பேரிழப்பு ..... 4
இப்றாஹீம் நபியவர்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டது. அறேபியாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும், ஏனைய பிரதேசங்களிலிருந்தும் மக்காவை நோக்கி வந்த ஏராளமான யாத்திரிகர்கள் பெறுமதியான அன்பளிப்புகளையும் காணிக்கைகளையும் தொடர்பறாது கொண்டு வந்தார்கள். பெரு யாத்திரை வருடமொரு முறையே மேற்கொள்ளப்பட்டது. எனினும் எந்த நேரத்திலும் சிறு யாத்திரை மேற்கொண்டு கஃபாவை தரிசனம் செய்து கொளரவிக்க முடிந்தது.
இந்த வழக்கங்கள், இப்றாஹீமும் இஸ்மாயீலும் இயற்றிய கட்டளைக்கிணங்க ஆர்வத்தோடும் பூரண மனதுடனும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.
இப்றாஹீம் நபியவர்களால் உயர்த்தப்பட்ட வணக்கஸ்தலம் என்றதனால் இஸ்ஹாக்கின் வழிவந்தோரும் கஃபாவை தரிசனம் செய்தார்கள். அவர்களுக்கு இது சேய்மையிலிருக்கும் தேவ வாசஸ்தலங்களில் ஒன்றாகவே விளங்கியது.

நூற்றாண்டுகள் பல கழிய, தனியோர் இறைவனையே வணங்கும் தூய்மையான வழிபாட்டு முறை கறை படத் தொடங்கிற்று.
இஸ்மாயீலீன் வழி வந்தவர்கள் மக்காச் சமவெளியில் மட்டுமே வாழ்ந்து கொள்ள முடியாத அளவுக்குப் பல்கிப் பெருகலாயினர்.
வெளியிடங்களில் வாழவெனச் செல்ல முனைந்தவர்கள், புனிதத்தலமான கஃபாவின் சூழலிலிருந்து கற்களை எடுத்துச் சென்று அவற்றை ஆராதனை செய்யத் தொடங்கினர். அண்மைப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த பழங்குடியினரின் செல்வாக்குகளினால் இக்கற்களுடன் பல்வேறு சிலைகளும் சேர்த்து வழிப்படப்பட்டன. காலப்போக்கில் யாத்திரிகர்கள் மக்கா செல்லும் போது தமது சிலைகளையும் உடன் கொண்டு செல்லலாயினர். இவை கஃபாவை சூழவர நிறுவப்பட்டன. இவ்வாறானதொரு கால கட்டத்தில்தான் யூத்ர்கள், இப்றாகிம் நபியவர்களின் வணக்கஸ்தலத்தை கைவிட்டனர். - இப்னு இஸ்ஹாக்.. 15
இறைவனுக்கும் மனிதனுக்குமிடையிலான தொடர்புகளை நிறுவிக்கொள்ளத் தாம் வழிப்படும் சிலைகள் துணை நிற்கின்றன என்றே சிலை வழிபாடு செய்வோர் நம்பி வந்தனர்.
இதனால் இறைவனோடு அவர்கள் கொண்டிருந்த நேரடித் தொடர்புகள் பலமிழந்து செல்லத் தொடங்கின. இறைவன் சேய்மைப்பட்டுச் செல்லவே, மறு உலகம் பற்றிய அவர்களது உறுதிகளும் சிதைவுற்று, பலர், மரணத்தின் பின்னான வாழ்வு பற்றிய நம்பிக்கையையும் முற்றாக இழந்து விட்டனர்.
என்றாலும் சிந்தித்துப் பார்ப்போருக்கு, அம்மக்கள் சத்தியத்தினின்றும் பிறழ்ந்து விட்டனர் எனபதற்குரிய வெளிப்படையானதொரு சான்று தெளிவாகவே அமைந்திருந்தது .
- ஸம்ஸம் கிணற்றின் பயனை அவர்கள் இழந்திருந்தனர். ஸம்ஸம் எவ்விடத்தில் இருந்ததென்பதையும் அவர்கள் மறந்து விட்டனர். இதற்கு நேரடியான பொறுப்பாளராயிருந்தோர், யெமன் தேசத்திலிருந்து வந்த ஜுர்ஹும் கோத்திரத்தார். மக்கா அவர்களது கட்டுப்பாட்டுக்குள் இறுந்தது. இஸ்மாயீலின் இரண்டாம் மனைவி, ஜுர்ஹும் கோத்திர உறவினராயிருந்தமையால் இப்றாஹீம் அவர்களின் வழி வந்தோர் அனைவரும் அவர்களது ஆதிக்கத்தைப் பொறுத்துக் கொண்டனர். எனினும் காலப்போக்கில் ஜுர்ஹும் கோத்திரத்தார் எண்ணிறந்த அநீதிகளை இழைப்பவர்களாகிவிட்ட நிலையில் மக்காவிலிருந்து அவர்கள் முற்றாகவே துரத்தப்பட்டனர்.
ஜுர்ஹுமிகள் மக்காவை விட்டுச் செல்லுமுன்னர் ஸம்ஸம் கிணற்றைப் பாழ்படுத்தி மூடி விட்டுச் சென்றனர். அவர்கள் இதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவே செய்தனர் என்பதில் ஐயமில்லை. மீண்டும் திரும்பி வந்து தமது செல்வத்தைப் பெருக்கிப் பலம் வாய்ந்தவர்களாகத் தம்மை ஆக்கிக் கொள்ளும் நோக்கமும் அவர்களுக்கிருந்தது. ஏனெனில் பல்லாண்டுகளாகக் கஃபாவில் வந்து சேர்ந்திருந்த காணிக்கைகள், செல்வங்கள் அனைத்தினதும் ஒரு பகுதியை அவர்கள் ஸம்ஸம் கிணற்றில் போட்டு அதன் மேல் மணல் இட்டு நிரப்பியே நீங்கினர்.
மக்காவின் அதிகாரிகளாக இருந்து ஜுர்ஹும் கோத்திரத்தார் விட்டுச் சென்ற இடத்தை குஸாஅ கோத்திரத்தார் பெற்றுக் கொண்டனர்.
இஸ்மாயீலின் வழி வந்த அறபிக்கோத்திரத்தாரான குஸாஅக்கள், யெமனில் குடியேறிப் பின்னர் மீண்டும் வடக்கு நோக்கி வந்தவர்கள். எனினும் தமது முன்னோர்க்கு அதிசயபூர்வமாக அளிக்கப்பட்ட நீரூட்டினைத் தேடும் முயற்சியில் குஸாஅக்கள் ஈடுபடவில்லை. மக்கச் சூழலில் பல இடங்களிலும் கிணறுகள் தோண்டப்பட்டிருந்ததன் காரணமாக, இறைவனின் நன்கொடை தொடர்ந்து தேவைப்பட்டதாகவும் இருக்கவில்லை.
அப்புனித நீரூற்று நினைவிலிருந்தும் மங்கிச் சென்று கொண்டிருந்தது.
ஜுர்மிகளின் குற்றத்தில் குஸாஅவுக்கும் பங்கு கிட்டியது. அத்தோடு வேறு பல குறைகளுக்கும் அவர்கள் ஆளாயினர். ஸிரியா சென்று திரும்பி வந்து கொண்டிருந்த குஸாஅ தலைவர்களில் ஒருவர், வழியில் முஆபிய கோத்திரத்தாரிடம் அவர்களது சிலைகளில் ஒன்றை வேண்டி நின்றார்.
ஹுபல் எனும் சிலையை அவர்கள் கொடுத்தனர். அவர் அதனைப் புனிதஸ்தலத்துக்குக் கொண்டு வந்து கஃபாவின் உள்ளேயே அதற்கு இடமளித்து வைத்தார்.
அது முதல் ஹுபலே மக்காவின் பிரதம சிலையாக விளங்கி வந்தது.
-இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,

No comments:
Post a Comment