Sunday, 5 February 2023

எதிர்காலத்தை எண்ணி சோர்வு அடையாதீர்.


தினந்தோறும் அல்லாஹ் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான்.
கண்ணை மூடிக் கொண்டு உங்களின் கடந்தகால வாழ்க்கையை சிந்தித்துப் பாருங்கள்
எதிர்பாராத திருப்பங்கள் -அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்கும்.
ஒரு நோய் இன்று வல்லரசுகளையே ஆட்டங்கான வைத்திருக்கிறது.
எதிர்பாரத விபத்துக்கள் எதிர்பாராத இடங்களிலிருந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இவையெல்லாம் உலகை ஆட்சிசெய்யும் ஒரு இறைவன் இருக்கிறான்.
அவன் நினைத்ததை அவன் நிர்ணயித்த நேரத்தில் செயல்படுத்துவான் என்பதற்கான நினைவூட்டல்.
#என்றும் மரணமடையாத நித்தியஜீவனான அல்லாஹ் வின் மீது நம்பிக்கை வையுங்கள்.
அண்ணல்நபிصلي الله عليه و سلم அவர்கள் சொல்கிறார்கள்:
المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير، احرص على ما ينفعك، واستعن بالله ولا تعجز، وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كان كذا وكذا، ولكن قل: قدر الله، وما شاء فعل؛ فإن لو تفتح عمل الشيطان
(உடலாலும் உள்ளத்தாலும்) உறுதியுள்ள முஃமின் பலவீனமான முஃமினைவிட சிறந்தவன் அல்லாஹ் விற்கு மிகவும் உவப்பானவன்.
அனைத்திலும் நன்மை இருக்கிறது.
உனக்கு பலன் தருபவைகளை மீது நீ ஆசை கொள்.
அல்லாஹ்விடம் உதவிகேள்
நடந்த நிகழ்வுகளை எண்ணி நான் இப்படி,இப்படி செய்திருக்கலாமே என (புலம்பி) சொல்லிக் கொண்டிருக்காதே!
மாறாக,அல்லாஹ் நிர்ணயித்து விட்டான்.
அவன் எதை நினைக்கிறானே அதைச் செய்வான் எனச் சொல்.
ஏனென்றால் (if) இப்படி செய்திருந்தால் என்பது ஷைத்தான் செயல்படுவதற்கு வழி வகுக்கும்(முஸ்லிம்.)
தினந்தோறும் இவ்வசனங்களை நினைவில் கொள்ளுங்கள்.
فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ‏
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 94:5)
اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ‏
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 94:6)
فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ‏
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
(அல்குர்ஆன் : 94:7)
وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ‏
முழு மனத்துடன்
உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
(அல்குர்ஆன் : 94:8)
----கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயி

No comments:

Post a Comment