மனிதன் பிறக்கும் போதும்,
இறக்கும் போதும் அவன் கூட வருவது அவன் செய்த நற்செயல், தீஞ்செயல் என்று கூறும் இரண்டு மட்டுமே,
இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது,
அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே
உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்…
அது தான் ஒளவையின் பாடலும் கூட
புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்
நல்வழி பாடல் 2
இஸ்லாம் இறை நம்பிக்கையை வலியுறுத்துகின்றது. நன்மையோ, தீமையோ இறைவன் நாட்டப்படியே நடக்கும். அவன் நாடியது நடக்கும். அவன் நாடாதது நடக்காது. அல்லாஹ் எதை எமக்கு விதித்தானோ அதுவே எமக்குக் கிடைக்கும். அல்லாஹ் எமக்கென விதிக்காதது கிடைக்காது. உலகில் எமக்கு ஏற்படும் நட்டங்கள், இழப்புக்கள், கடினங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டால் எமக்கு நன்மையும் மகத்தான கூலியும் உண்டு என போதிக்கின்றது. உறுதியான நம்பிக்கையிருந்தால் எவ்வித இழப்பு ஏற்பட்டாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை ஒருவன் பெற்றுவிடுவான்.
எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையும், நம்பிக்கை குறைவுதான் அந்த ஒரு நொடியில் தற்கொலைக்கான காரணங்களில் ஒன்றாகும். எமது எதிர்காலம் அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. அவன் மீது பொறுப்பை ஒப்படைத்துவிட்டு (தவக்குல்) முயற்சி செய்வது மட்டுமே எமது கடமை. முடிவு அவனுடைய கையில் இருக்கின்றது என்று உறுதியாக நம்புபவன் வாழ்வின் நம்பிக்கை இழந்து தற்கொலையின் பக்கம் செல்ல மாட்டான்.
தமிழ் வழியில் படித்தாலும் அதன் மொழியின் ஆழத்தை புரிந்து வாழ்வியலை துணைக் கொள்ள இளைய தலைமுறை தூரமாகிவிட்டது என்றே தோன்றுகிறது.
மமதையைத் தரும் வெற்றியை விட நல்ல பாடத்தைத் தரும் தோல்விகள் வரவேற்கப்பட வேண்டியவையாகும்
மனித வாழ்வு பெறுமதியானது.
போனால் மீண்டும் வராது.
வாழ்வது ஒரு முறைதான்! அந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும். சாதாரண பரீட்சைத் தோல்விக்காக வாழ்வை அழித்துக்கொள்வது அறிவீனமாகும். வாழ்க்கைக்காகவே பரீட்சையே தவிர பரீட்சைக்காக வாழ்க்கை அல்ல என்ற அடிப்படை உணர்வு ஊட்டப்படுதல் மிகவும் அவசியமாகும்.
உயர்கல்விக்காக வளரும் தலைமுறையினர் ஒரு தோல்வியைச் சந்திக்கும் போது அல்லது தங்களது காலம் கடத்தப் படும் போது உளவியல் காரணங்களால் அடுத்த நகர்வுக்கு கடந்து செல்லாமல் பரிதவிக்கின்றனர்.
வெற்றி உறுதியானாலும் அது இறுதியல்ல
தோல்வியில் முடிந்தாலும் அது நிரந்தரமல்ல
தம்மீது அன்பு கொண்டவர்களைப் பழிவாங்குவதற்காக சிலர் தற்கொலை செய்கின்றனர். காதலுக்கு சம்மதிக்காத பெற்றோரைப் பழி வாங்க தற்கொலை செய்கின்றனர். இதன் மூலம் தனது குடும்பம் அவமானத்தைச் சந்திக்கும் என்பதை கூட விளங்குவதில்லை.
காதல் தோல்வி, பரீட்சையில் தோல்வி போன்ற சாதாரண காரணங்களுக்காக இளம் தலைமுறையினரில் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தோல்வியைக் கண்டு உயிரை மாய்த்துக் கொள்வது என்றால் இந்த உலகம் எந்த ஒரு சாதனையாளர்களைச் சந்தித்திருக்காது. தோல்வியிலிருந்து கற்றுக் கொண்டவர்களே சாதனையாளர்களாக சரித்திரம் படைத்துள்ளனர். அலிபாபா நிறுவனத் தலைவர் Jack Ma மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
போதிய மன வளர்ச்சி இல்லாமையே இப்படி நடந்து கொள்கின்றனர். உண்மையில் இந்த மாதிரியான எண்ணங்கள் எழுவதற்கு தற்கொலை தொடர்பான தொலைத்தொடர்பு செய்திகள், மக்கள் உரையாடல்கள் காரணம்.
இதுக்கு ஒரு முழக் கயிறு கிடைக்கலையா? என்ற மிகச் சாதாரணமான சொல்லாடல் இன்னும் எனக்குள் (echo) எதிரொலிப்பையும் உணர்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும்..