Saturday, 31 March 2012

40 - ஹதீஸ் குத்ஸிகள்- 9


31. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முன் சமுதாயத்தில்) ஒரு மனிதன் தன் மீது அநீதி இழைத்தவனாக பெரும் பாவங்கள் செய்து கொண்டிருந்தான். மரணம் அவனை நெருங்கிய போதுதனது மக்களை அழைத்துநான் மரணமுற்றவுடன் என்னை எரித்து தூளாக்கிபின்பு எனது சாம்பலை கடலிலே பரவலாக வீசி விடுங்கள். ஏனெனில்,அல்லாஹ்வின் மீது ஆணையாக எனது அதிபதியிடம் நான் சிக்கினால் அவன் வேறு யாரையும் தண்டிக்காத அளவிற்கு என்னை தண்டித்து விடுவான். என கூறினான். அவனது மக்களும் அவ்வாறே செய்தனர்.

பின்பு அல்லாஹ் பூமியிடம் நீ விழுங்கியதை வெளிக்கொணர்ந்து விடு எனக் கட்டளையிட்டான். அம்மனிதன் மீண்டும் உருவாகி நின்றான். அல்லாஹ் அம்மனிதரிடம் கேட்டான்நீ செய்த அச்செயலை செய்யும்படி உன்னை தூண்டியது எதுஅதற்கு அம்மனிதன்அதிபதியே! உன்மீது எனக்குப் பயம் இருந்ததினால் (அவ்வாறு நான் செய்தேன்) என்று பதிலளித்தான். இதன் காரணமாக அல்லாஹ் அம்மனிதனுக்கு மன்னிப்பளித்தான்.
நூல் : புகாரிமுஸ்லிம்.

32. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் : (அல்லாஹ்வின்) அடியான் ஒருவன் பாவம் செய்துவிட்டுஅல்லாஹ்வே! என் பாவத்தை மன்னிப்பாயாகஎன்று வேண்டினான்.

அல்லாஹ் : என் அடியான் பாவம் செய்து விட்டான். மேலும் அவன் பாவங்களை மன்னிக்ககூடிய அல்லது அவற்றுக்கு தண்டனை விதிக்ககூடிய ஒரு அதிபதியுள்ளான் என்பதை அறிந்துள்ளான். என்று சொன்னான்.

பிறகு அவன் மீண்டும் பாவம் செய்துவிட்டு என் அதிபதியே! என் பாவத்தை மன்னிப்பாயாக என வேண்டினான்.அல்லாஹ் என் அடியான் பாவம் செய்து விட்டான். மேலும் அவன் பாவங்களை மன்னிக்ககூடிய அல்லது அவற்றுக்கு தண்டனை விதிக்ககூடிய ஒரு அதிபதியுள்ளான் என்பதை அறிந்துள்ளான். என்று சொன்னான்.

பிறகு அவன் மீண்டும் பாவம் செய்துவிட்டு என் அதிபதியே! என் பாவத்தை மன்னிப்பாயாக என வேண்டினான்.அல்லாஹ் என் அடியான் பாவம் செய்து விட்டான். மேலும் அவன் பாவங்களை மன்னிக்ககூடிய அல்லது அவற்றுக்கு தண்டனை விதிக்ககூடிய ஒரு அதிபதியுள்ளான் என்பதை அறிந்துள்ளான். நீ விரும்பியதைச் செய் ஏனெனில் நான் உன்னை மன்னித்துவிட்டேன். எனக் கூறினான்.
நூல் : புகாரிமுஸ்லிம்

33. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறினான் : ஆதமுடைய மகனே! என்னை அழைத்து என்மீது ஆதரவு வைத்து (பாவமன்னிப்பு) கேட்கும்போதெல்லாம் நீ செய்தவற்றை நான் பொருட்படுத்தாமல் உன்னை மன்னிப்பேன்.

ஆதமுடைய மகனே! உன்னுடைய பாவங்கள் வானிலுள்ள மேகங்களை அடையும்அளவுக்கு அதிகமாக இருந்தாலும் என்னிடம் பாவமன்னிப்பை வேண்டினால்நான் உன்னை மன்னிப்பேன்.

ஆதமுடைய மகனே! பூமியளவிற்கும் பெரும் பாவங்களைச் செய்து எனக்கு இணைவைக்காமல் இருக்கும் நிலையில் என்னை நீ சந்தித்தால் அதே அளவுக்கு நிச்சயமாக நான் உன்னை மன்னிப்பேன்.
நூல் : முஸ்லிம்.

No comments:

Post a Comment