இல்லத்தார் ( தொடர்…2 )
முஹம்மதின் பெரிய தந்தையருள் மூத்தவரும், மரணித்து விட்டவருமான ஹாரித் பல மக்களை விட்டுச் சென்றார். அவர்களுள் ஒருவர் அபூஸுப்யான். உடன் பிறவாச் சகோதரரான இவர் ஒருவகையில் முஹம்மதின் வளர்ப்புச் சகோதரரும் ஆவார். முஹம்மதின் பின்னர் சில வருடங்கள் கழித்து, பனீஸஅத் கோத்திரத்தின் ஹலீமாவிடமே பால் குடித்து வளர்ந்தவர் அபூஸுப்யான். மிகவும் நெருங்கிய ஒருமைப்பாடு இவர்களிருவரிடமும் காணப்பட்டதென்பர் அக்காலத்திய மக்கள். மிகவும் முக்கியமானதோர் அம்சம், இருவரும் பெற்றிருந்த சொல்வன்மையாகும். ஆனால் அபூஸுப்யானோ சிறந்ததோர் கவிஞனும் ஆவார். தனது சிறிய தந்தையரான ஸுபைர், அபூதாலிப் ஆகியோரையும் விடச் சிறந்ததொரு கவிஞனாயிருந்தார். முஹம்மத் கவிதை யாப்பதில் எப்போதுமே கவனம் செலுத்தியதில்லை. எனினும் அறபு மொழியிலும் சொல்வன்மையிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.

ஓரளவு சம வயதுடையவராயிருந்த அபூஸுப்யானில் முஹம்மத் ஒரு நண்பனையும் சகாவையும் கொண்டிருந்தார். அத்தோடு இரத்த பந்தத்தில் மிக நெருங்கியவர்களாக இருந்தோர், தந்தையாரின் உடன் பிறந்த சகோதரியரின், அதாவது அப்த்-அல்-முத்தலிபின் ஐந்து மூத்த புதல்வியரது மக்கள். மாமியார் உமைமாவின் மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். உமைமா, அறேபியாவின் வட பிரதேசத்து அஸத் கோத்திரத்தின் - (அஸத்-இப்ன்-குஸைமா, மக்காவில் வட கிழக்குப் பகுதியில், நஜ்த் வெளியின் வடஎல்லைப் பகுதியில் ஒரு கோத்திரம். இது வேறு, குறைஷிக் குலத்தின் அஸத் கோத்திரம் வேறு) -ஜஹ்ஷ் என்பாரை மணம் செய்திருந்தார். ஜஹ்ஷுக்கு மக்காவிலும் ஒரு வீடு இருந்தது. தனது சொந்த கோத்திரத்தினின்றும் வெளியே அமைந்த ஒரு கோத்திரத்தின் மத்தியில் வாழும் ஒருவர், பரஸ்பர ஒப்பந்த மூலம் அக்கோத்திரத்துடன் ஒன்றுபட்டவராக இணைந்து, அதன் பொறுப்புகளிலும் பங்கேற்று, சில உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடிந்தது. அப்த்-ஷம்ஸ் - அப்த்-ஷம்ஸின் மகன். ஹர்பின் தந்தை உமையாவின் பெயரில் வழங்குவது. -கோத்திரத்தின் உமையாக் கிளையின் தலைவராக இருந்த ஹர்ப் என்பார் ஜஹ்ஷைத் தனது குழுவினருள் ஒருவராக ஏற்றிருந்தார். எனவே ஜஹ்ஷை மணந்து கொள்வதன் மூலம், உமைமா ஷம்ஸ் கோத்திரத்தார் ஒருவரையே மணந்தவராகின்றார். அவர்களது மூத்த புதல்வர் அப்த்-அல்லாஹ். முஹம்மதுக்குப் பன்னிரண்டு வயது குறைந்தவராயிருந்தாலும் இருவரிடையிலும் நெருங்கிய பந்தம் ஏற்பட்டிருந்தது. அப்த்-அல்லாஹ்வுக்குப் பல ஆண்டுகள் இளையவரான அவரது சகோதரி, உமைமாவின் மகள், பேரழகியாயிருந்த ஸைனபும் இப்பந்தத்துக்குள்ளாயிருந்த ார். அவர்களது மிக்க இளம் பருவத்திருந்தே அவர்களை அறிந்து அவர்கள் மீது அன்பு செலுத்தி வந்தார் முஹம்மத். மற்றொரு மாமியார் பர்ராவின் மகன் அபூஸலாமாவும் ஆழ்ந்த அன்பு செலுத்தப்பட்டார்.
அல்-அமீன் எனப் பகிரங்கமாகவே அழைக்கப்பட்ட முஹம்மதின் அன்புக்குப் பாத்திரமானவர்கள் அவரது சொந்தக் குடும்பத்தின் வெளியேயும் இருந்தனர். இச்சூழலின் மத்தியில் அவரோடு இணைந்திருந்தவர் கதீஜா. இருவரதும் அபிரிமிதமான கவர்ச்சிக்குள்ளாகிய, அவர்களை மதித்தும் அன்பு செலுத்தியும் வந்த பலர் கதீஜாவின் உறவினரிடை இருந்தனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அவரது சகோதரி ஹாலா. ஹாலாவின் மகன் அபுல்-ஆஸ் அடிக்கடி இவர்களது இல்லத்துக்கு வருபவராக இருந்தார். கதீஜா தன் சகோதரி மகனைச் சொந்த மகன் போலவே கொண்டு அன்பு செலுத்தினார். அறிவுரைக்கும் உதவிக்குமாக அடிக்கடி கதீஜாவை நாடுவது ஹாலாவின் வழக்கம். இவ்வாறே ஹாலா தனது மகனுக்கு நல்லதொரு வரனைப் பார்க்கும்படி கதீஜாவிடம் கூறினார். கதீஜா தன் கணவரிடம் கலந்து கொண்ட போது, அவர், வெகு விரைவிலேயே திருமண வயதை அடையவிருந்த தமது மகள் ஸைனபை அளிக்கலாம் என்றார். உரிய காலம் வந்ததும் திருமணம் நடந்தேறியது.
அரசியல் ரீதியாக ஒரே கோத்திரத்தவராகக் கருதப்பட்டு வந்த ஹாஷிம், முத்தலிப் கோத்திரத்தார் மங்கிச் செல்லும் தமது செல்வாக்கை மீட்டு நிலை நிறுத்த முஹம்மதையே நம்பியிருந்தனர். எனினும் கோத்திர வேறுப்பாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, குறைஷிகளின் தலைவர்களனைவரும், தமக்கு அடுத்த தலைமுறையில் வரக்கூடிய மிக்க திறமை வாய்ந்த தலைமைத்துவம் பொருந்தியவராக, அறேபியா முழுவதும், தமக்குப் பின்னர், தமது குலத்தின் பெருமையையும் கெளரவத்தையும் பாதுகாக்கக் கூடியவராக முஹம்மதையே எதிர் நோக்கியிருந்தனர்.
அல்-அமீன் குறித்த புகழுரைகள் அனைவர் நாவிலும் இடையறாதிருந்தன. இவ்வாறானதொரு சூழலில் தான் அபூலஹப்பும் முஹம்மதிடம் வந்து, அவரது புதல்வியரான ருகையாவையும் உம்ம்குல்தூமையும் தனது புதல்வர்களான உத்பாவுக்கும் உதைபாவுக்கும் மணஞ் செய்து தரும்படி வேண்டினார். அவர்கள் குறித்து நல்லபிப்பிராயம் கொண்டிருந்ததால் முஹம்மதும் இதற்கு உடன்பட்டார். திருமணங்களும் நிச்சயிக்கப்பட்டன. இதே கால கட்டத்தில்தான் உம்ம் அய்மனும் குடும்பத்தில் ஒருவராகத் திரும்பி வந்தார். அவர் ஒரு விதவையாகத் திரும்பி வந்தாரா, அல்லது மணவிடுதலை பெற்று வந்தாரா என்பது பற்றித் தெளிவான குறிப்புகளில்லை. எவ்வாறாயினும் தனக்கோர் இடம் இக்குடும்பத்தில் உளது என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. முஹம்மத் பல சந்தர்ப்பங்களில் இவரைத் “தாய்” என்றே விளித்து வந்தார். பிறரிடம் அவர் குறித்து முஹம்மத் கூறுவார்: “எனது வீட்டாரில் எனக்குரியவராக மீதமிருப்பவர் இவர் மட்டுமே.” - (இ.ஸா. 8:162.)
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
முஹம்மதின் பெரிய தந்தையருள் மூத்தவரும், மரணித்து விட்டவருமான ஹாரித் பல மக்களை விட்டுச் சென்றார். அவர்களுள் ஒருவர் அபூஸுப்யான். உடன் பிறவாச் சகோதரரான இவர் ஒருவகையில் முஹம்மதின் வளர்ப்புச் சகோதரரும் ஆவார். முஹம்மதின் பின்னர் சில வருடங்கள் கழித்து, பனீஸஅத் கோத்திரத்தின் ஹலீமாவிடமே பால் குடித்து வளர்ந்தவர் அபூஸுப்யான். மிகவும் நெருங்கிய ஒருமைப்பாடு இவர்களிருவரிடமும் காணப்பட்டதென்பர் அக்காலத்திய மக்கள். மிகவும் முக்கியமானதோர் அம்சம், இருவரும் பெற்றிருந்த சொல்வன்மையாகும். ஆனால் அபூஸுப்யானோ சிறந்ததோர் கவிஞனும் ஆவார். தனது சிறிய தந்தையரான ஸுபைர், அபூதாலிப் ஆகியோரையும் விடச் சிறந்ததொரு கவிஞனாயிருந்தார். முஹம்மத் கவிதை யாப்பதில் எப்போதுமே கவனம் செலுத்தியதில்லை. எனினும் அறபு மொழியிலும் சொல்வன்மையிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.

ஓரளவு சம வயதுடையவராயிருந்த அபூஸுப்யானில் முஹம்மத் ஒரு நண்பனையும் சகாவையும் கொண்டிருந்தார். அத்தோடு இரத்த பந்தத்தில் மிக நெருங்கியவர்களாக இருந்தோர், தந்தையாரின் உடன் பிறந்த சகோதரியரின், அதாவது அப்த்-அல்-முத்தலிபின் ஐந்து மூத்த புதல்வியரது மக்கள். மாமியார் உமைமாவின் மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். உமைமா, அறேபியாவின் வட பிரதேசத்து அஸத் கோத்திரத்தின் - (அஸத்-இப்ன்-குஸைமா, மக்காவில் வட கிழக்குப் பகுதியில், நஜ்த் வெளியின் வடஎல்லைப் பகுதியில் ஒரு கோத்திரம். இது வேறு, குறைஷிக் குலத்தின் அஸத் கோத்திரம் வேறு) -ஜஹ்ஷ் என்பாரை மணம் செய்திருந்தார். ஜஹ்ஷுக்கு மக்காவிலும் ஒரு வீடு இருந்தது. தனது சொந்த கோத்திரத்தினின்றும் வெளியே அமைந்த ஒரு கோத்திரத்தின் மத்தியில் வாழும் ஒருவர், பரஸ்பர ஒப்பந்த மூலம் அக்கோத்திரத்துடன் ஒன்றுபட்டவராக இணைந்து, அதன் பொறுப்புகளிலும் பங்கேற்று, சில உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடிந்தது. அப்த்-ஷம்ஸ் - அப்த்-ஷம்ஸின் மகன். ஹர்பின் தந்தை உமையாவின் பெயரில் வழங்குவது. -கோத்திரத்தின் உமையாக் கிளையின் தலைவராக இருந்த ஹர்ப் என்பார் ஜஹ்ஷைத் தனது குழுவினருள் ஒருவராக ஏற்றிருந்தார். எனவே ஜஹ்ஷை மணந்து கொள்வதன் மூலம், உமைமா ஷம்ஸ் கோத்திரத்தார் ஒருவரையே மணந்தவராகின்றார். அவர்களது மூத்த புதல்வர் அப்த்-அல்லாஹ். முஹம்மதுக்குப் பன்னிரண்டு வயது குறைந்தவராயிருந்தாலும் இருவரிடையிலும் நெருங்கிய பந்தம் ஏற்பட்டிருந்தது. அப்த்-அல்லாஹ்வுக்குப் பல ஆண்டுகள் இளையவரான அவரது சகோதரி, உமைமாவின் மகள், பேரழகியாயிருந்த ஸைனபும் இப்பந்தத்துக்குள்ளாயிருந்த
அல்-அமீன் எனப் பகிரங்கமாகவே அழைக்கப்பட்ட முஹம்மதின் அன்புக்குப் பாத்திரமானவர்கள் அவரது சொந்தக் குடும்பத்தின் வெளியேயும் இருந்தனர். இச்சூழலின் மத்தியில் அவரோடு இணைந்திருந்தவர் கதீஜா. இருவரதும் அபிரிமிதமான கவர்ச்சிக்குள்ளாகிய, அவர்களை மதித்தும் அன்பு செலுத்தியும் வந்த பலர் கதீஜாவின் உறவினரிடை இருந்தனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அவரது சகோதரி ஹாலா. ஹாலாவின் மகன் அபுல்-ஆஸ் அடிக்கடி இவர்களது இல்லத்துக்கு வருபவராக இருந்தார். கதீஜா தன் சகோதரி மகனைச் சொந்த மகன் போலவே கொண்டு அன்பு செலுத்தினார். அறிவுரைக்கும் உதவிக்குமாக அடிக்கடி கதீஜாவை நாடுவது ஹாலாவின் வழக்கம். இவ்வாறே ஹாலா தனது மகனுக்கு நல்லதொரு வரனைப் பார்க்கும்படி கதீஜாவிடம் கூறினார். கதீஜா தன் கணவரிடம் கலந்து கொண்ட போது, அவர், வெகு விரைவிலேயே திருமண வயதை அடையவிருந்த தமது மகள் ஸைனபை அளிக்கலாம் என்றார். உரிய காலம் வந்ததும் திருமணம் நடந்தேறியது.
அரசியல் ரீதியாக ஒரே கோத்திரத்தவராகக் கருதப்பட்டு வந்த ஹாஷிம், முத்தலிப் கோத்திரத்தார் மங்கிச் செல்லும் தமது செல்வாக்கை மீட்டு நிலை நிறுத்த முஹம்மதையே நம்பியிருந்தனர். எனினும் கோத்திர வேறுப்பாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, குறைஷிகளின் தலைவர்களனைவரும், தமக்கு அடுத்த தலைமுறையில் வரக்கூடிய மிக்க திறமை வாய்ந்த தலைமைத்துவம் பொருந்தியவராக, அறேபியா முழுவதும், தமக்குப் பின்னர், தமது குலத்தின் பெருமையையும் கெளரவத்தையும் பாதுகாக்கக் கூடியவராக முஹம்மதையே எதிர் நோக்கியிருந்தனர்.
அல்-அமீன் குறித்த புகழுரைகள் அனைவர் நாவிலும் இடையறாதிருந்தன. இவ்வாறானதொரு சூழலில் தான் அபூலஹப்பும் முஹம்மதிடம் வந்து, அவரது புதல்வியரான ருகையாவையும் உம்ம்குல்தூமையும் தனது புதல்வர்களான உத்பாவுக்கும் உதைபாவுக்கும் மணஞ் செய்து தரும்படி வேண்டினார். அவர்கள் குறித்து நல்லபிப்பிராயம் கொண்டிருந்ததால் முஹம்மதும் இதற்கு உடன்பட்டார். திருமணங்களும் நிச்சயிக்கப்பட்டன. இதே கால கட்டத்தில்தான் உம்ம் அய்மனும் குடும்பத்தில் ஒருவராகத் திரும்பி வந்தார். அவர் ஒரு விதவையாகத் திரும்பி வந்தாரா, அல்லது மணவிடுதலை பெற்று வந்தாரா என்பது பற்றித் தெளிவான குறிப்புகளில்லை. எவ்வாறாயினும் தனக்கோர் இடம் இக்குடும்பத்தில் உளது என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. முஹம்மத் பல சந்தர்ப்பங்களில் இவரைத் “தாய்” என்றே விளித்து வந்தார். பிறரிடம் அவர் குறித்து முஹம்மத் கூறுவார்: “எனது வீட்டாரில் எனக்குரியவராக மீதமிருப்பவர் இவர் மட்டுமே.” - (இ.ஸா. 8:162.)
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
No comments:
Post a Comment