Saturday, 8 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


வேளை


அவிசுவாசிகள் அடிக்கடி கூறிவந்த ஒரு விஷயம், உண்மையாகவே இறைவன் தமக்கேதும் செய்திகள் அனுப்ப வேண்டியிருப்பின் நிச்சயமாக ஒரு வானவரை அனுப்பியிருப்பான் என்பதாகும். குர்ஆன் இதற்குப் பதிலளித்தது:

பூமியில் மலக்குகளே வசித்திருந்து (அதில்) அவர்கள் சாவதானமாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து ஒரு மலக்கையே ( நம்முடைய) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம்!.

குர்ஆன் : 17:95

காலத்துக்குக் காலம் ஜிப்ரீல் இறைவசனங்களுடன் வருகை தந்து கொண்டிருந்தாலும், குர்ஆனின் அடிப்படையில் அவர் ஒரு தூதராக அமைந்துவிடவில்லை. ஏனெனில் தூது யாருக்காக வந்துள்ளதோ அவர்கள் மத்தியிலிருந்து ஒருவரையே அதற்கென நிலை நிறுத்த வேண்டியிருந்தது. இறை வசனங்கள் மேலும் கூறின :

Friday, 7 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குடும்பப் பிரிவினைகள் ( தொடர்… )



சிற்சிறு லெளகிக உறவுகட்கும் மேலாகச் சத்தியத்துடனான தொடர்புகளை உன்னதமாகக் கொண்டு செயல்பட முனையும் தன்மையை அதீ கோத்திரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த குடும்பங்களுள் ஒன்றன் முன்னைய தலைமுறையிலேயே கண்டு கொள்ள முடிந்தது. 

நுபைலுக்கு இரு வேறு மனைவியர் மூலம் இரு புதல்வர்கள் இருந்தனர். கத்தாப், அம்ர் என்போர். நுபைல் இறந்ததன் பின்னர் கத்தாபின் தாயார், கணவரின் மறுதாரத்து மகனான அம்ரை மணஞ் செய்து கொண்டார். அவர்களது மகன் ஸைத் எனப் பெயரிடப்பட்டார். ஆக, கத்தாபும் ஸைதும் தாய் வழியில் அரைச் சோதரராயிருந்தனர். வரகாஹ்வைப் போல், ஸைதும் குறைஷியரினின்றும் வேறுபட்ட சிந்தை கொண்டவராக விளங்கினார். சிலை வணக்கத்தையும் பல்தெய்வ வழிபாடுகளையும் விருப்பாதிருந்த அவர், சிலைகளுக்கெனப் பலியீடு செய்யப்பட்ட எதனையும் உட்கொள்வதைக் கூட மறுத்துரைத்தார். தான் இப்றாஹீமின் இறைவனையே வழிப்படுவதாகப் பிரகடனம் செய்ததோடு தனது சொந்த கோத்திரத்தவர்களையே பகிரங்கமாகக் கண்டனம் செய்யவும் அவர் தயங்கவில்லை. மறுபுறம் கத்தாப், குறைஷியரின் பண்டை வழக்கங்களை அப்படியப்படியே பின் பற்றுபவராயிருந்தார். தாம் வழிபட்டு வந்த கடவுளரைக் கண்டனம் செய்து வந்த ஸைத்தின் நடவடிக்கைகள் கத்தாபுக்கு அவதூறு ஏற்படுத்துவனவாய் அமைந்தன. எனவே கத்தாப், ஸைதைத் துயருறுத்தத் தொடங்கி, அவரை மக்காவின் குழிவுப் பிரதேசத்தினின்றும் வெளியேற்றி அயலிலுள்ள மலைப்பிரதேசத்தில் சென்று வசிக்கச் செய்தார். இளைஞர்களைக் கொண்டதொரு குழுவினர், ஸைத் புனிதத்தலத்துள் நுழையாதவாறு காக்கும்படி பணிக்கப்பட்டனர். வெளியேற்றப்பட்ட ஸைத், ஹிஜாஸை விட்டும் தானே நீங்கி ஈராக்கின் வட பகுதியில் உள்ள மோசூல் வரை சென்றார். பின்னர் தென் மேற்காகச் சென்று ஸிரியாவை அடைந்தார். சென்றவிடமெல்லாம் தான் சந்தித்த மதகுருமாரிடமும் ரப்பிகளிடமும் இப்றாஹீமின் மதம் குறித்து விசாரணைகள் மேற்கொண்டு வந்தார் அவர். இறுதியில் ஒரு மதகுருவானவர், ஓர் இறைதூதர் தோற்றமுறும் காலம் நெருங்கி விட்டதெனவும், ஸைத் எந்த நாட்டை விட்டு வந்தாரோ, அந்த நாட்டிலேயே அவர் தோற்றம் பெறுவாரெனவும், அவர் தேடிக்கொண்டிருக்கும் மதத்தையே அவ்விறைத்தூதர் போதிப்பார் எனவும் கூறிவைத்தார். மீண்டும் வந்து கொண்டிருந்த ஸைத், ஸிரியாவின் தென்னெல்லையில் லக்ம் எனும் பிரதேசத்தில் வைத்துத் தாக்கிக் கொள்ளப்பட்டார். வரகாஹ் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டபோது, அவரை போற்றித் துக்ககரமானதொரு பாடலை யாத்தார். நபிகளாரும் ஸைதைப் பற்றிக் கூறினார்கள்:
“மீளவுயிர்பிக்கும் நாளின் போது, தனியான அவருள், ஒரு முழு சமூகத்தினது பெறுமதியை உடையவராக அவர் எழுப்பப்படுவார்”.- இ.இ. 145

Thursday, 6 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குடும்பப் பிரிவினைகள் ( தொடர்… )


அபூ-பக்ர் எத்தனையோ பேரை இஸ்லாத்தின் பாலாக்கியிருந்தும் அவரது மகன் அப்த்-அல்-கஅபாவை மனமாற்ற முடியவில்லை. உம்ம்-ரூமான் மூலம் கிடைத்த அவர், தனது பெற்றோரின் முயற்சிகளையெல்லாம் மறுத்து, இஸ்லாத்தின் வெளியிலேயே நின்றார்.

விசுவாசிகளுக்குப் பல ஏமாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. பரந்து வரும் புதியதொரு சக்தியின் உத்வேகத்தின் காரணமாக அவிசுவாசிகளும் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கலாயினர். தமது அன்றாட வாழ்க்கை முறைகளுக்குத் தடைகளையேற்படுத்தவும், எதிர்காலத் திட்டங்களைத் தகர்க்கவுமே இப்புதிய இயக்கம் கிளம்பியுள்ளதென அவர்கள் கொண்டனர். தீவிரமான உடனடிப் பிரச்சினையாயமைந்தது, தமது மக்களின் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் எதிர்நோக்கிய சங்கடங்களாகும். தமது கோத்திரத்தவரான அப்த்-அல்லாஹ் தனது ஒன்று விட்ட சகோதரரான முஹம்மதைப் பகிரங்கமாக எதிர்த்து நின்றமை பனீ மக்ஸும்களுக்கு ஆறுதல் அளிப்பதாயிருந்தது. அப்த்-அல்லாஹ்வின் சகோதரர் ஸுஹைர் புதிய மதத்துக்கு தீவிர எதிர்ப்புகளேதும் காட்டவுமில்லை; அதில் இணையவுமில்லை. 

அப்த்-அல்லாஹ்வைப் போலவே அவரும் ஆதிகாவின் மற்மகன். அப்த்-அல்-முத்தலிபின் மகளாவார் ஆதிகா. அப்த்-அல்லாஹ், ஸுஹைர் ஆகியோரின் காலமாகிவிட்ட தந்தையார், ஆதிகா என்ற பெயரையே உடைய மற்றுமொரு மனைவியையும் கொண்டிருந்தார். அம்மனைவி மூலம் கிட்டியவர் ஹிந்த் எனப் பெயரிய ஒரு மகள். மிக்க அழகியான ஹிந்த் அப்போது பத்தொன்பது வயதை எட்டியிருந்து, தனது இரு அரைச்சோதரரதும் ஒன்று விட்ட சகோதரரான அபூஸலாமாவை மணஞ் செய்திருந்தார். மக்ஸுமின் அடுத்த கிளையைச் சார்ந்தவர் அபூஸலாமா. இரு கிளையினருக்குமிடையிலான இத்திருமண உறவினால் முழுக்கோத்திரத்தாருமே மகிழ்ந்தனர். எனினும் அபூஸலாமா இஸ்லாத்தில் இணைந்து கொண்ட விவரம் தெரிய வந்தமை அனைவரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்குவதாயது. இவ்வேமாற்றம் இரட்டிப்பாகக் காரணமாயமைந்தது, ஹிந்த்-உம்ம்ஸலாமா என்றே இவர் எப்போதும் அழைக்கப்படுபவரானார் - தனது கணவனை விட்டு வராமல் தானும் அவரைப் போலவே நபிகளாரை மிக விசுவாசமாகப் பின்பற்றுவோரில் ஒருவரானமை.

Wednesday, 5 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குடும்பப் பிரிவினைகள்


அபூதாலிபின் மக்களான தாலிபும் அகீலும் தமது இளைய சகோதரர்களான ஜஅபர், அலீ ஆகியோரின் முன்மாதிரியைப் பின்பற்றாது விட்டனர். தந்தையாரைப் போல அவர்களும் புதிய மதத்தைச் சாராதவர்களாகவே இருந்தனர். என்றாலும் அவர்கள் பொறைமையுடையோராய் விளங்கினர். அபூலஹ்பின் போக்கு முற்றும் மாறானதாக இருந்தது. குறைஷித் தலைவர்கள் அண்மையில் நபிகளாருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் வெளிப்படையாகவே தன் பகைமையைக் காட்டி வந்தார் இவர். அவரது மனைவி, ஷம்ஸிய கோத்திரத்துத் தலைவர் அபூஸுப்யானின் சகோதரி, உம்ம் ஜமீலும் நபிகளார் மீது ஆழ்ந்த வெறுப்பினைக் கொண்டிருந்தார்.

உம்ம் ஜமீலும், கணவர் அபூலஹப்பும் இணைந்து, தமது இரு புதல்வர்களையும் வற்புறுத்தி, ருகையாவுடனும் உம்ம் குல்தூமுடனுமான அவர்களது திருமண ஒப்பந்தங்களை முறித்து விடச் செய்தனர். இத்திருமணங்கள் ஏற்கெனவே நிகழ்ந்திருந்தனவோ அன்றி முடிவு முடிவு செய்யப்பட்ட நிலையில் தான் இருந்தனவோ என்பது குறித்துத் தெளிவில்லை. மணமுறிவுகளின் காரணமாக உம்ம் ஜமீல் மிக்க மகிழ்வுற்றாலும் அம்மகிழ்ச்சி நீடிக்க முடியவில்லை. ஏனெனில் அவரது ஒன்று விட்ட சகோதரரும், பெரும் செல்வந்தரும், உமையாக் கோத்திரத்தவருமான உத்மான்-இப்ன்-அப்பான், ருகையாவைத் திருமணம் செய்துக் கொள்ளக் கேட்டு மணஞ்செய்து கொண்டார். இத்திருமணம் நபிகளாருக்கும் கதீஜாவுக்கும் மன நிறைவையளித்தது. ருகையா மகிழ்ந்தார். மருமகனும் மிக்க விசுவாசத்துடன் நடந்து கொண்டார்.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

வியப்பும்
நம்பிக்கையும்


குறைஷியருள், தம் தலைவர்களளவு வாழ்க்கையில் செல்வமும் செல்வாக்கும் பெற்றுக் கொள்ள இயலாது போனோரும், இளைஞர்களாயிருந்தோரும் இறைவசனங்களின் மூலமான போதனைகளை ஒரேயடியாக ஏற்றுக் கொண்டனர் எனக் கூறுவதற்கில்லை. 

ஒரு வகை சுயதிருப்தி கண்டவர்களாகவே அவர்கள் வாழ்ந்து வந்தனர். என்றாலும் ஒரு ஊதுகுழலின் ஓசை போல தமது சின்னஞ்சிறு உலகில் வந்திறங்கிய இந்த அழைப்பின் கூர்மையும் அழுத்தமும் கேளாத அளவுக்கு அவர்களது செவிகள் அடைபட்டிருக்கவில்லை.

உத்மான் பாலை நிலத்தில் கேட்ட ‘ உறங்குபவர்களே விழித்தெழுங்கள் ’ என்ற அசரீரி, முழுப் போதனைக்குமே இயைந்ததாக இருந்தது. போதனையை ஏற்றவர்களோ, உண்மையிலேயே தாம் உறக்கத்திலிருந்து விழித்துப் புதியதொரு வாழ்க்கையினுள் புகுந்தது போன்ற உணர்வைப் பெற்றிருந்தனர்.

அவிசுவாசிகளின் முன்னைய பின்னைய நிலைமைகளை இறைவசனங்கள் நன்கு தெளிவாக்கி வைத்தன. இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர ( இறந்த பின் வேறு வாழ்க்கை ) இல்லை; ஆகவே ( இறந்த பின் ) நாம் உயிர்ப்பிக்கப்பட மாட்டோம் ( குர்ஆன்: 6:29 ) அவிசுவாசிகளின் இத்தகு கூற்றுக்குப் பதிலாக அமைந்தன, வானங்களையும் பூமியையும் அவைகளுக்கு மத்தியிலுள்ளவைகளையும் (வீண்) விளையாட்டுக்காக நாம் சிருஷ்டிக்கவில்லை ( குர்ஆன்: 21:16 ) நாம் உங்களைப் படைத்ததெல்லாம் நிச்சயமாக வீணுக்காக என்றும் நீங்கள் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் உறுதியாக எண்ணிக் கொண்டிருந்தீர்களா? ( குர்ஆன் : 23:115 ) முதலிய வாசகங்கள், அவிசுவாச எண்ணங்கள் மனதில் ஆழப்பதியாதோராய் இருந்தோர்க்கு இவ்வாசகங்கள் உண்மையே கூறுவனவாகத் தெரிந்தன. குறிப்பிட்ட இவ்வாசகங்கள் மட்டுமன்றிக் குர்ஆனின் போதனைகள் அனைத்துமே இவ்வாறானதோர் உணர்வையே தூண்டி நின்றன. ஓர் ஒளியாகவும் வழிகாட்டியாகவும் தம்மைத் தாம் சுட்டி நின்றன இறை வசனங்கள். போதனைகளை ஏற்று நடக்க வேண்டுமென்பதற்குப் போதகரின் தன்மைகளும் தூண்டுதலாயிருந்தன. பிறரை ஏமாற்ற முனையாத அளவு உண்மை நிரம்பியவராயிருந்தார் அவர். தன்னைத் தான் ஏமாற்றிக் கொள்ளாத அளவு ஞானம் மிகுந்தவராகவுமிருந்தார். எனவே நபிகளாரை இவர்கள் உறுதியாக நம்பினர். போதனைகள் எச்சரிக்கைகளையும் வாக்குறுதிகளையும் வழங்கின. எச்சரிக்கைகள் ஆவன செய்ய அவர்களைத் தூண்டின; வாக்குறுதிகள் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

Tuesday, 4 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குறைஷித் தலைவர்கள் (தொடர்… )



செல்வ நிலையைப் பொறுத்தவரை, குறைஷிக் குலத்தின் பல்வேறு கோத்திரத்தாரும், மேலோர் கீழோவராவதும் கீழோர் மேலோவராவதுமாக பல்வேறு மாற்றங்கட்கும் உட்பட்டு வந்தனர். அப்போதைய சூழலில் பொருள் வளம் மிக்கனவாக விளங்கியவை அப்த்-ஷம்ஸ், மக்ஸும் கோத்திரங்களாகும். ஷம்ஸிய கோத்திரத்தின் ஒரு கிளையாருக்கு உத்பாவும் அவரது சகோதரர் ஷைபாவும் தலைமை வகித்தனர். அதன் உமையாக் கிளையாருக்குத் தலைவராக விளங்கியவர் இவர்களது ஒன்று விட்ட சகோதரர் ஹர்ப்.

ஹர்ப் மரணமடைய, அவரது புதல்வர் அபூ ஸுப்யான் தலைமை பதவியை ஏற்றிருந்தார். ஏனைய பல மனைவியருடன், அபூ ஸுப்யான் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரையும் மணஞ் செய்திருந்தார். பொது விவகாரங்களிலும் வர்த்தகத்திலும் அபூ ஸுப்யான் பெரு வெற்றிகள் பெற்று வந்தமைக்குப் பல காரணங்களிருந்தன. தீர்மானங்கள் எடுப்பதில் அவர் கைதேர்ந்தவர். ஆழமாகச் சிந்திப்பவர். பொறுமையுடன் ஆலோசனைகள் நடத்துபவர். தக்க சந்தர்ப்பங்களைத் தவறியேனும் நழுவவிடாத அவரது கூரிய சிந்தனையின் காரணமாகத் தனக்கு நீண்ட காலத்திலாவது சாதகமான பலனேற்படக் கூடுமாயின் மிக்க தன்னடக்கத்துடன் நடந்து கொள்ளக் கூடியவர்.

மனைவியான ஹிந்த் மிக இலகுவாக சினத்துக்குள்ளாவதோடு, எந்த ஒரு விடயத்திலும் சடுதியான முடிவுகளை மேற்கொள்பவராயிருந்தார். முரண்பட்ட போக்குகள் இயல்பாகவே இருவரிடையிலும் மனக் கசப்புகளைத் தோற்றுவிப்பனவாக இருந்தன. என்றாலும் தான் ஏதும் ஒரு தீர்மானம் எடுத்து விட்டால் அதிலிருந்தும் மனைவி ஹிந்த் கூட தன்னைத் திசை திருப்பி விட முடியாத உறுதி படைத்தவராயிருந்தார் அபூ ஸுப்யான். இவர் நபிகளார் மீது காட்டி வந்த எதிர்ப்பு, எதிர்பார்க்கக் கூடியது போல, அபூஜஹ்லின் எதிர்ப்பினைக் காட்டினும் தாக்கம் குன்றியதாகவே இருந்தது.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குறைஷித் தலைவர்கள்


நபிகளாரைப் பின்பற்றுபவர்களின் தொகை அதிகரித்துச் சென்றது. என்றாலும் புதிதாக மதம் மாறியவர்கள், அடிமைகளாக அல்லது அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாக அல்லது சுற்றுப்புறக் குறைஷியராகவே இருந்தமையை அவதானிக்க முடிந்தது.

குழிவின் குறைஷியருள் இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பொதுவாக வாலிபர்களாக அல்லது இளம் யுவதிகளாக இருந்தனர்.அவர்கள் செல்வாக்குள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்களானாலும் தம்மளவில் எவ்வித செல்வாக்குமற்றவர்களாகவே விளங்கினர். அவர்களது மதமாற்றம் தம் குடும்பத்தாரதும் மூத்த உறவினர்களதும் சினத்தைப் பன்மடங்கு அதிகரிப்பதாகவே அமைந்தது.

அப்த்-அர்-ரஹ்மான், ஹம்ஸா, அர்கம் ஆகியோரது மதமாற்றம் தனிப்பட்ட பின்னணிகளைக் கொண்டிருந்தது. அவர்கள் தலைமைத்துவ நிலையினின்றும் சேய்மையிலேயே இருந்தனர். குறைஷியரின் தலைவர்களில் சிலரை எவ்வாறேனும் தமது செல்வாக்குக்குள் கொண்டுவர முனைந்தனர் நபிகளார். எவருமே, ஏன் அன்னாரின் பெரிய தந்தையாரான அபூதாலிப் கூட அன்னவரைச் சேர்ந்து கொள்வதில் எவ்வித விருப்பினையும் காட்டவில்லை. தமது தூதினைப் பரப்ப அபூஜஹ்லின் மாமனாரான வலீதைப் போன்ற ஒருவரது ஆதரவு கிடைக்கக் கூடுமாயின் அது பேருதவியாக இருக்கும் எனக்கருதினர் நபிகளார். அவர் மக்ஸுக் கோத்திரத் தலைவராக இருந்தது மட்டுமன்றி, ஒரு வகையில் முழு குறைஷிக் குலத்தவரதும் உத்தியோக பூர்வமற்ற தலைவராகவும் மதிக்கப்பட்டு வந்தார். அத்தோடு ஏனையோரை விட தர்க்கங்களுக்கு செவி சாய்க்கக் கூடிய ஒருவராகவும் அவர் விளங்கினார்.

Monday, 3 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குறைஷியர் தூது ( தொடர்… )

தமது வினாக்களுக்கு எவ்வித பதிலையும் உத்பா கொண்டு வராது விட்டதனால், “ நாங்கள் முஹம்மதை இங்கு வரவழைத்து அவருடன் பேசி வாதாடிப் பார்ப்போம். அதன் மூலம் நாம் எல்லா வழிகளையும் பிரயோகிக்கவில்லை என்ற பழிக்கு ஆளாகாமலிருக்கலாம் ” என்றார் ஒருவர். ‘ உமது மக்களில் உயர்வானோரெல்லாம் உம்முடன் கதைக்கவெனக் கூடியிருக்கிறார்கள் ’ என அன்னாருக்குச் செய்தி அனுப்பினர் குறைஷியர். அவர்களது போக்கில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் மிக விரைவாகச் சென்றனர் நபிகளார். குறைஷியரைச் சத்தியத்தின் பால் வழிகாட்டும் ஆவல் மிகுந்திருந்தது. எனினும், ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட பிரேரணைகளே மீண்டும் வைக்கப்பட்டபோது, அன்னாரின் நம்பிக்கையெல்லாம் தகர்ந்து போவதாயிற்று. அவர்கள் பேசி முடிந்ததும் நபிகளார் கூறினார்கள் : 

“ நான் எந்தவோர் ஆவியினாலும் பீடிக்கப்பட்டவனல்ல; உங்களிடையே கெளரவத்தை வேண்டி நிற்பவனுமல்ல; அரச பாரத்தை விரும்பியவனுமல்ல, அல்லாஹ் என்னை உங்களுக்கு அவனுடைய தூதராக அனுப்பியுள்ளான். எனக்கு ஒரு வேதத்தையும் அருளி, உங்களுக்கு நன்மாராயங் கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் இருக்கும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அல்லாஹ்வின் தூதினை உங்களுக்கு நான் அறிவித்துள்ளேன். நல்ல ஆலோசனைகளையும் கூறியுள்ளேன். நான் உங்களுக்குக் கொண்டு வந்திருப்பவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டால், அது உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை பயக்கும். அவற்றை நீங்கள் நிராகரித்தாலோ, உங்களுக்கும் எனக்கும் இடையில் அல்லாஹ்வின் நியாயத் தீர்ப்பை எதிர் நோக்கி அமைதியுடன் இருப்பேன் ”. - ( இ.இ.188 )

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குறைஷியர் தூது

அன்று முதல், தான் ஏற்றுக் கொண்ட இஸ்லாத்தை மிகவும் ஒழுங்காகப் பேணி வந்தார் ஹம்ஸா. நபிகளாரின் கட்டளைகளையும் நடைமுறைப்படுத்தி வரலானார். அவரது மதமாற்றம் குறைஷிகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தமை தெளிவாக இருந்தது. ஹம்ஸா பாதுகாப்பளிப்பார் என்ற காரணத்தினால், நபிகளாரை நேரடியாகத் தொல்லைப்படுத்துவதிலும் தயக்கம் காட்டலாயினர் குறைஷியர். மறுபுறம், நிலைமையின் தீவிரத்தன்மையை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் இவ்வெதிர்பாராத மதமாற்றம் உணர்த்தி நின்றது. பயங்கரமான இச்சூழ்நிலை, அறபிகளிடம் தமக்கிருக்கும் உயரிய ஸ்தானத்தைத் தகர்த்து விடலாம் எனக் கருதிய குறைஷியர், இப்புதிய இயக்கத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் எனக் கொண்டனர். அபாயத்தின் தன்மை, உபாயங்களை மாற்றியமைக்க வேண்டியமையை வற்புறுத்தியது. எனவே அப்த்-ஷம்ஸ் கோத்திரத்தாரின் தலைவர்களுள் ஒருவரான உத்பா-இப்ன்-ராபியா சபையில் தெரிவித்ததோர் ஆலோசனையை அவர்கள் உடனடியாகவே அங்கீகரித்தனர். 

“ நான் ஏன் முஹம்மதிடம் செல்லக் கூடாது? ” என வினவிய அவர், “ அவரிடம் சில பிரேரணைகளை சம்ர்ப்பிப்போம். அவற்றில் சிலவற்றை அவர் ஏற்கலாம் அல்லவா? அவர் எங்களை நிம்மதியாக வாழ விடுவார் என்ற நியதியின் பேரில், அவர் ஏற்றுக்கொள்பவற்றை நாம் அவருக்கு அளிப்போம் ” எனக் கருத்துத் தெரிவித்தார். 
அவ்வேளை நபிகளார் கஃபாவின் அருகில் அமர்ந்திருப்பதாக செய்தி வந்தது. உத்பா குறைஷித் தலைவர்களின் சபையை விட்டெழுந்து பள்ளிவாசலுக்குச் சென்றார். இம்முயற்சியில் தான் இறங்குவதற்கு அவர் முடிவு செய்யப் பல காரணங்கள் இருந்தன, ஒன்று, அவர் ஹாஷிமின் சகோதரனான அப்த்-ஷம்ஸின் பேரனாயிருந்தமை. மிகப் பெரும் தலைவனாயிருந்த குஸையின் மகன் அப்த்-மனாபின் இரு புதல்வர்களதும் பெயரால் வழங்கி வந்த இவ்விரு கோத்திரத்தாரும் வெகுவாகப் பிரிந்து சென்றிருந்தாலும் கூட, அவர்களது தோற்றம் ஒரே மூலத்தையே கொண்டிருந்தமையால் அவர்களிடையே இருந்து வந்த வேற்றுமைகளைக் குறைத்துக் கொள்வது இலகுவாயிருந்தது. அத்தோடு உத்பா, குறைஷிகளிலேயே வன்மை குறைந்த ஒருவராக, இதமான சுபாவங் கொண்டவராகவும் புத்தி சாதுரியம் மிக்கவராகவும் விளங்கினார்.

Sunday, 2 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


அபூஜஹ்லும்
ஹம்ஸாவும்


மக்காவில் விசுவாசிகளின் தொகை பெருகிச் சென்றது போலவே, விசுவாசிகளுக்கு எதிரான சக்திகளும் பெருகிச் சென்றன. குறைஷியரின் தலைவர்கள் சிலர் ஒரு நாள் ஹிஜ்ரின் மீது கூடியிருந்தனர். நபிகளார் மீதான ஒவ்வொருவரது கோபமும் கிளரப்பட்டு வந்தது. இவ்வேளை நபிகளாரும் புண்ணியத்தலத்தினுள் நுழைந்து கஃபாவின் கிழக்கு மூலைக்குச் சென்று, கரும்பாறையை முத்தமிட்டு வழக்கம் போலவே கஃபாவை வலம் வரத்தொடங்கினார்கள். ஹிஜ்ரை அண்மியபோது குறைஷியர்கள் தம் குரலை உயர்த்தி அன்னார் மீது அபவாதம் கூறி நிந்தனை செய்யத் தொடங்கினர். கூறியன அனைத்தும் நபிகளாரின் செவிகளுள் வீழ்ந்தமையை அன்னாரின் முகம் தெளிவுறக் காட்டியது. இரண்டாம் முறை அவர்களைத் தாண்டிச் சென்ற போதும் இது தொடர்ந்தது. மூன்றாம் முறை அவ்விடத்தைக் கடக்கும் போதும் நிந்தனை தொடரவே, நபிகளார் அவ்விடத்தில் நின்று, “ ஓ குறைஷியரே! நான் சொல்வதை நீங்கள் கேட்பீர்களா? நிச்சயமாக எனது உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவனின் மீது ஆணையாக, நான் உங்களுக்கு அழிவையே கொண்டு வந்துள்ளேன் ” - (இ.இ. 183 ) எனக் கூறினார்கள். கூறப்பட்டவையும், அன்னார் அவற்றைக் கூறிய முறையும் அவர்கள் அனைவரையும் மந்திரவயப்படுத்தியது போலாயிற்று. ஒருவரும் அசையவில்லை : எவரும் எதனையும் கூறவுமில்லை. அமைதி தொடர்ந்தது. அவர்களுள் ஒருவர் எழுந்து அமைதியாக, 




“ அபுல் காஸிமே! உமது வழியில் செல்வீராக! இறைவன் பெயரால் நிச்சயமாக நீர் ஏதும் அறியாத மடையனல்லவே! ” என்றார். என்றாலும் இவ்வமைதி தொடரவில்லை. தாம் அனைவரும் திடீரென மதிப்பும் வியப்பும் கலந்ததொரு நிலைக்கு ஆளானமை குறித்துக் குறைஷித் தலைவர்கள் ஒவ்வொருவரும் தம்மைத் தாம் குறை கூறிக் கொள்ளலாயினர். எனினும் இவ்வாறேற்பட்ட சடுதியான பலவீனத்துக்குத் தக்க பிரதியீடுகளைப் பின்னர் மேற்கொள்வதென சபதம் செய்து கொண்டனர் அவர்கள்.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


அவ்ஸ்களும்
கஸ்ரஜ்களும்

அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தார்கள், யத்ரிபில் தம்மோடு வாழ்ந்து வந்த யூத கோத்திரத்தார்களுடன் பலவித உடன்படிக்கைகள் செய்திருந்தனர். எனினும் இவர்களிடையிலான உறவுகள் எப்போதும் சுமுகமானவையாக இருக்கவில்லை. பிரச்சினைகள் பல உருவாகி, உறவுகள் பிரச்சினைக்குறியனவாயின. இறவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகத்தவராக, ஏக தெய்வ வணக்கம் செய்து வந்த யூதர்கள், பல தெய்வ வணக்கஸ்த்தரான அறபிகளை வெறுத்து வந்தனர். என்றாலும் தொகையில் மிகைத்தவர்களென்ற காரணத்தால் அறபிகளை கெளரவித்து வாழ வேண்டிய நிலையுமிருந்தது. உறவுகள் கசந்து விரக்தியுற்ற சந்தர்ப்பங்களில் யூதர்கள் கூறுவார்கள் :

“ இறைதூதர் ஒருவர் அனுப்பப்பட வேண்டிய காலம் சமீபத்திலிருக்கின்றது. அவரோடு இணைந்து உங்களை நாம் அழித்து விடுவோம் - ஆத், இராம் ( தமக்கனுப்பப்பட்ட இறைதூதர்களுக்கு பணிய மறுத்ததனால் திடீரென அழிவுக்குள்ளாக்கப்பட்ட ஆதி அறபு கோத்திரங்கள் ) கோத்திரத்தாரை அழித்தது போல ”.

Saturday, 1 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குறைஷியர் எதிர்ப்பு…( தொடர்… )


குறைஷியர் தமது திட்டங்களை மிக்க வைராக்கியத்துடனும் திறம்படவும் செயல் படுத்தி வந்தனர். எனினும் தனியொரு விவகாரத்தில் எவ்வாறோ அவர்களது திட்டங்களனைத்தும் ஆரம்பத்திலிருந்தே தோல்வியில் முடிந்தன. மக்காவின் வடமேற்குப் பிரதேசத்தில் செங்கடலை அண்மியிருந்த பனீ கிபார் கோத்திரத்தின் அபூ'தர் என்பார் ஏற்கெனவே நபிகளார் குறித்தும் அன்னாருக்குண்டாயிருந்த எதிர்ப்புகள் குறித்தும் தெரிந்திருந்தார். தனது கோத்திரத்தாரின் பெரும்பான்மையினரைப் போல இவரும் வழிப்பறிக் கொள்ளைக்காரராகவே இருந்தார். எனினும் ஏனையோரைப் போலன்றி அவர் இறைவனின் ஏகத்துவம் பற்றி அசைக்க முடியாத நம்பிக்கையுடையவராகவும் சிலை வணக்கத்துக்கு எவ்வித மதிப்புமளிக்காதவராகவும் விளங்கினார். ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு மக்கா செனறிருந்த அவரது சகோதரர் உனைஸ் திரும்பி வந்ததும், குறைஷியரிடையே ஒரு மனிதர் தன்னை ஓர் இறைதூதர் எனக் கூறிக் கொள்வதாகவும், அவர் லா இலாஹ இல்லல்லாஹ் ‘ வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை ’ எனப் பிரசாரம் புரிவதாகவும். இதனால் குறைஷியர் அவரைத் தம்மவரல்ல எனக் கூறிவருவதாகவும் அபூதர்ரிடம் தெரிவித்தார். உடனடியாகவே மக்காவுக்குப் புறப்பட்டார் அபூதர். ஓர் உண்மையான இறைதூதர் இதோ இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் சென்ற அவரை மக்காவுக்கான பாதையில் சந்தித்த குறைஷியர், அவர் எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள விழைந்தாரோ அவற்றையெல்லாம் கூறி வைத்தனர். சிரமங்களேதுமின்றி அவர் நபிகளாரின் வீட்டையடைந்தார். வீட்டு முற்றத்தில் ஒரு வாங்கின் மேல் படுத்திருந்தனர் நபிகளார். போர்வையின் ஒரு முனை அன்னாரின் முகத்தை மறைத்திருந்தது. அபூதர் அன்னாரை எழுப்பி உதய சோபனம் கூறினார். “ உங்கள் மீது சாந்தி உண்டாவதாக ” எனப் பதிலிறுத்தனர் நபிகளார்.
“ உமது பிரகடனங்களை எனக்குரைப்பீராக ” என்றார் அந்த நாடோடி அறபி. “ நான் கவிஞனல்ல; நான் இப்போதுரைப்பது குர்ஆன். அதனை உரைப்பது நானல்ல; அல்லாஹ்வே அதனைக் கூறுகின்றான் ” என்ற நபிகளாரிடம் “ எனக்காக அதைக் கூறுவீராக ” என வேண்டினார் அபூதர். நபிகளார் ஒரு ஸூறாவை ஓதிக் காட்டினர். உடனே அபூதர், 
“ வணக்கத்துக்குரிய நாயன் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர, முஹம்மத் அல்லாஹ்வின் திருத்தூதராவார் எனச் சாட்சி பகர்கிறேன் ” எனக் கூறினார். “ உம்முடைய மக்கள் யார்? ” என வினவிய நபிகளார் பதிலைக் கேட்டதும் அபூதர்ரை மேலும் கீழும் வியப்புடன் பார்த்தவர்களாகக் கூறினார்கள் :

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குறைஷியர் எதிர்ப்பு


இஸ்லாத்தின் இவ்வாரம்ப காலங்களில் விசுவாசிகள் பலரும் ஒன்று சேர்ந்து, குழுக்களாக மக்காவை அண்மியிருந்த குறுகிய பள்ளத்தாக்குகளுக்குச் சென்று பிறர் காணாதவாறு கூட்டாகத் தொழுது வந்தனர். ஒரு நாள் அவ்வழியாக வந்த சிலை வணக்கஸ்தர்கள் சிலர் அவர்களைத் தடுத்துக் கேவலப்படுத்தினர். இறுதியில் அவர்களுக்கிடையில் சண்டையும் மூண்டது. ஸுஹ்ரா கோத்திரத்து ஸஅத், அவிசுவாசிகளில் ஒருவரை ஒட்டகத் தாடை எலும்பொன்றினால் தாக்கிக் காயப் படுத்தினார். இஸ்லாத்தின் பாதையில் முதன் முறை இரத்தம் சிந்தப்பட்டமை இதனால் ஏற்பட்டதாகும். எனினும் இச்சம்பவத்தின் பின்னர், அவர்கள் வன்செயல்களினின்றும் தம்மை தவிர்த்துக் கொள்ள முடிவு செய்தனர். ஏனென்றால் நபிகளாருக்கு வந்த இறைவசனங்கள் எல்லாம் பொறுமையைக் கடைப்பிடிக்கும்படி அடிக்கடி வற்புறுத்தலாயின. விசுவாசிகள் அவற்றை தமக்கும் உரிய கட்டளைகளாகவே கொண்டனர் :

“ அவர்கள் கூறுவதை சகித்துக் கொண்டு கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி

இரும் ” - குர்ஆன்: 73:10


“ மேலும் இந்நிராகரிப்போருக்கு நீர் அவகாசமளியும். (அதிகமல்ல) ஒரு சொற்ப

அவகாசம் அவர்களுக்கு அளியும் ” - குர்ஆன்: 86:17

இரு சாராரைப் பொறுத்தமட்டிலும், இந்த வன்செயல் வழக்கத்துக்கு மாறானதொரு செய்கையாகவே இருந்தது. நபிகளார் தமது மதத்தை பகிரங்கமாகப் பிரகடனப் படுத்திய பின்னரும் கூட குறைஷிகள் அனைவரும் அன்னார் மீது பொறுமையைக் கடைப்பிடிக்கும் மனப்பாங்கினராகவே விளங்கினர். இவ்வாறான பொறைமை, நபிகளார் குறைஷியரது கடவுளரையும், நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும், வழி வழி வந்த மரபுகளையும் கண்டிக்கத் தொடங்கும் வரை தொடர்ந்திருந்தது. கண்டனங்கள் உணரப்படத் தொடங்கியதும் குறைஷிகளின் தலைவர்கள் சிலை அபூதாலிபிடம் சென்று,