அனைத்துலகிற்கும் அதிபதியே! அல்லாஹ்வே!
உன்னைப் போற்றி வணங்குகிறேன்
வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் நீ ஒருவன் மட்டுமே என சான்று பகர்கின்றேன்
உனது இறுதித் தூதர் அகிலத்துக்கோர் அருட்கொடை அண்ணல் நபி அவர்களின் மீது உனது ஸலவாத்தைப் பொழிவாயாக!
'தக்வா'வின் மூலம் எனதுமறுமை வாழ்விற்கு உதவிடுவாயாக!
என் கண்களுக்குப் புலப்படாதவைகளின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாயாக!
என் முன் இருப்பவைகளை அனுபவிப்பதில் என்னை என் மன இச்சைகளின் பால் என்னை ஒப்படைத்துவிடாதே!
நாங்கள் செய்யும் பாவங்களால் பாதிக்கப்படாதவனே!
எங்களை மன்னிப்பதனால் எதனையும் இழக்காதவனே!
எங்களுக்கு
நிஃமத்துகளை
அருள்வாயாக அவற்றை அருளுவதால்
உனக்கு எந்தக் குறையும் ஏற்படப்போவதில்லை!
மன்னிப்பதனால் உனக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தாத மஃபிரத்தால் என் பாவங்களை மன்னிப்பாயாக!
நிச்சயமாக நீயே வாரிவழங்குபவன்.
விரைவில் கிடைக்கும் செழுமை,
அழகிய பொறுமை.
விசாலமான வாழ்வாதாரங்கள்,
துன்பங்கள் அனைத்திலிருந்தும் பாதுகாப்பு
ஆகியவற்றை உன்னிடம் கேட்கிறேன்.
பரிபூரண ஆரோக்கியத்தைக் கேட்கிறேன் .
நீடித்த சுகத்தைக் கேட்கிறேன்.
ஆரோக்கியத்தை அளித்ததற்கு நன்றி செலுத்துதலைக் கேட்கிறேன்
மக்களிடம் தேவையாகாத வாழ்வைக் கேட்கிறேன்
நலன்களை பெறும் ஆற்றலோ,தீமைகளை விட்டு விலகும் சக்தியோ, கண்ணியமும்,உயர்வும் நிறைந்த அல்லாஹ் வை கொண்டே தவிர வேறு இல்லை.
ஆமீன்.
நபி பிரார்த்தனைத் தொகுப்பு ஹிஜ்புல் அஃளம்(முல்லா அலி காரி) தொகுப்பிலிருந்து
தமிழில் கணியூர் முஹம்மது இஸ்மாயில் நாஜி
No comments:
Post a Comment