Sunday, 30 September 2018

இந்த ஸூரா இவரை சொர்க்கத்தில் சேர்க்கும் - Mufti Yoosuff Haniffa



அல்ஹம்துலில்லாஹ் 

இந்த காணொளியில் முப்தி சொல்வது போல் தம் சகோதரர்களைப் பிரித்து இயக்க முத்திரையின் காரணமாக இறைவனைப் பின்னுக்குத் தள்ளி இயக்கத்திற்கான பள்ளிகளாக அதிகமாக உருவாகி அதன் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடு என்று இன்று நம் கண் முன்னால் பிளவுபட்டுக் கிடக்கும் சமுதாயம் என்ன செய்யப் போகிறது. 

இறைவா! 
உன்னையே வணங்குகிறோம் 
உன்னிடமே உதவியும் தேடுகிறோம். 


மனங்களில் ஏற்படும் புரிதல்களால் விரிசல்கள் ஏற்பட்டு பிணங்கிக்கொள்ளும் எதிர்மறையான வரம்புகளை மீறும் செயல்களிலிருந்து எங்களையும் சமூகத்தினையும் பாதுகாப்பாயாக! 




சாரு நிவேதிதா

கலைஞருக்கு ஏன் நன்றி சொல்லவேண்டும் ? அவர் என்ன செய்தார் என்பது பற்றி பேசுகிறார் சாரு நிவேதிதா


சாரு சில உண்மைகளை முன் வைக்கிறார் அவரது மென்மையான ஆனாலும் அழுத்தமான பதிவுகளை நாம் குறிப்பில் கொள்ளலாம். இதில் அவர் சொல்வதை எளிதாக நம் மேற்கோள் காட்ட இயலும்.

ஹிட்லர் - பாசிசம் - மேட்டுக்குடி - தமிழ் நாடு




Thursday, 27 September 2018

உங்கள் காது பேசுகிறேன்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்!
ஒரு சிறுவனுக்கு காது சரியாகக் கேட்பதில் பிரச்னை இருந்ததால், காது கேட்கும் கருவி ஒன்றை பொருத்தினார்கள். ஆனால் சில நாட்களிலேயே அதைப் பயன்படுத்த மறுத்து விட்டான். ஏன் தெரியுமா? அதிகச் சத்தமாகக் கேட்கிறதாம்! அதற்கு மெலிதாகக் கேட்பதே பரவாயில்லை என்று சொல்லிவிட்டான்.
இன்னொரு தகவல், இன்னும் ஆச்சரியமானது.
சிறு வயது முதல் காதுகேட்காத ஒரு பெண், பல வருடங்கள் கழித்து கனடாவில் அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார். தலைக்குள் ஒரு கருவியை வைக்கிறார்கள். இப்போது அவருக்கும் அதே போல பிரச்னை!
என்னவென்றால், நுண்ணிய ஓசைகளும் பெரிதாகக் கேட்கின்றனவாம். ஒரு பேப்பரில் பேனாவால் எழுதினால், எழுதும் அந்த ஓசைகூட கேட்கிறதாம். பத்தாவது மாடியில் இருக்கும்போது, கீழே செல்லும் வண்டிகளின் சப்தம் கேட்கிறதாம்.
அந்தச் சிறுவனாவது கருவியைக் கழட்டிப் போட்டு விட்டான். இப்பெண்ணுக்கோ தலைக்குள் கருவி. எத்தனைமுறை அறுவை சிகிச்சை செய்ய முடியும்? விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும், எத்தனையெத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும், இறைவனின் படைப்பின் துல்லியத்தை விஞ்ஞானத்தால் அடையவே முடியாது!
.
நபியே! நீர் கூறுவீராக : 'இறைவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும் பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; எனினும், மிகவும் சொற்பமாகவே நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துகிறீர்கள். [67 : 23]

உங்கள் காது பேசுகிறேன்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

பௌதீக ரீதியாக எங்களை நீங்கள் பேணி நடப்பதுபோலவே, ஆன்மிக ரீதியாகவும் பேணி நடக்க வேண்டும். இதோ, அதற்கு சில வழிகாட்டல்கள் :
🔈குறையப்பேசி நிறையக்கேளுங்கள்!
பேச ஒரு வாய். ஆனால், கேட்க இரண்டு காதுகள். ஏன் தெரியுமா? வழவழவென அதிகமாகப் பேசுவதைக் குறைத்துக்கொண்டு நல்லவற்றை நிறைய நீங்கள் கேட்கவேண்டும். இனிமையான குர்ஆன் கிராஅத், உள்ளத்தைப் பண்படுத்தும் பயான், சிந்தனையைத் தூண்டும் கருத்தாழமிக்க பாடல்கள் என நல்ல அம்சங்களை நிறைய கேட்க வேண்டும்.
🔈பிறர் பேசுவதையும் செவிமடுங்கள்!
சிலர் பேசினால், பேசிக்கொண்டே இருப்பார்கள். பிறரைப் பேச விடமாட்டார்கள். செவி சாய்த்து கேட்கவும் மாட்டார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்களிடம் யாராவது ஒருவர் பேசினால், அவர் தான் சொல்ல வந்ததைப் பேசி முடிக்கும்வரை இடையில் குறுக்கிட்டுப் பேசமாட்டார்கள். செவி சாய்த்து அவர் சொல்லவந்ததைக் கேட்பார்கள்.
🔈நல்லவற்றையே கேளுங்கள்!
கண்களால் நல்லவற்றை, அனுமதிக்கப்
பட்டவற்றைப் பார்க்கவேண்டும் என்பது போலவே, நல்லவற்றை அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே நீங்கள் கேட்கவேண்டும்.
தவறான செய்திகளைக் கேட்டு லயிக்க, பொய், அவதூறு போன்றவற்றை கேட்டு பொழுதுபோக்க எங்களை ஒருவன் பயன்படுத்தினால், அவனது காதுகள் உண்மையான ஒரு முஸ்லிமின் செவிப்புலன்கள் அல்ல.
ஆபாசமான வார்த்தைகளை, கொஞ்சல்களைக்
இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் பாடல்களைக் கேட்டு இரசிக்க எங்களை ஒருவன் பயன்படுத்தி னால், அவனது காதுகளும் ஓர் உண்மையான முஸ்லிமின் செவிப்புலன்கள் அல்ல.
செவிப்புலன்களாகிய நாங்கள் இறைவனின் இனிய அருட்கொடைகள். அவற்றைப் பாவமான வற்றுக்கு பயன்படுத்தக் கூடாது. இறையருட்
கொடைக்கு நன்றி செலுத்துவதாக இருந்தால், அவற்றை இறைவனுக்கு அடிபணியும் அம்சத்தில்தான் பயன்படுத்தவேண்டும்.
யூதர்களை நிந்தனை செய்து திருக்குர்ஆன், 'அவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்பவர்கள்; விலக்கப்பட்டதையே அதிகமாக உண்பவர்கள்' [05 : 42] என்று குறிப்பிடும்.
🔈ஒட்டுக் கேட்காதீர்கள்!
'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில், அல்லது தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில், அவர்களது உரையாடலை ஒட்டுக் கேட்கிறவரது காதில், மறுமைநாளில் ஈயத்தைக் காய்ச்சி உருக்கி ஊற்றப்படும்.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். [புகாரி 7042]
🔈ஆபாசப் பேச்சுகளைக் கேட்காதீர்கள்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு அவனது விதியில் எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனாகவே உள்ளான்.
கண்கள் செய்யும் விபசாரம் தவறானவற்றைப் பார்ப்பது. காதுகள் செய்யும் விபசாரம் ஆபாசப் பேச்சுகளைச் செவியுறுவது. நாவு செய்யும் விபசாரம் ஆபாசப் பேச்சுக்களைப் பேசுவது. கை செய்யும் விபசாரம் அந்நியப் பெண்ணைப் பற்றுவது. கால் செய்யும் விபசாரம் தவறான உறவைத் தேடி அடியெடுத்து வைப்பது.
மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது. [ஸஹீஹ் முஸ்லிம் 5165]
🔈கோள், புறம் கேளாதீர்கள்!
தத்துவஞானி சாக்ரட்டீஸிடம் ஒருவன் வந்து, 'உங்களிடம் ஒரு செய்தி சொல்ல வந்தேன்' என்றான்.
'அவசரப்படாதே! அந்தச் செய்தியை மூன்று சல்லடைகளில் சலித்துப் பார்க்க வேண்டும்!'
'மூன்று சல்லடைகளா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!'
• முதல் சல்லடை : 'நீ சொல்ல வந்த செய்தி உண்மையானதா?
‘அது எனக்குத் தெரியாது. மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவுதான்!'
• இரண்டாவது சல்லடை : 'நீ சொல்ல வந்தது நல்ல செய்தியா?'
‘இல்லை!'
• மூன்றாவது சல்லடை : 'நீ சொல்ல வந்தது மற்றவர்களுக்கு நன்மை தரக்கூடிய செய்தியா?'
‘இல்லை!’
'ஆக, நீ என்னிடம் சொல்லவந்த செய்தி உண்மை யானதல்ல; நல்ல செய்தியும் அல்ல; அதனால் யாருக்கும் நன்மையும் ஏற்படப்போவதில்லை. அப்படித்தானே?'
‘ஆமாம்!’
'நண்பனே! அப்படிப்பட்ட ஒரு செய்தியை நீ சொல்லி, நான் அதைக் கேட்டு ஏன் நமது நேரத்தையும் உழைப்பையும் வீணாக்க வேண்டும்?'
வந்தவன் வாயை மூடிக்கொண்டான்.
- இன்னும் கேட்போம், இன்ஷா அல்லாஹ்!

பார்வை - Mansoor Ali

அறிவியல் "பார்வை" என்பது எப்படிப்பட்டது என்று பார்ப்போமா?
"சூரியன் கிழக்கே உதிக்கிறது! மேற்கே மறைகிறது!"
ஆனால் சூரியன் உதிப்பதும் இல்லை! மறைவதும் இல்லை! அப்படித்தானே?
இதனை அல்லாஹ் எப்படி நமக்குப் புரிய வைக்கிறான் தெரியுமா?
சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் (துல்கர்னைன்) சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; (18:86)
சூரியன் சேற்று நீரில் மறைவதை நாம் பார்க்கலாம். ஆனால் ஒரு காலும் சூரியன் சேற்றில் மறைவதில்லை!
குர் ஆனையும் அறிவியலையும் ஒப்பிட்டுப் பழம்பெருமை பேசி வந்த பேச்சுக்கள் இனி தேவையில்லை என்பதே என் கருத்தும்

அறிவு - Mansoor Ali

இறைவன் தனது தூதர்களுக்கு செய்தியை வழங்கிடும் முறைக்கு 'வஹி' என்று பெயர். ஆங்கிலத்தில் இதனை (Revelation) என்று அழைக்கலாம். தமிழில் அதனை 'வெளிப்படுத்துதல்' என்று மொழி பெயர்க்கலாம். எனினும் மொழி பெயர்ப்புகள் வஹி என்பதன் முழுமையான பொருளைத் தந்திட இயலாது. வஹி என்பது முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது. இறைவன் தான் தெரிவு செய்திடும் மனிதர் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட வானவர் (angel) மூலமாக தனது செய்திகளை மிகச் சரியான சொற்களைக் (Exact words) கொண்டு படித்துக் காட்டி அவர் உள்ளத்தில் அப்படியே பதிய வைக்கும் அசாதாரணமானதொரு நிகழ்ச்சிக்குப் பெயர் தான் வஹி என்பது!

இந்த அனுபவம் இறைத்தூதர்களுக்கு மட்டுமே உரித்தானது. வேறு எவரும் இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இயலாது. எனவே இந்த வஹி எனும் அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்பதை வேறு எவராலும் ஊகித்து அறிந்து கொண்டிட இயலாது!

எனவே வஹி மூலம் பெறப்பட்ட செய்தி - அந்த செய்தியைச் சொல்லிட இறைவனே தேர்ந்தெடுத்த சொற்கள் மூலமாக அப்படியே இறைத்தூதருக்கு வேத வசனங்களாகக் கொண்டு போய் சேர்க்கப்படுவதால் - பெறப்பட்ட அந்த செய்தியை 'இது ஊகம் தான்! இது கற்பனை தான்!' - என்று எண்ணி ஒதுக்கி விட முடியாது.

ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம். ஒருவர் தனக்கு வஹி வருகிறது என்று பொய் சொல்லி விட்டால்? இந்தக் கேள்விக்கு மட்டும் சரியான விடை கிடைத்து விட்டால், ஒருவர் உண்மையான இறைத்தூதர் தான் என நிருவப்பட்டு விட்டால் - இறைவனிடமிருந்து அவருக்கும் அவர் மூலமாக நம்மிடமும் வந்து சேர்க்கப்படும் 'இறைவனின் செய்தி'யின் யதார்த்த நிலை என்ன?

இறைவனோ எல்லாம் அறிந்தவன். இறைவனின் தூதரோ உண்மையானவர். எனவே வஹி மூலமாக நம்மிடம் வந்து சேர்கின்ற செய்தி - சத்தியமானது! சந்தேகத்துக்கு இடம் இல்லாதது! அந்தச் செய்தி குறித்து - அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லாமலும் இருக்கலாம் என்று பொத்தம் பொதுவாகக் கருத்துச் சொல்லிட இயலாது! - வஹி மூலம் பெறப்படும் ஒவ்வொரு சொல்லும் இறைவனுடையவை!
ஒவ்வொரு கருத்தும் இறைவனிடமிருந்து பெறப்பட்டவை! ஆதாரப் பூர்வமானவை! எனவே அறிவு என்றால் அது தான் அறிவு! சந்தேகத்துக்கு இடம் இல்லாத அறிவு! கோணல் இல்லாத அறிவு! அது பொய் என்று ஒதுக்கித் தள்ளி விட இயலாத அறிவு! - வஹியின் கருத்துக்கு மாற்றமான எதனையும் உண்மை என்று நிரூபித்திட இயலாத அளவுக்கு உறுதி வாய்ந்த அறிவு!

தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். (18:1)

'வாடிக்கையாளர்கள் - Mansoor Ali

பொதுவாக மனிதன் - தன்னிடம் இருக்கின்ற ஐந்து புலன்களின் வழியாகத் தான் அறிவைப் பெறுகின்றான். வளர்த்துக் கொள்கின்றான். புலன்கள் வழியே நாம் பெறுகின்ற அந்த 'அறிவியல் அறிவு' எந்த அளவுக்கு உண்மையானவை? நம்பத் தகுந்தவை ?
உண்மையில் நாம் நமது கண்களால் ஒன்றைப் பார்த்து அறிந்து கொள்வது எப்படி தெரியுமா? நம் கண்களின் எதிரே உள்ள ஒரு பொருளின் பிம்பம் நமது விழித் திரையில் (Retina) தலை கீழாக விழுகிறது. அந்த பிம்பம் குறித்து மூளைக்குத் தகவல் அனுப்பப் படுகிறது. மூளை ஒன்றைப் புரிந்து கொள்கிறது. மூளை புரிந்து கொண்டது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். கண்களால் நாம் பெறும் அறிவின் நம்பகத் தன்மை இவ்வளவு தான்! மற்ற புலன்கள் வழி நாம் பெறுகின்ற தகவல்களின் நிலையும் அதே தான்!
அதனால் தான் சொன்னார்களோ - 'கண்ணால் பார்ப்பதுவும் பொய் - காதால் கேட்பதுவும் பொய்' - என்று! விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்களே ஆய்வுக் கூடங்களில். அந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை தானா? அவற்றில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை என்றால் - அதுவும் கேள்விக்குறி தான்! பின் ஏன் நேற்று சொன்ன ஒரு அறிவியல் கறுத்தை இன்று மாற்றிக் கொள்கிறார்கள்?
ஒளி நேர்கோட்டில் பரவுகிறது என்ற கருத்து இன்று எங்கே போயிற்று?
அணுவைப் பிளக்க முடியாது என்று அன்று டால்ட்டன் சொன்ன கோட்பாடு இன்று என்ன ஆனது?
அப்படியிருக்கும் போது இன்று சொல்லப்படுகின்ற அறிவியல் கோட்பாடுகளின் நாளைய கதி என்ன? அவை எதிர்காலத்தில் மாற்றப் படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? மாற்றங்களுக்கு ஆளாகும் அத்துனை அறிவியல் கோட்பாடுகளையும் வெறும் ஊகங்கள் என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது?
விஞ்ஞானக் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்து பாப்பர் என்ற விஞ்ஞானி என்ன கூறுகிறார் தெடியுமா?
"Theories are often bold conjectures!" - அதாவது அறிவியல் கோட்பாடுகள் பெரும்பாலும் துணிச்சலான கற்பனைகளே!
அறிவியல் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்துக் கவலைப் படாமல் - இயன்ற அளவுக்கு அதிகம் அதிகமான கோட்பாடுகளை அறிவியல் உலகுக்கு வழங்கிட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் டாவிஸ் என்ற விஞ்ஞானி.
"The world of science should be like a classical free enterprise market place with theories as commodities. When there is a demand for theories (of any sort) it is to the consumer's advantage to allow the largest possible supply...."
'விஞ்ஞான உலகம் என்பது சுதந்திரமான ஒரு வியாபரச் சந்தையைப் போல! இந்த சந்தையில் விற்கப் படும் பொருள்: விஞ்ஞானக் கோட்பாடுகள் தாம். ஒரு குறிப்பிட்ட வகைக் கோட்பாடுகளுக்கு 'கிராக்கி' ஏற்படும்போது, சந்தைக்கு - எந்த அளவுக்கு இயலுமோ - அந்த அளவுக்கு வகை வகையான கோட்பாடுகளை அனுமதிப்பது - அவைகளைப் பயன் படுத்துபவர்களுக்கு வசதி தானே!
நாம் கேட்பது என்னவென்றால் - அறிவியல் கோட்பாடுகளெல்லாம் 'வியாபாரப் பொருட்களா'? கிராக்கி இருக்கிறது என்றால் பொய்யான கோட்பாடுகளையும் 'விற்பனைக்குக் கொண்டு வந்து விடுவீர்களா?
ஆம்! இது தான் இன்றைய அறிவியல் உலகம்! இங்கே உண்மையும் பொய்யும் கலந்தே விற்பனை செய்யப் படுகின்றன! விழித்துக் கொள்ள வேண்டியது - நம்மைப் போன்ற 'வாடிக்கையாளர்கள்' தான்!

Thursday, 20 September 2018

உங்கள் காது பேசுகிறேன்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

நாங்களும் பிற உயிரினங்களும்
முதுகெலும்பு உள்ள எல்லா விலங்குகளுக்கும் கேட்கும் தன்மை உண்டு. ஆனால், மீன்களுக்கு உங்களைப்போல வெளிச்செவி கிடையாது. உடல் முழுவதுமே உணர் செல்கள் உள்ளன.
இவற்றின் மூலம் அவை நீரில் ஏற்படும் அதிர்வலைகளையும் எதிரில் உள்ள பொருள்களையும் உணர்ந்து கொள்ளமுடிகிறது. தவளை, ஊர்வன, பறப்பன போன்றவற்றுக்கும் வெளிச்செவி இல்லை. நடுச்செவியும் உட்செவியும் உண்டு.
பெரும்பாலான பூச்சிகளின் செவிகள் உணர் கொம்புகளின் நுனியில் உள்ளன. கொசுக்களுக்கு அவற்றின் உணர்கொம்பிலும் ஈக்களுக்கு அவற்றின் கால்களிலும் பட்டாம்பூச்சி மற்றும் மூட்டைப்பூச்சிகளுக்கு மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளிலும் செவிப்புலன் உள்ளது.
பறக்கும் பாலூட்டிகளான வௌவால்கள் நீங்கள் கேட்க முடியாத ஒலிகளையும் கேட்கும் திறன் கொண்ட செவிகளைப் பெற்றுள்ளன. பொருள் களின் மீது மோதி எதிர்வரும் ஒலியலைகளை வைத்தே எதிரிலுள்ள பொருள்களின் தன்மையை வௌவால்கள் அறிந்துகொள்கின்றன.
இதேபோல, நீர்வாழ் பாலூட்டிகளான திமிங்கலம் மற்றும் டால்பின்களும் நீரில் ஏற்படும் ஒலியலை களை வைத்து, பல்வேறு பொருள்களை அறிந்து கொள்கின்றன.
● பௌதீக ரீதியாக பேணவேண்டியவை :
கண்கள் பாதுகாப்பை விட எங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது, அவசியமானதும் கூட. அந்த வகையில் எங்களைப் பௌதீக ரீதியாக பேண வேண்டிய சில அம்சங்களை இப்போது பார்ப்போம்.
🔈எண்ணெய் ஊற்றாதீர்கள்!
சிலர் குளிக்கும் போது எங்களுக்குள் எண்ணெய் விட்டுக் கொள்கின்றனர்.பாம்புப் புற்றுக்குள் பால் ஊற்றுவதால் பாம்பு பால் குடிப்பதில்லை. அது போலத்தான் எங்களுக்குள் ஊற்றும் எண்ணெய் நிலையும். இதனால் ஒரு பயனுமில்லை. மாறாக, அதன்மூலம் எங்களுக்கு பாதிப்புதான் ஏற்படும். எங்களுக்குள் நீர் புகுந்தாலோ, வலித்தாலோ உடனே மருத்துவரை அணுகுங்கள். நீங்களே மருத்துவராகி மருத்துவம்செய்து எங்களைச் சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்.
🔈குச்சியால் குடையாதீர்கள்!
எங்களில் அழுக்கு உள்ளது என்று ஹேர்பின், குச்சி, கம்பி, கோழி றகு என கையில் அகப்பட்டதை வைத்து தயவுசெய்து சுத்தம்செய்யும் வேலையில் இறங்கிவிடாதீர்கள். பஞ்சு சுற்றிய குச்சிகளைக் கூட (Buds) பயன்படுத்தக்கூடாது.
சாலையோரங்களில் எங்களைச் சுத்தம்செய்வதே ஒரு தொழிலாக நடக்கிறது. அடுத்தவர்கள் குடைந்துவிட்டால் உங்களுக்குச் சுகமாக இருக்கும். ஆனால், அது எங்களுக்கு நல்லதல்ல. இப்படி நீங்கள் செய்வதால் செவிப்பறை கிழிந்துவிடும். லேசாக கிழிந்தால்கூட அப்புறம் நாங்கள் பேசுறது மட்டுமல்ல; யார் பேசுவதையும் உங்களால் கேட்கமுடியாது.
நாங்கள் மென்மையாக இருக்கிறோம் என்று இயற்கையே எங்களை எவ்வளவோ பாதுகாப்பில் வைத்திருக்கிறது. அதிகப்படியான மெழுகு இருந்தால், நாங்களே வெளியேற்றிவிடுவோம். எனவே, தயவுசெய்து நீங்கள் சுத்தம் செய்ய வேண்டாம். குளிக்கும்போது எங்களுக்குள் பஞ்சு வைத்துவிட்டுக் குளித்தால் தண்ணீர் உள்ளே சென்று தேங்கி, கிருமிகள் உருவாவதைத் தடுத்து விடலாம்.
🔈அதிகச் சத்தம் போடாதீர்கள்!
சத்தம் எங்களுக்குப் பிடிக்காது. உங்கள் நண்பருடன் ஓர் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் அவர் பேசும் சத்தம் முப்பது டெசிபல். இதுதான் ரொம்பப் பிடித்தமான அளவு. எப்போதும் இரைச்சலில் இருந்தால், அதிர வைக்கும் இசையைக் கேட்டால் எங்களது கேட்கும் திறன் பாதிக்கும்.
ஜப்பானியர் அதிகஉழைப்பு,வேலைசெய்வார்கள். ஓய்வுக்காக Silence Room அமைத்துக்கொள்வார் கள். அவர்கள் சைலன்ஸ் ரூம் அமைத்துக் கொள்கிற நிலையில், நாம் ரூமில் Silence please என்று எழுதி அறிவிப்புப்பலகை மாற்றிவைத்துக் கொண்டிருக்கிறோம்.
140 டெசிபலுக்கு மேலுள்ள ஒலியை நீங்கள் தொடர்ந்து கேட்கநேர்ந்தால், நாங்கள் கேட்கும் தன்மையை இழப்பது உறுதி. அதிகச் சத்தத்தில் பணிசெய்பவர்கள் எங்களுக்குள் பஞ்சை வைத்துக்கொள்வது நல்லது.
அன்று எங்களுக்கு அதிகபட்ச சவாலே இடியோசைதான். ஆனால், தற்போது இசை, பேச்சு என்று எதை எடுத்தாலும் சத்தச் சவால்கள்தான். முடிந்தவரை அதிகச்சத்தத்தை எங்களுக்குத் தராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
🔈கிருமிகளை அண்டவிடாதீர்கள்!
எங்களது நடுப்பகுதியில் இருந்து தொண்டைக்கு யூஸ்டசியன் (Eustachian) என்ற குழாய் செல்கிறது. இதுதான் எங்களது எதிரி. நிறைய கிருமிகள் உள்ள பகுதி. இங்கிருந்து எளிதாக எங்களது நடுப்பகுதிக்கு அவை வந்து விடுகின்றன. எனவே, மூக்கில் சளி இருந்தால், கைகளால் அதைத் துடைக்காதீர்கள். கைகளைக் கழுவாமல் எங்களின் மேல் வைத்தால், எங்களையும் கிருமிகள் தொற்றிவிடும்.
🔈மருத்துவரைச் சந்திக்க மறக்காதீர்கள்!
வருடம் ஒருமுறை கண்மருத்துவரிடம் சென்று கண்ணைப் பரிசோதிப்பது போல, எங்களது சிறப்பு மருத்துவரிடமும் சென்று எங்கள் கேட்கும் திறன் குறித்தும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
- இன்னும் கேட்போம், இன்ஷா அல்லாஹ்!

உங்கள் காது பேசுகிறேன்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ


உங்களது தலைக்கு இருபுறமும் தசைகளால் ஆன சின்னதாக இரண்டு ஒலிபெருக்கிகள் இருக்கின்றனவே, அவைதான் காதுகளாகிய நாங்கள். பிறந்தவுடனேயே நாங்கள் எங்கள் பணியைச் செய்ய ஆரம்பிக்கிறோம் என்றாலும், வயது ஆக ஆக எங்களது கேட்கும் திறன் குறைந்து கொண்டே வரும்.
உள்காது வெளிக்காது என இருவகையாக நாங்கள் இருக்கிறோம். தலையின் இருபுற பக்கவாட்டுகளிலும் நீட்டிக் கொண்டிருக்கும் வெளிக்காது ஒரு சிறு பகுதிதான். வெளியிலுள்ள ஒலிகளைக் குவித்து செவிப்பாதைக்குள் செலுத்துவதும் ஒலிவரும் திசையைக் கண்டறிவதும்தான் எங்களது வெளிப்புறப் பகுதியின் பணி.
 எதையெல்லாம் நாங்கள் கேட்கிறோம்?
'இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று சொல்லுவதில்லை' என்ற நாகூர் ஹனீஃபாவின் இன்னிசை, கொய் கொய்ங் என்ற கொசுவின் ரீங்காரம், அமைதியான நள்ளிரவில் டிக் டிக் என்ற கடிகார ஓசை என அனைத்தையும் கேட்போம் நாங்கள். நீங்கள் சேட்டைகள் பண்ணுகிறபோது உங்கள் தந்தை மற்றும் ஆசிரியர்கள் கையில் அகப்பட்டுக்கொண்டு ஆவென கத்துவதும் நாங்களே.
 நீங்கள் பேசுவதையும் கேட்கிறோம்!
வெளியில் இருந்து வரும் ஒலியை மாத்திரம் அல்ல, நீங்கள் பேசுவதையும் நாங்கள் கேட்போம். பேசும்போது உங்கள் வாயிலிருந்து வரும் ஒலியின் ஒரு பகுதி, நேரடியாக எங்களது டிரம்மைத் தட்டுகிறது. இன்னொரு பகுதி, கன்னத்தில் உள்ள எலும்புகள் வழியே உள்காதிற்குச் செல்கிறது. இப்படித்தான் நீங்கள் பேசுவது உங்களுக்கே கேட்கிறது.
 நாங்கள் எப்படிக் கேட்கிறோம்?
ஒலியலைகள் வெளிக்காதினைத் தொட்டவுடன் குகைபோன்ற செவிப்பாதை வழியே அவை நுழைகின்றன. அங்குள்ள செவிப்பறையில் மோதி, அதனுடன் தொடர்புடைய மூன்று நடுச்செவி எலும்புகளின் ஊடாக பயணித்து, பின்னர் உட்செவியில் உள்ள திரவம் மற்றும் அங்குள்ள உணர்செல்களைத் தாக்கி, அதன்பின் அது நரம்புச் செய்திகளாக மாற்றப்பட்டு, மூளையில் உள்ள கேட்கும் பகுதியை அடைகிறது.
இவ்வாறு நீண்ட பயணம் செய்தபிறகுதான் உங்களால் எந்த ஒரு ஒலியையும் கேட்க முடிகிறது. இதிலே ஆச்சரியப்படத்தக்க ஓர் அம்சம் என்னவென்றால், மேலே சொன்ன இந்தப் பயணம் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நடைபெறுவதுதான். சுப்ஹானல்லாஹ்!
 இறைவனின் அருட்கொடைகள்!
சத்தம் இல்லாமல் உங்களால் எவ்வளவு நேரம் இருக்கமுடியும்? ஐந்து நிமிடம்.அல்லது பத்து நிமிடம்.அதையும் தாண்டிப்போனால்,
அரைமணிநேரம்? அதற்குமேல் என்றால், உங்களையும் அறியாமல் ஒருவித பயம் உங்களைத் தொற்றிக்கொள்ளும்.
உங்களைச்சுற்றி மனிதர்களது பேச்சொலி, பறவைகளது குரல், வாகனஇரைச்சல் என்று கேட்டுக்கொண்டே இருந்தால்தான் நீங்கள் இயல்பாக இருக்கமுடியும். அந்த வகையில் சத்தமில்லாத உலகம், பார்வையிழப்பை விட மிகமோசமானது. இதைதுதான், செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று திருக்குறள் குறிப்பிடும்.
 இறைவனின் படைப்பாற்றல்!
ஒரு பெரிய நகரத்துக்கு தொலைபேசி வசதி செய்வதற்கு எவ்வளவு மின்இணைப்புகள் தேவைப்படுமோ, அவ்வளவு மின்இணைப்புகள் எங்களிடம் உள்ளன. ஒரு குறுகலான இடத்தில் இவ்வளவு பெரிய ஒலி உற்பத்தித் தொழிற்
சாலையை வேறு எங்கும் நீங்கள் பார்க்க முடியாது.
 ஓர் அதிசயக்குழாய்!
வெளிக்காதின் உட்புறம் ஆரம்பித்து, மூன்று செ.மீ நீளம் உள்ள குழாய் உள்ளே செல்கிறது. இந்தக் குழாய் மிகவும் முக்கியமானது. இதில் மெழுகு போன்ற திரவத்தைச் சுரக்கும் நான்காயிரம் சுரப்பிகளும் மெல்லிய முடியும் உள்ளன. இத்தனை சுரப்பிகளா என்று நீங்கள் சந்தேகப்
பட்டால், ஒரு நுண்ணோக்கியை வைத்து எங்களுக்குள் சற்று உற்றுப்பாருங்கள். உண்மை விளங்கும்.
 எதற்கு அந்தக் குழாய்?
காற்றின்மூலம் வரும் தூசிகள், வழி தவறி உள்ளே வந்துவிடும் பூச்சிகள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுகள், பொது நீச்சல் குளத்தில் குளிக்கும்போது அழுக்குநீர் மூலம் ஏற்படும் அபாயம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு என பலபணிகளை மேற்கொள்வது இந்தக் குழாய்தான். சுத்தப்படுத்தும் தேவை அதிகம் இருந்தால், இன்னும் கொஞ்சம் மெழுகுச் சுரப்பை அதிகரிப்போம்.
 கேட்க மட்டும் அல்ல நாங்கள்!
ஒலியைக் கேட்கச்செய்வது மட்டுமே எங்கள் பணி அல்ல. அதைவிட முக்கியமான பணியை உட்
செவியின் மறுபக்கத்தில் உள்ள மூன்று அரை வட்டக் குங்கிலியங்கள் எனப்படும் குழாய்கள் செய்கின்றன. உங்கள் உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவுவது இவைதான். இவை இல்லாவிட்டால் நீங்கள் தள்ளாடித்தான் நடக்கவேண்டியதிருக்கும்.
நீங்கள் தட்டாமாலை ஆடி அமரும்போது உலகமே உங்களைச் சுற்றிவருவதுபோல இருப்பது ஏன் தெரியுமா? நீங்கள் வேகமாகச் சுற்றும்போது காதுக்குள் உள்ள குங்கிலியங்களில் உள்ள திரவமும் சேர்ந்து சுற்றுகிறது.
நீங்கள் சுற்றுவதை நிறுத்தி உட்கார்ந்ததும் உடல் நின்றுவிட்டாலும் திரவம் சமநிலைக்கு வராமல் தத்தளித்துக்கொண்டிருக்கும். அது சமநிலை அடைய சிறிதுநேரம் ஆகும்வரை உங்களுக்குத் தலை சுற்றுவதுபோன்ற உணர்வு ஏற்படும்.
இன்னும் கேட்போம், இன்ஷாஅல்லாஹ்!

Sunday, 9 September 2018

கிரா அத் - சுரைம்

கிரா அத் - 

https://www.youtube.com/watch?v=PLMUkLG_sas

23. ஸூரத்துல் முஃமினூன்(விசுவாசிகள்)
மக்கீ, வசனங்கள்: 118

Thursday, 6 September 2018

புதிய எதிரியை உருவாக்கும் பாஜக - சேகர் குப்தா,

பயனுள்ள முட்டாள்கள் (யூஸ்புல் இடியட்ஸ்) என்ற வார்த்தையை யார் கண்டுபிடித்தார்களோ தெரியாது... ஆனால், இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக இந்துத்வாவை ஆதரிப்பவர்கள், இடதுசாரி சிந்தையாளர்களை, நகரங்களில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர்களை ‘பயனுள்ள முட்டாள்கள்' என்றுதான் அழைக்கிறார்கள். இப்போது அவர்களுக்குப் பெயர் ‘நகர்ப்புற நக்சல்கள்'. இந்த நகர்ப்புற நக்சல்களைத்தான் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் பயனுள்ள முட்டாள்களாக்கப் பார்க்கிறார்கள்.

பாஜக வாக்குறுதி அளித்தபடி வளர்ச்சி இல்லை என்பது அக்கட்சிக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் யாரையாவது காட்டி பயமுறுத்தி, ஓட்டு வாங்க நினைக்கிறது. தேசத் துரோகிகளாக யாரையாவது காட்டி பயமுறுத்தி னால், பாஜக அரசின் தோல்விகளை மறந்து விட்டு, தேச ஒற்றுமைக்காக தனக்கு மக்கள் ஓட்டுப் போடுவார்கள் என பாஜக நினைக்கிறது.

முஸ்லிம்கள் நாட்டின் விரோதிகள் என்ற பாஜகவின் கோஷம் எடுபடவில்லை. முஸ்லிம் என்றாலே பாகிஸ்தான் ஆதரவாளர்கள்.. காஷ்மீர் பிரிவினைவாதிகள்.. தீவிரவாதிகள்.. லஷ்கர் இ தொய்பா, அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் என தொடர்ந்து பிரச்சாரம் செய்தும் பயனில்லை. ஏனெனில் இங்குள்ள முஸ்லிம்கள் அமைதியாக இருக்கிறார்கள். அடுத்ததாக, முஸ்லிம்களைப் பார்த்து இந்துக்கள் யாரும் பயப்படுவதில்லை. மூன்றாவதாக, பதற்றத்தைத் தொடர்ந்து வைத்திருக்க, எல்லையில் துல்லிய தாக்குதலைப் போன்று தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கும் சீனா வேட்டுவைத்து விட்டது. பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சும்மா விட மாட்டோம் எனக் கூறிவிட்டது.

இந்தியாவைப் பாதுகாக்க பாஜக, புதிய எதிரியை உருவாக்க வேண்டும். மாவோயிஸ்ட்கள் அதற்குப் பொருந்தி வருவார்கள். அவர்களை இஸ்லாமியருடன் இணைத்துவிட்டால் இன்னும் சரியாக இருக்கும் என நினைக்கிறார்கள். இப்படி அத்தனை தீய சக்திகளும் இந்தியாவை அழிக்க நினைக்கும்போது, வேலைவாய்ப்பு பற்றிப் பேச முடியுமா? பேசினால், உங்களுக்கு தேசபக்தியே இல்லையா என்பார்களே...


கடந்த 1980-களில் ராஜீவ் காந்தி வீழ்ச்சிக்குப் பிறகு, சாதியால் பிரிந்து கிடப்பவர்களை மத ரீதியாக பாஜக, ஆர்எஸ்எஸ்ஸால் இணைக்க முடியுமா என்ற கேள்வி, அடுத்து நாட்டை யார் ஆள்வது என்பதை முடிவு செய்தது. அயோத்தி மூலம் அத்வானி அதை சாதித்தார். ஆனால், 2004-ல் அது நீர்த்துப் போனது. அப்போது நரேந்திர மோடி பயன்பட்டார். அவருக்கு இருந்த நற்பெயரும் கவர்ச்சியும் இந்து வாக்காளர்களைக் கவர்ந்தது. அதோடு, வலுவான அரசு, வளர்ச்சி ஆகிய இரண்டு வாக்குறுதிகளும் சேர்ந்து வெற்றியைத் தேடித் தந்தன. ஆனால், இப்போது இருக்கும் நிலையில் இதையே மீண்டும் சொல்லி வெற்றிபெற முடியாது என்பது மோடிக்கும் தெரியும்.

அதனால்தான் புதிய எதிரியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் களையும் முஸ்லிம்களையும் இணைத்தால் அது கிடைத்துவிடும். 2019 தேர்தலுக்குள் நாடே பயங்கர ஆபத்தில் இருக்கிறது என கதை கட்டி விடலாம் என நினைக்கிறது பாஜக.

கொஞ்சம் பின்னோக்கி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குப் போவோம். இடதுசாரிகள் கொண்டாடும் மிகச் சிறந்த உருது கவிஞரான அகா ஷாகித் அலியின் நினைவு தின கொண்டாட்டம் அங்கு நடக்க இருந்தது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் சுதந்திரப் போராட்டம் குறித்து விவாதிக்கவும் ஆதரவு தெரிவிக்கவும் உள்ளதாக முதலில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அடுத்ததாக, ‘கடவுள் விரும்பினால் இந்தியா துண்டு துண்டாக உடையும்' என்ற கோஷத்துடன் கூடிய வீடியோ வெளியானது. இரண்டு கம்யூனிஸ்ட் ஆதரவு மாணவர்கள் மீதும் ஒரு முஸ்லிம் மாணவர் மீதும் தேசத் துரோக வழக்கு பாய்ந்தது.

அடுத்தடுத்து பல வீடியோக்கள் வெளியாயின. ‘காஷ்மீரில் இந்தியா சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்பதை இந்த உலகமே அறியும்..' என ஜேஎன்யூ பல்கலையின் ஒரு பேராசிரியர் பேச, சுற்றியிருக்கும் மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்யும் வீடியோ வெளியானது. இதையடுத்து, இடதுசாரி புரட்சிகர சிந்தனையாளர்கள், தேச விரோத முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவைத் துண்டாக்க சதி செய்கிறார்கள் என்ற புதுக் கதையைப் பரப்பினார்கள். இதன்மூலம் வில்லன்கள் கூடும் இடமாக ஜேஎன்யூ வளாகம் சித்தரிக்கப்பட்டது.

காஷ்மீர் பிரிவினைவாதத்தைப் பேசி இடதுசாரி சிந்தனையாளர்கள் பாதி வேலையைத்தான் செய்தார்கள். மீதி வேலையை, மோடிக்கும் அமித் ஷாவுக்கும் ஆதரவான டிவி சேனல்கள் பார்த்துவிட்டன. நாடே ஆபத்தில் இருப்பதாகப் புரளி கிளம்பியது. இந்தியா ஒன்றும் பீங்கான் பாத்திரமல்ல. கோஷம் போட்டும், போஸ்டர் ஒட்டியும், எதிர்ப்புக் கவிதை எழுதியும் இந்தியாவை உடைக்க முடியாது. ஆனால், வாக்காளர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். எந்தக் கட்சியும் சாராத 2 சதவீத நடுநிலை வாக்காளர்கள் இந்த வாதத்தில் மயங்கினாலே, பாஜக நினைப்பது நடந்துவிடும்.

காஷ்மீரில் பொது வாக்கெடுப்புக்கும் நக்சல்களுக்கும் ஆதரவு அளிக்கும் இடதுசாரி சிந்தனையாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதும் அவசியம்தான். ஆனால், அவர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். கொல்கிறார்கள், மடிகிறார்கள். அமெரிக்கா சிறைத் தண்டனை விதித்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஐஎஸ்ஐ தீவிரவாதி, குலாம் நபி பாயின் விருந்தில் இடதுசாரி சிந்தனையாளர்கள் பங்கேற்கிறார்கள். அவரை காஷ்மீர் தேச பக்தன் எனப் பாராட்டுகிறார்கள். இதனால்தான் அரசும் அத்தனை காஷ்மீரியையும் தேசத் துரோகியாகப் பார்க்கிறது. 20 ஜெலட்டின் குச்சிகளாலும் 5 ஃபியூஸ் வயர்களாலும் புரட்சியைக் கொண்டு வந்துவிட முடியுமா?

சோவியத் யூனியனால் வீழ்த்த முடியாத, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை புரட்சிகர முஸ்லிம் களால் வீழ்த்த முடியும் என உலகம் முழுவதும் இடதுசாரித் தலைவர்கள் நம்புகிறார்கள். இந்தியா விலும் அதேபோல் நடக்கும் என நினைக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஆதரவுக் குரல் கொடுத்து வரும் காஷ்மீரிகளும் பஸ்தர் பழங்குடியின மக்களும் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் அநியாய மாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஆயுதம் எடுத்த அடுத்த நொடி, உங்களை சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை அரசாங்கம் பெற்றுவிடும். இந்தப் போரில் அரசாங்கம் தான் வெல்லும். அரசாங்கம் பலமானது என்பதால் அல்ல, மக்களின் ஆதரவு அதற்குத்தான் இருக்கும் என்பதால். அரசுக்கு எதிராக ஏன் இவர்கள் போராடுகிறார்கள் என்ற காரணத்தை அறிந்தவர்கள் மக்களில் ஒரு சிலர்தான். இதற்கிடையில் நீதிமன்றக் கண்டனம், அலைக்கழிப்பு ஆரம்பமாகும். சட்டரீதியாக, இந்த விஷயத்தில் மோடி அரசு கண்டிப்பாகத் தோற்றுத்தான் போகும். அதைப்பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் நோக்கம் அதுவல்ல.

இடதுசாரி சிந்தனையாளர்களின் புரட்சிப் போராட்டங்களால் யார் பயனடைவார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். மோடியோ அல்லது அவர் கட்சியினரோ உங்களுக்கு நன்றி சொல்லி பாராட்டி கடிதம் அனுப்புவார்கள். அவர்களைப் பொறுத்தவரை நீங்கள் இடதுசாரிகள் அல்ல, ‘பயனுள்ள முட்டாள்கள்'.

சேகர் குப்தா,

‘தி பிரின்ட்’ தலைவர்,

முதன்மை ஆசிரியர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

மதங்களை உணராத மடையர்கள் - நெல்லை கண்ணன்

இம்ரான்கான் இந்திய நல்லுறவை விரும்புவார் என்ற அச்சத்தில் பாஜக வேண்டுமென்றே காஷ்மீருக்கு வழங்கியுள்ள சிறப்பு அந்தஸ்தை நீக்கி வேறுபாடுகளை அதிகமாக்க ஏற்பாடுகளைச் செய்கின்றது

பிரதமர் நேரு வருகின்ற வழியில் ஒரு இளைஞன் அவர் காரை வழி மறித்து சுதந்திரத்தினால் என்ன கிடைத்தது என்றான் உனது பிரதம மந்திரியை மறித்து உன்னால் கேள்வி எழுப்ப இயலுகின்றதே அது தான்

பெருந்தலைவர் காமராசர் வாழ்க்கையிலும் இது போலவே ஒரு சம்பவம் ஒரு இடத்திலே பெருந்தலைவர் காரில் இருந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கின்றார்

ஒரு இளைஞன் தள்ளி இருப்பவன் அவரிடம் ஏதோ வினவுகின்றான். இவர்கள் அவனைச் சத்தமிடுகின்றார்கள் பெருந்தலைவர் அவர்களைக் கடிந்து கொண்டார்

நம்ம ஊருப் பிள்ளை அவன் கேள்வி கேட்டா பதில் சொல்லணும்ண்ணேன் நாந்தான முத மந்திரி அவருக்கும்ன்னார்

இப்ப எதுக்கு இதெல்லாம்ன்னு கேக்கணுக்ன்னு தோணும் அக்காவிற்காகத் தான்

அவங்க அப்பா சொல்ல மாட்டார்

அவங்க சித்தப்பாவும் கோட்டு சூட்டோட அலயுதாரே சொல்ல மாட்டருன்னூ தெரியும்லா


சோபியாவின் தந்தை தலித் என்று குறிப்பிடலாமா என்கின்றனர். அவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை கட்டாயம் போட வேண்டும் நாராயணன்கள் இராகவன்கள் ராஜாக்கள் எல்லாம் சிறுபான்மை அவர்களை அனைவருக்கும் தெரியும் அந்தச் சிறுபான்மையினர் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்ற நிலையும் தெரியும்

கர்நாடகா தோல்வியைக் குறித்து எல்லாரும் பேசாமல் இருக்க வேண்டும் என்பதே இந்த விளையாட்டு



Tuesday, 4 September 2018

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு: டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், நாட்டின் பொருளாதார பிரச்சினை குறித்த அச்சம் ஆகியவற்றால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 71.58 காசுகளாக  இன்று வீழ்ச்சி அடைந்தது.
சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, நேற்றைய டாலருக்கு எதிரான மதிப்பான ரூ.71.21 காசுகளுடன் ஆரம்பமானது. ஆனால், வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு உயர்ந்து ரூ.71.09 காசுகளுக்கு வந்தது. ஆனால், நண்பகலுக்குப் பின் மீண்டும் ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு வர்த்தகம் முடியும் போது நேற்றைய மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக 37 காசுகள் சரிந்து ரூ.71.58 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது.
டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 5-வது நாளாகச் சரிந்து வருகிறது. அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் விண்ணை முட்டும் அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.41, டீசல் விலை ரூ.75.39. காசுகளாக அதிகரித்தது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, சீனா அமெரிக்கா,கனடா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்தத்கப்போர குறித்த அச்சம், அர்ஜென்டினா, துருக்கி வர்த்தக சூழல் ஆகிய காரணங்களால் டாலர் மதிப்பு உயர்ந்து வந்தது.
அதுமட்டுமல்லாமல், உள்நாட்டில் வேலையின்மை, விலை வாசி உயர்வு, நடப்பு கணக்குப் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை, உள்நாட்டுப் பொருளாதார சிக்கல்கள் ஆகியவற்றாலும் ரூபாயின் மதிப்பு உள்நாட்டிலேயே அதிக நெருக்கடிக்கு ஆளாகி வந்தது. இந்தச் சூழலில் இன்று பிரண்ட் கச்சா எண்ணெய் இன்று பேரல் ஒன்று 79.26 டாலர்களாக ஆக உயர்ந்தது, இதனால், அடுத்துவரும் நாட்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குச் சாதகமான வாய்ப்புகள் இருப்பதையே காட்டுகிறது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு முக்கியக் காரணமே சீனா, அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் ஏற்படும் என்ற பதற்றமும், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஏற்றமும்தான். இதை மத்திய அரசால் கட்டுப்படுத்த இயலாது, என்ன முடியுமோ அதைச் செய்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கலாம். ஆனால், ஒரு கட்டத்துக்கு பின் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தனக்குத்தானே நிலைப்படுத்திக்கொள்ளும் உள்நாட்டுக் காரணிகள் இதில் ரூபாய் மதிப்பைப் பாதிக்காது எனத் தெரிவித்தார்.
என்ன காரணம்?
அமெரிக்கா, சீனா, கனடா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பனிப்போர்தான் வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு பணத்துக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு உயரக் காரணமாகும். அர்ஜென்டினாவின் பெசோ, துருக்கி லிரா, தென் ஆப்பிரிக்கா ராண்ட், பிரேசிலின் ரியல், இந்தோனேசியாவின் ருப்பியா, இந்தியாவின் ரூபாய் ஆகியவற்றின் மதிப்பு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஏற்றுமதியை நம்பி அதிகம் இருக்கும் பொருளாதாரங்கள் வர்த்தகப் போர் பதற்றம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனபொருட்களின் மீது மேலும் புதிய வரிகளை விதிக்கலாம் என்ற அச்சம் காரணமாக டாலரின் தேவை அதிகரித்து மதிப்பு உயர்ந்து வருகிறது.

இப்ராஹீம் நபி காலத்தில் கஃபா விற்கு இரண்டு வாசல்கள் இருந்தன

மக்கா நகரில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி காற்றுடன் கூடிய பலத்த மழையினால் கஃபதுல்லாஹ்வின் திரை அகன்ற நிலையில் கஃபதுல்லாஹ்வின் தற்போதைய கதவுக்கு நேர் எதிராக மேற்கு திசையில் அடைக்கப்பட்ட ஒரு வாசல் காட்சியை பலரும் கவனித்திருப்பீர்கள்
#அவ்வாசல் மறக்கப்பட்ட கஃபாவின் இடைக்கால வரலாற்றை நினைவூட்டியது
---------------------------------------------------------------------------------
இப்ராஹீம் நபி காலத்தில் கஃபா விற்கு இரண்டு வாசல்கள் இருந்தன.

இரண்டு வாசல்களும் தரையோடியிருந்தன.மக்கள் ஒரு வாசல் வழியாக உள்ளே நுழைந்து எதிரே இருந்த மறு வாசல் வழியாக வெளியேறி வந்தனர்.
அப்பொழுது கஃபா, இப்பொழுது அதன் அருகே அரை வட்ட வடிவில் இருக்கும் ஹதீமையையும் இணைத்து விசலாமாக இருந்தது.
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களுக்கு இறை தூது வருவதற்குமுன்பு குறைஷியர் கள் சிதிலமடைந்த கஃபா வை புனரமைப்பு செய்ய முடிவெடுத்தனர்.அப்பொழுது
குறைஷிக் குலத்தினர் கஃபாவின் கட்டுமானப் பணிக்காக தங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும், (விபச்சாரத்தின் வருமானமோ,வட்டிப் பணமோ, மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ) சேரக்கூடாது”என்று முடிவெடுத்து குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் தங்களுக்கிடையே அந்தப் பணியைப் பிரித்துக் கொண்டனர்.
அந்த நேரத்தில் சேகரிக்கப்பட்ட பணம் கஃபதுல்லாவின் முழு பகுதியையும் நிர்மாணிப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை.

இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டிய காஃபா செவ்வக வடிவில் இருந்தது. ஆனால், குறைஷியர்கள் கைவசம் இருந்த தொகையை வைத்து கஃபாவை அதன் செவ்வக வடிவிலேயே முழுமைப்படுத்த முடியவில்லை.
அதனால் செவ்வக வடிவில் இருந்த (கஃபா) கட்டிட அஸ்திவாரத்தில், சதுர வடிவில் கஃபாவை கட்டிமுடித்து அஸ்திவாரத்தின் மீதமுள்ள இடமும் கஃபா தான் என அறிவிக்கும் முகமாக அரை வட்ட வடிவில் ஒரு சுவற்றை எழுப்பினர்.
அந்த இடத்திற்கு ஹதீம் என்றும் ஹிஜ்ரு இஸ்மாயீல் என்று சொல்லப்படுகிறது.
{அந்த இடத்தில் தான் நபி இப்ராஹீம்عليه السلام அவர்கள்
குழந்தையாக இருந்த இஸ்மாயீல் நபியை (عليه السلام) விட்டு விட்டு சென்றதாகக்
கூறப்படுகிறது}

ஹதீம் பகுதி கஃபாவின் உள் பகுதியாக கருதப்படுவதால்தான் பர்ளு தொழுகை ஜமாஅத்தாக நடை பெறும்போது இமாம் காஃபாவிற்கு வெளியே நிற்பதால் அப்பகுதியில் தொழுவது தடை செய்யப்படுகிறது
இப்ராஹிம் நபி காலத்தில் இருந்தது போலவே கஃபாவின் உள்ளே நுழைவதற்கு ஒரு வாயிலும்,வெளியேறுவதற்கு ஒரு வாயிலும் அமைத்தனர்.
ஆனால் உள்ளே செல்லும் வாசலை உயராமகவும்,வெளியே வரும் வாசலை தரையோடும் அமைத்து கட்டி முடித்தனர்.

மக்கா வெற்றிக்குப்பின் நபி صلى الله عليه وسلم அவர்கள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடன் கஃபாவை வலம் வந்து, ஹத்தீம் இடத்தில் நின்று, தங்கள் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றை சொன்ன நபியவர்கள் இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இருந்ததை போன்றே ஹத்தீம் பகுதியையும் இணைத்து கஃபாவை புதுப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ஆனால் அண்மையில்தான் இஸ்லாத்தை ஏற்ற மக்காவாசிகள் முஹம்மது கஃபாவை இடிக்கிறார் என்று தவறாக புரிந்துக் கொண்டு அதனால் தேவையற்ற குழப்பங்கள் மக்களிடையே ஏற்படும் என்பதால் அந்த விருப்பத்தை நிறைவேற்றாமல் விட்டுவிட்டேன் என்று கூறினார்கள்.

நபித்தோழர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவிற்குப் பின் மகனார் யஜீத் கலிஃபாவாக பதவி ஏற்றார்.
யஜீத் கலிபாவாக பதவியேற்றதை நபிகளாரின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பேரர் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.
கூஃபா வாசிகளின் அழைப்பை ஏற்று ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூஃபா சென்று அங்கு எஜீதுக்கு எதிரான போரில் ஷஹீத் ஆனார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் அவர்களை ஹிஜாஜ் மாகாண பகுதியினர் தங்களின் கலீபாவாக ஏற்றுக் கொண்டார்கள்.அப்பொழுது நடைப்பெற்ற போரில் கஃபாவின் ஒரு பகுதி தீக்கிரையானது,
அவ்வாண்டு நடைப்பெற்ற ஹஜ்ஜின் போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடையே தங்களுடைய சிறிய தாயான அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறிய விருப்பத்தை மக்களிடம் தெரிவித்து கஃபாவை முழுமையாக இடித்து விட்டு இப்ராஹீம் அலைஹிஸ்ஸாம்் அவர்கள் காலத்தில் இருந்ததைப் போன்று வடிவமைப்பில் தான் கட்டப்போவதாக அறிவித்தார்.
மக்களில் பலரும் அதனை எதிர்த்தார்கள். இருப்பினும், அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் அவர்கள் நான் அல்லாஹ்விடம் இஸ்திகாரா செய்து முடிவெடுப்பேன் என்று சொன்னவர் அவ்வாறே இஸ்திகாரா செய்த பின் கஃபாவை ஹதீம் பகுதியுடன் இணைத்து இரண்டு வாசல்களையும் வைத்து புதிதாக கட்டினார்.



யஜித்தின் மரணதிற்குப்பின் அப்துல் மாலிக் பின் மர்வான் கலீபாவாக பதவி ஏற்றார்.ஹிஜாஜ் பகுதியையும் தனது காட்டுப்பாட்டில் கொண்டுவர ஹஜ்ஜாஜ் பின் யுசுபின் தலைமையில் பெரும் படையை அனுப்பினர்.மக்காவை கைப்பற்றிய ஹஜ்ஜாஜ் அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி)அவர்களை கொலை செய்ததுடன் அவர் புனரமைத்த கஃபாவின் ஹதீம் பகுதியை இடித்து விட்டு குறைசியர்கள் அமைத்தது போன்றே ஹதீம்பகுதியை அறை வட்ட வடிவில் மீண்டும் அமைத்தார்.வெளியே வருமவாசலையும் சுவர்எழுப்பிஅடைத்துவிட்டார் .
அப்பாஸிய கலீபாவாக மஹதி அவர்கள் பதவி ஏற்றபின் மீண்டும் அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி) அவர்கள் அமைத்த நபி பெருமான் விரும்பிய வடிவமைப்பில் கஃபாவை மாற்றி அமைக்க விரும்பி
மார்க்க அறிஞர்களிடம் ஆலோசனை செய்தார்.. இமாம் மாலிக் ( ரஹ்)அவர்கள் ஆட்சியாளர்கள் மாறும்போழுதெல்லாம் காபாவை மாற்றி அமைத்தால் வெகுஜன மக்களுக்கு காஃபத்துல்லாஹ்வின் மீதுள்ள கண்ணியம் போய்விடும் எனவே இப்பொழுதுள்ள வடிவமைப்பிலேயே விட்டுவிடுங்கள் என் ஆலோசனை கூறினார்
அதனை கலீபா மஹதி ஏற்றுக்கொண்டார்.
அன்றிலிருந்து கஃபத்துல்லாஹ் எவ்வித மாற்றமுமின்றி முஃமினீன்களின் வணக்கஸ்தலமாக இருந்து வருகிறது.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி

Monday, 3 September 2018

சுக்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? - ‎Xavier Stephen‎

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
18. சுக்கு (Dry Ginger), மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

"ஒரே சிவில் சிவில் சட்டம் (Uniform Civil Code) தேவையற்றது" - வரவேற்கத் தக்கது. Marx Anthonisamy



"ஒரே அரசின் கீழ் பலரும் ஒன்றாக வாழ்கிற ஒரு நாடு (A unified country) எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக (uniform) இருக்க வேண்டிய அவசியமில்லை"
அதாவது ஒரே நாட்டில் வசிக்கும் பல நம்பிக்கைகள் கொண்ட மக்களுக்கும் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாகச் சட்டம் இருக்க வேண்டும் என்பதல்ல என நீதியரசர் பி.எஸ்.சவ்ஹான் தலைமையிலான சட்ட ஆணையம் கூறியுள்ளது வரவேற்கத் தக்க ஒன்று.
எந்த அம்சத்திலும் தங்களை வித்தியாசமாக வெளிப்படுத்திக் கொள்ளும் உறுதியை மக்களுக்கு அளிக்கும்போதே 'மதச்சார்பின்மை' என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் எனவும் ஆணையம் கூறியுள்ளது.
மதம் மற்றும் பிராந்திய (மாநில) அடிப்படைகளில் நிலவும் பன்மைத் தன்மைகள் என்பன பெரும்பான்மை வாதத்தின் உரத்த குரலால் அமுக்கப்பட்டுவிடும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது எனவும் சட்ட ஆணையம் கூறியுள்ளது.
எல்லாவற்றிலும் ஒரே சீர்மை (Uniformity) இருக்க வேண்டும் என்கிற ரீதியில் கொடுக்கப்படும் அழுத்தம் பண்பாட்டுப் பன்மைத்தன்மைகளுக்கு எதிராகப் போய் அதுவே ஒரே நாடு என்கிற தேச ஒற்றுமையின் (territorial integrity) சிதைவுக்குக் காரணமாகி விடக் கூடாது - என்றும் சட்ட ஆணையம் அறிக்கை முன்வைக்கும் கருத்துக்கள் கவனத்துக்கு உரியன.
_________________________________________________
சீர்மையை நோக்கிய முன்னோக்கிய பயணத்திற்கான ஒரே வழி எலோருக்கும் ஒரே சிவில் சட்டம் கொண்டு வருவதுதான் என்பதல்ல எனவும் சட்ட ஆணையம் கூறியுள்ளது. அதற்குப் பதிலாக எல்லாத் தனி நபர் சட்டங்களையும் தொகுத்து முன்வைப்போம் (codification). அப்போது எல்லாவற்றிலும் உள்ள பிரச்சினைகள் ஒப்பீட்டு ரீதியில் வெளிச்சத்திற்கு வரும். நமது அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளின் வெளிச்சத்தில் அவை சோதனைக்குள்ளாகும்.
ஒரே சிவில் சட்டம் என்பதை எல்லோர் மேலும் கட்டாயமாகத் திணிப்பதற்குப் பதிலாகச் சமத்துவத்திற்கு முதன்மை அளிக்கும் உலகளாவிய சில கோட்பாடுகளை நோக்கி யாரும் செல்ல இதுவே வாய்ப்பாக அமையும்.
இப்படியான கருத்துக்களை முன்வைத்துள்ள சட்ட ஆணயம், இவற்றோடு தனிநபர்ச் சட்டங்களில் சில பொதுத் திருத்தங்களையும் பரிந்துரைத்துள்ளது, அவை:
குறைந்த பட்சத் திருமண வயது இரு பாலருக்கும் 18 ஆக இருக்க வேண்டும்;
தமது துணைவர் அல்லது துணைவியின் திருமணத்திற்கு அப்பாலான தொடர்பை இரு பாலருக்கும் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக்குதல்;
பொதுவில் விவாகரத்தை எளிதாக்குதல் - முதலியன.
ஒரு தார மணமே சரியானது பலதார மணத்தை ஏற்க இயலாது என்றெல்லாம் தாங்கள் கூறாவிட்டாலும் பலதார மணத்தை ஒரு பாலருக்கு மட்டுமே அனுமதிப்பது என்கிற அடிப்படையில் பலதார மணத்தை ஏற்க இயலாது எனவும் ஆணையம் கூறிஉள்ளது.
_______________________________________________
பல்வேறு பண்பாடுகளும் நம்பிக்கைகளும் நடைமுறையில் உள்ள ஒரு ஜனநாயக / மதச்சர்பற்ற அரசமைவில் கட்டாயப் பொது சிவில் சட்டத்திற்கு இடமில்லை என்கிற கருத்தை வலிமையாக முன்வைத்துள்ள வகையில் சட்ட ஆணையத்தின் இந்த முன்வைப்புகள் ஏற்கத்தக்கவை.
அதே நேரத்தில் இன்று பல்வேறு மதங்களின் தனி நபர்ச் சட்டங்களிலும் உள்ள பொருத்தமும் நியாயமும் அற்ற சில குறிப்பான பிரிவுகளில் ( எ.கா: ஆண்களுக்கு மட்டும் பலதார மண உரிமை, பால்ய மணம் முதலியன) திருத்தங்கள் தேவை என்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இன்றைய மத்திய அரசும் ஆளும் கட்சியான பா.ஜ.கவும் முஸ்லிம் பெண்களின் மேல் கொண்ட பாசத்தால் "எல்லோருக்கும் ஒரே சிவில் சட்டம்" என்கிற கருத்தை முன்வைக்கவில்லை என்பதை சிறு பிள்ளைகளும் அறியும். அவர்களின் நோக்கம்
(1) இதன் மூலம் "மதச்சார்பின்மை" என்கிற அரசியல் சட்ட அடிப்படையைக் கேள்விகுள்ளாக்குவதும்,
(2) சிறுபான்மை மக்களின் மதக் கடமைகளை அவர்களின் அடிப்படை உரிமைகள் என்பதிலிருந்து அகற்றுவதன் மூலம் அவர்களுக்குத் தாங்கள் இரண்டாம்தரக் குடிமக்கள்தான் என்பதை உணர்த்துவதும் மட்டும்தான்.
இந்த நிலையில் ஒரே சிவில் சட்டம் என்பது வெவ்வேறு நம்பிக்கைகளுடன் வாழும் பல்வகை மக்களும் வாழும் ஒரு சமூகத்திற்குப் பொருத்தமானதல்ல என்பதை அழுத்தமாகச் சொல்லும் வகையில் இந்த அறிக்கை முக்கியமான ஒன்று. அதேநேரத்தில் திருமணம், பெண்ணுரிமை முதலான அம்சங்களில் மதங்களின் கருத்துக்களில் பல இன்றைய நவீன ஜனநாயகக் கருத்தியலுக்கும் மதிப்பீடுகளுக்கும், நமது அரசியல் சட்ட அடிப்படைகளுக்கும் பொருந்தாமல் உள்ளதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
மொத்ததில் மாற்றங்கள் தேவை. அவை காலப்போக்கில் வரவேண்டும் என்பது மட்டுமல்ல, அவை வந்து கொண்டும் உள்ளன என்பதையும் நாம் க்க்கில் கொள்ள வேண்டும்.
__________________________________________________
இத்தோடு பொது சிவில் சட்டம் குறித்து நான் இரண்டாண்டுகளுக்கு முன் எழுதிய நூலில் பல்வேறு தீர்ப்புகளின் அடியாகச் சுட்டிக் காட்டும் ஒன்றையும் இங்கு நினைவூட்டிக் கொள்வது அவசியம்.
சட்ட நடைமுறைகள் இரு வகைகளில் இங்கு செயல்படுகின்றன. இறுக்கமான சட்டங்களை இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்துவது என்பது ஒரு வழி; இன்னொன்று நீதிமன்றத் தீர்ப்புகளின் வழி நடைமுறையில் உருவாகிச் சட்டங்களாகவே நிலைபெறுவது. இதற்கு எடுத்துக்காட்டு "அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க முடியும்" என்பது. இது சட்டமல்ல. ஆனால் நடைமுறையில் உள்ளது.
அதே போலத்தான் இன்று எந்த முஸ்லிம் ஆணும் தன் மனைவியை ஒரே தருணத்தில் நேரடியாகவோ இல்லை தபால் அல்லது, தொலைபேசி மூலமாகவோ முத்தலாக் சொல்லி ரத்து செய்வதை எந்த நீதிமன்றமும் ஏற்பதில்லை. இழப்பீடுகள் அளிக்காமல் மனைவியை ரத்து செய்வதையும் நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. தங்கள் மீதான கணவர் அல்லது அவரது குடும்பத்தினரின் வன்முறைகளுக்கு எந்த முஸ்லிம் பெண்ணும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் நீதி பெறலாம்.
மதச்சார்பற்ற ஜனநாக அரசமைவின் அடிப்படைகளுக்கு ஆபத்தில்லாமலேயே முஸ்லிம் பெண்கள் உட்பட எந்தப் பிரிவினருக்கும் நியாயம் கிடைப்பதை உறுதி செய்வது என்பதற்கு இத்தகைய வழிமுறைகளே ஒரே தீர்வாக இருக்க முடியும்.
____________________________________________
முஸ்லிம் சமூகமும் இயக்கங்களும் இதுதான் அடிப்படைப் பிரச்சினை என்பதை ஏற்று இது குறித்து வெளிப்படையாகப் பேசுதல் அவசியம்.

அபிராமிக்கு இஸ்லாம் கிடைத்திருந்தால் - சிராஜுல்ஹஸன்

சரியோ, தவறோ ஏதோ ஒரு கட்டத்தில் கணவன் விஜய்யை அபிராமிக்குப் பிடிக்காமல் போய்விட்டது..சுந்தரத்தின் மீது காதல் அதிகமாகிவிட்டது.

குடும்பத்தில் சிக்கல்....

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு அழகான இரண்டு குழந்தைகளையும் அன்பான கணவனையும் விஷம் வைத்துக் கொல்வதல்ல.

விஜய்க்கு இஸ்லாம் கிடைத்திருந்தால், மனைவியின் தவறான நடத்தை தெரியவந்ததுமே “தலாக்” சொல்லி அவளை அனுப்பியிருந்திருப்பார்.

அல்லது அபிராமிக்கு இறைமார்க்கம் கிடைத்திருந்தால் “குலா” வாங்கிக்கொண்டு (பெண் தரப்பில் பெறப்படும் மணவிலக்கு) தனக்குப் பிடித்தவருடன் புதிய வாழ்வைத் தொடங்கியிருக்க முடியும்.

“தலாக் அல்லது குலா” என்று ஒரு சொல்லில் தீரவேண்டிய சிக்கல் இது.....

ஆனால் அந்த அருட்பேறு கிடைக்காத காரணத்தால் இரண்டு குழந்தைகளின் உயிர்களைக் கொன்று, குடும்ப மானமும் போய் இப்போது அபிராமி சிறையில்...!

இது ஏதோ ஓர் அபிராமியின் கதை அல்ல.

நாடு முழுவதும் பல அபிராமிகள்....

நாளிதழ்களைத் திறந்தால் கண்களை உறுத்துவது இத்தகைய கொலைச் செய்திகள்தாம்....

இதற்கு ஒரே தீர்வு இறைவழிகாட்டுதல்.

மத்திய அரசு தலாக் சட்டத்தை முடக்குவதற்கு மும்முரமாக முயன்றுகொண்டிருக்கிறது.

அதற்குப் பதிலாக தலாக், குலா சட்டங்களை நாட்டின் பொதுச்சட்டமாக ஆக்குவதற்கு முயல வேண்டும்.

தலாக், குலா சட்டங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும்தான் எனும் நிலை வரவேண்டும்.

ஏராளமான அபிராமிகளின் வாழ்வு மலரும்.

அஜய், கார்னிகா போன்ற குழந்தைகளின் உயிர்களும் காப்பாற்றப்படும்.

காபிர்கள் வெறுத்தபோதிலும் சரியே!!!

கருணாநிதியின் துர்மரணம் முஸ்லிம் சமூகத்தில் ஈமான், இஸ்லாம், குப்ர் பற்றிய அறிவீனம் எந்தளவுக்குப் புரையோடிப் போயுள்ளது என்பதை வெளிக்கொணர்ந்துள்ளது.

அல் குப்ர் அல் அக்பர் எனும் பெரும் இறை மறுப்பு இஸ்லாமிய ஷரீஅத்தின் பரிபாஷையில் கீழ்வருமாறு அமைந்திருக்கும்.

1.பொய்ப்படுத்துவதன் மூலம் ஏற்படும் இறை மறுப்பு.

29:68. அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,

2.இறை கட்டளையை ஏற்காமல் பெருமையடிப்பதன் மூலம் ஏற்படும் இறை மறுப்பு.

2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.

3. இஸ்லாம் நம்பிக்கை கொள்ளுமாறு வலியுறுத்திய அம்சங்களை நம்பாமல் விடுவதன் மூலம் ஏற்படும் இறை மறுப்பு:

18:36. (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான்.
‏ 
18:37. அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான்.

இந்த சூறா கஃபின் வசனங்களில் இரு மனிதர்களின் சம்பாசனையை அல்லாஹ் எடுத்துக் கூறி அதில் தோட்டம் ஒன்றிற்குச் சொந்தக் காரன் "மறுமை ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை" எனக் கூறியதாகவும் அதனால் அவன் இறைவனை நிராகரித்து விட்டதாகவும் அல்லாஹ் அடுத்த மனிதனின் தீர்ப்பை எடுத்துக் கூறுகிறான்.

இது அல்லாமல் ஏகப்பட்ட விடயங்கள் இறை நிராகரிப்பை ஏற்படுத்தும் என அல்குர் ஆன் வசனங்களிலும் ஆதாரபூர்வமான நபிமொழிகளிலும் எம்மால் காண முடியுமாக உள்ளது.

உதாரனமாக...

1
5:44. .... எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.

2
27:4. நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம்; எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்.
‏ 
27:5. அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு; மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடைபவர்களாக இருப்பார்கள்.

3. தொழுகையை விடுவது இறை மறுப்பாகும் .(ஹதீஸ்)

4.சூணியக்காரணிடம், குறிகாரணிடம் சென்று அவன் கூறுவதை நம்புவது இஸ்லாத்தை நிராகரிப்பது ஆகும். (ஹதீஸ்)

இது போன்ற நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் கருனாநிதி எனும் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவன் காபிர் என்பதை சந்தேகமின்றி வலியுறுத்துகின்றன.

இவ்வாதாரங்கள் அடிப்படையில்தான் இமாம் இப்னு தைமிய்யாஹ் (றஹ்) அவர்கள் 'இறை மறுப்பு" என்பதை வரைவிலக்கணம் செய்யும் போது :

"நிராகரிப்பு என்பது ஈமான் இல்லாத நிலையாகும் என முஸ்லிம்கள் அனைவரும் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர்."

என வரைவிலக்கணம் செய்துள்ளார்கள்.

காபிர்களுக்குக் காவடி தூக்குவதையே கொள்கையாகவும் செயற்பாடாகவும் கொண்ட சில அறிவிலிகளுக்கு இஸ்லாம் தெளிவுபடுத்தும் இவ்வுண்மை கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கசப்பாக இருந்தாலும் உன்மையையே பேசுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார்கள்.

இதில் பெரிய வேடிக்கை என்னெவென்றால் "பேஸ் புக்" பத்வாக் கொடுக்கும் இடமல்ல" என்று மார்க்க விடயத்தில் அலிப் பே தெரியாதவர்கள் பத்வாக் கொடுப்பதும் "நாங்கள் தீர்ப்புச் சொல்பவர்கள் அல்லர்" என்று மார்க்கம் கற்ற‌ சிலர்" தங்களுக்குத் தாங்களே "தீர்ப்புச் சொல்லிக் கொள்வதும்" தான்.

இஸ்லாம் என்பது நபர்கள், பொருட்கள் மீது தீர்ப்புச் சொல்லவே வந்தது, இவன் நல்லவன் அவன் கெட்டவன், இவன் காபிர் அவன் முஸ்லிம் இவன் சுவன வாதி அவன் நரகவாதி, இது நல்லது (ஹலால்) அது கெட்டது (ஹறாம்) என்று தீர்ப்பளிக்கவே அல்லாஹ் வேததை இறக்கிவைத்தான் அதனால் தான் அல்குர் ஆனிற்கு"அல் ஃபுர்கான்" என்ற பெயர் ஏற்பட்டது என்ற எளிய அடிப்படை கூடத் தெரியாததால், அல்லது தீர்ப்பு சொல்லும் அளவுக்கு அல்குர் ஆனையும் அல் ஹதீஸையும் ஆழக் கற்றுத் தேறாத காரனத்தால் இப்படியான ஒரு வறட்டு வாதத்தை முன்வைக்கின்றனர்.

ஈமானை, இஸ்லாத்தை அளவுகோலாகக் கொண்டு எதனையும் அளவீடு செய்யவேண்டிய இவர்கள் வெறுமனே "சமூக சேவை, சமுதாயப் பணி என்ற கோணத்தில் ஒரு காபிரை மதிப்பீடு செய்ய முற்படுகின்றனர்.

இவர்களது "அறிவியல் வாரிசுகள்"!!! தான் நாளை நெற்றியில் காபிர் எனத் தெளிவாக எழுதியிருக்கும் தஜ்ஜாலைக் கூட அவன் செய்யும் சேவைகளுக்காகவும் அபிவிருத்திகளுக்காகவும் அங்கீகரிப்பார்கள் என்றால் அது மிகையாகாது.

எனவே ஒரு நாஸ்திகனுக்காக, காபிராகவே வாழ்ந்து குப்ரிலேயே மரணித்த ஒரு நரகவாதிக்காக முஸ்லிம் பெயர்தாங்கிகள் கச்சை கட்டிக்கொண்டு வருகிறார்கள் என்றால் ....அவனுக்காக முஸ்லிம் சமூகத்தில் உள்ளவர்களைப் பகைத்துக் கொள்ளவும் முற்படுகின்றார்கள் என்றால் இப்பெயர்தாங்கி முஸ்லிம்களை நாம் என்னவென்று சொல்வது!!!

இஸ்லாம் என்றால் என்ன?, ஈமான் என்றால் என்ன?, குப்ர் எனும் நிராகரிப்பு, ஷிர்க் எனும் இணைவைப்பு, மற்றும் அதன் வகைகள், பிரிவுகள் பற்றி அலிப் பேயில் இருந்து படித்து உங்கள் ஈமானை அவசரமாகவும் அவசியமாகவும் சரி செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

https://www.facebook.com/nowfer.mohammad/posts/2242122329131683?__tn__=K-RH-R 

Sunday, 2 September 2018

வழிப் போக்கன்

ஒவ்வொருவனும் தன் வழியிலேயே பயணிக்கிறான்
தொலையும் இடம் தேடி
தூரமும் நேரமும் அறியமுடியாமல்
வாழ்நாள் முழுவதும் 
வழிப் போக்கனாக!


قُلْ كُلٌّ يَّعْمَلُ عَلٰى شَاكِلَتِهٖؕ فَرَبُّكُمْ اَعْلَمُ بِمَنْ هُوَ اَهْدٰى سَبِيْلًا

நீர் கூறுவீராக: “ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்.”


இறைவா! 
நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! 

என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக!

வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.

ஆய்வுக் களம்- முனைவர் தொல் திருமாவளவன்


ஆய்வுக் களம்- முனைவர் தொல் திருமாவளவன்


அரசியல் மற்றும் உளவியல் நிலையில் சமூக மேம்பாட்டிற்கு இஸ்லாம் ஒரு தீர்வாகி இருக்கிறது. இது நடைமுறை சாத்தியம் என்று இரண்டு தலைமுறையைச் சாதிக்கச் செய்துள்ளது. மீனாட்சிபுரம் கிராமம்.

சமத்துவம், சகோதரத்துவம், ஊக்குவித்தல் , ஒழுக்கம் போன்ற உணர்வுகளை நாம் சகோதரர்களிடம் நடைமுறைப் படுத்தினால் மனிதம் தழைக்கும் அதனால் சமூகத்தில் பார்வையில் உயர்வுகள் இருக்கும்.

இந்த நேரத்தில் சகோதரர் அப்துல் ஜலீல் மதனி அவர்களை நினைவுகூர்ந்து பார்க்கிறேன். இந்த மீனாட்சி புரத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிச் சென்றார்கள். இன்று இந்த மக்களுக்கான இறையில்லம் அதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

சமூகத்தில் உயர்ந்த அவர்களின் வாழ்க்கைதரம் மறுமையிலும் அமைந்திட இறைவனைப் பிரார்த்திப்போம்.


Saturday, 1 September 2018

இறைவா!

இந்தப் பண்புள்ளவர்களை இறைவன் நேசிப்பதில்லை.

அல்லாஹ்வின் நேசம் வேண்டுமாயின் நமது குணங்களைச் சீர் செய்வோம்.

 إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.  

யா அல்லாஹ்! என்னை அத்துமீறுபவர்களுடன் சேர்க்காதே, உனக்கு கட்டுப்பட்டவனாக ஆக்குவாயாக


وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ
விஷமத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.

யா அல்லாஹ்! என்னை விஷமக் கருத்துகளிலும், தீங்கான சிந்தனையிலிருந்தும் தூரமாக்குவாயாக!


وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

யா அல்லாஹ்! என்னை பாவங்களிலிருந்து சுத்தம் செய்வாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் பாவங்களைக் கழுவுவாயாக.

اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை

யா அல்லாஹ்! என்னை உன்னையும் உனது தூதரையும் முதன்மையாக நேசிக்கும் உள்ளத்தை தந்தருள்வாயாக!

وَاللَّهُ لَا يُحِبُّالظَّالِمِينَ
அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை. 

யா அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்திலிருந்து வெகுதூரமாக்கிடுவாயாக!  உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக 

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا
எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. இறைவா! தற்பெருமை கொள்வது மற்றும் கர்வத்திலிருந்து உள்ளத்தைத் தெளிவுபடுத்துவாயாக.


إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا أَثِيمًا
எவன் சதிசெய்யும் பாவியாக இருக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. இறைவா! எந்த உயிரினத்திற்கும் எதிராகச் சிந்தனையைக் கொண்டுசெல்லாதிரு, உன் படைப்பினங்களில் அனைத்தும் நான் விரும்பவும் படைப்பினங்கள் என்னை விரும்பும்படி நல்லொழுக்கத்தை தருவாயாக! 

وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
அல்லாஹ், விஷமம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை.
இறைவா! விஷமிகளிடமிருந்து என்னைத் தொலைவாக்கிடு. 

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
நிச்சயமாக அல்லாஹ், வரம்பு மீறுபவர்களை நேசிப்பதேயில்லை. 
இறைவா! உனக்குக் கட்டுப்பட்டவனாக செவியேற்றோம் சிரம் தாழ்த்தினோம் என எங்களின் செயல்களைச் சீர்படுத்து


إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
வீண்செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

இறைவா! உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன்

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ
நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை.

இறைவா! எனது உள்ளத்துக்கு இறையச்சத்தை வழங்கி விடு! அதைத் தூய்மைப்படுத்து! தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீ தான் அதன் பொறுப்பாளன். அதன் எஜமானன்.

 إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ
அகந்தை கொள்வோரை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை
இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், அடக்கமில்லாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத ஆத்மாவை விட்டும், அங்கீகரிக்கப்படாத துஆவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


 إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ
நிச்சயமாக அல்லாஹ் மோசக்காரரையும் நன்றி கெட்டவர்களையும் விரும்புவதில்லை.
இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ
ஆணவம் கொள்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

இறைவா! பலவீனம், சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.