Saturday, 31 March 2012

40 - ஹதீஸ் குத்ஸிகள்- 8


26. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் : என் மீது நேசம் கொண்டுள்ள அடியார்களில் குறைந்த செல்வமுள்ளநிறைந்த தொழுகையுள்ளஅதிபதியான என்னை வழிபடுபதில் மிகவும் கவணம் செலுத்தியமறைமுகமாக எனக்கு அடிபனிந்துமக்கள் மத்தியில் அறிமுகமில்லாதவிரலால் சுட்டிக்காட்டி புகழ்ந்து பேசப்படாததமது தேவைகளை நிறைவேற்ற (அளவுக்கு அதிகமில்லாமல்) போதுமான அளவு மட்டும் செல்வத்தை பெற்றிருந்தும் அதனைப் பொருமையுடன் தாங்கிக் கொண்டிருந்தவரே என்னிடத்தில் மிகவும் விரும்பத்தக்கவர். பிறகு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;. மரணம் அவருக்கு விரைவில்;; வந்திருக்கும்அவருக்காக துக்கப்படுவோர் குறைந்திருப்பார்கள். அவர் விட்டுச்சென்ற சொத்து சொற்பமாக இருக்கும்.
நூல் : தித்மிதி.

27. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜுந்துப் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
உங்களுக்கு முன் சென்றவர்களில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு காயம் ஏற்பட்டது. (காயத்தினால்) அவன் துயரமடைந்தான். வேதனையால் கத்தியைக் கொண்டு தன் கரத்தைத் துண்டித்தான். இதனால் இரத்தம் இடைவிடாமல்கொட்டியதால் இறப்பெய்தினான். அல்லாஹ் கூறினான்: என் அடியான் (தனது செயலின் மூலம்) எனக்கு முன்னதாகவே நடவடிக்கை எடுத்துக் கொண்டான். நான் அவனுக்கு சுவர்க்;கத்தை ஹராமாக்கி (தடைசெய்து) விட்டேன்.
நூல் : புகாரிமுஸ்லிம்.

28. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் : உலகிலுள்ளவர்களில் என்னுடைய முஃமினான அடியானுக்குப் பிரியமான நண்பன் ஒருவரின் உயிரை நான் பறித்துக்கொள்ளும்போதுஅதனை எனக்காக அவ்வடியான் பொருமையாக தாங்கிக் கொண்டிருந்தால் அத்தகைய விசுவாசமுடைய எனது அடியானுக்கு சுவர்க்கத்தை தவிர என்னிடத்தில் வேறு சன்மானம் இல்லை.
நூல் : புகாரி

29. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான் : என் அடியான் என் சந்திப்பை விரும்பினால்நான் அவன் சந்திப்பை விரும்புகிறேன். அவன் என் சந்திப்பை வெறுத்தால் நானும் அவன் சந்திப்பை வெறுக்கிறேன்.
நூல் : புகாரிமுஸ்லிம்.

30. ஜுன்துப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வின் மீது (ஆணையாக) அல்லாஹ் இன்னாரை மன்னிக்கமாட்டான். என்று சத்தியம் செய்தார். அதற்கு அல்லாஹ் கூறினான்நான் இன்னாரை மன்னிக்க மாட்டேன் என்று என் மீது ஆணையிட்டு கூற இந்த மனிதன் யார்நிச்சயமாக நான் (சாபமிடப்பட்ட) அந்த மனிதனின் பாவங்களை மன்னித்து விட்டேன். (சத்தியமிட்ட) உன்னுடைய நற்செயல்களை அழித்துவிட்டேன்.
நூல் : முஸ்லிம்.

No comments:

Post a Comment