Saturday, 1 September 2018

நேசிப்பதே இல்லை. -لَا يُحِبُّ


وَمِنَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰٓى اَخَذْنَا مِيْثَاقَهُمْ فَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ فَاَغْرَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ‌ ؕ وَسَوْفَ يُنَبِّئُهُمُ اللّٰهُ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ


அன்றி, எவர்கள் தங்களை "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்" எனக் கூறுகின்றார்களோ அவர்களிடமும் (இவ்வாறே) நாம் உறுதிமொழி வாங்கியிருக்கின்றோம். எனினும், அவர்களும் (இந்நபியைப் பற்றி தங்கள் வேதத்தில்) தங்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தை மறந்து விட்டார்கள். ஆதலால், அவர்களுக்குள் பகைமையையும் கோபத்தையும் மறுமை நாள் வரையில் (நீங்காதிருக்கும்படி) மூட்டி விட்டோம். (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காண்பிப்பான்.

وَقَالَتِ الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ‌ ؕ غُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا‌ ۘ بَلْ يَدٰهُ مَبْسُوْطَتٰنِ ۙ يُنْفِقُ كَيْفَ يَشَآءُ‌ ؕ وَلَيَزِيْدَنَّ كَثِيْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ طُغْيَانًا وَّكُفْرًا‌ ؕ وَاَ لْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ‌ ؕ كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ‌ ۙ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا‌ ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ‏


"அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது" என்று இந்த யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறன்று) அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன. அன்றி, இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். அல்லாஹ்வுடைய இரு கைகளோ (எப்பொழுதும்) விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் (அள்ளி) அள்ளிக் கொடுக்கின்றான். ஆனால், உங்கள் இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பான்மையினருக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே அதிகப்படுத்தி விடுகின்றது. ஆகவே, நாம் அவர்களுக்கிடையில் பகைமையும், வெறுப்பையும் இறுதிநாள் வரையில் (இருக்கும்படி) விதைத்து விட்டோம். அவர்கள் (நம்பிக்கை யாளர்களுக்கிடையில்) போர் நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகின்றான். ஆனால், (இன்னும்) அவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டே அலைகின்றார்கள். அல்லாஹ், விஷமம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை.

No comments:

Post a Comment