Saturday, 3 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குழிவின் குறைஷியர்…(தொடர்…)

யாதிரிகர்களை உபசரிக்கும் பொறுப்பினை ஹாஷிமிடமே அவரது சகோதரர்கள் ஒப்படைத்தனர். புனித யாத்திரைக் காலம் ஆரம்பமாகுமுன்னர் ஆலோசனா மன்றத்தில் ஹாஷிம் எழுந்து கூறுவார்:
“ஓ குறைஷிக் குலத்தோரே! நீங்கள் இறைவனின் அயலவர்கள். இறைவனின் இல்லத்தைச் சேர்ந்தவர்கள். யாத்திரைக் காலத்தில் இறைவனின் விருந்தினர்கள் அவனது இல்லத்தை தரிசிக்கவென உங்களிடம் வருவார்கள். உங்கள் பெருந்தன்மை மீது இறைவனின் விருந்தினர்கள் கொண்டுள்ள உரிமைகள் வேறு எந்த விருந்தினர்க்கும் இருக்க முடியாதவை. எனது செல்வத்தின் மூலம் இப்பொறுப்பை நான் நிறைவேற்றி வைக்க முடியுமாயின், நிச்சயமாக உங்கள் மீது இப்பளுவச் சுமத்த மாட்டேன்.” - இப்னு இஸ்ஹாக் 87

மக்காவுக்கு வெளியேயும் கூட ஹாஷிம் நன்கு மதிக்கப்பட்டு வந்தார். மாரி காலத்தில் யெமன் நோக்கியதும், கோடைக் காலத்தில் வடமேற்கு அறேபியாவை நோக்கியதுமான இரு வர்த்தக பிரயாணங்களை ஒழுங்கு படுத்தியமைத்தவரும் இவரே.
கோடைக் கால வர்த்தக மார்க்கம் பாலஸ்தீன், ஸிரியா வரை நீண்டு சென்றது. அக்காலத்தில் ரோமப் பேரரசின் பைஸாந்திய ஆட்சியின் கீழ் இருந்து வந்தது ஸிரியா. இரு மார்க்கங்களும் பண்டைய வாசனைத் திரவிய மார்க்கத்தை அண்மியவனவாக அமந்திருந்தன.

மக்காவுக்கு வடக்கே பதினொரு ஒட்டகைப் பிரயாண நாட்களின் தூரத்தில் இருந்த யத்ரிப் எனும் பாலைவனச் சோலை கோடை கால வர்த்தக மார்க்கத்தின் முக்கியமானதொரு தரிப்பிடமாக விளங்கியது.

யூதர்களது பூரண செல்வாக்கின் கீழிருந்து வந்த யத்ரிப், பின்னர் தென் அறேபியாவிலிருந்து வந்த அறாபிய குலமொன்றன் ஆதிக்கத்துக்குள்ளாகியது. எனினும் அங்கு யூதர்கள் தொடர்ந்தும் போதிய செல்வாக்குப் படைத்தவர்களாகவும், சமூக விவகாரங்களில் கூடிய பங்கு பெறுவோராகவும் இருந்தனர். அத்தோடு தமது மத அனுஷ்டானங்களையும் தனியே பாதுகாத்துப் பேணி வந்தனர்.
யத்ரிபின் அறபிகளோ தாய் வழி உரிமையோடான சில சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தொழுகுவதோடு திருப்தியுற்றனர். தாம் முன்னோரிலிருந்த கைலா எனும் மாதின் வழி வந்தோராக, யத்ரிபின் அறபிகள் அனைவருமே மொத்தமாகக் ‘கைலாவின் குழந்தைகள்’ என அழைக்கப் படலாயினர். என்றாலும் அப்போதைய கால கட்டத்தில் இவர்கள், அவ்ஸ் - கஸ்ரஜ் என்ற இரு கோத்திரங்களாகப் பிரிந்திருந்தனர்.

கைலாவின் இரு புதல்வர்களது பெயர்களே அவ்ஸ், கஸ்ரஜ் என்பன.

கஸ்ரஜ் கோத்திரத்தின் மிக்க செல்வாக்கு வாய்ந்த பெண்களுல் ஒருவராக விளங்கியவர் ஸல்மா. நஜ்ஜார் கிளையின் அம்ர் என்பாரின் மகள் அவர். மக்கத்து ஹாஷிம், யத்ரிபின் ஸல்மாவை மணந்துக் கொள்ள விரும்பினார். தனது விவகாரங்கள் அனைத்தினதும் கட்டுப்பாடு முழுக்க தன் கீழேயே இருக்க வேண்டும் என்ற நியதியுடன் திருமணத்துக்கு ஒப்புதலளித்தார் ஸல்மா. ஸல்மா ஒரு மகனைப் பெற்றெடுத்தார். மகன் பதினான்கு வயதை அடையும் வரையும் சல்மா அவரை யத்திரிபிலேயே வைத்திருந்தார். ஹாஷிமும் இதற்கு எதிர்புகள் தெரிவிக்கவில்லை. பாலைவனச் சோலை சார்ந்த நோய்கள் பற்றிய அச்சங்கள் இருந்தாலுங் கூட, அவையும் அங்கு வாழ்பவர்களை விட, பிற இடங்களிலிருந்து வருபவர்களையே அதிகம் தாக்குவன என்ற ஒரு நம்பிக்கையிருந்தது. மேலாக யத்ரிபின் சீதோஷ்ண நிலைமையும் மக்காவை விடச் சிறந்ததாக இருந்தது. அடிக்கடி ஸிரியா நோக்கிச் செல்பவராக இருந்தமையால், செல்லும் போது திரும்பி வரும் வழியிலும், யத்ரிபில் தன் மனைவியுடனும் மகனுடனும் தங்கிக்கொள்ள ஹாஷிமால் முடிந்தது. எவ்வாறாயினும் ஹாஷிம் நீண்ட காலம் உயிர் வாழக்கூடியவராக இருக்கவில்லை. வட புறப் பிரயாணமொன்றின்போது பாலஸ்தீனத்து காஸாவில் சுகவீனமுற்ற ஹாஷிம் அங்கேயே மரணமானார்.

ஹாஷிமுக்கு உடன்பிறந்த சகோதரர் இருவர் இருந்தனர். அப்த்-ஷம்ஸ், முத்தலிப் என்பன அவர்களது பெயர்களா இருந்தது.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்

No comments:

Post a Comment