Sunday, 5 February 2023

சுவர்க்கத்தில் வாழ வழிவகை

 ஏய் என்ன யாரோடடே என்ன சேர்த்து பேசுற

பழயமாடங்களா இந்த சபைக்கு வரணும்னா ஒரு தராதரம் வாண்டமா, யாரோட ஒண்ணா இருக்க முடியும்
ஏலே அவன் தரத்துக்கு நமக்குச் சரிப்படாது. அவன் சரியில்லாத பயிற்சி
இதோடு நம்மோடு வாழும் சக மனிதனை நாம் ஒருவரோடு ஒருவர் ஒப்பீடு செய்வதை அல்லது உயர்வு கற்பிப்பதை விரும்பாதவர்கள்.
நமக்கு என்று தனி அடையாளம் வேண்டும் என்று விரும்பும் நாம் என்ன செய்தோம்.
நம்மை நாமே உருவாக்கினோமா
நான் இந்த நிமிடம் வரை சுவாசிக்கும் காற்று அதற்கான அத்தனையும் படைத்து
நான் பார்க்கும் பொழுது கண்கள் சொக்கி போய் நிலை தடுமாறும் தட்பவெப்பம்
தட்ப வெப்பத்திற்கு ஏற்ற உணவு
இதில் எதுவும் என்னால் நிர்ணயம் செய்ய முடியாது.
இத்தனை பலவீனமாக இருந்தது நாமே மற்றொருவருக்கு ஒப்பிடுவதை விரும்பாத போது.
அகிலத்தை படைத்து காத்து நிற்கும் ஏகன் ஒருவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று
லுக்மான் (அலை) மூலம் வரும் சந்ததிகளுக்கு வாழையடி வாழையாக இந்தப் பரப்புரையைச் செவிமடுக்க வைத்துள்ளான் அல்லாஹ்.
وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
(அல்குர்ஆன் : 31:13)
இறைவா!
தனித்துவமானவனே
உன்னை இணை கற்பிக்கும் மாபாவத்திலிருந்து எங்களை காப்பாயாக!

No comments:

Post a Comment