Saturday, 4 February 2023

எது அவமானம்


கற்பு நெறியோடு வாழும் பெண் தன்மீது சொல்லும் பழிச் சொல்லுக்கு யாரைக் குறைபாட்டுக்கு கொள்வது.
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் என்பதற்கு ஒப்ப தன் தந்தை யாரென்று தெரியாத குழந்தையைச் சுமக்கும் தாய்.
இதோ இன்னாரின் பிள்ளையைப் பெற்றெடுக்க
யாரின் வாரிசைச் சுமந்து வந்துள்ளாய். உனக்கு என்ன துணிவு வேண்டும்
எங்க மானம் மரியாதை எல்லாம் கப்பலேரிப் போச்சே
இது தான் நமது கூப்பாடு.
இறைவனைப் பொருந்திக் கொண்டவர்களால் அது மிகவும் எளிதாக கடந்து சென்று உதாரணமாக உரக்கச் சொல்லப்பட்டார்கள்.
எந்த ஆண் துணையுமில்லாமல் பெற்ற குழந்தையுடன் அன்னை மர்யம் (இறைவன் அருளும் அமைதியும் நிலவட்டும்) நின்ற போது தனது சமூகம் பல கேள்விகளால் அவர்களைத் தாக்கியது.
அவர்களை இறைவனைப் பொருந்திக் கொண்டு அந்த வாரிசான ஈஸா(இறைவனின் அமைதி நிலவட்டும்) அவர்கள் குழந்தைப் பருவத்திலேயே பேசினார்கள்.
அந்தக் குழந்தை எப்படிப்பட்ட குழந்தை இந்த உலகின் மாபெரும் அத்தாட்சிகளில் ஒன்று.
அந்தத் தாய் அதை தன்னைப் படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்காகச் செய்ததை இறைவன் மறுமொழி தந்தான்.
உலக மாந்தர்கள் அனைவருக்கும் முன்னுதாரணம் இரண்டு பெண்கள். அதில் அன்னை மர்யம் அவர்கள் ஒருவர்.
எது அவர் மானம்!

No comments:

Post a Comment