தேவை ஓர் இறைதூதர்…( தொடர்…)
அப்த்-அல்-முத்தலிப் நான்கு ஹனீப்களை அறிந்திருந்தார். அவர்களுள் கூடிய கொளரவம் பெற்றிருந்தவர் வரகாஹ் என்பவர்.
அஸத் கோத்திரத்தைச் சேர்ந்த நவ்பல் என்பாரின் மகன் அவர். நவ்பல் அப்த்-அல்-முத்தலிபின் தூரத்து ஒன்று விட்ட சகோதரர்களுள் ஒருவராவார். வரகாஹ் ஏற்கனவே கிறிஸ்தவ மதத்தைத் தழுவியிருந்தார்.
சமகாலக் கிறிஸ்தவரிடையே ஓர் இறைதூதர் வருவது நிச்சயம் என்ற நம்பிக்கை பரவியிருந்தது. பரந்ததொரு நம்பிக்கையாக இது இல்லாதிருந்திருப்பினும், கிழக்கத்திய கிறிஸ்தவ தேவாலயங்களின் சில பெரியார்களும், சாத்திர விற்பன்னர்களும், குறி சொல்வோரும் இவ்வாறானதொரு கருத்தை ஆதரித்து வந்தனர்.

யூதர்களைப் பொறுத்த அளவில், புதியதோர் இறைத்தூதர் வருகை பற்றிய கருத்தை ஏற்றுக் கொள்வது இலகுவாயிருந்தது. அவர்களது நம்பிக்கையின்படி இறைதூதர்களின் வரிசை மஸீஹின் வருகையோடேயே முற்றுபெறுவதனால் அவ்வாறான ஒருவரின் வருகை குறித்து யூதர்கள் அனைவரும் ஒரு மனத்தவராகவே விளங்கினர். யூதர்களின் ரப்பிகள் பலரும், ஏனைய பல சிந்தனையாளர்களும், ஏற்கனவே தம்மிடையில் ஓர் இறைதூதர் தோற்றம் பெற்றிருப்பதாகவே நம்பினர்.
மஸீஹின் தோற்றத்துக்குறிய ஏராளமான குறிப்புகள் நிறைவேறியிருந்தன. எவ்வாறாயினும் நிச்சயமாக அவர் யூத குலத்திலேயே உதிப்பார்; ஏனெனில் யூதர்களே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகத்தவர்- இது யூதர்களின் நம்பிக்கை.
கிறிஸ்தவர்கள் இது குறித்து வேறு கருத்துகள் கொண்டிருந்தனர். வரகாஹ்வும் அதற்கு உட்பட்டிருந்தார்.
எதிர்பார்க்கப்படும் இறைதூதர் ஏன் ஒரு அறபியாக இருக்கக் கூடாது என அவர்கள் சிந்திக்கலாயினர். யூதர்களை விட அறபிகளுக்கே ஓர் இறைதூதரின் தேவை அவசியமானதாக இருந்தது. யூதர்கள் ஏக இறையோனை வழிபடும் இப்றாஹீமிய கடவுட் கோட்பாட்டைப் பின்பற்றி வந்தனர். அத்துடன் அவர்கள் சிலை வணக்கம் செய்பவர்களாகவும் இல்லை.
பொய்க் கடவுளரை வணங்கி வரும் அறபிகளை நன்னெறியில் திருப்புவதற்கு அவர்கள் மத்தியிலிருந்தே ஓர் இறைதூதர் தோற்ற வேண்டும். கஃபாவிலிருந்து சிறிது தூரத்தில் பரந்ததொரு வட்ட வடிவில் முந்நூற்றருபது சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அத்தோடு மக்காவின் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனிக் கடவுளர் காணப்பட்டனர். வீடுகளின் அமைப்பில் மத்தியாம்சமாக விளங்கியதும் சிலைகளே. வீட்டை விட்டு வெளியேறும்போது, சிறப்பாகப் பிரயாணங்களில் செல்லும்போது, வீட்டிலுள்ள சிலையைத் தொட்டுத்தடவி ஆசி பெற்றுக் கொள்வது ஒவ்வொருவரதும் சர்வ சாதாரண வழக்கமாக இருந்தது. பிரயாணங்களிலிருந்து வீடு திரும்பியதும் செய்யப்படும் முதற்கருமமும் அதுவே. மக்காவுக்கு மட்டுமே உரித்தானதோரம்சமல்ல இது. அறேபியா முழுவதுமே பரவியதொரு வழக்கமாக இது இருந்து வந்தது.
தெற்கே நஜ்ரான், யெமன் பிரதேசங்களிலும் வடக்கே ஸிரியக் கரைகளிலும் நன்கு வேரூன்றிய கிறிஸ்தவ சமூகங்கள் காணப்படத்தான் செய்தன. எனினும் இறைவனின் நவீன இடையீட்டின் காரணமாக ஆறு நூற்றாண்டுகளாக, ஐரோப்பாவில் பரந்த அளவிலும், மத்தியதரைக் கடற்பிரதேசத்திலும் ஏற்பட்டு வந்த மாற்றங்கள் எவையுமே மக்கத்து ஆலயத்தை மத்தியத்தானமாகக் கொண்டு மூடநம்பிக்கைகளிலேயே மூழ்கியிருந்த சமுகத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஹிஜாஸினதும் அதன் கிழக்கே அமைந்த நஜ்த்தின் பரந்த வெளிகளினதும் அறபிகளை வேதாகமங்கள் எவ்வித ஊடுருவலும் செய்ய முடியாதனவாகவே இருந்தன. குறைஷிகளோ, மூட நம்பிக்கைகளில் மூழ்கியிருந்த ஏனைய அறாபிய கோத்திரத்தார்களோ கிறிஸ்தவத்துக்கு எதிரானவர்களாக இருக்கவில்லை. இப்றாஹீம் நபியவர்கள் எழுப்பிய புண்ணியத்தலத்தினைத் தரிசிக்கக் கிறிஸ்தவர்களும் வந்து போயினர். அப்போதெல்லாம் ஏனையோரைப் போலவே அவர்களும் கொளரவிக்கப்பட்டனர். அதற்கும் மேலாகக் கஃபாவின் உட்புறச் சுவரில் கன்னிமேரியினதும் யேசுகிறிஸ்துவினதும் உருவங்களை வரைய ஒரு கிறிஸ்தவர் அனுமதிக்கப்பட்டதோடு உற்சாகமூட்டவும் பட்டார். இது, ஏனைய உருவ படங்களிலும் பார்க்க வித்தியாசமானதாகத் தனி இடம் பெற்றிருந்தது. இவற்றாலெல்லாம் குறைஷியர் பாதிப்புற்றவர்களாக இல்லை. அவகளைப் பொறுத்தமட்டில் ஏற்கெனவே இருந்த ஏராளமான சிலைகளோடு மேலும் இரண்டக் கூட்டிக் கொள்வதாகவே இது அமைந்தது. ஒரு வகையில், குறைஷியர் கைகொண்ட பொறைமையே, அவர்களை ஊடுருவ முடியாதவர்களாகவும் ஆக்கி வைத்திருந்தது.
தனது கோத்திரத்தாருள் ஏனையோரைப் போலன்றி வரகாஹ் வாசிக்கக் கூடியவராகவும் வேதாகமங்களையும் மதவியலையும் நன்கு கற்றறிந்தவராகவும் விளங்கினார். ஆகவே கிறிஸ்து நாதரின் வாக்குறுதியொன்று குறித்து ஏற்கெனவே கிறிஸ்தவர்களிடையே வழங்கி வந்த கருத்துகளுக்கு மாறுபட்ட சிந்தனையே அவருள்ளத்தில் எழுந்தது.
அவ்வாக்குறுதி பெத்த கொஸ்தேயின் அற்புதங்கள் என்றே பொதுப்பட நம்பப்பட்டு வந்தது. எனினும் அது, அவ்வற்புதங்களோடு இயைந்திராத சில அம்சங்களையும் கொண்டிருப்பதாக வரகாஹ் உணர்ந்து, கிறிஸ்து நாதரின் வாக்குறுதியானது இன்னும் நிறைவேற்றப்படாத வேறு ஏதோ ஒரு விடயம் குறித்ததொன்றென்றே நம்பியிருந்தார். அவ்வாக்குறுதியின் வாசகங்களும் மறைமுகமாக எதையோ உணர்த்த முனைவனவாகவே அவருக்குத் தெரிந்தது; “அவர் சுயமாக எதுவும் பேசமாட்டார்; எனினும் அவர் எதனையெல்லாம் கேட்பாரோ அதனையே பேசுவார்”- யோவான் எழுதிய சுவிசேஷம் 16:13- என்ற வாசகங்களின் கருத்துத்தான் என்ன?…
வரகாஹ்வுக்கு குதைலா எனப்பெயருடைய ஒரு சகோதரி இருந்தார். தனது கருத்துக்கள் குறித்து அவரோடு பெரிதும் உரையாடுவார் வரகாஹ். குதைலாவின் உள்ளத்தில் அவரது எண்ணங்கள் ஆழமாக வேரூன்றியிருக்கவே எதிர்ப்பார்க்கப்பட்ட இறைதூதர் பற்றிய எண்ணங்கள் அவரது சிந்தனையை ஆக்கிரமித்திருந்தன. அவ்விறை தூதர் ஏற்கனவே தம் மத்தியில் வாழ்ந்து வருகின்றாரோ?
இன்னும் வரும்…
-இறைவன் நாடினால்,

No comments:
Post a Comment