உங்கள் வயதான பெற்றோரை உடனே சென்று பார்க்கும் கண் தூரத்தில் வைத்திருங்கள்,
உங்கள் சூழ்நிலைகளையும் வேலை வாய்ப்புகளையும் அதற்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ளுங்கள்
எளிதில் வந்து பார்க்க முடியாத தூரத்திற்கு சென்று விடாதீர்கள்
அவர்களுக்கு
உணவும் தண்ணீரும் உடையும் இருப்பிடமும் ஒரு வேலையாளும் போதும் என்று நினைக்காதீர்கள்,
அதையும் தாண்டி உங்கள் அன்பும் அரவணைப்பும் ஆதரவும் அவர்களுக்கு எப்போது கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்
நீங்கள் அவர்களின் அருகில் இருப்பதே அவர்களுக்கான பெரிய ஆறுதல் என்பதை அறியுங்கள்
உங்கள் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பதை உணருங்கள்
உங்கள் விருப்பத்தை மறுத்து பேசாத உங்களுடைய பெற்றோரின் எண்ணத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள்
உங்கள் பெற்றோரிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை உங்கள் அருகில் இருந்து உங்கள் பிள்ளைகள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்
உங்கள் பெற்றோர் உங்களுக்கு அநீதி செய்தாலும் நீங்கள் அவர்களுக்கு நீதி மட்டுமே செலுத்துங்கள்
நீங்கள் இவற்றை உங்கள் பெற்றோருக்காக செய்யாவிட்டாலும் இறைவனுக்காக செய்யுங்கள்.
-S.செய்யித் அலி பைசி,
02.02.2023
No comments:
Post a Comment