தேவை ஓர் இறைதூதர்
அப்த்-அல்-முத்தலிப், ஹுபலை வழிப்பட்டவரல்ல, ஏக இறைவனையே - அல்லாஹ்வையே - அவர் வழிபாடு செய்தார். எனினும் பல தலைமுறைகளாக இறைவனின் இல்லத்தினுள்ளேயே இருந்து வந்த முஆபிய ‘ஹுபல்’ எனும் சிலை, குறைஷியரைப் பொறுத்தமட்டில் ஆன்மீக செல்வாக்கும் அருளும் நிரம்பியதொரு சின்னமாகவே விளங்கியது. புண்ணியத் தலங்களிலெல்லாம் பெருமை மிகு ஆலயத்தில் ஹுபல் நிலை பெற்றிருப்பதே ஒரு கொளரவம். வேறு பல புனிதத்தலங்கள் அறேபியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டன. இவற்றிலெல்லாம் சிறப்பு மிக்கனவாயிருந்தவை ஹிஜாஸ் பிரதேசத்தில் காணக்கிடந்த மூன்று கோயில்களாகும். ‘கடவுளின் பெண் மக்கள்’ எனக் கருதப்பட்ட அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத் எனும் மூன்று சிலைகளினதும் கோவில்களே அவை.
யத்ரிபின் ஏனைய அறபிகளைப் போல அப்த்-அல்-முத்தலிபும் மனாத்தை வழிபடப் பழக்கப் பட்டிருந்தார். யத்ரிபுக்கு மேற்கே செங்கடலை ஒட்டிய குதைத் எனும் பிரதேசத்தில் இந்த மனாத்தின் கோயில் இருந்தது. குறைஷிகளுக்கு அதிக சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்தது அல்-உஸ்ஸாவின் ஆலயமாகும். இது, மக்காவிலிருந்து ஒரு நாள் ஒட்டகைப் பிரயாண தூரத்திலுள்ள நக்லா எனும் சமவெளியில் இருந்தது. இன்னுமொரு நாள் அதே திசையில் பிரயாணம் செய்தால் தாயிப் எனும் நகரை அடைய முடியும்.

வசதியான, செழுமைமிகு பிரதேசமான தாயிப், அறபியரின் பெரும் வம்சமொன்றாயிருந்த ஹவாஸின் கோத்திரத்தின் ஒரு கிளையினரான ‘தகீப்’களின் கீழ் இருந்தது. ‘தாயிப் மாது’ என வழிபடப்பட்டது ‘அல்-லாத்’. அல்-லாத்தின் சிலை செல்வம் நிறைந்ததோர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதன் காவலர்கள் என்ற வகையில் தகீப்கள் தம்மைக் குறைஷியருக்குச் சமமானவர்களாகக் கருதலாயினர்.
மறுபுறம் குறைஷியரோ தமது ‘இரு நகரங்கள்’ என மக்காவையும் தாயிபையும் குறித்துப் பேசலாயினர். செழுமையும், சிறந்த சீதோஷ்ண நிலையும் கொண்டு ‘ஹிஜாஸின் பூஞ்சோலை’ எனக் கணிக்கப்பட்டு வந்தது தாயிப்.
தாயிப்வாசிகள் எவ்வளவுதான் தமது கடவுளை மேம்படுத்தி வைத்திருந்தாலும் கூட, மக்காவிலுள்ள இறைவனின் இல்லத்துக்குச் சமமானதாக அது இல்லாமை குறித்து உள்ளூரப் பொறாமை கொண்டவர்களாகவே இருந்தார்கள். என்றாலும் அவ்வாறு இருப்பதனையே அவர்கள் ஏற்க வேண்டியுமிருந்தது. ஏனெனில், இஸ்மாயீல் நபியவர்களின் பரம்பரையில் வந்தவர்களாக, அவர்களும் மக்காவிலேயே தமது மூலத்தைக் கொண்டிருந்தனர். எனவே அவர்களது உணர்வுகள் கலப்பானவையாகவும், சிலபோது முரண்பட்டவையாகவும் விளங்கின. குறைஷியரோ யாரைக் குறித்தும் பொறாமைப்பட வேண்டியிருக்கவில்லை. தாம் உலகில் மத்தியில் வாழ்பவர்கள் என்பதோடு, உலகின் எத்திசையிலிருந்தும் யாத்திரிகர்களை கவர்ந்திழுக்கும் காந்த சக்தியுடைய நகரத்தவர் தாம் என்ற உணர்வினையும் அவர்கள் பெற்றிருந்தனர். சூழ வரவுள்ள கோத்திரங்களுக்கும் தமக்கும் இடையில் இருந்து வரும் நல்லுறவுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்வதே அவர்களது பாரிய பொறுப்பாக இருந்தது.
இவற்றையெல்லாம் நன்குணர்ந்தவராயிருந்தார், கஃபாவின் யாத்திரிகர்களை உபசரிக்கும் பொறுப்பினை ஏற்றிருந்த அப்த்-அல்-முத்தலிப். பல்வேறு குலத்தவரையும் உள்ளடக்கியதாகவே அவரது பொறுப்புகள் அமைந்திருந்தன. இப்பொறுப்புகளைப் பொதுப்பட எல்லாக் குறைஷியருமே பகிர்ந்து கொண்டனர். மக்காவை வந்து சேரும் யாத்திரிகர்கள், தமது சொந்த இடங்களில் இருப்பது போன்ற உணர்வையே பெற வேண்டும். அவர்களை உபசரிப்பதென்பது, அவர்கள் வழிபட்டு வந்தனவற்றையும் உபசரிப்பதாகவே அமைந்தது. எனவே அவர்கள் தம்முடன் கொண்டு வரும் சிலைகளுக்கும் கொளரவம் செலுத்தத் தவறக் கூடாது. அச்சிலைகளையும் நியாயப்படுத்தி ஏற்று, அவற்றின் சக்திகளில் நம்பிக்கையும் கொள்வது மரபு வழியாக வந்ததொரு வழக்கம். அவர்களது தந்தையாரும், பாட்டனார்களும், அவர்களது முன்னோர்களும் கூட வழிவழியாகச் செய்து வந்தது அது. எவ்வாறாயினும் அப்த்-அல்-முத்தலிபைப் பொறுத்த மட்டில் இறைவனே மிகப் பெரியவன். சமகால குறைஷிய, குஸாஅ, ஹவாஸின் உட்பட ஏனைய கோத்திரத்தவர்கள் அனைவரையும் விட அப்த்-அல்-முத்தலிப், இப்றாஹீம் நபியவர்கள் கொணர்ந்த இறைக்கோட்பாட்டை மிகவும் அண்மியவராக இருந்தார் என்பதில் ஐயமில்லை.
எப்போதும் போலவே அப்போதும் இப்றாஹீமிய வழிபாடுகளின் தூய்மையைத் தொடர்ந்தும் பேணி வந்த சிலர் இருக்கத்தான் செய்தனர். மரபு வழியாக ஏற்கப்பட்டு வந்தாலும்கூட, சிலை வணக்கமானது புகுத்தப்பட்ட புதியதோர் அம்சம் என்பதனையும், அதிலிருந்து பண்டைய புனிதத்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதனையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.
வரலாற்றினைச் சிறிது ஆழ்ந்து நோக்கினால் இஸ்ராயீலின் சந்ததியினரது பொன்னிற மாட்டைவிட ஹுபல் எவ்விதத்திலும் மேன்மையானதல்ல என்பதை உணரக் கூடியதாயிருந்தது.
இந்த ‘ஹுனபா’ சிலைகளை ( ஹனீப் என்பதின் பன்மை ஹுனபா…‘பழமை பேண்’ என்ற கருத்திலும் வருவது. பார்க்க குர் ஆன் 6:161
(நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்றாஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.அல் குர்ஆன் : 6 : 161 ) முற்றாகப் புறக்கணித்ததோடு, மக்காவில் அவற்றிற்கு இடமளிக்கப்பட்டிருப்பது முற்றும் தெய்வதூஷணையாகவும், தூய்மையைக் கெடுப்பதாகவுமே அமைந்ததெனக் கொண்டனர்.
மக்கத்து வழக்கங்களுடன் ஒத்துப் போகாத அவர்களது கொள்கைகளினாலும், மனந்திறந்து பேசும் தகைமையினாலும் இவர்கள் மக்கத்துச் சமூகத்தினின்றும் ஒதுக்கியே வைக்கப் பட்டிருந்தனர். அவர்களது ஆளுமையைப் பொறுத்தும், சொந்த வம்சத்தவர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க ஒப்புக் கொள்வதையும், இல்லாமையையும் பொறுத்துமே அவர்கள் கொளரவிக்கப்பட்டனர்; பொறுக்கப்பட்டனர் அல்லது துயருறுத்தப்பட்டனர்.
இன்னும் வரும்…
-இறைவன் நாடினால்,

No comments:
Post a Comment