இரு துயர்கள்
ஹலீமாவும் ஹாரிதும் சிறுவர்கள் உண்மையே பேசுகின்றார்கள் என உறுதி கொண்டனர். எனவே விளைவுகளை எண்ணி அவர்கள் சஞ்சலம் கொள்ளலானார்கள். தமது வளர்ப்பு மகன் தீய ஆவியினால் அல்லது ஏதோ ஒரு சூனியத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றார ் என்றே ஹாரித் நம்பினார். அதன் தாக்கங்கள் தெளிவாகு முன்னர் விரைவாக சிறுவரை அவரது தாயாரிடம் கொண்டு சேர்க்கும்படி ஹலீமாவை வேண்டினார் அவர்.
ஹலீமா சிறுவரைக் கூட்டிக் கொண்டு மக்கா சென்றார். தனது மன மாற்றத்தின் காரணத்தையோ, உண்மையில் நடந்த சம்பவத்தையோ ஆமினாவிடம் கூறும் நோக்கம் அவருக்கில்லை. என்றாலும் ஹலீமாவின் சடுதியான மாற்றம் ஆமினாவுக்கு திருப்தி தராது போகவே, ஹலீமா உண்மையை, நடந்த விடயங்கள் அனைத்தையும் தெளிவாகக் கூறினார். பின்னர் ஆமினா கூறினார் : “ எனது சிறிய மகனுக்கு மாபெரும் எதிர்காலம் ஒன்று காத்திருக்கின்றது ” இது ஹலீமாவின் அச்சத்தைத் தீர்த்து வைப்பதாயிருந்தது. தொடர்ந்து தான் கர்ப்பமுற்றிருந்த காலத்து அனுபவங்களை, தன்னுள் ஓர் ஒளியை ஏந்தி நிற்கும் உணர்வு கொண்டிருந்த தன்மையை ஆமினா விளக்கினார். ஹலீமா ஆறுதலடைந்தார். என்றாலும் இம்முறை ஆமினா மகனைத் தன்னிடமே வைத்துக்கொள்ள முடிவு செய்தார். “ அவரை என்னிடமே விட்டு விடும்; உமது பயணம் நல்லதாக அமையட்டும் ” என்றார் ஆமினா.

சிறுவர் மூன்று வருட காலமளவு, மக்காவிலேயே தனது தாயாருடன் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வந்தார். பாட்டனார், மாமன்மார், மாமியர், விளையாட்டுத் தோழர்களாயிருந்த ஒன்று விட்ட சகோதரர்கள், ஏனைய உறவினர்கள் முதலிய அனைவரதும் அன்பைப் பெற்றவராக அவர் விளங்கினார். குறிப்பாக அவருடன் மிக நெருங்கியவர்களாக இருந்தவர்கள் ஹம்ஸாவும் ஸபிய்யாவும் ஆவர். இவர்கள் இருவரும் அப்த்-அல்-முத்தலிபின் கடைசித் திருமணத்தின் மூலம் கிடைத்த குழந்தைகள். அத்திருமணமும், சிறுவரின் தந்தை அப்த்-அல்லாஹ்வின் திருமணமும் ஒரே தினத்திலேயே நடந்திருந்தன. ஹம்ஸா, இச்சிறுவரது வயதினராகவே இருந்தார். ஸபிய்யா சற்றே இளையவர். தந்தை வழியில் அவர்கள், சிறிய தந்தையும் மாமியாரும் ஆவர். தாய் வழியிலோ அவர்கள் ஒன்று விட்ட சகோதரரும் சகோதரியும் ஆவர். இம்மூவரிடையிலும் பலம் வாய்ந்த ஆழமானதொரு பந்தம் ஏற்பட்டது.
சிறுவர் ஆறு வயதுடையவராக இருக்கும் போது யத்ரிபிலுள்ள தம் உறவினரைச் சந்திக்கவென தாயார் அவரையும் கூட்டிச் சென்றார். வடக்கு நோக்கிச் சென்ற ஒரு வர்த்தக குழுவுடன் இணைந்து இரண்டு ஒட்டகங்களில் அவர்கள் பிரயாணம் செய்தனர். ஆமினா ஒன்றிலும், சிறுவரும் அவரது அன்பு நிறைந்த அடிமையான பரகாஹ்வும் மற்றதிலுமாகச் சென்றனர். இப்பிரயாணத்தின் போது, யத்ரிபில் தமது கஸ்ரஜ் உறவினர் ஒருவரது தடாகத்தில் தாம் நீந்தப் பழகியமையையும், சிறுவர்கள் அவருக்குப் பட்டம் விடப் பழக்கியமையையும் குறித்து சிறுவர் பின்னைய காலங்களில் விபரித்துக் கூறினார். திரும்பி வரும் வழியில் ஆமினா சடுதியாகச் சுகவீனமுற்றார். எனவே இவர்கள் இடையில் தங்கிக் கொள்ளவேண்டியேற்பட்டது. இவர்கள் சேர்ந்து வந்த வர்த்தகக் குழு இம்மூவரும் இன்றியே மக்கா சென்றது. சில நாட்களின் பின்னர் ஆமினா மரணமானார். யத்ரிபின் அண்மையிலுள்ள அப்வா எனும் இடத்தில் இது நிகழ்ந்தது. அங்கேயே நல்லடக்கமும் நடாத்தப்பட்டது. பரகாஹ் தன்னால் இயன்றளவு சிறுவருக்கு ஆறுதல் கூறினார். சிறுவரின் அனாதைத் தன்மை இரட்டிப்பாயது. சில வர்த்தகர்களின் துணையுடன், பரகாஹ் சிறுவரை மக்காவுக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
சிறுவர் குறித்த முழுப்பொறுப்பையும் பாட்டனாரே ஏற்க வேண்டியதாயிற்று. அவர் அப்த்-அல்லாஹ் மீது கொண்டிருந்த உயரிய அன்பு இப்போது அப்த்-அல்லாஹ்வின் மகன் மீது செலுத்தப்பட்டமையை எவரும் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அப்த்-அல்-முத்தலிப் எப்போதும் கஃபாவை அண்மியிருப்பதையே விரும்பி வந்தார். ஸம்ஸம்மைத் தோண்டும்படி கட்டளையிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் ஹிஜ்ரின் மீது சாய்ந்திருந்தமையும் இதனாலனதே. எனவே தினமும் புண்ணிய தலத்தின் நிழலில் இவருக்காக ஒரு சாய்வு மஞ்சத்தை அமைத்துக் கொடுப்பது குடும்பத்தினரின் வழக்கமாக இருந்தது. மரியாதையின் காரணமாக எவருமே அதில் அமருவதில்லை - மகன் ஹம்ஸா கூட. ஆனால் அவரது சிறிய பேரனுக்கு அவ்வாறான பிரச்சினைகளேதும் இல்லை. ஏனைய மாமன்மார், சிறுவரை வேறு எங்கேனும் அமரச் சொன்னால் உடனே அப்த்-அல்-முத்தலிப் கூறுவார் : “ எனது மகனை விட்டு விடுங்கள். இறைவன் மீது ஆணையாக அவரது எதிர்காலம் மிகப் பெரியதாயிருக்கும் ”.
தனது சாய்வு மஞ்சத்திலேயே பேரனை இருத்தி முதுகைத் தடவி விட்டவராக இருப்பார் அப்த்-அல்-முத்தலிப். தான் செய்வதைக் காண்பது எப்போதும் அவருக்கு மகிழ்வூட்டுவதாயிருந்தது.
தினமும் இருவரையும் கையோடு கை சேர்ந்தவர்களாக கஃபாவில் அல்லது மக்காவில் எங்கேனும் காண முடிந்தது. அப்த்-அல்-முத்தலிப் நகரத்துப் பெரியவர்களுடன் நடாத்தும் ஆலோசனைக் கூட்டங்களுக்குச் செல்லும் போதும் பேரன் முஹம்மதை அழைத்துச் செல்லத் தவறுவதில்லை. நாற்பது வயது தாண்டியவர்களான அவர்கள் பல்வேறு பிரச்சினைகளையும் அலசி ஆராய்வர். மட்டு மல்ல இந்த எண்பது வயதுக் கிழவர். ஏழே வயதையடைந்த தன் பேரனிடமும் பல்வேறு விடயங்கள் குறித்து அபிப்பிராயம் கேட்பதும் உண்டு. சக முதியவர்கள் இது குறித்து விசாரித்தால் அவர் கூறுவார் : “ எனது மகனுக்கு ஒரு மாபெரும் எதிர்காலம் இருக்கின்றது. ”
தனது தாயார் மறைந்து இரண்டே வருடங்களில், பாட்டனார் குறித்தும் சிறுவர் துயருற வேண்டியவரானார். தன் மரணத்தறுவாயில் அப்த்-அல்-முத்தலிப், பேரனை அபூ-தாலிபுக்கு ஒப்புக் கொடுத்தார்.
அபூ-தாலிபும் சிறுவரின் தந்தையார் அப்த்-அல்லாஹ்வும் ஒரு தாய் வயிற்றுச் சகோதரர்கள். முதியவரிடமிருந்து முஹம்மத் பெற்று வந்த அன்பு, பாசம் அனைத்தும் அபூதாலிபிடமிருந்தும் கிடைத்தன. அவரது சொந்தப் புதல்வருள் ஒருவராகவே இருவரும் நடாத்தப்பட்டார். அபூதாலிபின் மனைவி பாத்திமா, - ( அபூதாலிபைப் போல இவரும் ஹாஷிமின் பேரக் குழந்தையாவார். இவரது தந்தையார், ஹாஷிமின் புதல்வரும் அப்-அல்-முத்தலிபின் அரைச் சோதரருமான அஸத்.)
எல்லா வகையிலும், சிறுவரின் தாயில்லாக் குறையை நிவர்த்தி செய்து வந்தார். தனது சொந்தக் குழந்தைகள் பசியிலிருந்தாலும் பாத்திமா தன்னைப் பட்டினிகிடக்க விடமாட்டார் எனப் பின்னைய காலங்களில் கூறுவார் முஹம்மத்.
இன்னும் வரும்…
- இறைவன் நாடினால்,
ஹலீமாவும் ஹாரிதும் சிறுவர்கள் உண்மையே பேசுகின்றார்கள் என உறுதி கொண்டனர். எனவே விளைவுகளை எண்ணி அவர்கள் சஞ்சலம் கொள்ளலானார்கள். தமது வளர்ப்பு மகன் தீய ஆவியினால் அல்லது ஏதோ ஒரு சூனியத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றார

No comments:
Post a Comment