Saturday, 31 March 2012

40 - ஹதீஸ் குத்ஸிகள் - 2


4. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் சொன்னான்: ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள்.(ஆனால்) நானே காலமாக (காலத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக) உள்ளேன. என்னுடைய கரத்திலேயே இரவும்பகலும் உள்ளன.
புகாரிமுஸ்லிம்அஹ்மத்அபூதாவுத்தாரமிமுஅத்தா.

5. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறினான்: நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக விளங்கும்போதுஎனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு வேறொருவரை இணைவைக்கும் விவத்தில்ஒரு செயலைச் செய்தால்,(எனது உதவியின்றி) அவனுடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டு விடுகிறேன்.
நூல்: முஸ்லிம்அஹ்மத்இப்னுமாஜா.

6. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளில்மக்களில் முதன் முதலில் இறைவழியில் உயிர் துறந்த ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டுவந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்;கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்கு கிடைத்ததாக ஒப்புக்கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் 'நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்;?' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், 'நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரையில் போராடினேன்.என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய்வீரன் என்று கூறப்படுவதற்குhகவே போரிட்டாய். அவ்வாறே மக்களாலும் பேசப்பட்டு விட்டது.என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.
பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்றுஅதனைப் பிறருக்கும் கற்றுக்கொடுத்துகுர்ஆனை ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு தான் அளித்த அருட்கொடைகளையெல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அவ்வருட்கொடைகள் தமக்கு கிடைத்ததாக ஒப்புக்கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம், 'நான் வழங்கிய அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், 'நான் உனக்காக(இஸ்லாமிய) அறிவைக் கற்றுஅதனை(மற்றவர்களுக்கும்)கற்றுக்கொடுத்துகுர்ஆனையும் உனக்காக ஓதிவந்தேன்.என்று பதில் கூறுவார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய்சொல்கிறாய். அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்குhகவே இஸ்லாமிய அறிவை கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக்கூடியவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்குhகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களர்லம்) பேசப்பட்டு விட்டது.என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லும்படி கட்டளையிடப்படும்.
அதன் பின்னர் செல்வந்தர் ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவரிடம் அல்லாஹ் தான் வழங்கிய அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அவ்வருட்கொடைகள் தமக்கு கிடைத்ததாக ஒப்புக்கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் 'நான் வழங்கிய அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?'. என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர் 'நீ எந்த வழிகளில் எல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்;;;வழிகளில் எதிலும் உனக்காக செலவு செய்யாமல் நான் விட்டதில்லை.என்று பதில் கூறுவார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய். (வள்ளல் தனத்துடன்) வாரி வாரி வழங்குபவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும். என்பதற்குhகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது.எனக் கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லுங்கள் என்று கட்டளையிடப்படும்.
நூல்: முஸ்லிம்அஹ்மத்நஸயீ.

No comments:

Post a Comment