Sunday, 5 February 2023

தொழுகை - சுவர்க்கத்தின் திறவு கோல்

 

லுக்மான் (அலை) அவர்களின் மொழியாக இறைவன் நமக்குப் பகிர்ந்த வார்த்தைகள் தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
என்னருமை மகனே! "தொழுகையைக் கடைப்பிடித்தொழுகு, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் கஷ்டங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும். 31:17
(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. 31:18
உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!" (என்று கூறினார்கள்). 31:19
அடிப்படையில் நாம் இதனை நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்கவேண்டும் என்றே இறைவன் நமக்கு இதனைச் சிறந்த சொல்லாடலாக தூதர் மூலம் வழங்கியுள்ளான்.
முதலாவது நாம் அறிந்து செயல்பட வேண்டியது அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது.
அடுத்தது நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது
மூன்றாவது பொறுமையை மேற்கொள்வது என்பது அதை வீரமிக்க செயல் என்றும் சான்று பகிர்கிறான்.
நான்காவது பெருமையிலிருந்து விலகிக் கொள்வது
ஐந்தாவது நடு நிலையாக நடந்துகொள்வது மற்றும் நிதானமாக பேசுவது
"என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும்போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனாகவும் இருக்கிறான் 31:16
இந்த 5 வசனங்களைப் படித்துப் படித்து நாம் தெளிவு பெறலாம்.
Like
Comment
Share

No comments:

Post a Comment