1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்
கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹுத்தஆலா படைப்பினங்களை படைக்க முடிவு செய்தபோது, தன் வசமுள்ள ஏட்டில், 'என்னுடைய கருணை என்னுடைய கோபத்தை மிகைத்துவிடும் (என்று) தன் மீது கடைமையாக்கி எழுதி தன் வசம் வைத்துக்கொண்டான்'.நூல்:புகாரி,முஸ்லிம்,நஸயீ,இப்னுமாஜா.
2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.:
அல்லாஹ் கூறுகிறான்: 'ஆதமுடைய மகன் என்னைப் பொய்ப்பிக்கின்றான். ஆனால் என்னை பொய்ப்பிப்பதற்கு அவனுக்கு அதிகாரமில்லை. அவன் என்னை(தீய சொற்கள் கொண்டு) ஏசுகிறான். ஆனால் என்னை அவ்வாறு ஏசுவதற்கு அவனுக்கு அதிகாரமில்லை. முதலில் உருவாக்கியது போல் மீண்டும் அல்லாஹ்வால் என்னை கன்டிப்பாக உருவாக்க முடியாது. (அதாவது நான் இறந்தப் பிறகு அல்லாஹ்வால் என்னை உயிர்ப்பிக்க முடியாது.) என்று சொல்லி என்னை பொய்ப்பிக்கின்றான். (ஆனால் அல்லாஹ்வாகிய) எனக்கு அவனை மீண்டும் உருவாக்குவது முதலில் அவனை உருவாக்கியதை விட எளிதானதே. அல்லாஹ் தனக்கென ஒரு மகனை வைத்துள்ளான், என்று சொல்லி என்னை அவன் நிந்திக்கிறான். ஆனால் (அல்லாஹ்வாகிய) நான் தனித்தவன். யாருடைய தேவையுமற்றவன். நான்(யாரையும்) பெறவுமில்லை. (யாராலும்) பெற்றெடுக்கப் படவுமில்லை. மேலும் என்னுடன் (இனையாக) ஒப்பிடப்படக்கூடியவர் யாருமில்லை.'
நூல்: புகாரி, நஸயீ.
3. ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனி(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹுதைபிய்யாவில் மழை பெய்திருந்த ஒரு இரவைத் தொடர்ந்து காலை சுபுஹு தொழுகையைத் தலைமையேற்று நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தவுடன் மக்களை நோக்கி உங்களுடைய ரப்பு என்ன கூறியுள்ளான் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று வினவினார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மட்டுமே அதனை நன்கு அறிவார்கள் என்று பதிலுரைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், அல்லாஹ் கூறியதாக சொன்னார்கள். 'இன்று காலை என்னுடைய அடியார்களில் ஒருவர் என் மீது நம்பிக்கை கொண்ட முஃமினாகவும், மற்றொருவர் என் மீPது நம்பிக்கை கொள்ளாத காஃபிராகவும் மாறியுள்ளார்கள். எவர், அல்லாஹ்வின் பொருட்டாலும் அவனது கருணையாலும் தமக்கு மழை இறக்கப்பட்டது என்று கூறினாரோ, அவர் (என் மீது நம்பிக்கையுள்ள)முஃமினாகவும், (குறிப்பிட்ட) நட்சத்திரத்தால் மழை பெய்தது என்பதை நிராகரித்தவராகவும் விளங்குகிறார். எவர் மழை பொழிவதற்கு இன்னின்ன நட்சத்திரங்களே காரணம் என்று கூறுகிறாரோ (அவர் என் மீது நம்பிக்கையற்ற) காஃபிராகவும், நட்சத்திரங்கள் மீது நம்பிக்கையுள்ளவராகவும் விளங்குகிறார்.
நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், முஅத்தா, நஸயீ.

No comments:
Post a Comment