூல் : புகாரி, முஸ்லிம்.
40. மஸ்ரூக் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதிடம் இந்த திருக்குர்ஆன் வசனத்தை பற்றிக் கேட்டோம்.
(விசுவாசிகளே!) அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) வெட்டப்பட்டோரை இறந்து விட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் நிச்சயமாக உயிரோடு இருக்கிறார்கள். அல்லாஹ்வின் புரத்திலிருந்து அவர்களுக்கு உணவும் அளிக்கப்;பட்டு வருகிறது. (அல்குர்ஆன் 3:169)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் பின் வருமாறு விளக்கம் சொன்னார்கள்.
நாங்கள் இந்த வசனத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அவர்கள் சொன்னார்கள் இறைவழியில் வீர மரணமடைந்தவர்களின் ஆன்மாக்கள், பச்சைப் பறவைகளினுள் இருக்கும். அப்பறவைகளின் கூடுகள் அர்ஷில் தொங்கவிடப்பட்டுள்ளன. சுவாக்கமெங்கும் அப்பறவைகள் சுதந்திரமாக பறந்து திரிகின்றன. பின்னர் தங்கள் கூடுகளில் தஞ்சமடைகின்றன.
இறை வழியில் வீர மரணமடைந்த அவர்களின் பக்கம் அல்லாஹ் தன் பார்வையை செலுத்தி, நீங்கள் எதையாவது விரும்புகிறீர்களா? என்று கேட்பான். இதற்கு ஷஹீதுகளாகிய அவர்களின் ஆன்மாக்கள்,சுவர்கத்தில் எங்கள் விருப்பம்போல் எல்லா இடங்களுக்கும் சுதந்திரமாக பறந்து செல்லும் நாங்கள் (இதனைவிட) வேறு எதனை விரும்புவோம்.? என்று பதிலுரைப்பார்கள். அல்லாஹ் இவ்வாறு மூன்று முறை அவர்களிடம் கேட்பான். (மீண்டும் ஒருமுறை) இவ்வாறு கேட்கப்படுவதிலிருந்து தாங்கள் தப்பிக்க இயலாது என்று உணர்ந்த ஷஹீதுகள், 'எங்கள் அதிபதியே! நாங்கள் மீண்டும் போராடி வீர மரணமடைவதற்காக எங்கள் ஆன்மாக்களை, பூத உடலுக்குள் செலுத்திவிடு. என்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஒன்றும் தேவைப்படவில்லை என்பதைக் கண்டு அவர்களை (பறவைகளாகவே) விட்டுவிடுவான்.'நூல் : முஸ்லிம்.