34. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நமது அதிபதி அல்லாஹ் ஒவ்வொரு (நாள்) இரவும், இரவில் இறுதியான மூன்றாவது பகுதி எஞ்சியிருக்கும் போது உலகத்தின் வானத்திற்கு இறங்கி சொல்கிறான்: என்னிடம் பிரார்த்தனை புரிபவர் யார்? நான் அவர் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்கிறேன். என்னிடம் கேட்பவர் யார்? நான் அவருக்கு கொடுக்கிறேன். என்னிடம் பிழைபொறுக்கத் தேடுபவர் யார்? நான் அவரை மன்னிக்கின்றேன்.
நூல் : புகாரி, முஸ்லிம்.
35. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் சுவர்க்க வாசிகளை நோக்கி, சுவர்க்க வாசிகளே! என்றழைப்பான். அவர்கள், எங்கள் அதிபதியே! (இதோ) நாங்கள் வந்து விட்டோம். உனது திருப்திக்காகவே நாங்கள் உள்ளோம். நன்மைகள் யாவும் உந்தன் கரங்களிலேயே உள்ளன. என பதிலளிப்பார்கள். அல்லாஹ் நீங்கள் திருப்தியுடன் உள்ளீர்களா? என்று கேட்பான். அதற்கு சுவர்க்க வாசிகள்: உன்னுடைய படைப்புகளிலேயே யாருக்கும் கொடுக்காத ஒன்றை நீ எங்களுக்குத் தந்திருக்கும் போது, நாங்கள் எவ்வாறு திருப்தி கொள்ளாமல் இருக்க முடியும்.? என்று பதிலளிப்பார்கள்.
அல்லாஹ், இதனைவிட சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு கொடுக்கட்டுமா? என்று கேட்பான். அதற்கு சுவர்க்க வாசிகள்: அதிபதியே இதனைவிட சிறந்தது எது? என வினவுவார்கள். இதற்கு அல்லாஹ் நான் உங்கள் மீது என் திருப்பொருத்ததை இறக்குகிறேன். இதற்கு பிறகு என்றென்றும் உங்கள் மீது நான் கோபப்படவே மாட்டேன் என்று பதிலளித்தான்.
நூல் : புகாரி, முஸ்லிம்.
36. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
சுவர்க்கமும், நரகமும் (ஒரு விஷயத்தில்) வாதித்துக் கொண்டன.
நரகம் : என்னிடமே அடக்கு முறையாளர்களும், ஆணவமுள்ளவர்களும் உள்ளனர்.
சுவர்க்கம் : என்னிடமே மக்களில் நலிந்தவர்களும், எளியவர்களும் உள்ளனர்.
அல்லாஹ் அவைகள் மத்தியில் (பின்வருமாறு) தீர்ப்பு வழங்கினான்.
(சுவர்க்கமே) நீ எனது கருனையின் வடிவான சுவர்க்கமாகும். உன் மூலமாக, நான் விரும்பியவர்களுக்கு இரக்கம் காட்டுகிறேன். (நரகமே) நீ எனது தன்டனiயின் வடிவமாகும். உன் மூலமாக நான் விரும்பியவர்களுக்கு தண்டனை விதிக்கிறேன். உங்கள் இருவரையும் நிரப்புவது எனது கடமையாகும்.
நூல் : புகாரி, முஸ்லிம்.
37. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் சுவர்க்கத்தையும், நரகத்தையும் படைத்த போது, ஜிப்ரயீல்(அலை) அவர்களை சுவர்கத்திற்கு அனுப்பி சுவர்க்கவாசிகளுக்காக நான் என்ன தயாரித்து வைத்துள்ளேன் என்று பாரும் என்று கூறினான். எனவே ஜிப்ரயீல்(அலை) அவர்கள்; சுவர்க்கத்தையும், அதில் வசிப்பவர்களுக்காக அல்லாஹ் தயாரித்துள்ளதையும் கண்டார்கள். சுவணத்தை கண்டபின் அல்லாஹ்விடம் திரும்பிச் சென்று உனது மேன்மையின் மீது ஆணையாக! இதைப்பற்றிக் கேள்விப்படும் யாரும் அதில் நுழையாமல் இருக்க மாட்டார்கள். என்று கூறினார்கள்.
உடனே அல்லாஹ் சுவனத்தை சுற்றி முட்டுகட்டைகளைப் போட்டான். ஜிப்ரயீல்(அலை) அவர்களிடம் மீண்டும் திரும்பிச் சென்று சுவர்க்க வாசிகளுக்கு நான் சித்தப்படுத்தி இருப்பதை பார்ப்பீராக என்றான். அவர் திரும்பிச் சென்றார். ஏராளமான முட்டுகட்டைகள் போடப்பட்டுள்ளதை கண்டு அவர் திரும்பினார். பின்பு அல்லாஹ்விடம். உனது கண்ணியத்தின் மீது ஆணையாக இதில் யாரும் நுழையமாட்டார்கள். என்று கூறினார். பின்பு அல்லாஹ் நரகத்தையும், அதில் நரகவாசிகளுக்காக தான் தயாரித்து வைத்துள்ளதையும் கண்டுவருமாறு கூறினான். ஜிப்ரயீல்(அலை) அவர்கள் நரகம் அடுக்கடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக அமையப்பெற்றுள்ளதைக் கண்டார்கள். பிறகு அல்லாஹ்விடம் திரும்பி வந்து, உனது மேன்மையின் மீது ஆனையாக நரகைப் பற்றி கேள்விபடும் எவரும் அதில் நுழைய மாட்டார்கள். என்று கூறினார்கள். பின்பு அல்லாஹ் நரகை மன இ;ச்சைகளினால் சூழப்படுமாறு உத்தரவிட்டான். பிறகு அவன் ஜிப்ரயீலே அங்கு மீண்டும் செல்வீராக என்று சொன்னான். அவர் அங்கு திரும்பி சென்று வந்து, உனது மேன்மையின் மீது ஆணையாக அதில் நுழைவதிலிருந்து யாரும் தப்ப முடியாது என்று அஞ்சுகிறேன் என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி

No comments:
Post a Comment