Saturday, 4 February 2023

பெருமை

 அணு என்பது மிகச் சிறிய துகள் தான் ஆனால் அதை எங்கும் நாம் உதாரணம் காட்டுவதில்லை. விதிவிலக்காக யாராவது வழக்கத்தில் பேசிக் கூட அறியாத சொல்லாடலை இறைத்தூதர் பயன்படுத்தியதை நாம் புறக்கணிக்கிறோமோ

ஆம் அணு அளவு பெருமை கொண்டவர் சொர்க்கம் செல்ல மாட்டார்.
பெருமை என்றால் என்ன?
சத்தியத்தை மறுப்பதும், மக்களை இழிவாக கருதுவதும் தான் பெருமை.
இத்தகைய பெருமை ஏன் ஏற்படுகிறது?
ஒருவன் தன்னை மற்றவரைவிட உயர்வானவனாகவும், பிற மக்களை சிறுமையாகவும், பிறர் தமக்கு பணிய வேண்டும் என நினைத்து பெருமிதம் கொள்வதினால் ஏற்படுகிறது.
இறைவா!
பெருமைக்குரியவனே
எங்களை உன்னை வணங்கி வழிபட்ட‌ நல்லடியார்களோடு சேர்த்துக் கொள்வாயாக!
இறைவா!
உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment