17. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் அல் கிஃபாரி(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறினான்: 'அடியார்களே! அநீதி இழைப்பதை என் மீது ஹராம் ஆக்கியுள்ளேன். (நீங்கள்) உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதையும் தடை செய்துள்ளேன். எனவே, ஒருவர் மற்றவருக்கு அநீதி இழைக்காதீர்கள்.
என் அடியார்களே! உங்களில் நான் நேர்வழி காட்டியவர்களைத்;;;; தவிர மற்றவர்கள் அனைவரும் வழி கேட்டிலுள்ளீர்கள். எனவே என்னிடம் நேர் வழியை வேண்டுங்கள். நான் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவேன்.
என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கின்றீகள். எனவே என்னிடம் உணவை வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிப்பேன்.
என் அடியார்களே! உங்களில் நான் ஆடையளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆடையின்றி உள்ளீர்கள். எனவே என்னிடம் ஆடையை வேண்டுங்கள். நான் உங்களுக்கு ஆடை அணிவிப்பேன்.
என் அடியார்களே! நீங்கள் இரவும், பகலும் பாவம் செய்கின்றீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். எனவே என்னிடம் பாவமன்னிப்ப தேடுங்கள். நான் பாவங்களை மன்னிப்பேன்.
என் அடியார்களே! எனக்கு நன்மையோ, தீமையோ செய்வதற்கு உங்களால் கண்டிப்பாக முடியாது. அவ்வாறு இயன்றால் அல்லவா எனக்கு நன்மையோ, தீமையோ செய்வீர்கள்.
என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் பயபக்தியுடையவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் அதிகரித்து விட முடியாது.
என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் கொடியவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் குறைக்க முடியாது.
என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் (எதையாவது) வேண்டினால், நான் அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டியதை கொடுத்தாலும், என்னிடமுள்ளவற்றுக்கு, ஒரு ஊசியைக் கடலில் முக்கி எடுத்தால் ஏற்படும் இழப்பைவிட அதிகமான இழப்ப ஏற்படாது.
என் அடியார்களே! நிச்சயமாக நான் உங்களுடைய செயல்களைக் கொண்டே அடையாளம் காண்பேன். பிறகு அவைகளுக்கு கூலியும் வழங்குவேன். எனவே (மறுமையில் தனக்கு) நன்மையைக் காண்பவன் அல்லாஹ்வாகிய என்னை புகழட்டும். இதற்கு மாறாக காண்பவன், தன்னைத் தானே பழித்துக் கொள்ளட்டும்.
நூல்:முஸ்லிம்.
18. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இறுதித் தீர்ப்பு நாளில் பின்வருமாறு அல்லாஹ் கூறுவான்.
ஆதமுடைய மகனே! நான் நேயுற்று இருந்தேன், ஆனால் நீ என்னை விசாரிக்க வரவில்லை.
மனிதன் : என் ரப்பே! அகிலங்களுக்கெல்லாம் அதிபதியாக நீ இருக்கும்போது நான் எவ்வாறு உன்னை நலம் விசாரிப்பேன்?
அல்லாஹ் : என்னுடைய இன்ன அடியான் நோயுற்று இருந்தது உனக்குத் தெரியாதா? அவனை நீ நலம் விசாரிக்க செல்லவில்லை. நீ அவனை விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடம் நீ என்னைப் பெற்றிருப்பாய். ஆதமுடைய மகனே! நான் உன்னிடம் உணவுக் கேட்டேன். ஆனால் எனக்கு நீ உணவளிக்கவில்;லை.
மனிதன் : என் ரப்பே! அகிலங்களுக்கெல்லாம் அதிபதியாக நீ இருக்கும்போது நான் எவ்வாறு உனக்கு உணவளிக்க முடியும்?
அல்லாஹ் : என்;னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவுகேட்டு, நீ அவனுக்கு உணவளிக்காதது உனக்குத்; தெரியாதா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் நிச்சயமாக அதனை (உணவளித்தமைக்கான சன்மானத்தை) என்னிடம் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியுமா?
அல்லாஹ் : ஆதமுடைய மகனே! நான் குடிப்பதற்கு (தண்ணீர்) கேட்டேன். ஆனால் குடிப்பதற்கு நீ ஒன்றும் எனக்குத் தரவில்லை.
மனிதன் : என் ரப்பே! நீ இப்பிரபஞ்சம் முழுமைக்கும் அதிபதியாக இருக்க நான் எப்படி உனக்குக் குடிப்பதற்கு (தண்ணீர்) கொடுக்க முடியும்.
அல்லாஹ் : என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் குடிப்பதற்கு (தண்ணீர்) கேட்டான். ஆனால் நீ அவனுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்திருந்தால் அதனை (சன்மானத்தை) நிச்சயமாக என்னிடம் கண்டிருப்பாய்.
நூல்: முஸ்லிம்
19. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை எனது அங்கியாகவும் உள்ளன. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுவானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன்.
நூல்: முஸ்லிம்
20. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சுவர்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் திறந்து வைக்கப்படும். தனது சகோதரனுடன் பகைமை பாராட்டுபவனைத் தவிர அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். (பகைமை பாராட்டும் சகோதரர்களைப் பற்றி பின்வருமாறு மூன்று முறை சொல்லப்படும்). அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும் வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள்.
நூல்: முஸ்லிம், திர்மிதி.

No comments:
Post a Comment