Saturday, 31 December 2011

புத்தக வெளியீட்டாரின் மனமாற்றம் ஏன்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராகத்துஹு
மக்களை ஐந்து நேரத் தொழுகைகளுக்கு அழைக்கின்ற பணி நிச்சயமாக சிறந்த பணியாகும். இதை இன்றைய தப்லீக் இயக்கத்தினர் சிறப்பாகச் செய்கின்றனர். அதே சமயம் முஸ்லிம் என்று கூறிக் கொண்டு, மக்கள் செய்கின்ற எண்ணற்ற தீமைகளை அவர்கள் கண்டு கொள்வது கிடையாது.

வேண்டாமே... வீண் தர்க்கம் !

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு


وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ ۗ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ


எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.அல்குர்ஆன் :6:121.

كَالَّذِينَ مِن قَبْلِكُمْ كَانُوا أَشَدَّ مِنكُمْ قُوَّةً وَأَكْثَرَ أَمْوَالًا وَأَوْلَادًا فَاسْتَمْتَعُوا بِخَلَاقِهِمْ فَاسْتَمْتَعْتُم بِخَلَاقِكُمْ كَمَا اسْتَمْتَعَ الَّذِينَ مِن قَبْلِكُم بِخَلَاقِهِمْ وَخُضْتُمْ كَالَّذِي خَاضُوا ۚ أُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ

(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள். அல்குர்ஆன்:9:69.

Friday, 30 December 2011

அழைப்புப் பணி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு


முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தனது அழைப்புப் பணியில் உற்சாகத்துடனும் உறுதியுடனும் செயல்படுவார். நன்மையைச் செய்ய ஏதேனும் தகுந்த சூழ்நிலை ஏற்படுமா என எதிர்பார்க்காமல் மனிதர்களை சத்தியத்தின்பால் அழைப்பதற்கு விரைந்து செல்வார். மனத்தூய்மையுடன் அழைப்புப் பணிபுரிபவர்களுக்கு அல்லாஹ் சித்தப்படுத்தி வைத்துள்ள அருட்கொடைகளை பெரிதும் விரும்புவார்.
    அலீ (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதருக்கு உம்மூலமாக அல்லாஹ் நேர்வழி கிடைக்கச் செய்வது உமக்கு உயர்ரக செந்நிற ஒட்டகைகளைவிட மேலானதாகும்.” (ஸஹீஹுல் புகாரி)

பிரர்த்தனை 1

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


"இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், 


ஏற்கப்படாத பிரார்த்தனையை விட்டும், 


அடக்கமற்ற உள்ளத்தை விட்டும், 


திருப்தியடையாத ஆத்மாவை விட்டும் 


உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’

பித்அத்’களை எதிர்ப்பது பயங்கரவாதமா?


முஸ்லிம்கள் பிறந்தநாள் கொண்டாடுவதுதிருமணநாள் கொண்டாடுவதுநினைவுநாள் அனுசரிப்பதுமுஹர்ரம் மாதத்தில் தீ மிதிப்பதுபஞ்சா எடுப்பதுஇறைச்சி கூடாது என நம்புவது,தர்ஹாக்களில் சந்தனக்கூடு தூக்குவதுசமாதிகளைச் சுற்றிவருவது,அங்கு குழந்தைகளை உருட்டிவிடுவதுசமாதிகளுக்கு சஜ்தா (சிரவணக்கம்) செய்வதுகுழந்தைவரம் கேட்பதுதிருமண வரன் கேட்பதுகுழந்தைகளின் பிறந்தமுடி எடுத்து காணிக்கை செலுத்துவது,ஷைகுகள் மற்றும் பெரியவர்களின் கால்களைத் தொட்டுஅல்லது கால்களில் விழுந்து ஆசி கேட்பதுசிலவேளைகளில் அவர்களையே வணங்குவதுபெண்கள் ஷைகுகளின் கரம் பற்றி நல்லாசி பெறுவதுகத்னா (சுன்னத்) ஊர்வலம் நடத்துவதுதிருமணத்தில் பந்தல்கால் நடும் வைபவம்காதுகுத்து விழாமஞ்சள் நீராட்டு விழா,இறந்தவர்கள் பெயராலும் திருமணத்தை முன்னிட்டும் நடத்தப்படும் சில சடங்குகள்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவையெல்லாம் என்னஇவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்புஇவையெல்லாம் நபிவழிகளாகுறைந்தபட்சம் மார்க்கம் இவற்றை அனுமதிக்கின்றதா? ‘பரக்கத்’ (வளம்) வேண்டி செய்யப்படும் இவற்றால் இறையருள் கிட்டுமாஅப்படி கிட்டும் என்றால்இறைவனோ இறைத்தூதரோ இறைத்தூதரின் அன்புத் தோழர்களோ சான்றோர்களோ யாராவது இவற்றைச் சொல்லியிருப்பார்களாஇல்லையா?

Quran 9-171

Quran 9-171

Thursday, 29 December 2011

ஐந்தாவது பரிமாணத்தில் போராடுதல்


தொழில்நுட்ப முன்னேற்றமும் நூதனங்களும் இன்றைய உலகின் போராட்டங்களின் உத்திகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. அவை இன்று இணைய (சைபர்) உலகை (Cyber World) புதிய யுத்த முன்னரங்காக மாற்றம் பெறச்செய்வதில் பாரிய செல்வாக்கு செலுத்துகின்றன. இன்றைய உலகின் போராட்டங்களிலும்புரட்சிகளிலும் இணையத்தின் பங்கு, இதுதொடர்பாக  முன்னணி நாடுகளின் நிலைப்பாடு குறித்த ஒரு சிறு கட்டுரை அண்மையில் அல்ஜசீரா ஆங்கில சேவை வலையமைப்பின் இணையதளத்தில் வந்த ஒரு கட்டுரையை தமிழில் இயன்றவரை மொழி பெயர்த்து வாசர்களுக்காக பகிர்ந்து கொள்கின்றேன்.

ஐந்தாவது பரிமாணத்தில் போராடுதல்

யுத்த முறைமைகளில் ஐந்தாம் பரிமாணம்” என்று அது அழைக்கப்படுகின்றது. நிலம்கடல்,வான்மற்றும் விண்வெளிகளுக்கு மேலதிகமாக இன்று இணைய(சைபர்) உலகமும் புதிய யுத்த முன்னரங்காக பரிமாற்றம் அடைகின்றது.

Cyberwar.jpg
தொழில்நுட்ப புதுமைகள்இன்றைய நாளின் யுத்த உத்திகளை மாற்றிக்கொண்டு வருகின்றன. இன்றைய உலகனிது ஆயுத களஞ்சியத்தில் புதிய கருவிகள் சேர்ந்துள்ளன. மின்காந்தவியல்நவீன தகவல்கள், மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் உதவியினால்புது வகையானதொரு இலத்திரனியல் யுத்தம் ஒன்று உருவாகியுள்ளது. சைபர் யுத்தம்” அல்லது இணைய யுத்தம்” என்று அழைக்கப்படுகின்ற இந்த யுத்தமானது பல்வேறு அரசாங்கங்களுக்கும்இராணுவங்களுக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைவதாக கருதப்படுகின்றது.

Wednesday, 28 December 2011

அல்லாஹ்வுக்காக மட்டுமே ஒருவரை விரும்பு

அஸ்ஸலாமு அலைக்கும் 

ஒரு முஸ்லிமுக்கும் அடுத்த முஸ்லிமுக்குமிடையிலான தொடர்பு சகோதரத்துவமாகத்தான் இருக்க முடியும் எனக் கருதும் இஸ்லாம் அவ்வுணர்வின்றி வாழ்வதனை பெரும்பாவமாகவும் ஈமான் கொள்வதற்கு தடையான அம்சமாகவும் குறிப்பிடுகின்றது. இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது “என் உயிரைத் தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஈமான்கொள்ளும் வரை கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும்வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்.” (முஸ்லிம்)
எனவே, ஒருமுஸ்லிம் அடுத்த முஸ்லிமை நேசிக்க வேண்டும், அல்லாஹ்வுக்காக பரஸ்பரம், அன்பு கொள்ள வேண்டும். இறை நம்பிக்கையின் சுவையை அடைவதற்கான மூன்று பண்புகளில் ஒன்றாக அல்லாஹ்வுக்காக மட்டுமே ஒருவரை விரும்புவதனையும் நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.
சகோதரத்துவம் மனிதனின் இயல்பான உணர்வாகும். ஏனெனில், மனிதன் இயல்பிலேயே தனித்து வாழ முடியாதவனாகவும் பிறரைச் சார்ந்திருக்கும் பண்பு கொண்டவனாகவும் படைக்கப்பட்டிருப்பதனால் தனது தேவைகளை நிறைவேற்ற பிறரை நாடிச் செல்கின்றான். தனது இன்ப, துன்பங்களில் ஏனையோர்களையும் இணைத்துக் கொள்ள விரும்புகின்றான். இதனால் குடும்பமாக, சமூகமாக வாழ தலைப்பட்டுள்ளான். இத்தகைய இயல்பான வாழ்க்கை முறைக்கு மாற்றமாக நடந்து கொள்வது ஈமான் கொள்வதற்கு தடையாகவும் நரகிற்கு இட்டுச் செல்லும் வழிமுறையாகவுமே இருக்க முடியும்.
இஸ்லாமிய சகோதரத்துவம் இவ்வுலகில் மட்டுமல்லாது நாளை மறுமையிலும் வெற்றியையும் சுபீட்சத்தையும் பெற்றுத் தருவதாக இஸ்லாம் கூறுகின்றது. மறுமை நாளில் பரந்துவிரிந்த மஹ்ஷர் வெளியில் சூரியன் தலைக்கு மேல் கொண்டுவந்து வைக்கப்படும். அந்நேரத்தில் ஏழு கூட்டத்தினருக்கு மாத்திரம் அல்லாஹ்வுடைய நிழல் வழங்கப்படும். அதில் ஒரு கூட்டம் தான் அல்லாஹ்வுக்காக நேசித்து அவனுக்காக தோழமை கொண்டு அவனது பாதையில் பிரிந்துபோன இரு சகோதரர்களாகும்.
மஹ்ஷர் வெயிலின் அகோரத்தினால் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் கூறுவான் ‘என் கண்ணியத்திற்காக தங்களிடையே அன்பு கொண்டிருந்தவர் கள் எங்கே? என் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந் நாளில் நான் நிழல் தருவேன்’ எனக் கூறுவான். அவர்களுக்கு ஒளியிலான மேடைகள் வழங்கப்படும் நபிமார்களும் ஷுஹதாக்களும் அவர்களைக் கண்டு (இவைகள் தமக்குக் கிடைத்திருக்க வேண்டுமென) ஆசை கொள்வார்கள்.
இஸ்லாம் விதித்திருக்கும் வணக்க வழிபாடுகளும்கூட சகோ தரத்துவத்தைக் கட்டியெழுப்புவ தாகவும் வலுப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக இஸ்லாத்தின் அடிப்படைக் கடமையான தொழுகையினை எடுத்துக் கொண்டால் அதனை ஜமாஅத்தாக தொழுவதனை கட்டாயப்படுத்தியிருப்பதன் நோக்கம், சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும் என்பதாகவும் இருக்க முடியும். ஏனெனில், ஏழை-பணக்காரன், படித்தவன்-படிக்காதவன் என்ற பேதம் பாராது எதிரியாக இருந்தாலும் தோளோடு தோள் சேர்ந்து, காலோடு கால் ஒட்டிய நிலையில் ஒரே வரிசையாக, ஒரே இலக்குடன், ஒரே இறைவனைத் தொழுகின்றோம். எனவே இங்கு சகோதரத்துவ வாஞ்சைகள் வளர்க்கப்படுகின்றன.
இதேபோன்று ஹஜ் கடமையும் சர்வதேச சகோதரத்துவத்தை பிரதி நிதித்துவப்படுத்தும், அதற்கு வலுச் சேர்க்கும் வணக்கமாக அமைந்திருக்கின்றது. உலகின் சகல நாடுகளிலும் இருந்து வருகை தரும் முஸ்லிம் சகோதரர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடுகிறார்கள். இந்த நேரத்தில் தங்களுக்குள் அறிமுகமாகிக் கொள்கின்றார்கள். ஹஜ் காலம் முடிந்ததும் தமது உறவுகளைப் பேணிக் கொள்கிறார்கள், இதன் மூலம் சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவம் பேணப்படுகிறது.
இதேபோல ஏனைய கடமைகளிலும் சகோதரத்துவம் புரையோடியிருப்பதைக் காணலாம். முஆனகா, முஸாபஹா, ஸலாம் சொல்லல் போன்ற செயற்பாடுகள் மூலம் நேரடியாகவே அன்பு பரிமாறப்படுவதனைக் காணலாம். ஆகவே, முஸ்லிம் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளக் கூடாது. ஒருவருக் கொருவர் போட்டியாக நடந்து கொள்ளக் கூடாது. ஒருவரை ஒருவர் புறக்கணிக்கக் கூடாது. சிலர் சிலரின் விற்பனைக்கெதிராக குறைத்து விற்கக் கூடாது, கடினமாய்ப் பேசி மனதைப் புண்படுத்தக் கூடாது. யாரையும் தாழ்வாக எண்ணக் கூடாது. யாருக்கும் அநீதமிழைக்கக் கூடாது, யாரையும் இழிவுபடுத்தக் கூடாது என்றெல்லாம் போதிக்கும் இஸ்லாம் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு சகோதரனுடன் பேசாமல் இருப்பவன் இஸ்லாத்தைச் சார்ந்தவனல்ல என்று எச்சரிக்கின்றது. இதன்மூலம் இஸ்லாத்தில் சகோதரத்துவம் எத்துனை முக்கியத்துவ முடையது என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை தனித்து நின்று செய்திடவில்லை. மாறாக ஸஹாபாக்கள் எனப்படும் தனது உற்ற தோழர்களுடன் இணைந்தே தனது போதனைகளை முன்வைத்தார்கள். ஸஹாபக்களுக்கிடையில் சகோதரத்துவ வாஞ்சையினை வளர்ப்பதற்கு பல வழிமுறைகளை நபி (ஸல்) அவர்கள் கையாண்டார்கள்.
ஹிஜ்ரத்தின் பின் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய சகோதரத்துவ சமுதாயம் வரலாற்றிலே பொன் வரிகளால் பொறித்துக் காண்பிக்கப்பட வேண்டியது. ஏனெனில், ஒழுங்கை அறியாத கோத்திர உணர்வு மேலோங்கியிருந்த அரேபிய சமூகத்தில் அன்பையும் கருணையையும் பரஸ்பரம் உதவிபுரியும் பண்பையும் இஸ்லாமிய சகோதரத்துவக் கொள்கைமூலம் வளர்த்தார்கள். இரத்த உறவு ரீதியான சகோதரத்துவம் கூட வலுவிழந்து போகும் அளவிற்கு இஸ்லாம் கூறும் கொள்கை சகோதரத்துவம் பாரிய மாற்றங்களைஅரேபியரிடையே ஏற்படுத்தியது.
நபியவர்கள் ஹிஜ்ரத் சென்றதும் முதலில் செய்த பணி பரம்பரை பரம்பரையாக பகைமை கொண்டிருந்த அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரத்தவரின் பகைமையினை நீக்கி சகோதரர்களாக மாற்றியமையாகும். அதே போல மக்காவிலிருந்து தமது சொத்து செல்வங்களையெல்லாம் இழந்து வெறுங்கையுடன் ஹிஜ்ரத் சென்ற மக்காவாசிகளை மதீனா வாசிகளுடன் சகோதரர்களாக இணைந்துவிட்டார்கள். மதீனாவாசிகளோ தமது சொத்து செல்வங்களை மட்டுமல்லாது தமது குடும்பங்களிலும் பங்காளர்களாக மக்காவாசிகளை சேர்த்துக் கொண்டார்கள். இதன் காரணமாக மதீனாவாசிகள் அன்சாரிகள் என்றும் மதீனாவாசிகள் முஹாஜிரீன்கள் என்றும் சிறப்புப் பெயர்கொண்டு அழைக்கப்படுகிறார்கள்.
இவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்; நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (மார்க்கத்தினை) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; (உங்களுக்குள் கருத்துவேறு பட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்; மேலும் உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் விரோதிகளாக இருந்த சமயத்தில் அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பினை உண்டாக்கினான். ஆகவே அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்) நீங்கள் நரக நெருப்புக் குழியின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேரச் செய்தான். (3:103)
மக்கா-மதீனாவாசிகளது இணைப்பின் மூலம் முஹாஜிரீன்களது வாழ்வை சீரமைப்பதை மட்டும் நபியவர்கள் இலக்காகக் கொள்ளவில்லை. மாற்றமாக இன, நிற, வர்க்க, கேந்திர மொழிபேதமற்ற சகோதரத்துவ, சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு உறுதியான சமுதாயத்தை கட்டியெழுப்பவே நபியவர்கள் விரும்பினார்கள். அதனையே அவர்கள் உருவாக்கியும் காட்டினார்கள்.
அதேபோன்று பிற்பட்ட கால முஸ்லிம்களின் வரலாறுகளைப் புரட்டிப் பார்க்கின்றபோது இஸ்லா மிய எழுச்சிக்கு இச்சகோதரத்துவக் கொள்கையும் காரணமாக அமைந் திருப்பதனைக் கண்டு கொள்ள லாம். வரலாற்றாசிரியர் ஏ. சுவாமி நாதன் என்பவர் தனது ‘இந்திய வரலாறு’ எனும் நூலில் குறிப்பி டும்போது “இஸ்லாம் சமயத்தின் வளர்ச்சிக்குப் பல காரணங்கள் உண்டு. சகோதரத்துவம், சமத்துவம், என்ற கொள்கைகளின் மூலம் சமுதாயத்தில் தாழ்வுற்றிருந்த இந்துக்களைக் கவர்ந்தனர்; பிராமணத்தின் ஆதிக்கத்தில் அல்லல்பட்டிருந்த தீண்டத்தகாதவர்கள் என் போர் இக் கொள்கைமீது பற்று கொண்டு இஸ்லாம் சமயத்தை தழுவினர். இந்து சமயத்தின் வளர்ச்சியில் தடு மாற்றம் ஏற்பட்டு அது தரைமட்டமாகிவிடுமோ என்று பெரும் சமயத் தலைவர்கள் (பக்கம்: 19)அஞ்சும் அளவிற்கு இக்கொள்கை யினால் மாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறுகின்றார். எனவேதான் தஃவாவின் அடிப்படையாக இச் சகோதரத்துவம் அமைந்த போதெல்லாம் அதற்கு வெற்றியும் அல்லாஹ்வுடைய அருளும் கிடைத்து வந்திருப்பதனை இஸ்லாமிய வரலாறு நிரூபிக்கின்றது.
நன்றி : சகோதரர் ஈ.எல்.எம். இர்ஷாத்

இன்றைய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் 


சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் "தானே' புயல்





சென்னை, டிச. 27: சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் "தானே' புயல் மையம் கொண்டுள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழக கடலோரப் பகுதிகள், புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் செவ்வாய்க்கிழமை கூறியது:
சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே 700 கி.மீ. தொலைவிலும், இலங்கை திரிகோண மலையில் இருந்து வடகிழக்கே 750 கி.மீ. தெலைவிலும், அந்தமானில் இருந்து வட மேற்கே 650 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதற்கு "தானே' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும். இதனால் வட தமிழகம், தென் ஆந்திர கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
இந்தப் புயல் கடலூர் - நெல்லூருக்கு இடையே வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும். இதனையொட்டி வட தமிழகம், புதுவை மற்றும் தென் ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழகம் மற்றும் புதுவை கடற்கரைப் பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பர் 28) மணிக்கு 50 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
சென்னை மற்றும் கடலூரில் 5-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், நாகை, புதுவை, எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ரமணன்.
சென்னை: கடல் சீற்றத்தால் எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்தது. மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள், வலைகள் உள்ளிட்டவை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. இதில் காசி விசாலாட்சி குப்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, கவாஸ்கர் ஆகியோரின் படகுகள் காணாமல் போனதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கடலூர்: கடலூரில் திங்கள்கிழமை இரவு கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் 20 அடி உயரம் வரை எழுந்தன. கடலோரப் பகுதிகளில் உள்ள தேவனாம்பட்டினம், சில்வர் பீச், தாழங்குடா ஆகிய பகுதிகளில் 200 மீட்டர் வரை கடல் நீர் உள்ளே புகுந்தது. இதனால் சில்வர் பீச் சிறுவர் விளையாட்டுப் பூங்கா நீரில் மூழ்கியது.
அப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தூத்துக்குடியில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இது குறித்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு 260 விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Monday, 26 December 2011

மனிதர்களா?? மிருகங்களா?? வீடியோ இணைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்


இளகிய மனம் படைத்தவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்


சில காலங்களாய் அரபுலகத்தில் பரவி வரும் கிளர்ச்சி அவர்களின் தலைமையை மாற்றியது அல்லது அகற்றியது. எதனால் தலைவர்கள் மாற்றப்பட்டார்களோ அவற்றின் நிலையை சற்று நாம் உற்றுப்பார்ப்பது அவசியம்.  அமெரிக்காவின் கைக்கூலிகளாய் சில இயக்கங்கள் செய்த வன்முறை இன்று அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. பின்னணி என்னவென்று சரித்திரத்தை நாம் பதிவு செய்கின்றோம்.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”

ஒரு நுளம்புத்திரி(கொசுவத்தி) 100 சிகரெட்டுக்களுக்கு சமம்: ஆய்வில் தகவல்!



ஒரே ஒரு நுளம்புத்திரி (கொசுவத்தி) எரியும் போது வரும் புகை 100 சிகரெட்டுக்களுக்கு சமமான பாதிப்புக்களை உண்டு பண்ணும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நுளம்புகளை ஒழிப்பதற்கு இந்த நுளம்புத்திரிப் பக்கெட்டுக்கள் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சுவாசக்குழாய்கள் மற்றும் நுரையீரல் போன்றன பெருமளவில் பாதிக்கப்படுவதாக் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான பாதிப்புக்களை பொதுமக்கள் அறியாமல் உள்ளனர். இந்த ஆய்வை மலேசியாவைச் சேர்ந்த இதய நோய் சிறப்பு நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தகவல் ஆனது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, 25 December 2011

இயக்கங்களுக்கு எச்சரிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதரர் சிலரின் முக நூல் கருத்துக்கள் உங்களின் பார்வைக்கு...

அதாவது கிராப்புறங்களில் சில பழமொழிகள் சொல்வார்கள் ஆனால் அதை இங்கே சொல்வது அவ்வளவு நாகரீகமில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் சில வார்த்தைகள் மட்டும் "குளத்தின் மீது கோபம்கொண்டு எதையோ (அதை சேர்த்துக்கொள்ளவும்) செய்யாமல் போனது மாதிரி" தற்போது தமிழ்நாட்டு முஸ்லிம்களின் சூழல் உணர்த்துகிறது.

நீங்கள் எத்தனைக் கூட்டம்தான் போடுவீர்கள், எத்தனை அமைப்புகள் தான் ஆரம்பித்து எத்தனைப் பேரை உங்களின் அமைப்பில் சேர்ப்பீர்கள். தமிழ்நாட்டில் இருப்பது மொத்தம் பத்து முஸ்லிம் நபர்கள் என்றால் அதில் ஆளுக்கொரு ஒரு நபரை பிடித்துக்கொண்டு அமைப்பை அமைக்கிரீர்களே உங்களை என்ன சொல்வது? உங்களின்மீது தவறல்ல! எங்களைப் போன்று முட்டாப்பசங்க உங்களை ஆதரிக்கிறார்கள் பாருங்கள் அவங்களை சொல்லணும்.
எழில் நிறைந்த எங்கள் கடையநல்லூர்  சூரிய உதயம் - மறைவு புகைப்படம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


சைபர் க்ரைம் - ஒரு பார்வை

அஸ்ஸலாமு அலைக்கும்


நன்றி : சகோதரர் அப்துல் பாசித்






இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.

Saturday, 24 December 2011

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்'என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு  தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

மீண்டும் மீண்டும் கடையநல்லூரில்


அஸ்ஸலாமு அலைக்கும் 
22.12.2011 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் டிஎன்டிஜே டவுண் கிளை தெருமுனைப் பிராச்சாரம் மெயின் ரோடு சொன்னி டீக்கடைக்கு முன்பு நடைபெற்றது. இதில் உரையாற்றிய டிஎன்டிஜே மாநில பேச்சாளர் (?) கம்புளி அப்துந் நாஸர் சைபுல்லாஹ் அவர்களையும் முபாரக் பள்ளியையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் குறிப்பாக முபாரக் பள்ளியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்களையும் சாடியே திட்டித் தீர்த்தே பேசினார். முல்லைப் பெரியார் விவகாரம் குறித்து தெருமுனைப் பிரச்சாரம் என்று காவல் துறை அனுமதியைப் பெற்று அடுத்தவர்களைப் பற்றி அவதூறுகளை அள்ளி வீசி சட்ட ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக அந்தப் பேச்சு இருந்ததால் இதைக் கண்காணித்துக் கொண்டிருந்த காவல்துறை களத்தில் இறங்கி கம்புளி அப்துந் நாஸரிடமிருந்து மைக்கைப் பிடிங்கி பேசியது போதும் என்று கூட்டத்தை முடித்து வைத்தார். கடையநல்லூரில் இப்படி ஒரு நிகழ்ச்சி இது வரை எவருக்கும் எந்த அமைப்பிற்கும் நடந்ததில்லை. டிஎன்டிஜே என்ற உலகளாவிய (?) இயக்கத்திற்கு மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்றும் அன்புடன் 
ஹிதாயத் 

Thursday, 22 December 2011

Verkilambi.wmv

Ameer Hamza.wmv

Thenkapattinam.wmv

ரியா என்றால் என்ன?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

ரியா என்றால் என்ன?

'ரியா" என்ற
அரபிச் சொல், 'ரஆ" என்ற வேர்ச் சொல்லிருந்து வருகின்றது.
'ரஆ" என்றால் 'பார்த்தான்", 'கவனித்தான்" என்று பொருள்.
'ரியா" என்பதற்கு பகட்டுத்தனம், பாசாங்கு செய்தல், பாவனை, முகஸ்துதி, நயவஞ்சகம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.மனிதர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் அல்லது மனிதர்களின் பாராட்டுக்களைப் பெறும் நோக்கில் அல்லாஹ்வை வணங்குவது அல்லது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் செயல்களில் ஈடுபடுவது என்பதே ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் 'ரியா" எனப்படுகின்றது.


Courtesy :Ahmed Yahya facebook Article 


இத்தகைய செயல்களைத் தூண்டும் எண்ணம் முற்றிலும் தூய்மையற்றதாக இருக்கலாம். அதாவது அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெற வேண்டுமென்ற எண்ணம் சிறு துளி கூட இல்லாமல், மனிதர்களைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டும் அச்செயலில் ஒரு மனிதர் ஈடுபட்டிருக்கலாம்: அல்லது அவரது எண்ணத்தின் ஒரு பகுதி மட்டும் தூய்மையானதாக இருக்கலாம். அதாவது அச்செயலில் ஈடுபடும் போது அவரது எண்ணத்தில் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பது ஒரு பகுதியாகவும், அதே நேரத்தில் மனிதர்களின் பாராட்டுதல்களைப் பெற வேண்டும் என்பது அவரது எண்ணத்தின் இன்னொரு பகுதியாகவும் இருக்கலாம்.

Tuesday, 20 December 2011

எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்


Post image for எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!

பித்அத் இயக்கங்கள்-ஃபித்னா ஆலிம்கள்


அஸ்ஸலாமு அலைக்கும்

”அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ’ என்ற கலிமாவை எவர் மொழிகிறாரோ, அந்த நிமிடமே படைத்த ஏக இறைவனை (தவ்ஹீத்) மட்டும் வணங்கி முஸ்லிமாக மாறி விடுகிறார். இவர் பிற ஷிர்க், பித்அத் முஸ்லிம்களிடமிருந்து பிரித்துக் காட்ட “நான் தவ்ஹீது முஸ்லிமாகி விட்டேன்’ என எவரும் கூறுவதில்லை.  உதாரணமாக சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் பெரியார்தாசன் முன்பு, இந்துவாய், பின்பு இறை மறுப்பாளராய், மீண்டும் புத்தரை ஏற்பவராக இருந்தார். பின்பு குர்ஆன் படித்து விளங்கி அல்லாஹ்வின் நேர்வழி காட்டுதல் “அகில உலகத்தையும் படைத்த இறைவன் ஒருவனே! அவனுக்கு இணை வைப்பது பெரும் குற்றம். படைத்த ஒருவனை மட்டுமே (தவ்ஹீது) வணங்க வேண்டும்’ என்று கலிமாவை மொழிந்து பெரியார்தாசன், அல்லாஹ் தாசனாய் அப்துல்லாஹ்வாக தாய் மார்க்கத்திற்கு மீண்டார். 

மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்
ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:—
    1.சதக்கத்துல் ஜாரியா2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்
    ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

Monday, 19 December 2011

CMAT மேனேஜ்மெண்ட்படிப்புகளில்சேர பொதுநுழைவுத்தேர்வு


அஸ்ஸலாமு அலைக்கும்


மேனேஜ்மெண்ட் படிப்புகளில் சேர இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வை நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. டான்செட் நுழைவுத் தேர்வு மூலம் மேனேஜ்மெண்ட் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த தமிழக மாணவர்களுக்கு இந்தத் தேர்வு கட்டாயமா,இல்லையா என்பதை தமிழக அரசு விரைவில் தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்!


அஸ்ஸலாமு அலைக்கும்

பெண்களின் ஆடை

பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை?

இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!

இதை இன்று நாம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். ஆண்கள் பயன்படுத்துகின்ற உள்ளாடை முதற்கொண்ட அனைத்து பொருள்களின் விளம்பரங்களிலும் அரை குறை ஆடையுடன் கூடிய பெண்களின் கவர்ச்சியையே முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் பெண்களின் கவர்ச்சியே வியாபார வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குவதைப் பார்க்கலாம்.

இதயநோய், புற்றுநோயை குணமாக்கும் அகத்திப்பூக்கள்


 அஸ்ஸலாமு அலைக்கும்




அகத்திக்கீரையைப் போல அகத்திப்பூக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. அகத்திப்பூவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் காணப்படுகிறது. இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் அதிக பலத்தை தருகிறது. அகத்திக்பூக்கள் சற்றுப் பெரியதாக இருக்கும். இவற்றை யாரும் சரியாக உணவாக உட்கொள்வதில்லை. இவற்றை கீரையுடனும் சமைத்து சாப்பிடலாம். தனியாக கூட்டு
வைத்தும் சாப்பிடலாம். வெயிலில் அதிகமாக உழைப்பவர்களுக்கும், கண் எரிச்சல், தலைச்சுற்றல், சிறுநீரில் மஞ்சள் நிறமாக போவது போன்ற பாதிப்புகளுக்கு அகத்திப்பூக்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
புகை பாதிப்பை போக்கும்
அகத்திப்பூக்களை சிறு துண்டுகளாக நறுக்கி சமைத்து உணவோடு உண்டு வர அந்த ஏழு நாட்களில் புகைத்த விசம் மலம் மூலம் வெளியேறிவிடும். பீடி, சிகரெட் பிடிப்பவர்களுக்கு அவற்றில் நாட்டத்தை குறைக்கச் செய்யும்.
சளித்தொல்லை, தும்மல், பித்தம் ஆகியவற்றை நீக்கும் சக்தி
அகத்திப்பூக்களுக்கு உண்டு. உடல்சூடு, மூலநோய், வாதம், கீழ்வாதம், மார்புச்சளி ஆகிய நோய்களை அகத்திப்பூக்கள் குணமாக்கும்.

Friday, 16 December 2011

இதயத்தை காப்பாற்றும் வழி!


அஸ்ஸலாமு அலைக்கும்

ங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது.
 1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?
மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.

 2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்?

முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று  அறிந்து கொள்ள முடியும்.

 3. எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்?

நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும். 

Thursday, 15 December 2011

உப்பினால் உலகில் மிகப் பெரிய ஓவியம் படைத்த பெண்


உப்பினால் உலகில் மிகப் பெரிய ஓவியம் படைத்த பெண்

http://www.manithan.com/photos/thumbs/2011/12/solt_drawing_001.jpg


கல் உப்பை பயன்படுத்தி 84 சதுர மீட்டர் பரப்பளவில் வண்ணங்களில் மிகப் பெரிய ஓவியம் தீட்டி இந்தியாவில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சரிதா சதீஷ் சாதனை படைத்துள்ளார்.
உலக வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட இந்த ஓவியம் எலைட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’


மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’


பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.
மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.

Wednesday, 14 December 2011

இஸ்லாமும் சீட்டுக் குலுக்கலும்

அஸ்ஸலாமு அலைக்கும்

மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -
அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).
ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று. 37: 140 - 143

ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக; மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது: 68:49

ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.68:50

Tuesday, 13 December 2011

நீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..?


அஸ்ஸலாமு அலைக்கும் 

நன்றி : நான் முஸ்லிம் 
                                                              ஓரிறையின் நற்பெயரால்

தவ்ஹீது (ஏகத்துவம்)
தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள்.
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர்.

அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத்
  'அஹ்லுஸ் ஸூன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் ஆவர்

இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வார்த்தைகளாக சமூகத்தில் வலம் வருவதுதான் ஆச்சரியமான வேதனை!

இந்திய ஆட்சிப் பணி

   
Public Service Commission



அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்)மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் ஆட்சியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா. ப மற்றும் இந்திய வனப் பணி (அ) இ. வ. ப ஆகும். இ ஆ ப அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் பணித்துறை ஆட்சி நடைபெறுவதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்திய ஆட்சிப் பணிக்காக 60 முதல் 90 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சுமார் 3,00,000 விண்ணப்பங்களில் குடியுரிமை தேர்வின் மூலம் இந்தியாவின் செயல் வல்லுனர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் குறைந்த அளவுக் கல்வித் தகுதியாக உள்ளது. 

வரலாறு, 

இந்திய ஆட்சிப் பணியின் முன்னோடியாக இந்தியாவில் இருந்த அமைப்பு இந்தியக் குடியுரிமைப் பணி (கலெக்டர்-ஆட்சியர்) என்ற அமைப்பாக இந்தியா பிரித்தானியரின் காலனி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் இருந்தது. இந்தியா விடுதலையடைந்த பின் இவ்வமைப்பு இந்திய ஆட்சிப் பணி என்று பெயர் மாற்றம் கண்டது. 

முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸ்: தடை கூறும் சட்டமென்ன?


அஸ்ஸலாமு அலைக்கும் 



ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை நேற்று (11.04.2011) முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Monday, 12 December 2011

On-line Registering: ஆதர் அடையாள அட்டை(Aadhar Card)


அஸ்ஸலாமு அலைக்கும் 



இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டையை UIDAI (Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு (தமிழ்நாடு உள்பட) பல மாநிலங்களிலும் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான், தற்போது,  இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.

மறந்துவிட்ட மன்னிக்கும் தன்மை

அஸ்ஸலாமு அலைக்கும் 


''எல்லாப் புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!''


         ''மறந்துவிட்ட மன்னிக்கும் தன்மை!''– முஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால், 
விலகிவிட்ட விட்டுக் கொடுக்கும் தன்மை தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிருக்கின்றன. இதில் வேதனையான விசயம் என்னவென்றால் குர்ஆன், ஹதீஸ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தான… இத்தகைய விட்டுக்கொடுக்கும் தன்மை சிறிதும் அற்றவர்களாக அதிகம் காணப்படுகின்றனர். இவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி அவனின் மாயவலையில் விழுந்திருக்கிறார்கள். 

ஆயினும் மனிதர்களின் உள்ளங்களைப் புரட்டி நேர்வழிப்படுத்துபவனான வல்ல அல்லாஹ்வின் வசனங்கள், 

“நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக” (87:9) 
மற்றும்
“நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்” (51:55) 

போன்ற அறிவுரைகளுக்கேற்ப பகைமை உணர்வு, பழி வாங்கும் உணர்வு, பிரிவினைகளை ஏற்படுத்தும் செயல் ஆகிய அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற, இறைவனால் பெரிதும் விரும்பப்படுகின்ற பிறர் குறைகளை மன்னித்து விட்டுக்கொடுக்கும் தன்மையையும் அதன் அவசியத்தையும் பற்றி அறிந்து கொள்வோம். 

இஸ்லாமும் அறிவியலும் பகுதி-9

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நான் படித்ததில் பிடித்ததை பதிவு செய்கின்றேன்


பூமியின் முளைகளாக இருக்கும் மலைகள் குறித்து அல்-குர்ஆன்!

கோள வடிவிலான இந்த பூமியின் மேற்பரப்பு (Outer Crust Of The Earth) மட்டுமே உறுதியாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. ஆனால், உள்பகுதியில் ஆழமாக செல்ல செல்ல அவைகள் அதிக வெப்பமுடையதாகவும், உருகிய நிலையிலும் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். பூமியின் மேற்பரப்பில் உள்ள இந்த இருகிய பகுதி (Outer Crust) பூமியின் மேற்பரப்பிலிருந்து 1 முதல் 10 கிலோமீட்டர் வரைதான். அதற்கு கீழே உருகிய நெருப்பு குழம்புகள் இருக்கின்றன.

இஸ்லாமும் அறிவியலும் பகுதி-8

பால் உற்பத்தியாகும் இடம் குறித்து அல்-குர்ஆன்



உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார். இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார்.

இஸ்லாமும் அறிவியலும் பகுதி-7

பூமியின் கூரை!

பூமியின் காந்த மண்டலம் (Earth’s Magnetosphere)

நமது பூமி மற்றும் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்திற்கே வரும் ஆபத்து என்னவெனில், காற்று மண்டலத்திற்கு அப்பாலுள்ள எல்லையற்ற ஆகாய வெற்றுவெளியில் இந்த காற்று மண்டலம் முழுவதுமே சிதறுண்டு போகும் அபாயமாகும். இதுநாள் வரையிலும் பூமியின் புவியீர்ப்பு விசையே நமது காற்றுமண்டலத்தை அவ்வாறு சிதறுண்டு போய்விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானிகள் சூரியனின் வெப்பக்கதிர்களால் மிக அதிக அளவில் வெப்பமடையும் இந்த வாயுக்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சக்தி பூமியின் ஈர்ப்புச் சக்திக்குக் கிடையாது என்கின்றனர். அப்படியானால் நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பிராணவாயுவையும் நமக்கு கூரையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓஸோன் வாயு மண்டலத்தையும் இந்த பரந்த ஆகாய வெற்றுவெளியில் சிதறுண்டு போய்விடாமல் பாதுகாக்கும் சக்தி எது என தேடிய விஞ்ஞானிகளுக்கு புலப்பட்டது தான் பூமியின் காந்த மண்டலம் (Earth’s Magnetosphere).

இஸ்லாமும் அறிவியலும் பகுதி-6

பூமியின் கூரை! ( ஓசோன் வாயு மண்டலம்)

சூரியன் என்பது நாம் வசிக்கும் பூமியைவிட பல மடங்கு அளவில் மிகப்பெரிய நெருப்புப் பந்து. அதனுள்ளே மிகப்பெரிய அணு உலையே இருக்கின்றது. அதில் வினாடிக்கு 500 டன் எடையுள்ள ஹைட்ரஜன் வாயுக்கள் எரிந்து ஹீலியம் வாயுக்களாக மாறுகிறது. அதனால் படுபயங்கரமான கதிர்கள் சூரியனிலிருந்து ஆகாய வெளியெங்கிலும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது.

இந்த பிரமாண்டமான அணு உலையிலிருந்து பாய்ந்து வரும் கதிர்களுள் ‘புற ஊதாக் கதிர்களும்’ ஒன்று. இது மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் கேடு Sunவிளைவிக்கும் நாசக்கதிர்களாகும். இக்கதிர்கள் நம்மீது படுமானால் நாம் பல்வேறு கேடுகளுக்கு ஆளாகி அழிவைச் சந்திக்க நேரிடும். சரி அப்படியானால் சூரியனிலிருந்து ஆகாயமெங்கிலும் பாய்ந்தோடிச் செல்லும் இந்த அழிவுக் கதிர்கள் ஏன் நமது பூமியைத் தாக்குவதில்லை? என்ற கேள்வி எழலாம்.

இஸ்லாமும் அறிவியலும் பகுதி-5

வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது!


சிறிது காலத்திற்கு முன்புவரை நமது உடலில் வலியுணர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மூளையே என்று விஞ்ஞானிகள் எண்ணிக் கொண்டிருந்தனர்.. ஆனால் சமீபத்தில் தான் நுண்ணிய கருவிகளைக் கொண்டு மனித தோல்களை ஆராய்ந்ததில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் நரம்பு மண்டலங்கள் (Pain Receptors) தோல்களிலேயே இருக்கின்றன என்று நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தோல்களில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் இந்த நரம்பு மண்டலங்கள் தீக்காயங்களினால் கருகிவிட்டால் (Third degree burn) நமக்கு எந்த ஒரு வலியுணர்ச்சியும் (வேதனை-Pain) ஏற்படுவதில்லை.

இத்தனை அறிவியல் நுணுக்கம் வாய்ந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சத்தியத்திருமறை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பது நம்மை மட்டுமல்லாது இன்றைய நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் வியப்புக்குள்ளாக்குகிறது.

இஸ்லாமும் அறிவியலும் பகுதி-4

குர்ஆன் கூறும் கருவியல் :


கனடா நாட்டில் உள்ள டொரண்டா பல்கலைக்கழகத்தில் மனித உடற்கூறு இயல் துறையின் தலைவராக (Head and Chair Person of the Department of Anatomy) இருப்பவர் தான் பேராசிரியர் டாக்டர் கீத் மூர் (Dr. Keith Moore). இவர் கருவியல் (Empryology) துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர் ஆவார். இவர் எழுதிய ‘Developing Human’ என்ற கருவியல் பற்றிய நூல் உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பாடபுத்தகமாக (Reference Book) இருக்கிறது.


குர்ஆன் கூறும் கருவியல் சம்பந்தமான வசனங்களுக்கான விளக்கங்களை இவரிடம் கேட்டபோது, ‘தாயின் கருவில் குழந்தை எப்படி வளர்கின்றது என்பதை மைக்ரோஸ்கோப் என்ற கருவி இல்லாமல் அறிந்து கொள்ளவே முடியாது. 17-ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் மைக்ரோஸ்கோப் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், 18-ஆம் நூற்றாண்டு வரை கருவியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கு மைக்ரோஸ்கோப் பயன்படுத்தப்படவில்லை’

இஸ்லாமும் அறிவியலும் பகுதி-3

ஆண் அல்லது பெண் குழந்தை – ஆணின் உயிரணுவே காரணம்!


குர்ஆன் கூறும் கருவியல் :


“இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் – (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு” (அல் குர்ஆன் 53:45-46)


(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (அல் குர்ஆன் 75:37)

ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு அவளுடைய கனவனின் உயிரணுவே காரணம்: மனைவி காரணமல்ல. என்ற தற்கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருமறை வசனம் கூறியிருப்பது குர்ஆன் கூறும் அறிவியல் அற்புதங்களில் ஒன்றாகும். இது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

இஸ்லாமும் அறிவியலும் பகுதி-2

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ் 

அணுவைவிட மிகச்சிறிய பொருட்களும் உண்டு!




அறிவியலில் இயற்பியல் என்றொரு பிரிவு இருப்பதை நாம் அறிவோம். இதன் உட்பிரிவுதான் அணுக்களைப் பற்றிய பாடமாகும். அணு என்பது ஒரு பொருளின் மிக மிக சிறிய துகளாகும்.

இஸ்லாமும் அறிவியலும் பகுதி-1

அஸ்ஸலாமு அலைக்கும் 

விலகாமல் செல்லும் கோள்கள்!

பேரண்டத்தில் (Universe) பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களும் (Galaxies) அவற்றில் எண்ணற்ற நட்சத்திரங்களும் (Stars) அந்த நட்சத்திரங்களின் ஈர்பற்றலில் பல கோடிக்கணக்கான கோள்களும் (Planets) இருக்கின்றன.

பேரண்டத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களுள் ஒன்றுதான் நமது பூமி மற்றும் சூரியன் இருக்கும் பால்வெளி நட்சத்திர மண்டலம் (Milkyway Galaxies) ஆகும். இந்த பால்வெளி நட்சத்திர மண்டலத்தில் நமது சூரியக் குடும்பமும் இதைப் போன்ற இன்னும் ஏராளமான நட்சத்திரங்களும் இருக்கின்றன. நமது சூரியக்குடும்பத்தில் நாம் வசிக்கும் பூமியும் இன்னும் மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜுபிடர், நெப்டியூன், புளுட்டோ, சனி போன்ற கோள்களும் அவற்றிற்கு பல சந்திரன்களும் இருக்கின்றன.Milky Way Galaxy


அற்புதம் உலகில் இதுவும் ஒரு அற்புதம் தான் (ஜம் ஜம்)

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ள சகோதரர்களே நான் படித்ததில் நல்லவற்றை உங்களுக்காக பதிவு செய்கின்றேன் .

நன்றி : Islamic Dawa Group 

மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.