யானை வருடம்
அன்றைய கால கட்டத்தில் யெமன் பிரதேசம் அபிஸீனியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. இப்பிரதேசத்தின் அதிகாரியாக இருந்த அப்ரஹா ஓர் அபிஸீனியர்
முழு அறேபியாவினதும் யாத்திரைத் தலங்களில் உயரிடம் பெற்றிருந்த மக்காவின் மகோன்னத நிலையைத் தகர்க்கும் எண்ணத்துடன் அப்ரஹா ஸன்ஆவில் மாபெரும் ஆலயம் ஒன்றினை நிறுவினார். ஷீபாவின் இராணியினது கைவிடப்பட்ட மாளிகைகளுள் ஒன்றிலிருந்து பளிங்குக் கற்கள் கொண்டு வரப்பட்டன. தங்கத்தாலும் வெள்ளியினாலுமான சிலுவைகள் நிறுவப்பட்டன. பிரசங்க மேடை கருங்காலியும் யானைத் தந்தங்களும் கொண்டமைந்திருந்தது.

பின்னர் அப்ரஹா தனது எஜமானனாகிய நஜ்ஜாஷிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
“ ஓ மன்னவனே! உமக்கு முன்னர் எந்தவோர் அரசனுக்கும் நிறுவப்படாததோர் ஆலயத்தை உமக்காக நான் அமைத்துள்ளேன். அறபிகளது புனித யாத்திரிகர்களை இதனை நோக்கித் திருப்பும் வரை நான் ஓய மாட்டேன்.” தனது நோக்கத்தை அவர் இரகசியமாக வைத்துக் கொள்ளவும் இல்லை. இது, ஹிஜாஸ், நஜ்த் பிரதேசங்களது அறாபிய கோத்திரத்தாரிடையே சினத்தை வளர்ப்பதாயமைந்தது.
முடிவில் குறைஷியருக்குச் சமமான கினானா கோத்திரத்தவன் ஒருவன், ஆப்ரஹாவின் ஆலயத்தின் தூய்மையைக் கெடுக்கும் நோக்கத்தவனாக ஸன்ஆவுக்கு புறப்பட்டுச் சென்றான். ஓர் இரவு, தனது நோக்கத்தை நிறைவேற்றியவனாக அவன் மிகவும் பாதுகாப்பாகத் தனது மக்களிடம் வந்து சேர்ந்தான்.
நிகழ்ந்த சம்பவத்தைச் செவியுற்ற அப்ரஹா கோபங்கொண்டு, கஃபாவை தரைமட்டமாக்குவதெனத் திடசங்கற்பம் பூண்டார். யானையொன்றை முன்னணியில் கொண்டதொரு பெரும் படை தயார் செய்யப்பட்டது. ஸன்ஆவின் வடபுறத்திலிருந்த சில அறாபிய கோத்திரத்தார் இப்படையெடுப்பினைத் தடுத்து நிறுத்த முனைந்தார்கள். எனினும் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுப் பலர் சிறைப் பிடிக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் கத்அம் கோத்திரத் தலைவனான நுபைல். தனது உயிர் காப்பாற்றப்படுவதற்குப் பிரதியுபகாரமாக அவர், படையெடுப்பாளர்களுக்கு வழி காட்டியாக பணி புரிய ஒப்புக் கொண்டார்.
படையினர் தாயிபை அடைந்ததும், கஃபா எனக் கருதிதித் தமது தெய்வமான அல்-லாத்தின் ஆலயத்தை அப்ரஹா தகர்த்து விடலாம் என்றஞ்சிய தகீப் கோத்திரத்தார், வெளியே வந்து அவர்களைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள் தேடி வந்துள்ள இடத்தை இன்னும் அடையவில்லை எனச் சுட்டிக் காட்டிய தகீப்கள், படையினர் மக்காவைச் சென்றடைய ஒரு வழிகாட்டியையும் கொடுத்துதவினர். ஏற்கனவே நுபைல் தம்மிடம் இருந்தாலும் தகீப்களின் வழிகாட்டியையும் அப்ரஹா ஏற்றுக் கொண்டார். என்றாலும் மக்காவிலிருந்து இரண்டு மைல்களுக்கப்பால் முகம்மிஸ் என்ற இடத்தில் தாயிப் வழி காட்டி மரணித்து விடவே அடக்கமும் அங்கேயே நடாத்தப்பட்டது. பின்னர், அவ்வடக்கஸ்தலத்துக்கு கல்லெறிந்து தமது வெறுப்புணர்வைக் காட்டும் வழக்கம் அறபிகளால் மேற்கொள்ளப்பட்டது. அயலில் வாழ்வோர் இன்னும் அதனைத் தொடர்ந்து செய்கின்றனர்.
முகம்மிஸில் தரித்து நின்ற அப்ரஹா, தனது குதிரைப் படையினரில் சிலரை மக்காவின் சுற்றுப்புறத்தை அவதானித்து வரவென அனுப்பினார். அவர்கள் தம் வழியில் கைப்பற்றக் கொள்ளக் கூடியனவாக இருந்தவற்றைப் பெற்று அப்ரஹாவுக்கு அனுப்பி வைத்தனர். அதில் அப்த்-அல்-முத்தலிபுக்குச் சொந்தமான இருநூறு ஒட்டகங்களும் இருந்தன.
குறைஷியரும் சூழவிருந்த பல வம்சத்தவர்களும், யுத்த ஆலோசனைச் சபையொன்றனைன் கூட்டி ஆப்ரஹாவை எதிர்த்து நிற்பதென்பது பிரயோசனமில்லாததொரு கருமமென்ற முடிவுக்கு வந்தனர். இதே வேளை அப்ரஹா, மக்காவின் தலைவரைக் காணவென ஒரு தூதுவரை அனுப்பினார். தாம் யுத்தம் புரிய வந்தவர்களல்ல வென்றும், கஃபாவெனும் ஆலயத்தை அழிப்பது மாத்திரமே தமது நோக்கமென்றும், இரத்தம் சிந்தப்படும் நிலைமைகள் எதனையும் தவிர்க்க வேண்டுமாயின் மக்கத்துத் தலைவர் அபிஸீனிய முகாமுக்கு வரவேண்டும் என்பதுவே தூதாக அமைந்தது.
அப்த்-அத்தார், அப்த்-மனாப் எனும் இரு கோத்திரத்தார்களிடையிலும் கஃபாவின் பொறுப்புகளும், உரிமைகளும் பகிரப் பட்டதன் பின்னர், உத்தியோகபூர்வமான தலைவர்களெவரும் குறைஷியரிடையே காணப்படவில்லை.
என்றாலும் எந்தக் கோத்திரத் தலைவர், மக்கத்து வாசிகள் அனைவருக்குமாகத் தலைமை தாங்கும் உரித்துடையவர் என்பது பற்றிய தீர்க்கமான முடிவு பெரும்பாலோரிடை இருந்தது.
ஆப்ரஹாவின் தூதுவர், அப்த்-அல்-முத்தலிபின் வீட்டுக்கு வழி காட்டப்பட்டார். அப்த்-அல்-முத்தலிப், தன் புதல்வருள் ஒருவருடன், தூதுவரைத் தொடர்ந்து ஆப்ரஹாமின் முகாமை நோக்கிச் சென்றார். அவரது தோற்றப் பொலிவைக் கண்ட ஆப்ரஹா, தனது ராஜாசனத்திலிருந்து எழுந்து அவரை வரவேற்று, விரிப்பொன்றன் மீது அவரோடு அமர்ந்து கொண்டார். பின்னர், தனது மொழிபெயர்ப்பாளரிடம் அப்த்-அல்-முத்தலிப் ஏதும் சகாயம் வேண்டுகின்றாரா என வினவும்படி கூறினார்.
அப்ரஹாவின் படையினர் தனது இருநூறு ஒட்டகங்களைக் கைப்பற்றிச் சென்றுள்ளதாகவும், அவற்றைத் திருப்பித் தந்துவிடும்படியும் வேண்டினார் அப்த்-அல்-முத்தலிப். அவரது வேண்டுகோளின் காரணமாக அப்ரஹா ஆச்சரியத்துக்குள்ளானார். தாங்கள் அழிக்க வந்திருக்கும் அவரது மார்க்கம் குறித்துக் கொஞ்சமேனும் கவலைக் கொள்ளாது, வெறுமனே தனது ஒட்டகைகளைப் பற்றி மட்டுமே வேண்டுகோள் விடுக்கும் இத்தலைவரது நடவடிக்கை அப்ரஹாவை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.
அப்த்-அல்-முத்தலிப் கூறினார்:
“ அந்த ஒட்டகங்களின் எஜமான் நான். ஆலயத்தைப் பாதுகாத்துக் கொள்ள அதன் எஜமான் ஒருவன் இருக்கின்றான்”.
-“எனக்கு எதிராக அவனால் ஆலயத்தைப் பாதுகாக்க முடியாது". என்றார் அப்ரஹா.
“அதனைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்” என்ற அப்த்-அல்-முத்தலிப் “எனது ஒட்டகங்களை தந்து விடும்” என்றார். அப்ரஹாவும் ஒட்டகங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்டார்.
குறஷிகளிடம் திரும்பி வந்த அப்த்-அல்-முத்தலிப், நகரைச் சுற்றி வரவுள்ள மலைகளுக்குப் பின்வாங்கும்படி அவர்களுக்குக் கூறித் தமது குடும்பத்தவரும் மற்றும் சிலரும் சூழ கஃபாவுக்குச் சென்றார். அவரோடு இருந்த அனைவரும் அப்ரஹாவின் படையினரிடமிருந்து தம்மை பாதுகாக்கும்படி இறைவனிடம் இறைஞ்சினர்.
கஃபாவின் கதவிலிருந்த கைப்பிடியைக் கையிலேந்தியவராக “ ஓ இறைவா! உனது அடிமை தனது வீட்டைப் பாதுகாக்கின்றான்; உனது வீட்டை நீயே பாதுகாப்பாயாக! ” எனப் பிரார்த்தித்து. ஏனையோருடன் தானும் சேர்ந்து மலை மீதிருந்த குறைஷிகளை அடைந்து கொண்டார் அப்த்-அல்-முத்தலிப்.
அங்கிருந்து கீழேயிருந்த சமவெளியில் நடப்பவற்றை நன்கு அவதானிக்க முடிந்தது…
இன்னும் வரும்…
- இறைவன் நாடினால்,

No comments:
Post a Comment