10. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: 'நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன். (நோன்பின் போது ஒரு மனிதன்) தனது மன இச்சை, உணவு, குடிப்பு ஆகியவற்றை எனக்காக விட்டு விடுகிறான். மேலும் நோன்பு ஒரு கேடயமாகும்;;. நோன்பு நோற்பவன் இரண்டுவித மகிழ்ச்சிக்குள்ளாகிறான். நோன்பைத் துறக்கும் வேளையில் ஒரு மகிழ்ச்சி. தனது ரப்பான அல்லாஹ்வைச் சந்திக்கும் நேரத்தில் ஒரு மகிழ்ச்சி. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் மணம். அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் மணத்தைவிடச் சிறந்ததாகும்.
நூல்: முஸ்லிம், திர்மிதி.
11. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: 'ஆதமுடைய மகனே! நீ (எனக்காக) செலவிடு. நான் உனக்காக செலவு செய்வேன்.
நூல்: புகாரீ, முஸ்லிம்.
12. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் அல் அன்ஸாரி(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
உங்களுக்கு முன் சென்றவர்களில் ஒரு மனிதர் விசாரிக்கப்பட்டார். அவர் மக்களுடன் (வணிகத்தில்) கலந்து பழகி வந்தார். அவர் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்ததால்;, வறுமை நிலையில் உள்ளவர்களிடமிருந்து (வர வேண்டிய கடன் தொகையை) விட்டு விடுமாறு தனது பணியாளர்களுக்கு உத்தரவிடுவதை தவிர அவரிடம் நன்மை ஏதும் காணப்படவில்லை. (தாராளமாக நடந்துக் கொள்ளும்) அந்த விஷயத்தில்; உன்னை விட நான் அதிகத் தகுதியுடையவன். இவருடைய தவருகளை தள்ளுபடி செய்யுங்கள். என்று அல்லாஹ் கூறினான். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி, முஸ்லிம்.
13. அதீ பின் ஹாத்திம்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, அவர்களிடம் இரு மனிதர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் வறுமையைப் பற்றியும், மற்றொருவர் (வழிப்பறி) கொள்ளைகள் பற்றியும் புகார் செய்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள்: 'வழிப்பறிக் கொள்ளைகளைப் பொருத்தமட்டில் அது சில நாட்கள் வரைதான் நீடிக்கும். மிக விரைவில் காவலாளியின்றி மக்காவை நோக்கி ஒட்டகக்கூட்டங்கள் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். வறுமையை பொருத்த மட்டில் உங்களில் ஒருவர், தருடத்தை எடுத்துக்கொண்டு (ஊரெல்லாம்) சுற்றியும், அதனை பெற்றுக்கொள்வதற்கு ஒருவரும் கிடைக்காத காலத்திற்கு முன்னர் இறுதித் தீர்ப்பு நாள் வராது.' பின்னர். 'உங்களில் ஒரு மனிதர் கண்டிப்பாக அல்லாஹ்வின் முன் நிற்பார். அம்மனிதருக்கும் அல்லாஹ்விற்கும் இடையே எவ்வித திரையும் இருக்காது. மொழி பெயர்க்கும் உதவியாளரும் இருக்க மாட்டார். பின்பு அல்லாஹ், அம்மனிதரை பார்த்து நான் உனக்கு செல்வத்தை கொடுக்க வில்லையா? என்று கேட்பான். அதற்கு அம்மனிதர் ஆம் கொடுத்தாய் என்பார். பிறகு அல்லாஹ், நான் உன்னிடம் என்னுடைய தூதரை அனுப்பவில்லையா? என்று கேட்பான். அம்மனிதர்; ஆம் அனுப்பினாய் என்று பதிலலிப்பார். அம்மனிதர் தமது வலப்புரம் பார்ப்பார். அங்கு நரக நெருப்பை தவிர்த்து வேறு ஒன்றையும் காணமாட்டார். பின்பு இடப்புறம் திரும்பி பார்;ப்பார். அங்கும் நரக நெருப்பைத் தவிர்த்து வேறு ஒன்றையும் காணமாட்டார். எனவே, பேரிச்ச பழத்தின் ஒரு பாதியை (தருமம்) செய்தாவது, அதுவும் இல்லையெனில், ஒரு கனிவான சொல்லைப் பயன்படுத்தியாவது உங்களில் ஒவ்வொருவரும் நரகத்தின் நெருப்பிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்.
நூல்:புகாரி.
No comments:
Post a Comment