Saturday, 4 February 2023

காலம்

 பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டேயிருந்தாலும் ஆச்சரியம் மிகுந்தவை. அவற்றிற்கு மத்தியிலுள்ள தொலைவும் அவற்றின் இயல்பும் அறிதல் என்னும் வட்டத்திற்கு அப்பாற்பட்டவை. அவை இறைவனை, அவனுடைய பேராற்றலை, அவனையே சார்ந்து இருக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுபவை. உங்களுக்கு நெருக்கமாக நிகழும் பிறப்பும் இறப்பும் உங்களுக்குள் ஆச்சரியமான தாக்கங்களை ஏற்படுத்துபவை, உங்களை இறைவனை நோக்கி இழுத்துச் செல்பவை.

வாழ்வும் மரணமும் அவன் கைவசமே உள்ளன. அவனே வாழ்வளிக்கின்றான், மரணிக்கச் செய்கின்றான்.

No comments:

Post a Comment