- தவ்ஹீத் திருமணத்தின் குறைந்த பட்ச செலவின் அளவு என்ன??
- திருமணத்தில் பெண் வீட்டார் அவர்களின் உறவினர்களை அழைத்து விருந்து கொடுப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதா??
- திருமணத்தில் பெண் வீட்டாருக்கு அல்லது வலிமா விருந்து கொடுப்பதற்கு மார்க்கம் சொல்லுகிற அளவுகோல் என்ன??
- இரண்டு தரப்பினரும் ஒத்துக் கொண்டபின் அவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் ஏன் அந்த குற்றத்தை மக்கள் மன்றத்தில் சைபுல்லாஹ் கேட்டபோது எந்த பதிலும் இல்லாமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.?
- குறைந்த பட்சம் என்பதற்கான அளவுகோல் யார் நிர்ணயிப்பது?
இது பற்றி விவாதிக்க மணமகன் தயாராகிவிட்டார். அவர் தனது விளக்கத்தில் இதுபற்றி யாருக்கு வேண்டுமானலும் பதில் சொல்லத்தயார் என்று சொல்லிவிட்டார்.
ஏற்கனவே கேட்டதற்கு பதில் இல்லை எனும் போது இன்னும் அதிகமாக கேள்விகளை எடுத்து வைக்க எண்ணினேன்; அதற்குள் நமக்கு உதவிய சகோதரனை மிரட்டி 9976904481 என்ற எண்ணிலிருந்து பதில் சொல்வதாக நினைத்து சகோதரர் ரூபான் முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள்.
நான் இரண்டுமுறை கைபேசியில் அழைத்தது சகோ அப்துன் நாசரை; ஆனால் பதில் அழைப்பு வந்தது மேற்சொன்ன கைபேசியிலிருந்து. அதிலும் தன்னை அப்துல் கறீம் என்று அறிமுகம் செய்ய அவர் எடுத்துக் கொண்ட உரையாடல் மிகவும் கேவலமானது.
நான் உங்களை அழைப்பதற்கு காரணம் உங்கள் எண்ணிலிருந்து சகோதரர் அப்துன் நாசருக்கு அழைப்பு வந்தது அவர் என்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார் எனவே நான் தங்களின் சுய விபரம் அறிய வேண்டும் என்பதற்காக அழைத்தேன் என்று அழகிய முறையில் சொல்லியிருக்கலாம். ஏனெனில் எனது கைபேசியிலிருந்து அழைக்கும் போதெல்லாம் சகோதரர் அப்துன் நாசர் அந்த அழைப்பை தவிர்த்திருக்கிறார். எனவே இத்ரிஸ் என்ற சகோதரனின் கைபேசியில் அழைத்துப் பேசினோம். இவர்கள் உண்மையாளராக இருந்தால் மணமகனின் சில கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு இனி மேடையேறி வாய்ச் சவடால் விடாமல் இருக்கட்டும்.
கடந்த ரபியுல் அவ்வலில் எத்தனை தெரு முனைப் பிரச்சாரம் கடையநல்லூர் த த ஜ செய்தது?? எது பற்றி அவர்கள் பேசினார்கள் ??
ஜூம்மா மேடையில் கூட சில தவறான கருத்துகளைப் பதிய வைத்த போது பொதுமனிதர் அது தவறானதை சுட்டிக்காட்டியதும் இல்லை ஒரு வேகத்தில் பேசிவிட்டேன் என்று சொன்னதும்தான் உங்கள் டவுண் கிளையின் ……. …. இதில் நாம் தனியாக விளக்கம் சொல்லவேண்டியதில்லை.
கொடுத்த வாக்குறுதிகளில் தவறாமல் இருங்கள். பின்பு மற்றவற்றை பேசலாம்.
இன்னும் பல கேள்விகளில், அதிலும் நமக்கு இவர்களின் அளவுகோல் (பைலா) உரசினால் உண்மை தெரியும். சகோதரனின் தவறுகளை இஸ்லாம் மறைக்கச் சொல்லவில்லையெனில் நாம் அனைத்தையும் வெளியிடுவோம். ஒரு தனிமனிதனின் செயல் பற்றி நாளை அவனவன் இறைவனிடம் கணக்கு காண்பிக்க வேண்டும். அப்போது நீங்கள் இப்போது மறைக்கும் பொய்கள் வெளிப்படும் என்பதை தெரிவிக்கிறோம். ஆனால் அவற்றை மன்னித்து பொருந்தக் கூடியவனும் இறைவனே! ( சகமனிதனுக்கு செய்தது இதில் பொறுந்தாது) அவ்வாறு நீங்கள் தவறு செய்ததை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்.
இன்ஷா அல்லாஹ் உங்களின் பதிலுக்குப் பின்…
No comments:
Post a Comment