“ எச்சரிக்கை செய்வீராக ”
இஸ்லாத்தில் சேர்ந்து கொள்ளப் பகிரங்கமான அழைப்புகள் ஏதும் இன்னும் விடுக்கப்படவில்லை. எனினும் பக்தியுணர்வுமிக்க விசுவாசிகளதும், தொழுகையாளர்களதும் எண்ணிக்கை பெருகிச் சென்று கொண்டிருந்தது. இருபாலருமான அவர்களுள் பெரும்பாலோர் இளைஞர்களாகவே விளங்கினர். ஏற்கனவே குறிப்பிடப்பட்டவர்கள் போக, ஆரம்ப விசுவாசிகளுள் நபிகளாரின் உடன் பிறவாச் சகோதரர்களான ஜஅபரும் ஸுபைரும் அடங்குவர். பின்னர் நபிகளாரதும், விசுவாசிகளனதும் உடன் பிறவாச் சகோதரர்கள் பலர் இணைந்து கொள்ளலாயினர் : நபிகளாரின் மாமியாரான உமைமாவின் புதல்வர் அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜஹ்ஷ், அவரது சகோதரர் உபைத்-அல்லாஹ். மற்றுமொரு மாமியாரான பர்ராவின் மகன் அபூஸலமா ஆகியோர் அவர்கள். நபிகளாரின் தாயார் வழியிலான உடன் பிறவாச் சகோதரர்களும் சேர்ந்திருந்தனர் : ஸுஹ்ரா கோத்திரத்தின் அபூவக்காஸின் மகன் ஸஅத், அவரது இளைய சகோதரர் உமைர் ஆகியோர் அவர்கள். எனினும் நபிகளாரது தந்தையாரது சகோதரர்களுள் நால்வருள் எவருமே அன்னாரது தூதினை ஏற்க முன்வரவில்லை. அபூதாலிப் தனது இரு புதல்வர்களான ஜஅபரும் அலீயும் புதிய மதத்தினை பின்பற்றுவது குறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையாயினும், தனது மூதாதையரின் சமய நம்பிக்கைகளைக் கைவிட அவர் தயாராக இல்லை. அப்பாஸ் நழுவும் வகையில் பேசினார். ஹம்ஸா இதனை விளங்கிக் கொள்ள முடியாதவராயிருந்தார். என்றாலும் அப்பாஸும் ஹம்ஸாவும் தனிப்பட்ட முறையில் நபிகளாரின் மீதான தமது நெருங்கிய பந்தத்தை உறுதிப்படுத்தி நின்றனர். ஆனால் அபூலஹப் நேரடியாக, தனது சகோதரரின் மகன் ஒன்றில் தன்னைத் தான் ஏமாற்றிக் கொண்டுள்ளார் அல்லது பிறரை ஏமாற்றி வருகின்றார் என்ற தனது நம்பிக்கையை பகிரங்கமாகவே பேசி வந்தார்.

“ உம்முடைய நெருங்கிய பந்துக்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ” - குர்ஆன்: 26:214
என்ற இறைவசனம் அருளப்பட்டதன் பின்னர் நபிகளார் அலீயை அழைத்து :
“ அல்லாஹ் எனது குடும்பத்தவரையும் நெருங்கிய உறவினரையும் எச்சரிக்கை செய்யும்படி எனக்கு கட்டளையிட்டுள்ளான். எனது சக்திக்கு அப்பாற்பட்டது இக்கருமம். என்றாலும் ஆட்டின் தொடையொன்றனை உணவுக்காகத் தயார்படுத்தும். கோப்பையொன்றில் பாலை நிரப்பும். பின்னர் பனீ-அப்த்-அல்-முத்தலிபினரை க் கூட்டமாக அழையும். எனக்கு கட்டளையிடப்பற்றவற்றை நான் அவர்களுக்கு கூற முடியும். ” எனக் கூறினார்கள்.
தனக்குக் கூறப்பட்டவற்றை அவ்வாறே செய்தார் அலீ.சிறிதேனும் கூட்டவும் இல்லை; குறைக்கவுமில்லை. ஹாஷிம் கோத்திரத்தில் ஏராளமானோர் நாற்பது பேருக்கு குறையாத தொகையினர் - விருந்துக்கு வந்தனர். அலீ கூறினார்:
“ அவர்கள் அனைவரும் கூடியதும் நபிகளார் நான் தயாரித்த உணவைக் கொண்டுவரும்படி கூறினார்கள். ஒரு துண்டு இறைச்சியை எடுத்துக் கடித்து, மீண்டும் பாத்திரத்தில் போட்டு ‘ அல்லாஹ்வின் நாமத்தால் இதனை எடுப்பீர்களாக ’ என்றார்கள். அவர்கள் ஒரே வேளையில் பலர் சேர்ந்து குழுக்குழுவாக அமர்ந்து இனிமேலும் உட்கொள்ள முடியாது போகுமளவு உண்டார்கள். எனினும் கைகளால் அலையப்பட்டிருந்த அடையாளங்களைத் தவிர்த்து, வைக்கப்பட்ட உணவில் எந்த மாற்றத்தையும் என்னால் காண முடியவில்லை. எனது உயிரின் மீது சத்தியமாக, அவ்வுணவு முழுவதனையும் தனி ஒருவருக்குக் கொடுத்திருந்தால் கூட அவர் முழுவதனையும் உண்டு தீர்த்திருப்பார். பின்னர் நபிகளார் :
‘ அவர்களுக்கு அருந்தக் கொடுப்பீராக ’ என்றார்கள். நானும் கொண்டு வந்து வைத்தேன். எல்லோரும் திருப்தியுறக் குடித்தனர். நிச்சயமாகத் தனி ஒருவருக்குப் போதுமான பாலே அக்கோப்பையில் இருந்தது. அதன் பிறகு நபிகளார் அவர்களை நோக்கிப் பேசவென எழுந்தபோது, அபூலஹப் முன்னெழுந்து, ‘ உங்களது உபசரிப்பாளர் உங்களை மாயம் செய்து விட்டார் ’ என்றார். உடனே அனைவரும் பிரிந்து செல்லத் தொடங்கினர் ”.
அடுத்த நாளும் நபிகளார் முன்னைய தினம் போன்றே ஆயத்தங்கள் செய்யும்படி அலீயை வேண்டினார்கள். அனைத்துக் கருமங்களும் முன்னர் போலவே நிறைவேறி வந்தன. இம்முறை நபிகளார் முன்னெச்சரிக்கையாக நடந்து அவர்களை நோக்கி,
“ அப்த்-அல்-முத்தலிபின் மக்களே! நான் கொண்டு வந்திருக்கும் செய்திகளை விட உன்னதமான எந்த ஒரு தூதினையும் உங்களுக்குக் கொண்டு வந்த எந்த ஓர் அறபியையும் நான் அறியமாட்டேன். நான் உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் சிறந்தவற்றைக் கொண்டு வந்துள்ளேன். உங்களை அவனது பாதைக்கு அழைக்கும்படி அல்லாஹ் எனக்கு உத்தரவிட்டுள்ளான். உங்களில் எவர் இவ்விடயத்தில் எனது சகோதரராக, இதனை நிறைவேற்றுபவராக, எனது வாரிசாக விளங்குவீர்கள்? ” - என்றார்கள்.
பூரண அமைதியே நிலவியது. ஜஅபரும் ஸைதும் பேசியிருக்கலாம். என்றாலும் அவர்களது விசுவாசம் குறித்து எவ்வித ஐயங்களும் இருக்கவில்லை. அது போக. ஏனையோரை இஸ்லாத்தினுள் கொண்டு வரும் முயற்சியாகவே இவ்விருந்து அமைந்திருந்தது. அமைதி மேலும் தொடர்ந்து செல்லவே, பதின்மூன்று வயதே ஆன அலி பேச உந்தப்பட்டவராக, “ ஓ அல்லாஹ்வின் தூதரே! இதில் நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன் ” எனப் பகர்ந்தார். நபிகளார் அலீயின் கழுத்தின் பின்புறம் தமது கரத்தை வைத்து. “ உங்கள் மத்தியில் இவரே எனது சகோதரர். எனது நிறைவேற்றாளர். எனது வாரிசு. அவர் கூறுவதை உற்றுக் கேளுங்கள் : அவரைப் பின்பற்றுங்கள் ” என்றார்கள். அனைவரும் எழுந்து நின்று அபூதாலிபை நோக்கி ஏளனமாகச் சிரித்த வண்ணம் கூறினார்கள் : “ உமது மகன் கூறுவதை உற்றுக் கேட்டு அவரைப் பின்பற்றும்படி இவர் உமக்குக் கட்டளையிடுகின்றார் ” - (த. 117.1)
நபிகளாரின் மாமியாரைப் பொறுத்தமட்டில் தனது மகன் ஸுபைரைப் போலவே, ஸபிய்யாவும் தயக்கமின்றி அன்னாரைப் பின்பற்றியொழுகலானார். ஸபிய்யாவின் சகோதரியர் ஐவரும் ஒரு முடிவுக்கு வர இயலாதவர்களாயிருந்தனர். அர்வாவின் வாக்கு, அவர்களனைவரது போக்கையும் சித்தரிப்பதாயமைந்தது. “ எனது சகோதரிகள் என்ன செய்கிறார்களெனப் பொறுத்திருந்து பார்ப்போம் ” என்றார் அவர். திருமண மூலம் நபிகளாரின் சிறிய தாயாரானவரும் தயக்கம் காட்டி நின்ற அப்பாஸின் மனைவியுமான உம்ம்-அல்-பத்லே கதீஜாவின் பின்னர் இஸ்லாத்தினுள் நுழைந்த முதல் பெண்மணியாக அமைந்தார். தனது சகோதரியர் மூவரையும் கூட இஸ்லாத்தினுள் கொண்டு வந்தார் அவர். உடன் பிறந்த சகோதரி மைமூனா, உடன் பிறவாச் சகோதரிகளான ஸல்மா, அஸ்மா ஆகியோர் அவர்கள். உம்ம்-அல்-பத்லின் வீட்டில்தான் ஜஅபர் வளர்ந்து வந்தார். அங்கு வைத்தே அஸ்மாவை அவர் காணவும், அவர் மீது விருப்பொன்றனை வளர்த்துக் கொள்ளவும் தொடங்கினார். அண்மையில்தான் ஜஅபர்-அஸ்மா திருமணம் நடந்திருந்தது. அஸ்மாவின் சகோதரி ஸல்மாவை மணந்திருந்தார் ஹம்ஸா. உடனடியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மற்றுமொருவர் உம்ம்-அய்மன். இவர் குறித்து நபிகளார் கூறினார்கள் :
“ சுவர்க்க வாசிகளிலுள்ள ஒரு பெண்ணை மணக்க விருப்பமுள்ளவர் எவரும், உம்ம்-அய்மனை மணந்து கொள்ளவும் ". - (இ.ஸா. 8:162 )
ஸைதின் செவிகளில் வீழ்ந்த இவ்வாசகம் அவரது மனத்துள் ஆழமாக பதிந்தது. ஸைதை விட மிக மூத்தவராக இருந்தார் உம்ம்-அய்மன். எனினும் ஸைத் மனந்தளர்ந்து விடாது, தன் மனதிலுள்ளதை நபிகளாரிடம் தெரிவித்தார். உம்ம்-அய்மனைத் திருமணத்துக்கு இணங்க வைப்பது நபிகளாருக்கு சிரமமான கருமமாக இருக்கவில்லை. ஸைத் ஒரு மகனுக்குத் தந்தையானார். உஸாமா என சிறுவருக்குப் பெயரிட்டார்கள். நபிகளார் அச்சிறுவர் மீது அளவிறந்த அன்பு செலுத்தினார்கள். நபிகளாரின் பேரனாகவே உஸாமா வளர்ந்து வரலானார்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
இஸ்லாத்தில் சேர்ந்து கொள்ளப் பகிரங்கமான அழைப்புகள் ஏதும் இன்னும் விடுக்கப்படவில்லை. எனினும் பக்தியுணர்வுமிக்க விசுவாசிகளதும், தொழுகையாளர்களதும் எண்ணிக்கை பெருகிச் சென்று கொண்டிருந்தது. இருபாலருமான அவர்களுள் பெரும்பாலோர் இளைஞர்களாகவே விளங்கினர். ஏற்கனவே குறிப்பிடப்பட்டவர்கள் போக, ஆரம்ப விசுவாசிகளுள் நபிகளாரின் உடன் பிறவாச் சகோதரர்களான ஜஅபரும் ஸுபைரும் அடங்குவர். பின்னர் நபிகளாரதும், விசுவாசிகளனதும் உடன் பிறவாச் சகோதரர்கள் பலர் இணைந்து கொள்ளலாயினர் : நபிகளாரின் மாமியாரான உமைமாவின் புதல்வர் அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜஹ்ஷ்,

“ உம்முடைய நெருங்கிய பந்துக்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ” - குர்ஆன்: 26:214
என்ற இறைவசனம் அருளப்பட்டதன் பின்னர் நபிகளார் அலீயை அழைத்து :
“ அல்லாஹ் எனது குடும்பத்தவரையும் நெருங்கிய உறவினரையும் எச்சரிக்கை செய்யும்படி எனக்கு கட்டளையிட்டுள்ளான். எனது சக்திக்கு அப்பாற்பட்டது இக்கருமம். என்றாலும் ஆட்டின் தொடையொன்றனை உணவுக்காகத் தயார்படுத்தும். கோப்பையொன்றில் பாலை நிரப்பும். பின்னர் பனீ-அப்த்-அல்-முத்தலிபினரை
தனக்குக் கூறப்பட்டவற்றை அவ்வாறே செய்தார் அலீ.சிறிதேனும் கூட்டவும் இல்லை; குறைக்கவுமில்லை. ஹாஷிம் கோத்திரத்தில் ஏராளமானோர் நாற்பது பேருக்கு குறையாத தொகையினர் - விருந்துக்கு வந்தனர். அலீ கூறினார்:
“ அவர்கள் அனைவரும் கூடியதும் நபிகளார் நான் தயாரித்த உணவைக் கொண்டுவரும்படி கூறினார்கள். ஒரு துண்டு இறைச்சியை எடுத்துக் கடித்து, மீண்டும் பாத்திரத்தில் போட்டு ‘ அல்லாஹ்வின் நாமத்தால் இதனை எடுப்பீர்களாக ’ என்றார்கள். அவர்கள் ஒரே வேளையில் பலர் சேர்ந்து குழுக்குழுவாக அமர்ந்து இனிமேலும் உட்கொள்ள முடியாது போகுமளவு உண்டார்கள். எனினும் கைகளால் அலையப்பட்டிருந்த அடையாளங்களைத் தவிர்த்து, வைக்கப்பட்ட உணவில் எந்த மாற்றத்தையும் என்னால் காண முடியவில்லை. எனது உயிரின் மீது சத்தியமாக, அவ்வுணவு முழுவதனையும் தனி ஒருவருக்குக் கொடுத்திருந்தால் கூட அவர் முழுவதனையும் உண்டு தீர்த்திருப்பார். பின்னர் நபிகளார் :
‘ அவர்களுக்கு அருந்தக் கொடுப்பீராக ’ என்றார்கள். நானும் கொண்டு வந்து வைத்தேன். எல்லோரும் திருப்தியுறக் குடித்தனர். நிச்சயமாகத் தனி ஒருவருக்குப் போதுமான பாலே அக்கோப்பையில் இருந்தது. அதன் பிறகு நபிகளார் அவர்களை நோக்கிப் பேசவென எழுந்தபோது, அபூலஹப் முன்னெழுந்து, ‘ உங்களது உபசரிப்பாளர் உங்களை மாயம் செய்து விட்டார் ’ என்றார். உடனே அனைவரும் பிரிந்து செல்லத் தொடங்கினர் ”.
அடுத்த நாளும் நபிகளார் முன்னைய தினம் போன்றே ஆயத்தங்கள் செய்யும்படி அலீயை வேண்டினார்கள். அனைத்துக் கருமங்களும் முன்னர் போலவே நிறைவேறி வந்தன. இம்முறை நபிகளார் முன்னெச்சரிக்கையாக நடந்து அவர்களை நோக்கி,
“ அப்த்-அல்-முத்தலிபின் மக்களே! நான் கொண்டு வந்திருக்கும் செய்திகளை விட உன்னதமான எந்த ஒரு தூதினையும் உங்களுக்குக் கொண்டு வந்த எந்த ஓர் அறபியையும் நான் அறியமாட்டேன். நான் உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் சிறந்தவற்றைக் கொண்டு வந்துள்ளேன். உங்களை அவனது பாதைக்கு அழைக்கும்படி அல்லாஹ் எனக்கு உத்தரவிட்டுள்ளான். உங்களில் எவர் இவ்விடயத்தில் எனது சகோதரராக, இதனை நிறைவேற்றுபவராக, எனது வாரிசாக விளங்குவீர்கள்? ” - என்றார்கள்.
பூரண அமைதியே நிலவியது. ஜஅபரும் ஸைதும் பேசியிருக்கலாம். என்றாலும் அவர்களது விசுவாசம் குறித்து எவ்வித ஐயங்களும் இருக்கவில்லை. அது போக. ஏனையோரை இஸ்லாத்தினுள் கொண்டு வரும் முயற்சியாகவே இவ்விருந்து அமைந்திருந்தது. அமைதி மேலும் தொடர்ந்து செல்லவே, பதின்மூன்று வயதே ஆன அலி பேச உந்தப்பட்டவராக, “ ஓ அல்லாஹ்வின் தூதரே! இதில் நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன் ” எனப் பகர்ந்தார். நபிகளார் அலீயின் கழுத்தின் பின்புறம் தமது கரத்தை வைத்து. “ உங்கள் மத்தியில் இவரே எனது சகோதரர். எனது நிறைவேற்றாளர். எனது வாரிசு. அவர் கூறுவதை உற்றுக் கேளுங்கள் : அவரைப் பின்பற்றுங்கள் ” என்றார்கள். அனைவரும் எழுந்து நின்று அபூதாலிபை நோக்கி ஏளனமாகச் சிரித்த வண்ணம் கூறினார்கள் : “ உமது மகன் கூறுவதை உற்றுக் கேட்டு அவரைப் பின்பற்றும்படி இவர் உமக்குக் கட்டளையிடுகின்றார் ” - (த. 117.1)
நபிகளாரின் மாமியாரைப் பொறுத்தமட்டில் தனது மகன் ஸுபைரைப் போலவே, ஸபிய்யாவும் தயக்கமின்றி அன்னாரைப் பின்பற்றியொழுகலானார். ஸபிய்யாவின் சகோதரியர் ஐவரும் ஒரு முடிவுக்கு வர இயலாதவர்களாயிருந்தனர். அர்வாவின் வாக்கு, அவர்களனைவரது போக்கையும் சித்தரிப்பதாயமைந்தது. “ எனது சகோதரிகள் என்ன செய்கிறார்களெனப் பொறுத்திருந்து பார்ப்போம் ” என்றார் அவர். திருமண மூலம் நபிகளாரின் சிறிய தாயாரானவரும் தயக்கம் காட்டி நின்ற அப்பாஸின் மனைவியுமான உம்ம்-அல்-பத்லே கதீஜாவின் பின்னர் இஸ்லாத்தினுள் நுழைந்த முதல் பெண்மணியாக அமைந்தார். தனது சகோதரியர் மூவரையும் கூட இஸ்லாத்தினுள் கொண்டு வந்தார் அவர். உடன் பிறந்த சகோதரி மைமூனா, உடன் பிறவாச் சகோதரிகளான ஸல்மா, அஸ்மா ஆகியோர் அவர்கள். உம்ம்-அல்-பத்லின் வீட்டில்தான் ஜஅபர் வளர்ந்து வந்தார். அங்கு வைத்தே அஸ்மாவை அவர் காணவும், அவர் மீது விருப்பொன்றனை வளர்த்துக் கொள்ளவும் தொடங்கினார். அண்மையில்தான் ஜஅபர்-அஸ்மா திருமணம் நடந்திருந்தது. அஸ்மாவின் சகோதரி ஸல்மாவை மணந்திருந்தார் ஹம்ஸா. உடனடியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மற்றுமொருவர் உம்ம்-அய்மன். இவர் குறித்து நபிகளார் கூறினார்கள் :
“ சுவர்க்க வாசிகளிலுள்ள ஒரு பெண்ணை மணக்க விருப்பமுள்ளவர் எவரும், உம்ம்-அய்மனை மணந்து கொள்ளவும் ". - (இ.ஸா. 8:162 )
ஸைதின் செவிகளில் வீழ்ந்த இவ்வாசகம் அவரது மனத்துள் ஆழமாக பதிந்தது. ஸைதை விட மிக மூத்தவராக இருந்தார் உம்ம்-அய்மன். எனினும் ஸைத் மனந்தளர்ந்து விடாது, தன் மனதிலுள்ளதை நபிகளாரிடம் தெரிவித்தார். உம்ம்-அய்மனைத் திருமணத்துக்கு இணங்க வைப்பது நபிகளாருக்கு சிரமமான கருமமாக இருக்கவில்லை. ஸைத் ஒரு மகனுக்குத் தந்தையானார். உஸாமா என சிறுவருக்குப் பெயரிட்டார்கள். நபிகளார் அச்சிறுவர் மீது அளவிறந்த அன்பு செலுத்தினார்கள். நபிகளாரின் பேரனாகவே உஸாமா வளர்ந்து வரலானார்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
No comments:
Post a Comment