Sunday, 5 February 2023

தற்கொலை

 சமீபமாக நெருங்கிய உறவினர்களின் மரணங்கள் எல்லாம் தற்கொலையான போது சொல்ல வந்த உறவுகள் என்ன இதுவும் இறைவன் நாட்டப்படிதானா?

அப்படி என்றால் இவனின் தற்கொலையும் அல்லாஹ் அறிந்துதான் செய்யச் செய்கிறானா? இறைவன் கொடுமைக்காரனா?

அடிப்படையில் நாம் சிலவற்றைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்

உலகில் நமக்கு முன்னர் எத்தனை சமூகம் வாழ்ந்தார்கள் என்று நாம் அறிந்தோமா? இல்லை நாம் மறித்த பின்னர் எத்தனை சமூகம் வாழப்போகிறது என்பதை அறிவோமா?

நம்மை அறிவுசார் நின்று செயல்பட ஒரு வழிகாட்டு நெறிமுறையும் அழகிய வாழ்வுமாக அமைந்தது இறைவேதம் அல் குர் ஆன் மற்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வும்.

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம்., கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இது நபிகளாரின் பொன்வாக்கு 

நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் இந்தச் சோதனையிலும் நாம் இறைவனை நம்புகிறோமா அவனிடம் மன்னிப்பு கோருகிறோமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும் 

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். 25:70

ஆனால் மனிதன் அவசர கதியில் தன்னைவிட மிஞ்சியது ஒன்றுமில்லை என்ற அந்த சொற்ப நொடியில் எடுப்பதை நாம் தவறென எண்ணுவதில்லை. இந்த உயிர் நாம் எப்படிப் பெற்றோம்; அதற்கான காரணிகள் என்ன 

மனிதம் பலவீனமானவன்....

No comments:

Post a Comment