இறைவனின் இல்லம் (தொடர்…) 3
இரு ஆன்மீக இயக்கங்களும், இரு வேறு மார்க்கங்களில், இறைவனுக்கான இரு வேறு லோகங்களாக, இரண்டு வட்டங்களில் செயல்பட வேண்டியிருந்தன. எனவே இரு மத்தியத்தலங்கள் அவசியம். மனிதனது தெரிவினால் எந்த ஓர் இடமும் புனிதம் பெற்று விடுவதில்லை. இறைவனின் தெரிவினாலேயே புனிதத்துவம் ஏற்படுகின்றது.
இப்றாஹீம் நபியின் வட்டத்துக்குள்ளும் இரு புனித மத்தியத்தலங்கள் இருந்தன. ஒன்று அவர் ஏற்கனவே அறிந்திருந்தது. மற்றது இன்னும் அவரால் அறியப்படாததாக இருந்தது. இன்னமும் அறியப்படாதிருந்த அப்புனிதத்தலத்தை நோக்கியே ஹாஜராவும் இஸ்மாயீலும் வழி நடாத்தப்பட்டனர்.

கன்ஆனிலிருந்து நாற்பது நாற்களலவு நீடிக்கும் ஒட்டகைப் பிரயாண தூரத்தில் அறேபியாவின் வரண்ட சமவெளியொன்றனை நோக்கி அவர்கள் செல்லலானார்கள். அந்த வெளி ‘பக்கா’ என வழங்கி வந்தது. அதன் குறுகிய அமைப்பின் காரணமாகவே அவ்வாறு பெயர் வழங்கியதென்பர் சிலர். மூன்று இடைவெளிகளைத் தவிர்த்து மலைகளால் சூழப்பெற்ற பிரதேசம் அது. வடக்கு, தெற்குப் பிரதேசங்களை நோக்கியன இரண்டு இடைவெளிகள்.
மேற்குப் பிரதேசத்தை நோக்கியது அடுத்தது. மேற்குப்புற இடைவெளியூடாகச்சென்றால், சுமார் ஐம்பது மைல்கள் தூரத்தில் செங்கடலைக் காணலாம். ஹாஜராவும் இஸ்மாயீலும் எவ்வாறு பக்கா வெளியை அடைந்தனர் என ஆகமங்கள் கூறவில்லை.
வர்த்தகர்களின் துணை அவர்களுக்குக் கிட்டி இருக்கலாம். பாலைவன வர்த்தக மார்க்கத்தில் இந்த வெளி ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. தென் அரேபியாவிலிருந்து மத்திய தரைக்கடற் பிரதேசத்திற்கு வாசனைத் திரவியங்கள் முதலாய ஏராளமான பொருட்கள் கொண்டு செல்லப்படும் வழியாக விளங்கியமையால் இது, ‘வாசனைத் திரவிய மார்க்கம்’ என பெயர் பெற்றிருந்தது.
பக்கா வெளியை அடைந்ததும் ஹாஜரா வர்த்தக குழுவினரை விட்டும் பிரிந்து கொள்ளச் செய்யப்பட்டார் என்பதில் ஐயம் இல்லை.
பக்காவில் தாயும் மகனும் தாகத்தினால் வருந்தினார்கள். இஸ்மாயீல் மரணித்துவிடலாம் என ஹாஜரா அச்சமுறுமளவு தாகம் அவர்களை துயருறுத்தியது. அவர்களின் பரம்பரையினரின் மரபுகளின்படி, மணல் தரையில் படுத்திருந்த இஸ்மாயீல் இறைவனிடம் உதவிக்கோரிக் கதறினார்கள். தாயாரோ அண்மையிலிருந்த ஒரு குன்றின்மீதேறி ஏதும் உதவி கிட்டுமோ என சுற்றுமுற்றும் பார்த்தவராக இருந்தார். ஒருவரையும் காணமுடியவில்லை.
மற்றுமொரு குன்றைநோக்கி ஓடிய ஹாஜரா அதன்மீதும் ஏறிச் சுற்றி வரப்பார்க்கலானார்கள். அங்கிருந்தும் கூட எவரையும் காண முடியவில்லை.
இரு குன்றுகளுக்கும் இடையிலாக உதவி நாடி ஓடி ஓடிக் களைப்புற்று ஒரு குன்றின் அடிவாரத்தில் ஹாஜரா அமர்ந்திருந்தபோது வானவ தூதர் ஒருவர் அவருக்குச் செய்திக்கொண்டு வந்தார்.
ஆதியாகமத்தின்படி,
“இறைவன் பிள்ளையின் குரலைக் கேட்டான். தேவதூதர் வானத்திலிருந்து ஹாகரைக் ( அறபு வழக்கில் ஹாஜரா )கூப்பிட்டு, ஹாகரே! உன்னை துயருறுத்துவது எது? பயப்படாதே. பிள்ளை இருக்கும் இடத்திலிருந்தே இறைவன் பிள்ளையின் குரலைக் கேட்டான். நீ எழுந்து பிள்ளையைத் தூக்கி, உன் கையினால் பிடித்துக் கொண்டு போ, அவனை நான் ஒரு பெரிய சமுகமாக்குவேன். இறைவன் ஹாகரின் கண்களைத் திறந்தான். அப்போது ஹாகர் தண்ணீர்த் துரவொன்றனைக் கண்டார்.”(21:17 - 20)
இஸ்மாயீலின் பாதம்பட்ட இடத்து மணல் தரையிலிருந்து இறைவன் எழச்செய்த ஓர் ஊற்றிலிருந்து கிளம்பிய தண்ணீர்த்துரவே அது, நல்ல நீர் பாரிய அளவில் கிடைக்கத் தொடங்கவே, வர்த்தகக் குழுக்கள் தங்கி ச்செல்லும் ஒரு கேந்திர ஸ்தானமாக இந்தச் சமவெளி உருப்பெறலாயிற்று. கிணறு ‘ஸம்ஸம்’ என்ற பெயரினைப் பெற்றது.
ஆதியாகமம் இஸ்ஹாக்கினதும் அவரது சந்ததியாரினதும் நூல். இப்றாஹீம் நபியவர்களின் மற்றைய கிளையினருடையதல்ல.
இஸ்மாயீல் குறித்து, இறைவன் பிள்ளையுடனே இருந்தான், பிள்ளை வளர்ந்து, வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையில் வல்லவனாக விளங்கியது* என அது தெரிவிக்கின்றது. இதன் பின்னர் மிக அரிதாகவே இஸ்மாயீலின் பெயர் குறிப்பிடப்படுகின்றது.
இஸ்மாயீலும் இஸ்ஹாக்கும் சேர்ந்து தந்தையார் இப்றாஹீமை, ஹெப்ரோனில் நல்லடக்கம் செய்ததையும், பின்னர் சில வருடங்கள் கழித்து இஸ்ஹாக்கின் மகன், இஸ்மாயீலின் மகளை மணந்து கொண்டதையுமே ஆதியாகமம் அறிவிக்கின்றது. எனினும் இஸ்மாயீலும் அவரது தாயாரும் மறைமுகமாகப் புகழப்படுவதைச் ‘சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்…’ எனத் தொடங்கும் சங்கீதத்தில் காணலாகும். அவர்கள் இந்த வெளியினூடாகச் சென்றதன் மூலம் ஸம்ஸம் எனும் அற்புதம் தோற்றம் பெற்றதனை அது குறிக்கின்றது:
பெக்கா வெளியினூடாகச் செல்லும் போது அதனை ஓர் ஊற்றாகச் செய்து சென்றவர்களின் செவ்வையான வழிகளைத் தம் இதயத்தில் கொண்டு, உம்மிலே வலிமை கொண்டிருக்கும் மனிதன் பாக்கியவான்.-சங்கீதம் 84: 5-6
ஹாஜராவும் இஸ்மாயீலும் அடைய வேண்டிய தளத்தை அடைந்த பின்னரும் இப்றாஹீம் நபியவர்கள் எழுபத்தைந்து வருடங்கள் வாழ வேண்டியவராயிருந்தார்கள். ஹாஜரா வழி நடாத்தப்பட்ட தளத்திற்குத் தன் மகனைக் காணவென இப்றாஹீம் சென்றார்.
ஸம்ஸம் கிணற்றின் அருகில் தந்தையும் மகனும் சேர்ந்து ஒரு வணக்கஸ்த்தலத்தை அமைக்கவென ஓர் இடத்தை இறைவன் குறித்துக் கொடுத்தமையைக் குர்ஆன் கூறுகின்றது.(அல் குர்ஆன் 22:26) அது எவ்வாறு நிறுவப்பட வேண்டுமென்பதும் அவர்களுக்குக் கூறப்பட்டது. சதுர வடிவத்தினதாய் அமந்த அவ்வணக்கஸ்தலம் ‘கஃபா’ என வழங்கப்படலாயிற்று.
இப்புனிதஸ்தலத்தில் மிகப் புனிதமானதோர் அம்சமாக விளங்கியது ஒரு விண்ணக கற்பாறையாகும். அண்மையிலிந்த அபூகுபைஸ் எனும் மலையிலிருந்து ஒரு வானவ தூதரால் இப்றாஹீம் அவர்களுக்குக் கொண்டு தரப்பட்ட இக்கற்பாறை வானலோகத்திலிருந்து பூமிக்கு கொண்டு வரப்பட்ட கால முதல் அம்மலையிலேயே இருந்து வந்தது.
“சுவர்க்கத்திலிருந்து அது இறக்கப்பட்டபோது, பாலினும் வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்களின் காரணமாக அது கரிய நிறத்ததாய் ஆகிவிட்டது"(நாயக வாக்கு தி 7:49)
இக்கருநிறப்பாறை கஃபாவின் கிழக்கு மூலையில் நிறுவப்பட்டது. வணக்கஸ்தல நிர்மாணம் பூரணமானதும் இறைவன் மீண்டும் இப்றாஹீம் நபியவர்களுடன் உறையாடி, பின்னர் மக்கா எனப்பெயர் வழங்கிய பக்காவுக்கான புனித யாத்திரை மேற்கொள்ளப்படுவதனை நிலைப்படுத்துமாறு கட்டளையிட்டான்.
“என்னுடைய வீட்டைச் சுற்றி வருவோர்க்கும், அதில் நின்று, குனிந்து, சிரம் பணிந்து தொழுவோர்க்கும் அதனைப் பரிசுத்தமாக்கி வையும். ஹஜ்ஜுக்கு வருமாரு நீர் மனிதர்களுக்கு அறிக்கையிடும். அவர்கள் கால் நடையாகவும் உம்மிடம் வருவார்கள், இளைத்த ஒட்டகங்களின் மீதும், வெகு தொலை தூரத்திலிருந்தும் உம்மிடம் வருவார்கள்.”-குர் ஆன் 22: 26,27
தான் உதவிதேடித் தவித்தமையை ஹாஜரா இப்றாஹீமிடம் தெரிவித்தார், பயனாக, ஸபா - மர்வா என வழங்கிய அவ்விரண்டு குன்றுகளுக்கும் இடையில் ஏழுமுறை ஓடுவதனையும் புனிதயாத்திரையின் ஓர் அங்கமாக்கி வைத்தனர் இப்றாஹீம் நபியவர்கள்.
பின்னர் - கன்ஆனிலாக இருக்க வேண்டும் - தன்னைச் சூழவரவுள்ள பசுமை நிறைந்த வயல் வெளிகளைக் கண்டு இப்றாஹீம் நபியவர்கள் பிரார்த்தனை செய்யலானார்கள்:
“நிச்சயமாக நான் என் சந்ததிகளை மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசிக்கச் செய்துவிட்டேன். அது விவசாயமற்றதொரு பள்ளத்தாக்கு…மனிதர்களில் ஒரு தொகையினரின் இதயங்கள் அவர்களை நோக்கும்படி செய்வாயாக. ( பற்பல ) கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு ஆகாரமாக அளித்து வருவாயாக!” - குர்ஆன்: 14:37
-இன்னும் வரும்…
இறைவன் நாடினால்…,

No comments:
Post a Comment