இழப்பின் மீட்பு
கஃபாவின் வடமேற்குப் பகுதியை அண்மியதாக, அரைவட்ட வடிவானதொரு சுவரினால் மறைக்கப்பட்டதோர் இடம் காணப்படுகிறது. வடக்கும் மேற்கும் நோக்கியனவாக இச்சுவற்றின் இரு முனைகளும் யாத்திரிகர்கள் செல்வதற்கு வசதியாக இடைவெளி கொண்டமைந்துள்ளன. எனினும் பெரும்பாலான யாத்திரிகர்கள் தாழ்வான அச்சுவர்களைச்சுற்றி வந்து அடைக்கப்பட்ட அவ்விடத்தையும் தாம் வலம் வரும் பிரதேசத்திற்குட்படுத்திச் செல்வர். இந்த இடம் ஹிஜ்ர் இஸ்மாயீல் என வழங்குகின்றது. இதன் அடித்தளத்திலேயே இஸ்மாயீல் நபியவர்களதும் ஹாஜராவினதும் அடக்கஸ்த்தலங்கள் அமைந்துள்ளன.
கஃபாவை அண்மியிருப்பதில் அளவிறந்த விருப்பம் கொண்டிருந்த அப்த்-அல்-முத்தலிப், சிலபோது ஹிஜ்ரின் மீதாக படுக்கை விரிப்பொன்றனைப் போட்டு சாய்ந்திருப்பார். இவ்வாறு அவர் சாய்ந்திருந்த போது ஒரு நாள், அவரது கனவில் ஒரு நிழலுருவம் தோன்றி,…‘இனிய தெளிவினைத் தோண்டுவீராக’…எனக் கூறியது. ‘இனிய தெளிவு என்பது என்ன?’ அவர் வினவினார்: உருவம் மறைந்து விட்டது.

அப்த்-அல்-முத்தலிப் எழுந்திருந்த போது, அமைதியும் மகிழ்வும் அவர் உள்ளத்தை நிறைந்திருக்கவே, அடுத்த இரவையும் அதே இடத்திலேயே கழிப்பதென முடிவு செய்து கொண்டார். அன்றும் அதே உருவம் தோன்றி, ‘அருட் கொடையைத் தோண்டுவீராக’…என்றது. அது என்னவென்று அப்த்-அல்-முத்தலிப் வினவியும் பதில் கிடைக்கவில்லை. மூன்றாம் இரவு ‘செல்வம் நிறைந்த புதையலைத் தோண்டுவீராக’…எனக் கட்டளை பிறந்தது. அப்போதும் அவர் கேள்விக்கு பதில் கிடைக்க வில்லை. நான்காம் இரவு ‘ஸம்ஸம்மைத் தோண்டுவீராக!’ என ஒலியெழுந்தது. “ஸம்ஸம் என்றால் என்ன?”…என்ற அவருடைய கேள்விக்கு இப்போது பதில் கிடைத்தது.
“ஸம்ஸம்மைத் தோண்டுவீராக! நீர் நஷ்டமடைய மாட்டீர். அது மிகப் பெரிய முன்னோரிடமிருந்து உமக்குக் கிடைத்த சொத்தாகும். அது ஒரு நாளும் வரண்டு போகாது. வந்து சேரும் யாத்திரிகர்களுக்கு தண்ணீர் கொடாமலும் விடாது". அத்தோடு அவ்வுருவம், இரத்தமும் மிருக சாணமும் எறும்புப்புற்றும் கொண்ட, அண்டங்க்காக்காய்கள் கொத்தித் தின்னும் இடமான ஒரு பகுதியை குறிப்பாகச் சுட்டியது. இறுதியில் இறைவனின் யாத்திரிகர்கள் தமது யாத்திரைக் காலங்கள் முழுவதும் பெற்றுக் கொள்ளக் கூடிய தெளிவான தண்ணீரைத் தந்தருளும்படி இறைவனைப் பிரார்த்தனைப் புரியும் படியும் அவ்வுருவம் அப்த்-அல்-முத்தலிபை வேண்டியது.
அப்த்-அல்-முத்தலிப் விடியற் காலையில் எழுந்து, புனித ஆலயத்தின் ஈராக்கிய முனை எனப்படும் வடக்கு மூலையிலுள்ள ஹிஜ்ரிலிருந்து, வடகிழக்கு சுவரோரமாக நடந்து சென்று கஃபாவின் வாசலை அடைந்தார். அதனைக் கடந்து சில அடிகள் தள்ளி, கிழக்கு மூலைக்குச் சென்று கருநிறப் பாறையை முத்தமிட்டார். அங்கிருந்து அவர் கஃபாவை வலம் வரத் தொடங்கினார். ஈராக்கிய முனையிலுள்ள கதவினைக் கடந்து, ஹிஜ்ரைத் தாண்டி, ஸிரிய முனை என வழங்கும் மேற்கு மூலைக் கூடாக தெற்கே இருக்கும் யெமனிய முனையை அடைந்தார். அவர்,
இறாஹீம் நபியவர்களின் புதல்வர்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் சந்ததிகளனைவருமே கஃபாவை வலம் வரும் போது சூரியனுக்கு எதிர்த்திசையிலேயே சென்று சுற்றி வருவர். யெமனிய முனையிலிருந்து கருநிறப் பாறையை அடைந்த அப்த்-அல்-முத்தலிப் அங்கிருந்து அபூ குபைஸ் குன்றின் இருண்ட சரிவுகளையும், அதற்கும் அப்பால் சேய்மையில் இருந்த கிழக்கு மலைகளையும் மஞ்சள் நிற ஒளியின் பின்னணியில் மிகத் தெளிவாகக் கண்டார்.
அறேபியாவின் உதய காலமும் அந்தி சாயும் நேரமும் மிகவும் குறுகியன. மிகத் தெளிவான ஒளியில் அப்த்-அல்-முத்தலிப் ஒரு முறை கஃபாவை வலம் வந்தார். பின்னர் கதவினை அடைந்து கைப்பிடியின் வளையத்தைப் பிடித்தவராகத் தனக்கு ஏவப்பட்டிருந்த பிரார்த்தனையைப் பிரார்த்தித்தார்.
சிறகுகளடிக்கும் ஒலி கேட்கவே திரும்பிப் பார்த்த அவர், மணற்றரையினின்றும் ஒரு பறவை பறந்து செல்வதனைக் கண்டார். இன்னும் ஒரு பறவை பறந்தது. சிலை வடிவான குன்றுகளிரண்டு நூறு யாரளவு இடைவெளியில் இரு புறத்தும் அமைந்திருந்தன. அந்த இடைவெளியில் பறவைகள் அங்குமிங்குமாக பறந்து கொண்டிருந்தன. சிலை வடிவிலான அவ்விரு குன்றுகளும் வழிபாட்டுக்குறியவெனக் கருதப்பட்டமையினால் அவ்விடைவெளியிலேயே குறைஷியர் தமது பலியீடுகளையும் செய்து வந்தனர். அப்பறவைகளைப் போலவே, அப்த்-அல்-முத்தலிபும் இவ்விடைவெளியின் மணற்றரையில் இரத்தம் தோய்ந்திருப்பதனை அறிந்திருந்தார். மிருக சாணமும் அங்கிருந்தது. அருகில் சென்ற அவர் எறும்பு புற்றொண்றனையும் கண்டார்.
தன் வீடு சென்று, மகன் ஹாரித் என்பாரையும் கூட்டிக் கொண்டு, இரண்டு கடப்பாறைகளை ஏந்தித் தான் தோண்ட வேண்டிய இடத்தை மனதில் நிச்சயப் படுத்திக்கொண்டவராகத் திரும்பி வந்தார் அப்த்-அல்-முத்தலிப்.
மணற்றரையின் மீதான ஆயுதங்களின் ஒலியும், இது காலவரை நடந்திராத இச்சம்பவமும் பலரது கவனத்தையும் ஈர்க்கவே, எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் அவதானிக்கலாயினர்.
அப்த்-அல்-முத்தலிப் எவ்வளவுதான் கொளரவம் பொருந்தியவராக விளங்கினாலும் கூட, பலிகள் மேற்கொள்ளப்படும் இடம் தோண்டப்படுவது மதவிரோத செய்கையெனப் பலர் ஆட்சேபித்து, அவரது நடவடிக்கைகளை நிறுத்தும்படி வேண்டினர். அதனை மறுத்த அவர், தனது செய்கைகளில் எவரும் தலையிடாதவாறு காத்துக் கொள்ளும்படி ஹாரிதைப் பணித்துத் தொடர்ந்தும் தோண்டலானார். நிலைமை மிகவும் நெருக்கடியானதாக இருந்தது. துயரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம். என்றாலும் இரு ஹாஷிமிகளும் ஒன்றுபட்டுச் செயலாற்றலானார்கள். மற்றையோரை இது வியப்புக்குள்ளாக்கியது. இரு புறமிருந்த சிலைகளான இஸாப், நைலா என்பன அதிகம் பிரசித்தி பெற்றிருக்கவில்லை. கஃபாவைக் களங்கப்படுத்தியமையினால் கற்சிலைகளாக்கப்பட்ட ஜுர்ஹும் கோத்திரத்து ஓர் ஆணும் பெண்ணுமே இவ்வுருவங்கள் என்ற நம்பிக்கையும் சிலரிடையே இருந்து வந்தது. எனவே அப்த்-அல்-முத்தலிபைத் தடுத்து நிறுத்தும் எந்தவொரு நேரடி முயற்சியும் மேற்கொள்ளப்படாமலேயே அவர் தனது கருமத்தை தொடர்ந்து நடாத்தினார். சூழவரவிருந்தோரில் பலர் அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லலாயினர். அப்போதுதான் கிணற்றை மூடியிருந்த பாறையின் மீது இவரது ஆயுதம் பட்டதனாலெழுந்த ஒலிக் கிளம்பியது. அத்தோடு அன்னார் இறைவனுக்கு நன்றி செலுத்தும் ஒலியும் வந்தது. மக்கள் கூட்டம் மீண்டும் ஒன்று சேரலாயினது. ஜுர்ஹும்கள் புதைத்து வைத்திருந்த செல்வங்களை அவர் தோண்டத் தொடங்கியதும் எல்லோரும் அதில் பங்கு கேட்கத் தொடங்கினர்.
அப்த்-அல்-முத்தலிப், இச்செல்வங்களை என்ன செய்வது என்பது குறித்து அம்பிழுத்துக் குறி பார்க்கவேண்டும் எனக் கூறினார்.
புதையலிலிருந்த ஒவ்வொரு பொருளும் புனிதத்தலத்தில் வைக்கப்பட வேண்டுமா, தன்னைச் சார வேண்டுமா, அல்லது எல்லோரிடையேயும் பங்கு போடப்பட வேண்டுமா என அம்பிழுத்துக் குறிப்பார்க்கும் அவரது எண்ணத்தை அனைவரும் ஏற்றனர். தீர்க்க முடியாத அல்லது ஐயத்துக்குறிய பிரச்சினைகள் இவ்வாறே முடிவாக்கப்படுவது வழக்கமாக இருந்தது. கஃபாவின் உள்ளே அமைந்திருந்த முஆபிய ‘ஹுபல்’ எனும் சிலையின் முன்னிலையிலேயே அம்பிழுப்பது மரபு. சில பொருட்கள் கஃபாவுக்கும் சில அப்த்-அல்-முத்தலிபுக்கும் கிடைத்தன. குறைஷியர் எவருக்கும் எதுவுமில்லை. யாத்திருகர்கட்குத் தண்ணீர் வசதியளிக்கும் பொறுப்பு ஏற்கனவே ஹாஷிம் வம்சத்தவர்க்குரியதாக இருந்தமையால், ஸம்ஸம் கிணறும் அவர்களது பொறுப்பிலேயே இருக்க வேண்டுமென்பதும் ஏற்கப்பட்டது.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்

No comments:
Post a Comment